| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| சமூகம்! |  
| மகளிர் தினக் கட்டுரை! பெண்கள்: வாழ்வும் உரிமையும்!
 
 - சந்தியா கிரிதர் (புது தில்லி) -
 
 1. பெண்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை கொடுக்க வேண்டும்!
 
  சுதந்திரம் 
கிடைத்து அறுபது ஆண்டுகள் கடந்தும் நமத இந்தியநாடு பழமையான பண்பாட்டையும் 
வழக்கத்தையும் இன்று வரையில் மாற்றிக் கொள்ள முயற்சி எடுக்கவில்லை. நாடு பொருளாதரம் 
வளர்ச்சி பெற்றாலும், வளரும் நாடுகளில் முதலிடம் வகுக்கும் நம்மிடையே ஆணி வேராக, ஆழமாக பதிந்துவிட்ட மூடநம்பிக்கையான கருத்துக்கள் நிலவி 
வருகின்றன. அதனை மாற்றிக் கொள்ள நாட்டு மக்களின் மனம் ஒரு துளி இடம் கூட கொடுக்க 
மறுக்கிறது.. பணக்கார குடும்பத்தினர் அல்லது ஏழைக்குடும்பத்தினர் முதலில் பிறக்கும் 
குழந்தை ஆண்குழந்தையாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆண் குழந்தை 
பிறந்ததால் குடும்ப வாரிசை பெற்றதாகவும், குடும்ப கௌரவமும் பெயரையும் கட்டிக் 
காப்பாற்றியது போல எண்ணங்களை கொண்ட இந்த சமுதாயத்தை எந்த வழியிலும் தடுக்க முயல்வது 
கஷ்டமாகவே தோன்றுகிறது.
 
 ஆண்குழந்தை பிறந்தால் கடைசி ஈமக் காரியங்கள் நிச்சயம் நல்லபடியாக நடக்கும் என்று 
எண்ணம் கொண்டு பெருமூச்சுவிடும்
 சமூகத்தை திருத்த முடியாது. இந்தியக் குடும்பத்தில் பொதுவாக ஆண்கள் தான் 
குடும்பத்தலைவனாக ஏற்கப்படுகிறார்கள். வழிவழியாக
 காப்பாற்றி வந்த குலப் பெயரும், குடும்ப சொத்தும் ஆண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 
இந்தச் சமூகத்தில் ஆண் குழந்தைக்கு
 கிடைக்கும் மரியாதையும், மதிப்பும் பெண்குழந்தைக்கும் கிடைக்குமா என்று சந்தேகம் 
பிறக்கிறது. இன்றைய காலத்தில் பெண்கள் படித்து
 பட்டம் பெற்று ஒவ்வொரு துறையிலும் முன்னணி வகுத்தாலும் சமூகம் அவர்களுக்கு எந்தவித 
முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறது.
 என்னதான் பெண்கள் சம்பதித்தாலும் அவர்கள் வேறுவீட்டிற்கு குடிபுகுபவள் என்று சமூகம் 
அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமையை பறிப்பதற்கு பல முயற்சிகளை கையாளுகிறது.
 
 கிராமப்புற பகுதிளில் வாழும் பெண்களின் நிலை எந்தவித மாற்றங்களையும் காண 
முடியவில்லை. சமூகம் அவர்களை போதிய
 படிப்பறிவு கொடுக்காமல், அதிக கவனம் செலுத்தாமல் வெத்து வெட்டான வாழ்க்கை வாழ 
வற்புறுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையை
 சிறிய வட்டத்துக்குள் அமைத்து, பிற்போக்கான எண்ணங்களைத் தணித்து இதையே பெரிய 
பிரச்சனையாக உருவாக்க வித்தாக
 விதைக்கப்படுகிறது.
 
 
  1970 
ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டில் ஆண் பெண் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது. 
பஞ்சாப் மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 793 பெண்களும், ஹரியானாவில் 1000 ஆண்களுக்கு 
695 பெண்களும், தில்லியில் 1000 ஆண்களுக்கு 760 பெண்கள் என்று சதவிகிதம் 
கணிப்பின்படி எத்தனை பெண் சிசுக்கள் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று 
ஊர்ஜிதமாகிறது. ஏந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இதனை வளர விட்டால் இந்த சதவிகிதம் 
சரிந்து கொண்டே செல்லும். ஒரு காலத்தில் பெண் குழந்தைகள் கிடைப்பது அரிதாகிவிடும். 
அந்த நிலையையும் காண்பதற்கு வெகு தூரமில்லை. 
 கிராமப்புற பகுதிகளில் நிலவிவரும் பிற்போக்கான எண்ணங்கள் மாற்றுவதற்கு அரசும் 
தன்னார்வு மையமும் பாடுபட வேண்டும்.
 பெண்ணின் படிப்பை பற்றிய நல்ல கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும். பெண் குழந்தைகளை 
பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு
 அவர்களை தயாராக்க வேண்டும். அரசும் பெண்ணுக்கென்று கல்வி நிலையங்களையும் 
கல்லூரிகளையும் திறப்பதற்கு உதவி புரிய
 வேண்டும். மேலும் தன்னார்வு மையமும் பெண்கள் படிப்பின் நல்லவைகளை கிராமப்புற 
பெண்களுக்கு பக்குவமாக எடுத்துரைக்க
 வேண்டும். இதற்கு அரசும், தன்னார்வு மையமும் ஒன்று சேர்ந்து பாடுபட்டால் 
பிற்போக்கான எண்ணங்களை மாற்றுவதற்கு வாய்ப்பு
 ஏற்படும்.
 
 கருவிலே பெண்சிசுவை அழிப்பதைத் தடுப்பதற்கு அரசு பல சட்டங்களை அமலுக்கு கொண்டுவர 
வேண்டும். கிராமப்புறங்களில்
 பெண்சிசுவை கொலை செய்வது சற்று அதிகமாகவே உள்ளன. மேலும் உயர்தர கருவிகளை கொண்ட 
மருத்துவமனைகள் தாயின்
 கருவில் வளரும் குழந்தையைப் பற்றிய விவரங்களை முன் கூட்டியே தெரிவிப்பதை நிறுத்திக் 
கொள்ள வேண்டும். மருத்துவர்கள்
 பெற்றோர்களுக்கு எந்த குழந்தையாயிருந்தாலும் ஆரோக்கியமான குழந்தையாக இருக்க 
வேண்டும் என்ற எண்ணத்தை புகுத்த வேண்டும். கருவில் தரித்த குழந்தையின் விவரங்களை 
முன்கூட்டியே தெரிவித்த மருத்துவமனைகளுக்கு சட்ட விரோதமான செயலை புரிந்ததற்காக உரிய 
தண்டனையும் வகிக்க வேண்டும்.
 
 இறைவன் கொடுத்த ஜுவன் ஆண்குழந்தையாக இருந்தாலும் அல்லது பெண் குழந்தையாக 
இருந்தாலும் ஏற்றுக் கொண்டு மனதை
 பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். பெண் சிசுவை சிதைக்கும் பழக்கத்தை முற்றிலும் 
ஒழிக்க வேண்டும். இருபது வருடங்களில் ஆறு கோடி பெண் சிசுக்கள் 
சிதைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களை படிக்க வைப்பதற்கு அரசும், தன்னார்வு மையமும் 
அதிக ஊக்கம் ஆர்வம் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் கல்லூரிகளை அங்காங்கே 
திறந்து வைக்க வேண்டும். அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களுக்கு கொடுக்க 
வேண்டிய உரிமைகளை பறிபோகாமல் வாழும் வழியை வகுத்துக் கொடுக்க வேண்டும். 
கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு நாட்டில் சாதனை படைத்த பெண்களின் வரலாற்றை 
அறிவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். சாதனையாளர்களின் துணிவு, தைதியம், 
தன்னம்பிக்கை உழைப்பு, விடாமுயற்சி போன்ற நல்ல குணங்களை எடுத்துக் காட்டி பாடத்தை 
சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் பெண்கள் மனோதைரியத்தை பலப்படுத்தி 
விடாமுயற்சியும் உழைப்பம் கொண்டு நாட்டிற்கே பெரிய சாதனை படைக்கும்
 வல்லுநர்களாக திகழ்வார்கள்.
 
 2. பெண்களின் வாழ்க்கை: முடிவற்ற போராட்டம்!
 - சந்தியா கிரிதர் (புது தில்லி) -
 
  பெண்கள் 
பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்று சொல்லிக் கொள்வதில் நாம் 
பெருமைப்படுகிறோம். சுனிதா வில்லியம்ஸ் என்ற பெண்மணி பூமியில் மட்டுமில்லாமல் 
விண்வெளியில் மாதக்கணக்கில் நடமாடினாள் என்ற பெருமை அனைவரையும் வியக்க வைத்தது. 
பெண்கள் அரசு துறையில் பெரிய பதவிகள் வகிக்கிறார்கள். காவல், இராணுவம், விமான 
ஓட்டுனர் என்று எந்தத் துறையையும் பெண்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கை 
அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இப்படி பெண்களின் திறமைகளை அடுக்கடுக்காக 
அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தியாவில் சில கிராமங்களில் பெண் குழந்தைகள் 
நிர்பந்தமாக விற்கப்படுகிறார்கள் என்ற செய்தி தலையில் இடி விழுந்தது போல ஒரு உணர்வை 
கொடுத்தது. கிராமப்புறங்களில் பெற்றேhர்கள் பெண் குழந்தைகளை பணக்காரர்களுக்கு 
விற்று விடுகிறார்கள். பசியும் பஞ்சமும் கிராம மக்களை வாட்டுகிறது. ஏழ்மையின் 
காரணமாக பெண் குழந்தைகள் விற்கப்படுகின்றன. பணத்திற்காக ஆசைப்பட்டு 
பணக்காரர்களுக்கு பெண்களை விற்றுப் பிழைக்கிறhர்கள். 
 எத்தனையோ கிராமங்களில் பற்றாக்குறையும் பஞ்சமும் தான் தலை தூக்கி நடமாடுகிறது. பெண் 
குழந்தைகளை பேணி வளர்த்து
 பராமரிப்பது சிரமம் என்று அறிந்து, பெற்றோர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்த 
பணக்காரர்களுக்கு கண்மூடித்தனமாக விற்கிறார்கள். அப்படி
 விற்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்னவாகும் என்று அறிந்து கொள்ள விருப்பமில்லாமல் 
சொர்ப பணத்திற்காக பந்தத்தை
 விலைபேசும் கிராம மக்களின் நிலமை மிகவும் வேதனைக்குரியது.
 
 எப்போதும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் கிராமங்களில் விவசாயத்திற்கு 
வழியில்லாமல், ஆண்கள் வேலை வெட்டியில்லாமல் பொழுதை கழிக்கிறhர்கள். அங்குள்ள 
பெண்கள் தான் அதிகபட்சமாக வேலை செய்து குடும்ப பாரத்தை சுமக்கிறhர்கள். அந்தப் 
பெண்களும் நிர்பந்தமாக வேண்டா வெறுப்புடன் விலைமாதர்களாக பிழைக்கும் பொறுப்பை 
ஏற்றுக் கொள்கிறhர்கள். ஆன்மாவை விற்றுப் பிழைக்கும் கிராமங்களும் இந்தியாவில் 
நிரம்பி வழிகின்றன என்று சொல்லிக் கொள்ளும் போது மனம் புண்படுகிறது. கிராமப் 
புறங்களில் பெண்களின் நிலை இதுவரையில் உயரவில்லை, முன்னேற்றமடையவில்லை.
 
 இந்தியாவில் ஆதிவாசிகள் கொண்ட கிராமங்கள் அதிகமாக உள்ளன. நிலையில்லாத வருமானத்தைக் 
கொண்ட இந்த ஆதிவாசிகளின்
 பெண்குழந்தைகளை அவர்களிடையே வளர்ந்து வரும் நக்சல்பாரிகள் இயக்கத்தில் ஈடுபடுத்திக் 
கொள்கிறார்கள. நக்ஸல்பாரிகள்
 ஆதிவாசிகளின் பெண் குழந்தைகளை உளவு வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். இந்தக் 
குழந்தைகள் கொடுத்த தகவல்களுக்கு
 நக்ஸல்பாரிகள் போதிய பண உதவி கொடுத்து ஆதிவாசிகளின் நம்பிக்கையை பெறுகிறார்கள். 
பெண் குழந்தைகளின் வருமானத்தில்
 ஆதிவாசிகளின் குடும்பங்கள் ஓடுகின்றன. புத்தகங்களை சுமக்கும் கைகளில் துப்பாக்கிகள் 
சுமந்து கொண்டு செல்லும் இந்தப் பெண்
 குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது. உயிரை பணயம் வைத்து பிழைக்கும் 
பெண் குழந்தைகளின் வாழ்க்கை பயங்கர விளையாட்டாகிவிட்டது. ஏழ்மை என்ற அரக்கன் கிராம 
மக்களின் வாழ்க்கையில் கொடூரமான விளையாட்டை விளையாடி மனதிருப்தி அடைகிறான் என்று 
சொல்லலாம்.
 
 தலைநகரில் எத்தனை பெண்கள் வரதட்சனை கொடுமையால் உயிரிழந்தார்கள். கேவலம் அதிக 
பணத்திற்கு ஆசைப்பட்டு
 மனசாட்சியில்லாத மானிடர்கள் பெண்களை எரிக்கிறhர்கள். அவற்றுள் சில பெண்கள் 
மருத்துவமனையில் குற்றுயிரும் குலையுயிருமாக
 உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறhர்கள். அப்படியே உயிர் பிழைத்தாலும், கருகிய 
சருமம் அந்த கொடுரமான சம்பவத்தை அடிக்கடி அவர்களுக்கு நினைவுபடுத்துகிறது. விகாரமான 
தோற்றத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு அவர்கள் மனம் ஆதங்கத்தோடு பல நாட்கள் 
ஏங்கியதுண்டு, கண்களிலிருந்து கண்ணீர் பெருகிய வண்ணம் வாழ்க்கையை கழிக்கும் இந்த 
பெண்களின் கதை சொல்லாமலே நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
 
 பெண்கள் அதிகாரப் பதவியிலிருந்தும் இந்த அநீதிகளும் கொடுமைகளும் பெண்களுக்கு நடந்து 
கொண்டுதான் இருக்கின்றன. பெண்களின் வாழ்க்கையில் இந்தப் போராட்டம் சளைக்காமல் 
நிகழ்ந்து வருகின்றன. இதற்கு முடிவே இல்லையா அல்லது முடிவு இருந்தும் அதனை சாpவர 
பயன்படுத்த இயலவில்லையா? பெண்கள் முதலில் வீட்டில் நிகழும் வன்முறைகளை எதிர்க்கக் 
கூடிய திறமையையும் மன உறுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து 
தொடங்கிய இந்தப் புயல் நாட்டிலுள்ள பெண்களையும் ஒன்று திரட்டி நடக்கும் 
அநீதிகளையும், வன்முறைகளையும் எதிர்த்து போராடி வெற்றியடைய வேண்டும் என்ற 
நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களே பெண்களுக்கு பாதுகாப்பு தர 
வேண்டும். ஒரு திறமைசாலியான பெண் என்பவள் ஆலமரமாக வளர்ந்து அனைத்து பெண்களுக்கும் 
நிழலை கொடுக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. பெண்மையை போற்றுவோம், பெண் சக்தியை 
உருவாக்குவோம், பெண்களை மதிப்போம் என்ற முழக்கத்தோடு வரும் மகளிர் தினத்தை 
கொண்டாடுவோம்.
 
 sandhya_giridhar@yahoo.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |