ஆய்வு: தொல்தமிழில் ஞாயிறு
பரந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓர் அரிய முதல்வன் ஞாயிறு. அஞ்ஞாயிற்றினைத் தமிழ் இலக்கியங்கள் ஆழ்வான், இனன், உதயன், ஊழ், எரிகதிர், கதிரவன், ஒளியவன், ககேசன், காலை, தபனன், திவாகரன், தாமரை நண்பன், சூதன், சோதி, தினகரன், பகலவன், பரிதி, சூரியன், செங்கதிரோன் எனப் பல்வேறுபெயர்களில் குறிப்பிடுவதைக் காணலாம். ஞாயிற்றினை வழிபடும் வழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம். ஆணவ இருளில் அழுந்திக் கிடக்கும் உயிர்கட்குத் தன் இன்னருள் ஒளி கொடுத்து அவ்விருளைப் போக்கி அறிவிற்கு உட்பட்ட செய்கைகளைக் கிளர்வித்து இயக்கும் இறைவனையொப்பப் புறவிருளில் மறைபட்டுக் கிடக்கும் மண்ணுயிர்த் தொகைகட்குத் தன்னொளி அளித்து கண்ணொளி விளக்கி அவற்றின் அறிவிச்சை செய்கைகளை எடுத்து இயம்புவது ஞாயிறு என்னும் பலவனே எனலாம்.
இலக்கியத்தில் ஞாயிறு
பண்டைய இலக்கியத்தில் ஞாயிறு ஒரு மகாசக்தியாகப் போற்றப்படுகிறது. அஞ்ஞாயிறு தமிழ் மக்கள் வாழ்வில் பெருமதிப்பிற்குரிய அற்புத விளக்காகத் திகழ்கிறது. வெம்மைக்கு ஞாயிறும், தண்மைக்குத் திங்களும், வண்மைக்கு வானமும் உவமிக்கப்படும் புறப்பாடல்,
“ஞாயிற்றன்ன வெந்திற லாண்மையும்
திங்களன்ன தன்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடைய தாகி” (புறம் 55: 13 – 16)
சிறக்குமாறு பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மருதனிள நாகனார் வாழ்த்துகிறார். இங்கு புலவர் ஞாயிற்றிற்கே முதலிடம் கொடுக்கிறார்.
“முந்நீர் மீ மிசை பலர் தொழத் தோன்றி
ஏமுர விளங்கிய சுடர்” (நற்றிணை 283: 6-7)
“தயங்குதிரை பெருங்கடல் உலகுதொழத் தோன்றி
வயங்குகதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்” (அகம் 263:1-2)
இவை ஞாயிற்றினைப் போற்றும் சங்கப்பாடலாகும்.
சூரியனின் வெளிவட்டமாகிய பல லட்சம் பாகை (2,000,000 டிகிரி கெல்வின்) வெப்பமுள்ள ஒளிக்கதிர்ப் பாபத்தை ‘நெடுஞ்சுடர்கதிர்’ என்றும், தகதகக்கும் பரப்பினை ‘வெப்ப ஒளிப்படலம்’ என்றும் அதன் உட்புறமே ‘கனல் அகம்’ எனறும் இன்றைய அறிவியல் குறிக்கிறது. ஆனால் பண்டையத் தமிழ்ப்பாடலிலேயே கதிரவனின் உள்ளகம் கொதித்துக்கொண்டிருக்கும் அனற்கடல் என்பதைக் கன்னம் புல்லனார் எனும் புலவர்,

திருக்குறள் எத்துணைக் காலங்கடந்தாலும் கற்பக மலர்போல் நின்றொளிரும் நீர்மையது என்று முன்னோர்களால் பாராட்டப்பெற்றது. தமிழரின் தனிக்கருவூலமான திருக்குறளையும் அதன் உரைகளும் ஆராய்தல் வேண்டும். இந்நூலுக்கு உரை எழுதிய பண்டை ஆசிரியர்கள் பதின்மர். இடைக்காலத்தில் கருத்து மாற்றங்களுடன் விளக்கவுரை எழுதியவர்கள் சிலர். பண்டைய பலருரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சி அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்குறள் உரைவளம், திருக்குறள் உரைக்களஞ்சியம், திருக்குறள் உரைக்கொத்து ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
சங்கம் என்னும் அமைப்பின் சிறப்புக்கும், சங்கத் தமிழர்களின் பெருமைக்கும் சான்றளிப்பனவாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள் ஆகும். அவை தொன்மைத் தமிழர்களின் பழைழையை, தொல்பழங்கால நாகரிகத்தை, அவர்தம் வாழ்வியல் வெளிப்பாடுகளை எடுத்துரைப்பதோடு, பிறர் அறியத்தக்க, கற்கத்தக்க, ஏற்கத்தக்க நற்க்கருத்துக்களை அறமாக வகுத்துரைக்கின்றன. சங்கச் சமூகத்தில் அறம் தழைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயலாற்றியவர்கள் நமது புலவர்கள் ஆவர். அதன் பொருட்டே அவர்கள் சான்றோர் என்று சிறப்பித்து உரைக்கப்பட்டனர்.
சங்க காலப் பெண் கவிஞர்களின் காலத்தை நோக்குகையில் பெண்ணிற்கானக் கட்டுப்பாடுகள் பெரும்பான்மையும் வெளிப்படையாகத் தோற்றம் அளிக்காமல் மறைமுகமாகவே இருந்தன. இருப்பினும் இக்கால பெண் கவிஞர்களின் படைப்புகள் என்பது பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் சார்ந்திருக்கும் சமூகம் அச்சமூகங்களில் ஊடாடும் சமயங்கள், சாதிகள், குடும்பம் போன்றவை உருவாக்கிய கட்டுப்பாடுகளும் தடைகளும் அத்தோடு அல்லாது மேலும் பெண் என்பதானாலேயே உருவாகும் மரபார்ந்த சட்டகம் வார்த்த மனத்தடை என இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே இக்கால படைப்புகளைப் பெண் கவிஞர்கள் உருவாக்க வேண்டியுள்ளது. 18, 19ஆம் நூற்றாண்டிற்கு முன்பும் சிற்றிலக்கியக் காலத்திற்கு பின்பும் சமூகத்திலும், அரசியல் களத்திலும் பல்வேறு மாற்றங்கள் உருவாயின. பல மொழிகள் நாட்டில் ஆதிக்கம் செலுத்தின. சுதந்திர இந்தியாவிற்கு முன்பும் பின்பும் ஆங்கிலவழிக் கல்வியே கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை போதிக்கப்பட்டன. இதனால் தமிழ்ச் சூழலில் இலக்கியங்களும் தமிழ்க் கல்வி குறித்த சிந்தனையும் பின் தள்ளப்பட்டன எனலாம். அதனால் இவற்றைக் கற்கும் ஆர்வமும் குறைந்தே காணப்பட்டன. பெண்களுக்கோ அவ்வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அதற்கான சூழலைச் சமூகமும் உருவாக்கித் தரவில்லை எனலாம். இத்தகையப் பல காரணங்கள் பெண் கவிஞர்கள் தம் படைப்புகளைப் படைப்பதற்கு நீண்ட இடைவெளி தேவைப்பட்டது. இத்தனை சூழ்நிலைகளையும் கடந்து பெண் கவிஞர் இக்காலத்தில் தமக்கான வெளியையும் மொழியையும் உருவாக்கி வருகின்றனர். படைப்பு முயற்சிகளில் பெண் கவிஞர்களுக்கு இருந்த தயக்கங்கள் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. பெண் குறித்து ஆண் நோக்கில் உருவாக்கப்பட்ட படைப்புகளையும் பெண் பற்றி ஆண் உருவாக்கிய பார்வையையும் விடுத்து இன்றைய பெண் கவிஞர்கள் தமது தமிழ்ப் படைப்புத் தளத்தில் மாற்றுச் சிந்தனையை உருவாக்கி அதைப் பதிவு செய்து வருகின்றனர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பழமொழிநானூறு பல அரசியல் கருத்தாக்கங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. அரசின் இயல்புகளை முறையே பாடல்கள் 231 முதல் 257 வரையிலும், அரசினை ஆளும் அரசனுக்குத் துணையாக நிற்கும் அமைச்சர் குறித்தும் முறையே பாடல்கள் 258 முதல் 265 வரையிலும், மன்னரைச் சேர்ந்தொழுகும் தன்மைக் குறித்தப் பாடல்கள் முறையே 266 முதல் 284 வரையிலும், மன்னரின் அங்கத்தினராயிருக்கும் படைவீரர் குறித்த பாடல்கள் முறையே 311 முதல் 326 வரையிலும் இடம்பெற்றுள்ளன. ஆக பழமொழிநானூறில் 44 பாடல்கள் அரசியல்பு தொடங்கி படைவீரர் உள்ளிட்ட தன்மைகளை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் வரும் பழமொழிகளின் வழி வலியுறுத்தி நிற்கின்றன எனலாம்.
சேதுநாடு என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டம் பெரும் புகழுடைத்தது. புவியரசராக மட்டுமின்றி, கவியரசாரகவும் சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கு சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் எனப் பல வழிகளில் சான்றுகள் கிடைக்கின்றன. புலவரொடு கூட பிறந்தது வறுமை. வறுமையில் வாடும் புலவர்கள் தங்கள் கவித்திறமையை அரசர்களிடம்காட்டி பொருளுதவி பெற்று, வாழ்க்கையை நடத்திச்செல்வது அக்காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்தது. அவ்வாறு தேடிவந்த புலவர்களுக்குப் புரவலர்களாக அமைந்து, மண்ணும் பொன்னும், பொருளும் அளித்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக, சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாது பிற மாவட்டத்தைச் சேர்ந்த பெருமைமிக்கப் புலவர்களையும் ஆதரித்து சிறப்புச் செய்ததும் இம்மன்னர்களே. இத்தகைய பெருமைமிகு புலவர்கள் வாழ்ந்த மண்ணில் கா.கூ.வேலாயுதப்புலவரும் ஒருவர். இவர் இயற்றிய பாடல் அடிகளைத் தொகுத்து ‘திருப்பாடல் திரட்டு’ எனும் நூல் இரா.பாண்டியன் என்பவரால் வெளிவந்துள்ளது. இந்நூல் வழியாக கா.கூ.வேலாயுதப்புலவரின் வாழ்க்கை வரலாறு, தமிழ்ப்பணி அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமான பொது விதியாகவும், குழந்தையைப் பெற்று வளர்த்தும், சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தம் வாரிசை பெறுவதற்குமான காரணியாகவும் பொதுப்படையாகக் கருதப்படுகிறது. எனின் உலகளவில் மனிதக் குழுக்கள் செய்து கொண்ட திருமண முறைகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப பலவகையில் நிகழ்ந்திருக்கின்றது. இதனை ஆராய்ந்து, பல சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் திருமணம் பற்றி பல்வேறு கருத்துரைகளை எடுத்துரைத்தனர்.
29.4.1891 இல் பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணிப்புரிந்தவர்.பாரதி மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.இவர் ஆத்திசூடி என்ற நூலை இயற்றியுள்ளார்.இந்நூல் 84 ஓரடி பாடல் அடிகளைக் கொண்டுள்ளது.இந்நூலில் பாரதிதாசன் எந்த ஒரு தெய்வத்தையும் நம்பாத நாத்திகர் ஆதலின் கடவுள் வாழ்த்து பாடவில்லை.ஒரு பாயிரம் பாட நூலைத் தொடங்குகிறார்.இந்த பாயிரம் பத்து அடிகளில் அமைந்துள்ளது.இனப்பற்றும்,நாட்டுப் பற்றும் உலகப் பற்றை வளர்க்கும் அடிப்படையில் அமைய வேண்டும்.பகை உணர்ச்சிக்கு அடிப்படையாக அமையக் கூடாது என்றும் அமைதி நிலவ இந்தக் குறிக்கோள் வேண்டும் என்றும் உலகில் பொது ஆட்சி நிலவத் தன்னுடைய நூல் பயன்பட வேண்டும் என்றும் ஒர் உயர்ந்த நோக்கத்தைப் பாயிரமாகக் கூறி பாரதிதாசன் ஆத்திசூடியை பாடத் தொடங்குகிறார். அவ்வையாரின் ஆத்திசூடியைப் போலவே அமைந்துள்ளதால் தம் நூலுக்கும் ஆத்திசூடி என்றே பெயர் வைத்ததாகச் சொல்கிறார் இதனை,
காப்பியம் என்பது காப்புடையது. பொருள் தொடர் நிலையில் அமைவது. அதாவது ஒரு மொழியை சிதைக்காமல் காப்பது காப்பியம். இதையே இலக்கண மரபு, மரபின் இயல்பு வழுவாமல் காத்தல் என்று கூறுகிறது.
இன்றைய அறிவியல் உலகில் அண்டவெளி பிரபஞ்சத்தை பற்றி (Universal) நொடியொரு பொழுதும் ஆராய்ந்து கொண்டே வருகின்றனர். நீண்ட மனித வாழ்வின் அறிவியல் தேடலும், நவீன அறிவியல் கருவிகளின் வரவுமே இவ்வுலகை இன்று ‘அறிவியல் யுகமாய்’ மாற்றியிருக்கின்றது. ஆனால் பண்டைய காலம் அப்படி இல்லை. ஊழி காலத்துள் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்வதற்கான போராட்டம் மிகப்பெரும் சவாலாக விளங்கியது. பின்னர் தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றி ஆய்வினில் இறங்கினர். அதனால் இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வினை அதனோடு இயற்கைப் புறவெளியையும் ஆய்ந்தனர். அறிவியலுள் ‘வானியல் அறிவும் பண்டைத் தமிழகத்துள் மிகுந்திருந்தது. வான்வெளியில் நிகழும் மாற்றங்கள், கோள்களின் இயக்கப் போக்குகள் அதனால் புவியில் ஏற்படும் மாற்றங்கள், பருவ மாற்றங்கள் என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்தனர்.
அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதி நூல்களுக்கு உரியதானது. குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர். மேலும் வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும் இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது. இதனை அறிந்துணர நீதி நூல்களின் அடி அளவு குறித்த செய்திகளைத் தொகுத்துக் காண வேண்டியுள்ளது.
முன்னுரை
முன்னுரை
சொற்கள் ஒவ்வொன்றும் வெறும் எழுத்துகளின் கூட்டமைவு மட்டுமல்ல. அவற்றுக்குள் நுணுக்கமான வரலாறு ஒளிந்திருக்கிறது. சற்று ஆழ்ந்து உற்று நோக்கும் போது சொற்களுக்கு உள்ளான புரிதலை வரலாறு என்பதோடு மட்டும் நிறுத்தி விட முடியவில்லை. சமநிலைச் சமூகத்திற்கு எதிரான சாதிக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி பல சொற்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றது. எல்லாச் சொற்களுக்குள்ளும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், சொற்பகுப்பு பெயர், வினை, இடை, உரி என விரிந்த தளத்தினுடையதாக இருப்பதால் சொற்களின் பின்புலப் புரிதலை முழுமையான வகை, தொகை ஆய்வுகளுக்குப் பின்னரே வரையறுத்து இனங் காணமுடியும்.
முன்னுரை
முன்னுரை
படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏற்பட வேண்டும். இந்த மன எழுச்சி படைப்பெழுச்சியாக மாறி, தக்கதொரு வடிவம் கொண்டு வாசகத் தளத்திற்கு முழுமையான படைப்பாக வந்து சேர்கின்றது. ஒரு படைப்பு முழுமையான படைப்பாக, வெற்றிகரமான படைப்பாக அமைய அதன் வடிவம், அதன் கருத்து, அதன் நடை, அதன் பொதுமைத்தன்மை, அதன் பன்முகத்தன்மை, இலக்கியத் தன்மை போன்ற பல நிலைகள் காரணங்களாக அமைகின்றன. இக்காரணங்கள் வலுப்பெற்று வெற்றிகரமான படைப்பாக மிளர்ந்த ஒன்று காலாகாலத்திற்கும் அழியாமல் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிலைக்கு வந்தடைகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்றழைக்கப்படும் கவிஞரேறு வாணிதாசன் என்னும் தனிமனிதன் தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கும் வகையில் பல்வேறு படைப்புகளை தமிழிலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். அவற்றில், தான் வாழ்ந்த காலத்தின் மீது கொண்டிருந்த விருப்பு வெறுப்புகளையும், எதிர்கால சமூக மாற்றங்களையும் விரும்பி இலட்சிய நோக்கோடு பல உன்னத கருத்தாழமிக்க கவிதைகளை இனிமையும் எளிமையும் அமைந்த செந்தமிழ் நடையில் அழகுற படைத்தளித்துள்ளார். அவரது படைப்பின் வழி தமிழ்ச்சமூகமும் தமிழிலக்கியமும் அடைந்த பெரும் பயனையும், இன்னபிற சமூகசிந்தனைகளையும் வெளிக்கொணர்ந்து தமிழிலக்கியத்திற்கு ஏதேனும் ஒரு பரிமாணத்தில் உந்துசக்தியாக அமையும் என்ற எண்ணத்தில் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









