பிணம் தின்னும் கழுகுகள்- பாகம் மூன்று
- சந்தியா கிரிதர் ( புது தில்லி ) -
இந்த வருட செப்டம்பர் மாதம் மாலேகாவ் இடத்தில் குண்டுகள் வெடித்துச் சிதறின.
மாலேகாவ் வன்முறைக்கு இந்துமத அடிப்படைவாதியான சாதவி
பிரக்யாசிங் தாகுர் என்பவர் முக்கிய குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறhர்.
இராணுவத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்த் புரோகித் என்பவர் இந்த
வன்முறைக்கு திட்டம் தீட்டியவராவர். 2001 ஆம் ஆண்டில் நாசிக்கிலுள்ள பொன்சாலா
இராணுவபயிற்சி பள்ளியில் குண்டு தயாரிக்கும் பயிற்சிபெற்ற
54 இளைஞர்களில் ஒரு சிலர் மாலேகாவ் வன்முறை சம்பவத்தோடு இணைத்துப்
பேசப்படுகிறார்கள்.. மாலேகாவ் வெடிகுண்டு விசாரணைக்குழு இந்த
வன்முறை சம்பவத்திற்கு பல இந்து அடிப்படைவாதிகளை குற்றம் சாட்டுகிறது.
இந்து அடிப்படைவாதிகள், சங்பரிவாரங்கள் பல மாநிலங்களில் வஞ்சகம் வெறுப்பு போன்ற
விஷவிதையை ஆழமாக பதித்து வன்முறையை கையாண்டு
வருகிறார்கள்.. முரண்பாடான கொள்கையை பின்பற்றி பல செயல்களை நடத்தி வருகிறார்கள்..
இந்துமத இயக்கதிலுள்ள உறுப்பினர்கள் பெரும்பாலும்
இளைஞர்கள் என்று சொல்லலாம். எங்கேயாவது ஒரு நிகழ்வு இந்துமதத்திற்கு எதிராக
நடைபெற்றhல் இந்த இளைஞர்கள் இரத்தம் கொதித்து,
கோபத்தோடும், ஆவேசத்தோடும் செய்யக்கூடாதவற்றை செயல்படுத்துகிறார்கள்.. இதனால் நாடு
மாபெரும் அழிவை சந்திக்க நேரிடுகிறது. இந்து
அடிப்படைவாதி இளைஞர்கள் சிறிய துறும்பை மாபெரும் போராட்டமாக நடத்தி, இதனையே கலவரமாக
மாற்றுவதில் வெற்றி கொள்கிறார்கள்.;. இந்த
வன்முறை நாட்டினுடைய அமைதியை குலைத்து நாட்டுமக்களுக்கு பாதுகாப்பில்லாத
வாழ்க்கையைக் கொடுக்கிறது. இந்துமத இயக்கதிலிருந்து
உருவாகிய இந்து ஜhக்ரன் அடிப்படைவாதிகள் மஹhராஷ்டிராவிலுள்ள தானே கலைமேடையில் இந்து
மதத்திற்கு எதிராக நடத்திய நாடகக்குழுவின்
மீது குண்டுகள் வீசியெறிந்து முதன்முறையாக வன்முறையை கையாண்டார்கள். இதனால்
நாடகக்குழு முழுதும் சிதைந்தது மட்டுமில்லாமல்
வந்திருந்த பார்வையாளர்களின் உயிர்களும் பலியாகின. இதனால் எத்தனை உயிர்கள் இழந்தன
என்று சற்றுகூட நினைவுகூராமல் தொடர்ந்து இன்றும்
அடிப்படைவாதிகள் வன்முறையை கையாண்டு வருகிறார்கள்.. பிரபல பத்திரிகையாளர் குமார்
கேத்கர் இந்து மதத்திற்கு புறம்பாக பல கட்டுரைகள்
எழுதி வந்தார். இந்துமத இயக்கத்தின் ஒரு பகுதியான சிவ் சங்கார இளைஞர்
அடிப்படைவாதிகள் இந்த பத்திரிகையாளரின் இல்லத்தில் புகுந்து
பொருட்களை சேதப்படுத்தி, கேத்கரை உயிர் போகுமளவு அடித்து நொறுக்கினார்கள். இந்துமத
அடிப்படைவாதிகளின் தாக்குதலால் கேத்கர்
மருத்துவமனையில் பலநாட்களாக எமனோடு போராடினார். ஒருவர் மீது தாக்கி குற்றுயுயிரும்
குலையுயிருமாக அடித்து செயல்படுத்தப்பட்ட
செயலின்மீது சற்றுகூட சிந்திக்காமல், எதையும் சர்வசாதரணமாக விழுங்கும் இந்து
அடிப்படைவாதிகளின் போக்கு குடிமக்களின் உணர்வுகளை தட்டி
எழப்புகிறது, சிந்திக்க வைக்கிறது. தில்லி பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,
அகில பாரதிய மாணவர் அமைப்பு உறுப்பினர்கள் டிசம்பர் 13 ஆம்
தேதியன்று நடந்த பாராளுமன்ற வெடிகுண்டு சம்பவத்தோடு இணைத்துப் பேசப்பட்ட எஸ் எ. ஆர்
கிலானியின் முகத்தில் எச்சையை துப்பி
அவமதித்தார்கள். அதே மாதிரி பரோடா பல்கலைக்கழகம் நடத்திய ஓவியக் கண்காட்சியில்
வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் இந்து மதத்தை
புண்படுத்தியதால் அடிப்படைவாதிகள் ஓவியங்களை எரித்தார்கள். இந்து இளைஞரகள்;
அடிப்படைவாதிகள் மதத்தின் தத்துவத்தை அறிந்து கொள்ளாமல்
பல முறைகேடான, முரண்பாடான செயல்களை செயல்படுத்தி நாட்டு மக்களுக்கு விரோதியாக
தென்பட்டார்கள். இந்த அடிப்படைவாதிகள் நாட்டு
மக்களின் அன்பை பெற தவறிவிட்டார்கள். நாட்டினுடைய பாதுகாப்பு சட்டம் ஆட்டம் கண்டது,
நாட்டு மக்களின் நிம்மதியை கெடுத்தது.
மதவெறி கொண்ட அடிப்படைவாதிகள் பல வன்முறைகளை செயல்படுத்தி நாட்டினுடைய அமைதியை
சிதைத்தார்கள். அவர்களுடைய இழிவான
செயலுக்கு ஒரு சில அரசியல்வாதிகளும் துணை சென்றார்கள்.;. இப்படிப்பட்ட
அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்ககையை இழந்து விடுகிறார்கள்..
அராஜகமான அரசை தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் ஒருகணம் சிந்திக்கிறார்கள்.. இதனால்
பெரும்பாலான குடிமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள்..
இந்துமத நிழலில் உருவாகிய பாரதிய ஜனதா கட்சியை சாரந்;தவர்கள் பாப்ரி மNதியை
நொறுக்கி தரைமட்டமாக்கினார்கள். இப்படிப்பட்ட செயலால்
இந்தக் கட்சி மற்ற மதத்தவர்களின் எதிப்புக்களை பெற்றுக் கொண்டது. மற்ற மதத்தவர்கள்
இந்தக் கட்சியின் மீது நம்பிக்கையை இழந்தார்கள், இந்தக்
கட்சிக்கு எதிராக செயல்பட்டார்கள். மீண்டும் இந்தக் கட்சியை சார்ந்தவர்கள் இந்துமத
அடிப்படைவாதிகளின் உதவியால் பல மாநிலங்களில் இந்து
முஸ்லிம், இந்து கிறிஸ்துவர்களிடையே கலவரத்தை உருவாக்கி வருகிறார்கள்.. பாப்ரி
மNதியின் வீழ்ச்சியால் பல எதிர்ப்புகளை பாரதிய ஜனதா கட்சி
சந்திக்க நேரிட்டது. பல மதத்தவர்களின் கண்களை துடைப்பதற்கு ப.ஜ.க. ரதயாத்திரையை
மேற்கொண்டது. அடிப்படைவாதிகளின் பிரதான
கொள்கையும், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையும் ஒன்றhகயிருக்கிறது என்பதில் எவ்வித
சந்தேகமில்லை. இந்தியாவின் அடிப்படை வரலாற்றை
அறிந்து கொள்ளாமல் மதவாதத்தை சார்ந்த கட்சிகள் இந்தியாவை இந்துக்களின் தேசமென்றும்
ஒவ்வொரு இந்தியனும் இந்துவாகயிருக்க வேண்டும்
என்ற கொள்கையை தனது மூச்சாக கொண்டிருப்பது, மக்களின் நம்பிக்கை என்ற தூண்களை வேரோடு
பிடுங்கி எறிவதில் வெற்றியைக்; கண்டது.
உலகம் முழுவதும் இஸ்லாமியமத அடிப்படைவாதிகள் தீவிரவாதிகளென்றும்,
பயங்கரவாதிகளென்றும் அழைக்கப்படுதிறார்கள்.. மதவெறி கொண்ட
தீவிரவாதிகள் பயங்கரமான வன்முறை சம்பவங்களை நடத்தி, மக்களின் மனதில் பதற்றத்தையும்
பயத்தையும் உருவாக்கி உலகத்தையே தங்களுடைய
கைகளில் அடக்கிக் கொள்ள முயன்றார்கள்.. மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்
காட்டுமிராண்டித்தனமாக வன்முறையை செயல்படுத்தி
உலகத்தினுடைய எதிப்பைப் பெற்றுக் கொண்டார்கள். இஸ்லாமிய தீவிரவாதிகளின் வழிகளை
பின்பற்றும் இந்து அடிப்படைவாதிகள் மக்களுடைய
எதிப்பையும், வெறுப்பையும் பெற்றுக்கொண்டதோடு நாட்டினுடைய விரோதியாக
கருதப்படுகிறார்கள்..
இந்துமத அமைப்புகள் மதவெறி என்ற விஷவிதையை சலிப்படைந்த வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருந்த இளைஞர்களின் மனதில் ஆழமாக பதித்து
தங்கள் கொள்கையை அவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்கள். மதவாத இயக்கத்தோடு
இணைத்துக் கொண்ட இந்த இளைஞர்கள்
அடிப்படைவாதிகள் கோபத்தோடும் ஆவேசத்தோடும் வன்முறையை செயல்படுத்தி மக்களின்
உணர்வுகளை தட்டி எழுப்பினார்கள். இந்த
இளைஞர்களிடம் மதவெறி அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது. பயணிகளுடன் பறந்து
கொண்டிருந்த இந்திய விமானத்தை இஸ்லாமிய
தீவிரவாதிகள் கந்தஹhரில் கடத்தினார்கள. இராணுவ வீரர்களால் பிடிக்கப்பட்டு சிறையில்
அடைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கரவாதியின் விடுதலை
கோரிக்கையை தீவிரவாதிகள் நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒன்றும் செய்ய முடியாத
நிலையிலிருந்த இந்திய அரசு தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு
இணங்கியது. இந்தச் சம்பவம் இந்து அடிப்படைவாதிகளின் மனதை ஆழமாக காயப்படுத்தியது.
மனதில் பதிந்த காயம் மாபெரும் புயலாக உருவெடுத்து
தற்சமயம் மனித குலத்திற்கு ஒரு சவாலாக நிற்கிறது.
சமூகத்தில் கடவுள் மீது நம்பிக்கையில்லாதவனும், தீவிரவாதியும் சமமாக
கருதப்படுகிறார்கள். அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக எடுத்துக்
கொள்ளவில்லை. மதவாத அடிப்படைவாதிகளுக்கு நாட்டினுடைய வளர்சிசியும் முன்னேற்றமும்
பொருந்தாத விஷயமென்று சொல்லலாம்.
வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் மதவாத இயக்கத்தோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபடுத்திக்
கொண்டு, கலவரத்தை உருவாக்கி நாட்டினுடைய
அமைதியை குலைக்கிறார்கள்.. சங் பரிவாரமும் , மதவாத நிழலில் உருவாகும் அரசியில்
கட்சியும் பல வழிகளில் அடிப்படைவாதிகளுக்கு
உதவுகிறார்கள்.. இப்படிப்பட்ட ஒரு சில பிணம் தின்னும் கழுகுகள் மதவாத
அடிப்படைவாதிகளை ஆயுதங்களாக பயன்படுத்தி, அவர்களை நாட்டிற்கு
எதிராக தூண்டிவிட்டு வன்முறையை கையாண்டு தங்களது கொள்கையை நிறைவேற்றிக்
கொள்கிறார்கள்.. மக்கள் மதத்தை வெறுக்குமளவு[ நிலையை
உருவாக்கியுள்ளார்கள். சமூக விரோதியான இந்தப் பிணம் தின்னும் கழுகுகளை பூண்டோடு
அழிக்க பொதுமக்கள் தீவிரமாக செயல்பட வேண்டும்.
அப்பொழுது தான் பாதுகாப்பான இந்தியாவை மீண்டும் பார்க்க முடியும். இந்த தருணத்தை
நழுவ விடாமல் செயல்படுவோம்.
sandhya_giridhar@yahoo.com
பிணம் தின்னும் கழுகுகள்! 1 & 2
- சந்தியா கிரிதர் -..உள்ளே
சிதைந்து போகும் வங்கிகளின்
அடித்தளம்: ஒரு கண்ணோட்டம்!
- சந்தியா கிரிதர் (புது தில்லி) -....
உள்ளே
வயதானவர்கள் சமுகத்திற்கு ஒரு
சுமையா!
- சந்தியா
கிரிதர் (புது தில்லி_ - ..உள்ளே
மக்கள் நடத்துவது போராட்டமா,
கலவரமா?
- சந்தியா கிரிதர் (புது தில்லி) ....உள்ளே
மனிதம் தழைக்க வேண்டும்!
- சந்தியா கிரிதர், -....உள்ளே
பெண்கள்: வாழ்வும் உரிமையும்!- சந்தியா கிரிதர்\ ......உள்ளே
பெண்களின் வாழ்க்கை: முடிவற்ற
போராட்டம்! - சந்தியா கிரிதர் (புது தில்லி) ...உள்ளே இந்திய பொருளாதாரத்தின் வேகமான
வளர்ச்சியும் சமநிலையும்!
- சந்தியா கிரிதர் (புது தில்லி) -.....உள்ளே வளர்ந்து
வரும் நக்ஸல்பாரிகள்! அதிகரிக்கும் இடைவெளி!- சந்தியா கிரிதர் (புது தில்லி) -.. ...உள்ளே
பணக்காரன் ஏழையினிடையே விரிந்து
வரும் இடைவெளி வருங்கால அபாயச் சின்னம்! - சந்தியா கிரிதர்,-...உள்ளே
|