இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2007 இதழ் 96  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல் / சமூகம்!
சந்தியா கிரிதரின் இரு கட்டுரைகள்!
வளர்ந்து வரும் நக்ஸல்பாரிகள்! அதிகரிக்கும் இடைவெளி!

- சந்தியா கிரிதர் (புது தில்லி) -.

நக்ஸல்பாரி இயக்கம் பரவியிருக்கும் இந்தியா...முன்பு பல நாடுகளை இணைத்து சோவியத் யூனியன் என்று அழைக்கப்பட்டது. சோவியத் நாட்டைச் சார்ந்த அறிவாளிகள் லெனின், ஸ்டாலின், மாவோ என்பவர்கள் தங்கள் கொள்கைகளின் தத்துவத்தை அந்த நாட்டு மக்களின் இதயத் துடிப்பிலே ஆழமாக பதித்தார்கள். அவர்களின் கொள்கைப்படி நாட்டின் இயற்கை வளத்தையும், மற்ற சொத்துக்களையும் சோவியத் நாட்டு மக்கள் சரிசமமாக பங்கு போட்டு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை நடைமுறையிலும் பயின்றhர்கள். காலப் போக்கில் சோவியத் அங்கம் உடைந்து வௌ;வேறு நாடுகளாக பிரிந்தன. தற்சமயம் ரஷ்யநாடு விஞ்ஞான வளர்ச்சி, சமூக வளர்ச்சி இவைகளின் காரணமாக லெனின், ஸ்டாலின், மாவோவின் கொள்கைகளை முழூமையாக கடைபிடிக்க இயலாததால் நாளடைவில் மறைந்தன. இன்றைய தினத்தில் மக்களிடையே நிலவும் எண்ணங்களே முன்காலத்து அறிவாளிகளின் கொள்கைகளை சிதைந்து அழித்தன. ஆனால் இன்றும் நமது நாட்டில் ஒரு சில மாநிலங்களில் சோவியத் நாட்டின் தூண்களாயிருந்த கொள்கைகளை பின்பற்றுகிறhர்கள். இதன் மூலம் தான் இடது சாரிக் கட்சிகள் உருவாகின. இந்தக் கட்சியும் அரசியலில் பெரும் பங்கு வகித்து வருகிறது.

இந்தக் கட்சியின் உதவியால் அமைந்த அரசியல் கிராமப்புற பகுதிகளில் எந்தவித பயனையும் அளிக்கத் தவறியது. கிராமப்புற மக்களிடையே நிலவிவரும் வறுமையின் காரணமாக அவர்களிடையே கொந்தளிப்பையும் மனக்கசப்பையும் உருவாக்கியது. இதுவே நக்சல்பாரி என்ற இயக்கத்தை உருவாக்கியது. 1960 ஆம் ஆண்டில் சிறியதாக தொடங்கிய இந்த இயக்கம் பழங்குடியினர் மக்களிடையே நிலவி வருகிறது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தைக் கணிக்க நகரங்களை மட்டும் அடிப்படையாக வைத்து மதிப்பீடு செய்வது தவறான முறை என்று சொல்லலாம். கிராமமும் நாட்டின் ஒரு அங்கமே என்ற எண்ணத்தை கருத்தில் வைத்துக் கொண்டு அதன்படி மதிப்பீடு செய்து பார்த்தால் ஒரு நாடு எந்த அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட அளவு கோலை நடைமுறையில் பயின்று பார்க்கும் போது பீஹார், ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிஸ்ஸா மாநிலங்களிலுள்ள கிராமப்புற மக்கள் ஒரு வேளை சோற்றுக்குக் கூட வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். பல மக்கள் வருமைக் கோட்டின் கீழே தான் வாழ்கிறார்கள். ஒரிஸ்ஸா மாநிலம் எப்போதும் பஞ்சம் நிறைந்த மாநிலம் என்று சொல்லலாம். அங்குள்ள கிராம மக்கள் உணவைப் பார்த்தே பல நாட்களாகி விட்டன. அப்படிப்பட்ட பசியும் பிணியும் அவர்களை ஊர்ந்து செல்லும் புழுவையும் பூச்சியையும் உணவாக எடுத்துக் கொள்ள வற்புறுத்தியது.

என்னதான் இந்தியா பொருளாதாரத்திலும், விஞ்ஞானத்திலும், வளர்ச்சி பெற்றாலும் கிராமப்புற மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடி வதங்குகிறார்கள். பணக்கார வர்க்கத்தை முன்னோடியாக வைத்துக் கொண்டு இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது என்று சொல்லிக் கொள்வது தவறாகும். இன்னும் கிராமம் முன்னேறவில்லை. அங்கு வாழும் மக்களும் முன்னேறவில்லை எந்தவித வளர்ச்சியும் கிராமமக்கள் காண முடியவில்லை. நாட்டின் வளர்ச்சி பழங்குடியினர் மக்களுக்கு எந்தவித பலனையும் கொடுக்கவில்லை. அவர்களிடையே நிலவும் வெறுப்பும் கொந்தளிப்பும் நக்ஸல்பாhpகளை வளரச் செய்தது. அவர்களை பாதுகாக்கும் பொருட்டு இருப்பவர்களிடமிருந்து பறித்து இல்லாதப்பட்டவர்களுக்கு கொடுப்பது என்ற கொள்கையோடு நக்ஸல்பாhpகள் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று நியமிக்கப்பட்ட கொள்கையின்படி செயல்களை செயல்படுத்துகின்றனர். நக்ஸல்பாரிகள் பழங்குடியினர் வறுமைக் கோட்டின் கீழே வாழும் கிராமப்புறமக்களுக்கு பெருமளவில் உதவுகின்றனர். இந்த இயக்கம் ஏழை மக்களை வாழ வைப்பதுடன் அவர்களை நாட்டின் முக்கிய அங்கமாக வகுப்பதற்கு பல நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. நக்ஸலைட்டுகள் பழங்குடியினர், கீழ்தரப்பட்ட மக்களின் சக்தியை பலப்படுத்த பெரிதும் பாடுபடுகின்றனர். இவர்கள் சில சமயங்களில் வன்முறைகளும் கையாளுகின்றனர். முக்கிய பிரமுகர்களை கடத்திச் சென்று அவர்களிடமிருந்து பெரும் தொகையை மீட்டு ஏழை மக்களின் நலத்தை மனதில் வைத்துக் கொண்டு செலவழிக்கின்றனர். இதற்கு அரசியலும் துணை செல்கிறது.

1980 ஆம் ஆண்டில் பல நாடுகளிலிருந்து நுகர் பொருட்கள் நமது சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இந்தியா புதிய பொருளாதார சகாப்தத்தை உருவாக்கியது. இந்தப் புதிய பொருளாதார கொள்கை கிராமப்புறங்களை எந்த வகையிலும் திருப்திபடுத்தவில்லை. இதனால் சிறிதளவில் இயங்கி வந்த நக்ஸல்பாரிகள் பெரிய ரூபம் கொண்டு ஆட்பலமும் சேகரித்து பழங்குடியினர் பாதுகாப்பிற்கும், ஏழை மக்களின் வறுமையை நீக்குவதற்கும் பெரிதும் உதவினர். மக்களிடையே நிலவிவரும் பற்றாக்குறைதான் இந்த நக்ஸலைட்டுகளை உருவாக்கியது. கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த இயக்கம் வளர்ந்து கொண்டு வருவதை பற்றி அரசும் அறியும், இந்த நாடும் அறியும். மக்களிடையே பரவும் இடைவெளியை போக்க ஏதாவது வழிபிறக்கும் என்ற நம்பிக்கையோடு செயல்படுவோம்.
 

பணக்காரன் ஏழையினிடையே விரிந்து வரும் இடைவெளி வருங்கால அபாயச் சின்னம்!

- சந்தியா கிரிதர், புது தில்லி. -


இந்தியாவின் பங்குச் சந்தை 2, புள்ளியை தொட்டுவிட்டது? முகேஷ் அம்பானி உலகின் மிகப் பெரிய பணக்காரன் என்ற செய்தியும் படித்தோம். மற்றொரு பக்கம் பஞ்சாபிலிருந்து 2, விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தினார்கள். குவாலியாரிலிருந்து 2, ஆண்களும் பெண்களும் கால்நடையாக டெல்லி வந்து ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் தவிக்கும் நிலமையை உணர்த்தும் வகையில் போராட்டம் நடத்தினார்கள்.

இரண்டு முகங்கள் கொண்ட இந்தியாவின் சரித்திரம், பொருளாதாரம் மிகவும் விந்தையானது. ஒரு பக்கம் ஏழைகள் நிரம்பிய நாடாகயிருந்தாலும், மற்றெhரு பக்கம் உலகின் பணக்காரர்களும் இங்கு நிரம்பியுள்ளார்கள். பங்குச் சந்தை புதிய சகாப்தத்தை படைத்த அதே சமயத்தில் தில்லியின் பாராளுமன்ற சாலையில் ஏழை மக்களின் போராட்டமும் நடந்தன. முகேஷ் அம்பானி 240 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தை மனைவிக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார். ஆனால் மறுபக்கம்; ஏழை மக்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுக்காமல் அமுங்கி விட்டது. நாளுக்கு நாள் ஏழை பணக்காரனிடையே நிலவிவரும் இடைவெளி விரிந்து கொண்டே செல்கிறது. இந்த இடைவெளியே பெரிய பிளவையும் ஏற்படுத்தக் கூடும்.

இந்தியாவின் அழகுச் சின்னமாக இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் இன்று சீரழிந்து கிடக்கிறது. பனிமலையும், அழகிய தால் ஏரி (னுயட டுயமந) மிதக்கும் படகு வீடுகளும், நான்கு சினார் மரங்கள் போன்ற கண்கொள்ளா காட்சி இன்று சீரழிந்து கிடக்கிறது. வெளிநாட்டு மக்கள் காஷ்மீரின் அழகை ரசிப்பதற்கு வந்து செல்வார்கள். இன்று அவர்கள் வருகையும் குறைந்து விட்டது. இதனால் அந்நியச் செலாவணியும் குறைந்து அங்குள்ள மக்களின் தொழிலும் பாதிக்கப்பட்டது.

இயற்கை வளம் கொண்ட பஞ்சாப் மாநிலம் ஒரு காலத்தில் நாட்டின் அன்னலக்ஷ;மி என்று சொல்லப்பட்டு வந்தது. இன்று விவாசாயிகள் விவசாயத்தால் போதிய வருமானம் கிடைக்காததால் தங்கள் நிலங்களை விற்று வேறு தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பச்கைபசேர் நிலங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் நிற்கின்றன. புதிய வளர்ச்சி மக்களிடையே இருந்துவரும் இடைவெளியயை விரிவடையச் செய்துள்ளது.

ராஜஸ்தான் கிராமங்களில் உள்ள ஆண்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் அஙகுள்ள பெண்களே வேலைக்கு செல்கிறார்கள். தண்ணீர் பிரச்சனையால் விவசாயமும் சரியாக நடப்பதில்லை. இதனால் விவசாயிகளுக்கு போதிய வருமானமும் கிடைப்பதில்லை. வருவாய் குறைவால் அங்குள்ள பெண்கள் ஏதாவது தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல கிராமங்களில் பெண்கள் விலைமாதர்களாக பிழைக்கும் வழியையும் ஏற்றுக் கொள்கிறhர்கள்.

நிலநடுக்கத்தால் குஜராத் மாநிலமே நிலைகுலைந்து நிற்கிறது. ஆங்கிலேயர் ஆண்ட சமயத்தில் குஜராத்தில் ஒரு பகுதியான ‘சு{ரத்’ என்ற இடம் துணிகளுக்கு பெயர் பெற்ற இடமாக திகழ்ந்தது. பல தொழிற்சாலைகள் கொண்ட குஜராத் மாநிலம் வணிகத் துறையில் வளர்ச்சியும் அடைந்தது. குஜராத் மாநிலத்தோடு இயற்கை விளையாடியது மட்டுமில்லாமல் மதச்சார்பல் தோன்றிய வன்முறைச் செயல்கள் குஜராத்தின் வளர்ச்சியை அழித்து விட்டது. இன்று இந்த மாநிலம் வெற்றுக் காகிதமாக காட்சி தருகிறது.

தொழிலாளிகள் போதிய வருமானம் கிடைக்காததால் பீகாரிலிருந்து வெளியேறி வேறு மாநிலங்களில் குடிபுகுகின்றனர். அனைத்து வளமும் கொண்ட பீகார் மாநிலம் அராஜக ஆட்சியால் நிலைகெட்டு சிதைந்து கிடக்கிறது. மேற்கு வங்காளத்தின் நந்தி கிராமம் அரசாலும், காவல் துறையாலும் பல இன்னல்களை சந்தித்து போராடும் கிராம மக்களின் அவலநிலை இந்த இடைவெளியை மேலும் விரிவடையச் செய்துள்ளது. அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏழைகளின் தோழராக நக்ஸல்பாரிகள் உருவாகியுள்ளனர். இது போல சத்தீஸ்கர் மாநிலமும் நக்ஸல்பாரிகளை உருவாக்கியுள்ளது.

திரு. மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்த சமயம் கொண்டுவந்த புதிய பொருளாதாரக் கொள்கை நாட்டின் பல தொழில் துறைகளை வளர்ச்சியடையச் செய்தது மட்டுமில்லாமல் பல தொழிலதிபர்களையும் உருவாக்கியுள்ளன. இந்தியா வளர்ந்து வரும் நாட்டின் பட்டியலில் முதலிடம் பெற்றhலும் ஏழைகளின் பசி, பட்டிணி, கொந்தளிப்பு, ஆவேசம், போராட்டம் போன்ற சம்பவங்கள் சளைக்காமல் நடந்து கொண்டிருக்கின்றன. தொழிலதிபர்களாகிய அம்பானி சதோதரர்கள், டாடா, பிர்லா, அசீம்பிரேம்ஜp, நாராயண மூர்த்தி என்ற பட்டியலும் நீண்டுக் கொண்டே சென்றhலும் ஏழைகளின் தேவைகளை இந்திய அரசு இதுவரை பூர்த்தி செய்ய இயலவில்லை. வளர்ந்து வரும் இந்த இடைவெளி கொஞ்ச நாட்களில் அபாயச் சின்னமாக மாறுவதற்கு சந்தேகமே இல்லை.

சந்தியா கிரிதர், புது தில்லி.
sandhya_giridhar@yahoo.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner