வயதானவர்கள் சமுகத்திற்கு ஒரு சுமையா!
- சந்தியா கிரிதர் (புது தில்லி_ -
சமூகத்தில்
வயதானவர்களின் ஜனத்தொகை பெரிய பங்கு வகுக்கிறது. சமூகம் வயதானவர்களை ஒரு
ஒதுக்குப்புறத்தில் தள்ளி வைத்து இயங்குவது தவறான செயல் என்று சொல்லலாம்.
இப்படிப்பட்ட செயலால் வயதானவர்கள் வேதனையையும், வலியையும் அனுபவிக்கிறார்கள்.
இதனால் வயதானவர்களின் ஆரோக்கியமான சரீரம் நோய்வாய்ப்பட்டு எந்நேரமும்
மருத்துவமனையோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாக்குகிறது.
பெற்றவர்களை சுமையாக எண்ணும் குழந்தைகளின் நடத்தை வயதானவர்களின் மனதை பெரிதும்
புண்படுத்தியுள்ளது. அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், சின்ன சின்ன தேவைகளை
நிறைவேற்றாமல் வீட்டில் ஒரு மூலையில் வேண்டாத பொருள்களை குவிப்பது போல அவர்களை
ஒதுக்கிவிட்டு செயல்படும் குடும்பத்தின் போக்கு மிகவும் வேதனைக்குரியது. உயிரில்லாத
ஜடத்தையும் உயிருள்ள பிறவியையும் ஒன்றhக ஒப்பிடும் குழந்தைகளின்
நடத்தை அவர்களுடைய வருங்கால முதுமை வாழ்க்கை எப்படி நடத்தப்படும் என்பது பெரிய
கேள்விக்குரியாக தோன்றுகிறது. இதனால பெற்றவர்கள் பிள்ளைகளை விட்டு பிரிந்து தனியாக
வாழத் தொடங்குகிறார்கள். இந்த முடிவு அவர்களுடைய உயிருக்கு எமனாக மாறுகிறது.
திருடர்களுக்கும், கொள்ளையர்களுக்கும், தனியாக வாழும் பணக்கார வயதானவர்களின்
உயிர்கள், அரிய விருந்தாக அமைகின்றன. கொள்ளையர்கள் சொத்துக்களை பறித்துக்
கொள்வதற்கு வயதானவர்களின் உயிர்களோடு விளையாடுகிறார்கள். இன்றைய
சூழ்நிலையில் வயதானவர்களின் கொலைப்பட்டியலின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு
வருகிறது. இதற்கு காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கத் தவறினால,; கொலையாளிகளுக்கு,
எந்த சிரமமில்லாமல் வயதானவர்களின் உயிர்களோடு விளையாடுவதற்கு, ஏற்ற சூழ்நிலையை
உருவாக்குகிறது. காவல்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மறைந்து
விடுவதற்கு அதிக நேரம் எடுக்காது என்று சொல்லலாம்.
கொள்ளையர்கள் அதிகமாக வயதானவர்கள் மீது குறி வைக்கிறார்கள் என்ற உண்மை மக்களின்
மனதில் ஆழமாக பதிந்து விட்டன. இதற்கு அவர்களுடைய முதுமையும், பலவீனமும் முக்கிய
காரணங்களாக அமைகின்றன. ஒரு பகுதியில் வசிக்கும் வயதானவர்கள் அனைவரும் ஒன்றhக கூடி
கலந்து ஆலோசித்து சில பாதுகாப்பான திட்டங்களை நடைமுறையில் கொண்டு வருவதற்கு
பொழுதும்
பாடுபட வேண்டும். இதனால் திருடர்கள், கொள்ளையர்கள் மூலம் நிகழும் அசம்பாவிதத்தை
தடுக்கலாம். சமூகத்தில் தனியாக வாழும் வயதானவர்கள் ஒன்றhககூடி அந்நியாயத்தை
எதிர்த்து செயல்பட்டால், அவர்கள் உயிர் கொள்ளையர்களின் கைகளில் ஊசலாடுவதை
தவிர்க்கலாம்.
பெற்ற பிள்ளைகள் அவர்களுடைய உணர்வுகளை புண்படுத்துவதால், அவர்கள் தனியாக வாழத்
தொடங்குகிறார்கள். குடும்பத்தில் நிலவும் தலைமுறை இடைவெளி, மனபேதம், வாய்ச்சண்டை
போன்றவைகள் அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது. புண்பட்ட காயத்திற்கு மருந்தாக
தங்களை அந்தக் குடும்பத்திலிருந்து பிரி;த்துக் கொள்கிறhர்கள். ஆனால் இந்த மருந்து
பெற்றவர்க்கும், பிள்ளைகளுக்குமிடையே இருக்கும் பந்தத்தை அழித்து விடமுடியாது.
வாரத்திற்கு ஒருமுறையாவது பிள்ளைகள் தனியாக வாழும் பெற்றவர்களை பார்த்து சிறிது
நேரத்தை அவர்களோடு கழிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் வயதானவர்களுக்கு புதிய
தெம்பு பிறக்கிறது. அவர்களுக்குள்
தன்னம்பிக்கையை வளர்கிறது. மேலும் பெற்றவர்களின் உணர்வுகள் சிதைவடையாமல்,
மிச்சமுள்ள வாழ்க்கையை சலிப்பில்லாமல் வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுக்கிறது.
பிள்ளைகளின் அக்கறையும், அன்பும் அவர்களை தவறான முடிவுகளை எடுப்பதிலிருந்து
காப்பாற்றுகிறது. பிள்ளைகள் தொலைபேசி அல்லது கைப்பேசி மூலம் பெற்றவர்களின் நலனை
அறிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி
தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் வயதானவர்கள் வாழ்க்கையின் மீது வைத்துள்ள
வெறுப்பும், மனக்கசப்பும் குறைவடைவதற்கு வாய்ப்புள்ளது. பிள்ளைகளிடம் தோன்றும்
சின்ன மாற்றம் பெற்றவர்களிடம் நிலவி வரும். “வாழ்க்கையை முடித்துக் கொள்ளவேண்டும”;
என்ற எண்ணத்தை முறியடிக்கும் என்று சொல்லலாம். பிள்ளைகள் அவர்களை எதற்கும்
உபயோகமில்லாதவர்கள்
என்ற எண்ணத்தில் அப்புறப்படுத்தி விட்டுச் செயல்படுவது மிகவும் தவறானது.
அவர்களையும் குடும்பத்தில் ஒரு நபராக எண்ணி ஏதாவது பொறுப்பை நம்பிக்கையோடு
ஒப்படைக்க வேண்டும். கஷ்டகாலத்தில் பெற்றவர்களை நாடுவதும், தேவையில்லாத சமயத்தில்
அவர்களை மதிக்காமல் செயல்படும் பிள்ளைகளின் போக்கு அவர்களுடைய மனதை சுக்குநு}றாக
உடைக்கிறது.
வயதானவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது சமூகத்தின் முக்கிய
கடமையாகும். இதற்கு காவல்துறை முயற்சி எடுத்து பாடுபட வேண்டும். ஒவ்வொரு
பகுதியிலுள்ள காவல்துறை அந்தப் பகுதியில் வாழும் வயதானவர்களுக்கென்று பாதுகாப்பு
மையம் ஒன்றை அமைத்துத் தரவேண்டும். மேலும் காவல்துறையினர் தங்கள் பகுதியில்
வசிக்கும் அனைத்து வயதானவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு
காவல்துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். காவல்துறையினர்கள் தங்கள் பகுதியில்
வசிக்கும் வயதானவர்கள் அனைவரையும் சந்தித்து, அவர்கள் பிரச்சனைகளை அறிந்து கொண்டு
அதற்கு தகுந்த மாதிரி பாதுகாப்பு வழிகளை நடைமுறையில் கொண்டு வருவதற்கு பாடுபட
வேண்டும். அவ்வப்போது கண்காணிப்பது மட்டுமில்லாமல் காவல்துறை வயதானவர்களின் மனதில்
நம்பிக்கை ஒளியை ஏற்றி வைப்பதற்கு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் பணம் ஆதிக்கத்தால் பிள்ளைகள் பாசத்தை மறந்து விடக்கூடாது.
பெற்றவர்களும் குடும்பத்தின் ஒரு அங்கம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதுபோல பெற்றவர்களும் காலத்திற்கு தகுந்தால் போல பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டு
பிள்ளைகளோடு இணைந்து செல்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இருவருக்குள் தோன்றும்
சின்ன சின்ன மாற்றங்கள் குடும்ப வாழ்க்கையை தெளிவான பாதையில் கொண்டு செல்வதற்கு
பெரிதும் உதவுகிறது. இதை புரிந்து கொண்டு நம்பிக்கையோடு சிறப்பான
வாழ்க்கையை அமைப்பதற்கு செயல்படுவோம்.
sandhya_giridhar@yahoo.com |