| சிதைந்து போகும் வங்கிகளின் அடித்தளம் – ஒரு 
  கண்ணோட்டம்!
 - சந்தியா கிரிதர் (புது தில்லி) -
 
 
  நாட்டினுடைய 
  நிதித் திட்டத்தை உருவாக்கும் தருணத்தில் கடந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட 
  திட்டங்களின் விளைவுகளை பற்றி ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டி வருகிறது. 1991 ஆம் 
  ஆண்டில் இந்திய பொருளாதாரம் புரட்சியை கண்டது. இதனால் நாடு நல்லதையும் 
  கெட்டதையும் மாறி மாறி சந்திக்க நேரிடுகிறது. இந்தப் புரட்சியின் முடிவை ஒரு 
  காலக்கணக்கோடு வரையறுக்கப் படவில்லை. புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகளை இன்றுவரை 
  இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வருகிறது. இதனுடைய தாக்கம் முடிவற்ற தாக்கமாக 
  இருக்கிறது. 
 இந்த வருடம் பிப்ரவரி மாதக் கடைசி தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நாட்டினுடைய 
  பட்ஜெட்டை அறிவித்தார். பட்ஜெட்
 வெளிவருவதற்கு முன்பே தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் பல 
  கோணங்களில் இதனை பற்றி விமர்சனம்
 செய்தார்கள். விவசாயிகளின் நலனை கருதி, கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட 
  விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும்படி
 2008ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவித்துள்ளது. இதனால் ஆட்சியிலுள்ள யு.பி.ஏ. கூட்டணிக் 
  கட்சிகள் வரும் தேர்தலுக்கு மக்களின்
 ஆதரவை திரட்டுவதில் ஒருமித்தமாக பாடுபடுகிறது என்று சொல்லலாம். ஐந்தாண்டு ஆட்சி 
  காலத்தில் இறுதிக் கட்டத்தில் மத்திய அரசு மக்களின் பொதுநலனைக் கருதி அதற்கு 
  ஏற்றமாதிரி பட்ஜெட்டை தயாரிப்பது வழக்கமாயிற்று.
 
 இந்தியப் பொருளாதாரம் மூன்றில் இரண்டு பாகம் விவசாயத்தை நம்பியுள்ளது. விவசாயம் 
  சிறப்பாக நடைபெற்றால் நாட்டினுடைய
 வளர்ச்சி பாதிக்கப்படாமல் முன்னேற்றமடையும் என்ற நம்பிக்கை மக்களிடையே 
  பலப்படுகிறது. இந்த வருட பட்ஜெட் விவசாயத்திற்கு
 பலவகைகளில் நிதி உதவி அளித்து விவசாயிகளின் நிலையை உயர்த்தும் வகையில் 
  அமைந்துள்ளது. இந்த பஜெட்டின் படி
 விவசாயிகளுக்கு கொடுத்த கடனை அதாவது ரூபாய் 6, கோடி தொகை வரை தள்ளுபடி 
  செய்யும்படி வங்கிகளுக்கு நிலையை
 உருவாகியுள்ளது. பல துறைகளில் முன்னேற்றமடைந்த இந்தியப் பொருளாதாரம் இப்படியொரு 
  பட்ஜெட்டையும் சந்திக்க நேரிடுகிறது
 என்பது மிகவும் வியக்கத்தக்கது. இந்த வருட பட்ஜெட் முக்கால்வாசி பாகம் 
  விவசாயத்தின் வளர்ச்சி, விவசாயிகளின் நலனை முன்னிட்டு
 அமைந்துள்ளது.
 
 பட்ஜெட் என்ற ஆயுதத்தின் வழியாக விவசாயிகளின் நலனை மனதில் வைத்துக் கொண்டு பல 
  திட்டங்கள் கொண்டு வருவதால்
 நாட்டினுடைய சேமிப்பு அல்லது கையிருப்பு தொகை சாpவடைந்த நிலையை அடையலாம். 
  பட்ஜெட்டினுடைய அதிக பாகத்தை
 விவசாயத்திற்கு ஒதுக்கப்படுவதால் நாட்டினுடைய பொருளாதாரம் தடம்புரள வாய்ப்பு 
  உள்ளது. விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கடன்
 தொகையை தள்ளுபடி அல்லது ரத்து செய்வதால் வங்கிகளின் நஷ்டஈடு தொகையும் 
  அதிகரிக்ககூடும். இப்படி தள்ளுபடி செய்வதால்
 விவசாயிகள் வங்கிகளிலிருந்து கடன்களை வாங்கி குவித்துவிட்டு அதனை திருப்பிக் 
  கொடுக்காமல் தட்டிக் கழிப்பதற்கு அரிய வாய்ப்பை விவசாயிகளுக்கு தருகிறது.
 
 1980 ஆம் ஆண்டில் ராஜPவ் காந்தி தனது ஆட்சி காலத்தில் வங்கிகள் அதிக கடனுதவி 
  அளிக்க வேண்டுமென்று, இதற்காக தனிப்பட்ட
 திட்டத்தை பட்ஜெட்டின் மூலம் அறிவித்தார். இதனால் வங்கிகளின் கடன் தொகை அதாவது 
  அட்வான்ஸ் டிபாஸிட் (Aனஎயnஉந
 னநிடிளவைள) அதிகரித்தன. இதனால் கொடுத்த கடனை வசு{லிக்க இயலாததால், கைக்கு 
  கிடைக்காத தொகையை நஷ்டஈடு கணக்கில்
 காட்டி வங்கிகளின் லாபம் குறைந்து காணப்பட்டன. நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி 
  வங்கினுடைய வளர்ச்சியின் மீது சார்ந்துள்ளது. வங்கிகளே நஷ்டத்தில் ஓடினால் 
  நாட்டினுடைய பொருளாதாரமும் ஊசலாடுவதில் சந்தேகமில்லை. ராஜPவ் காந்தியின் பட்ஜெட் 
  பல வங்கிகளின் அடிதளத்தை பலவீனமாக்கியது.
 
 இருபது வருடங்களுக்கு முன்பு ஹரியானாவில் நடந்த தேர்தலில் தேவிலால் 
  தேர்ந்தெடுக்கப்பட்டால,; விவசாயத்திற்கு கட்டணமில்லாத
 மின்சாரமும், மற்ற சலுகைகளும் கொடுத்து மேலும் விவசாயிகளுக்கு கொடுத்த கடனை 
  தள்ளுபடி செய்வதாகவும் வாக்கு அளித்தார். ஹரியானாவில் முக்கால்வாசி நிலம் விவசாய 
  நிலம் என்று சொல்லலாம். நிறைய விவசாயிகள் கொண்ட மாநிலம் ஹரியானாவே என்று 
  சொல்லலாம். தேவிலால் முதலமைச்சர் ஆனபின்பு கொடுத்த வாக்கை நிறைவேற்றினார். அவரது 
  ஆட்சி காலத்தில் மாநிலத்தின் சேமிப்பு தொகை குறைந்து பழைய அரசாங்கம் சேமித்து 
  வைத்த தொகையும் சுரண்டி எடுக்கப்பட்டதால் மாநிலத்தின் வளர்ச்சி குன்றியது.
 
 ஆளும்கட்சி வரும் தேர்தலுக்கு தயார்படுத்திக் கொள்ள பட்ஜெட் என்ற ஆயுதத்தை 
  சாதகமாக அமைத்து மக்களின் மனதில் இடம் பிடிக்க எடுக்கும் முயற்சி 
  சர்ச்சைக்குறியது. நாட்டின் நலனை புறக்கணித்து சுயநலத்திற்காக பட்ஜெட்டை 
  உருவாக்கி நாட்டினுடைய நிதி;த் துறைகளின் தூண்களை ஆட்டம் காணச் செய்வது தவறானது. 
  மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு தொகையும் பாதிக்கப்படுகிறது. மக்களுக்காக 
  உருவாக்கப்படும் பட்ஜெட் நாட்டினுடைய பொருளாதாரத்தை குலைத்து விடுகிறது. கடனை 
  திரும்பப் பெற இயலாததால் வங்கிகள் மொத்த தொகையையும் பெற்றது போல கணக்கை 
  காண்பித்து வருடாந்திர கணக்கை சாpகட்டுகிறது. இதனால் வங்கிகளின் லாபப்பங்கு 
  குறைந்துவிடுகிறது. ஒரு சில வங்கிகள் ரெட்பாலன்ஸில் (சுநன Bயடயnஉந) ஓடுகிறது. 
  ஏற்கனவே வங்கிகள் மோசமான நிலமையை அடைந்துள்ளன. மீண்டும் இப்படியொரு பட்ஜெட்டை 
  உருவாக்குவதற்கு நாம் பல தடவை யோசித்து செயல்பட்டிருக்க வேண்டும். மறுபக்கம் 
  ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ட்டிரா மாநிலங்களில் கடன் பிரச்சனையினால் பல 
  விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அவர்களுடைய ஏழ்மையும் வறுமையும் அவர்களை 
  இப்படியொரு செயலை செய்ய தூண்டுகிறது. வறட்சி, வெள்ளம் இவைகளால் பயிர்கள் 
  பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு காப்பீடு தொகையும் அளித்து பல சலுகைகள் 
  கொடுப்பதற்கும் முன்வர வேண்டும.; இதனை சரிவர கொடுக்கத்தவறிய அரசாங்கம் எத்தனை 
  விவசாயிகளின் உயிர்களை பழி வாங்கியுள்ளது.
 
 சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட பட்ஜெட்டால் நாடே பெரும் இழப்பை சந்திக்க 
  நேரிடுகிறது. இதனால் நாட்டினுடைய பொருளாதாரம் ஆட்டம் காண்கிறது. வங்கிகளின் லாபம் 
  குறைந்து விடுகிறது. பல துறைகளின் வளர்ச்சி குன்றிவிடுகிறது. வணிகத் துறையும் 
  சிதைந்து விடுகிறது. நாட்டினுடைய வளர்ச்சியை அடகுவைத்து சுயநலத்தை பொpதாக கருதி 
  ஒரு சில அரசியல்வாதிகளின் போக்கு சாpயானதா என்று கேள்வி எழும்புகிறது? இதனால் 
  விவசாயிகளின் நிலை உயர்வடையும் என்பது என்ன நிச்சயம். இப்படிச் செய்வதால் ஆளும் 
  கட்சி மறுபடியும் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகம் உள்ளதாடூ பட்ஜெட் என்ற 
  ஆயுதத்தால் அரசாங்கம் மக்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஏதாவது கண்ணாமூட்சி 
  விளையாடுகிறது என்று சொல்லுவது சரியா அல்லது தவறா என்று மக்களே முடிவெடுக்க 
  வேண்டும்.
 
 சந்தியா கிரிதர்
 புது தில்லி.
 sandhya_giridhar@yahoo.com
 |