ஆய்வு: மூலப்பாட இனவரைவியலாக்கத்தில் முல்லைப்பாட்டின் சூழமைவு!
முல்லைப்பாட்டினை நப்பூதனார் எனும் நல்லிசைப் புலவர் ‘முல்லை’ப்பூவை, திணையாகவும் நிலமாகவும் கொண்டு அக ஒழுக்கத்தினை விரித்துரைத்து செய்யுளாக இயற்றியுள்ளார். ஒரு நிலத்தை தெரிந்து கொள்ள முற்பட்டால் முதலில் அந்நிலத்தில் வாழக்கூடிய கருப்பொருளான உயிரினங்களை உள்வாங்க வேண்டும். பின்பு நிலத்தில் வாழும் தெய்வம் தொடங்கி, மக்கள் புள், பறை, செய்தி, யாழ், பறை என இன்னபிற இனங்களையும் உள்வாங்கி இனங்கான வேண்டும். அவ்வகையில் முல்லைப்பாட்டு அகமாக இருப்பினும் இரண்டு வகையான கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. அகவாழ்கையில் தலைவனைப் பிரிந்து தனிமையில் வாழும் தலைவி, அவளது ஊர் வாழ்க்கையும், அதற்கு நேராக போர்க்களத்தில் பாசறையின்கண் நிகழும் போர்ச்செயல்பாடு, அதனைச் சுற்றி நிகழும் வாழ்க்கை எனக் கட்டமைக்கிறது முல்லைப்பாட்டு.
தொல்காப்பியர் இதனை ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ (தொல்.1007) என்பர். போர்களத்தில் போர்க்காகச் சென்ற தலைவன் முல்லை அகத்திணையின் புறத்திணையை ஒட்டியே வாழ்வதையும், தலைவி வீட்டில் தலைவனுக்காக ஆற்றியிருத்தலும், தலைவன் தலைவிக்காகப் போர்வினை முடிவுக்குக் காத்திருத்தல் என்ற இருமையும் முன்னின்று ‘முல்லை’க்கான இருத்தல் நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறது.
இனவரைவியல் ‘Ethnography’ விளக்கம்
இனவரைவியல் மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்பாட்டு நிலைகளை விளக்கமாக அமைக்கும் ஒரு வகை எழுத்தாக்கம். இது சமுதாயப்பண்பாட்டு மானிடவியலுக்கு ஊன்று கோலாகச் சுழல்வது. இப்பதம் ‘Ethnography’ என்னும் ஆங்கிலச்சொல். ‘ethnos’ ‘graphin’ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. ‘ethnos’ என்பதற்கு இனம் (race) இனக்குழு (ethnic group)> மக்கள் (People) என்று பொருள். ‘graphinenin’ என்பதற்கு ‘எழுதுவது’ அல்லது ‘வரைதல்’ என்பது பொருள்” ஆகையால் தான் இனவரைவியல் தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி வரைவாக்கம் செய்வதாகும்.

தமிழரின் தொன்மைமிக்க வாழ்வியல் முறையினை எடுத்துரைக்கும் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரமாகும். தமிழர்கள் மலைகளில் வாழ்ந்து உடைமைகளைப் பேணிக்காக்கக் காடுசார்ந்த பகுதியில் வாழ்ந்து பின்பு நாகரிக வளர்ச்சியடைந்து நிலமும் நீரும் வளமும் பெருகி இருந்த வயல்சார் மருதநிலத்தில் வாழ்ந்து, வாணிகம் பொருட்டு கடல்சார்ந்த நெய்தல் பகுதியில் குடியேறி ஒப்பற்ற வாழ்க்கை முறையினை வாழ்ந்து வந்தனர். மேலும் அவர்கள் மலைச்சாரல் பகுதிகளிலும், அழகிய புல்வெளி சார்ந்த காடுகளும் வறட்சியுற்ற போது பாலை என்ற நிலம் உருவானது. அங்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வாழ்க்கை முறையினை உணர்ந்த தொல்காப்பியர் அக வாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை என இரண்டாகப் பகுத்துள்ளார். அதில் ‘அகம்’ காதல் சார்ந்த வாழ்க்கையினையும்,‘புறம்’ நாடு சார்ந்த போர், வீரம் போன்ற வாழ்வியல் சூழலையும் எடுத்துரைத்துள்ளது. தொல்காப்பியர் திணையை ஒழுக்கம் என்னும் பொருளில் கையாண்டு அக ஒழுக்கம் ஏழினையும் புறஒழுக்கம் ஏழினையும் பிரித்தறிகின்றார். 

மனித வாழ்வில் கண்கள் தனியொருவனின் சொத்தாகும். இது இன்பம், துன்பம் சார்ந்த அழகியல்களை உடலியலால் சிலிர்க்கச் செய்கிறது. நல் நிமித்தக் காட்சிகளைக் கண்டு இன்பம் கொள்வதற்கும், துன்பக்காட்சிகளைக்கான விரைந்து செல்வதற்கும் கருவியாகப் பயன்படுகிறது. காட்சிப்படுத்துகிறது; நினைவூட்டுகிறது; என அனைத்துச் செயல்களிலும் உடலியல்பு கொண்டு இயங்குகிறது கண். ஆகையால் என்னவே! ஐம்புலங்களில் ஒன்றான கண்ணைப்பற்றி, ‘கண்விதுப்பிழிதல்’ எனக் கூறி ‘குறிப்பறிதலை’ இரண்டு முறை அதிகாரப்படுத்தியுள்ளார் வள்ளுவர்.
திருக்குறள் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது, யார் எழுதினார், எந்த சமயத்தைச் சார்ந்தவர் எழுதினார், யாருக்காக எழுதப்பட்டது, இது போன்ற பல கேள்விகள் பல நூற்றாண்டுகளாக எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அனைவராலும் ஏற்றுக் கொண்ட கருத்தின் அடிப்படையில் திருவள்ளுவர் இயற்றினார் சங்கம் மருவிய காலத்து நூல், சமண சமயத்தவர் எழுதியது, உலக மக்களுக்காக பொதுவாக எழுதப்பட்டது போன்றவற்றை மையமாகக் கொண்டு அதில் உள்ள கருத்துக்களை இன்று போற்றி வருகிறோம் எனவே தான் மு.வ அவர்கள் சமயங்களின் அடிப்படை உண்மையும் ஒன்றே என்ற தெளிவு பெற்றுவிட்ட காரணத்தால் எல்லாச் சமயங்களையும் ஊடுருவிட பார்த்து அடிப்படை உண்மையை மட்டும் உணர்த்தும் பான்மையைத் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தில் காண்கிறோம்.

பண்டைய காலகட்டங்களில் ‘துயிலுணர்பாட்டு’ என்றும், ‘துயிலெழுப்பு பாட்டு’என்றும் பாணர்மரபில் வழங்கி வந்த இவை வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்தவையாகும். அதுவே, பிற்காலத்தில் புலவர்மரபில் தனிப்பாடல்களாக உருவெடுத்தன. தொல்காப்பியர் காலத்தில் ஒரு துறையாகக் குறிப்பிடப்படுகின்றது. பக்தி இயக்ககாலத்தில் தனித்த ஒரு வகைமையாக இனங்காணப்பட்டது. மேலும், இது சிற்றிலக்கியங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையினை பன்னிருபாட்டியல், தொன்னூல் விளக்கம், பிரபந்த தீபம் முதலான பாட்டியல் நூல்களின் வாயிலாக அறிய இயலுகின்றது. ஆக, தொன்றுதொட்டு வழங்கிவந்த இப்பாட்டு மரபானது பல்வேறு நிலைகளில், பல்வேறு பொருண்மை நிலையில் பாடப்பட்ட நிலைபாடுகளின் தன்மைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக சுந்தரனாரின் பொதுப்பள்ளியெழுச்சியில் காணப்படும் மாறுபட்ட நிலைபாடுகளை இனங்காண முயன்றுள்ளது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒளவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். சங்க காலம், நாயன்மார்காலம், கம்பர்காலம், இக்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. சங்க கால ஒளவையார் இலக்கியப் புலமை, சமயோகித அறிவுமிக்கவர்களுள் அதியமான் அவைக்களப் புலவர்களுள் நட்பாற்றலும், தன்முனைப்பும், பேரன்பும் கொண்டவர். இவர் இன்தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமது பாடல்கள் மூலம் அருந்தொண்டாற்றியவர். பெண்பாற் புலவர்களுள் முதன்மையானவர். தமிழகத்தின் முதல் பெண் தூதுவர் - கிரேக்கப் பெண்பாற்புலவர் சாப்போவுடன் ஒப்பிடத்தக்கவர்.
முன்னுரை 
திராவிட மொழிகள் எல்லாம் ஒரு மூலமொழியிலிருந்து வளர்ந்தது அவை இன்னதென்று தெரியவில்லை. இருப்பினும் அம்மொழிகளனைத்தும் மொழிக்குடும்பமாக இருந்துள்ளது. அக்குடும்பத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்து கால மாற்றம், இடத்திற்கேற்ப பிரியத் தொடங்கியது. அவ்வாறாக பிரிந்த மொழிகள் தான் மொழிகளின் தொகுதியாக உள்ளது. அப்படிப்பட்ட தொகுதிக்குள் பல்வேறு மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழியானது தனிப் பெருந்தன்மை பெற்று விளங்குகிறது. குறிப்பாக தமிழ்மொழி திராவிட மொழிகளின் ஆணிவேராக உள்ளது என்பதே சரியாகும். அவ்வாறு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஓரெழுத்தொருமொழியின் பங்கு பெரிதும் உள்ளது.
சமூக வரலாற்றினைக் காட்டும் பெட்டகமாகவும் மானிடசமூகத்தினை உயிரோட்டமாகக் காட்டும் அரிய சான்றாகவும் காப்பியங்கள் திகழ்கின்றன. எனவே தான், இக்காப்பியங்களை இலக்கிய வளர்ச்சியின் உச்சநிலை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்றைய சமூகத்தில் பல்வகையான நம்பிக்கைகள் நிலவியிருந்தமையை காப்பியங்களின் வழியாக அறியமுடிகிறது. அவற்றில், மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையும் ஒன்றாக உள்ளது. இம்மறுபிறப்பிற்கு அடிநாதமாக விளங்குவது வினையாகும். எனவே இவ்வினையில் காணப்படும் இன்ப, துன்பங்கள் குறித்து ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









