இலண்டனூடாக கங்காரு தேசம் - 4 - ஶ்ரீரஞ்சனி -

- கங்காருவும் கட்டுரையாசிரியரும் -
அடுத்த நாள், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, சேற்று நிறத்தில் ஓடும் யாரா ஆற்றையும், வழியெங்கும் நீண்டுயர்ந்திருந்த மரங்களையும் பார்த்தபடி நடந்தும், Tramஇல் ஏறியும் இறங்கியும், வேறுபட்ட கட்டிட அமைப்புக்கள் நிறைந்த மெல்பேர்ன் நகரைச் சுற்றிப்பார்த்தபோது மூன்று விடயங்கள் எனக்கு அதிசயத்தைத் தந்தன. நகரின் மத்தியில் காரை நிறுத்துவதற்குப் பணம்செலுத்த வேண்டியிருக்கவில்லை, நகரின் மத்திக்குள் Tramஇல் இலவசமாகப் போக்குவரத்துச் செய்யமுடிந்தது, அத்துடன் இலவசமான இணையவசதிகள் சாலையோரத்தில் அங்கங்கேயிருந்தன. பின்னர் மதியவுணவுக்காக அருகிலிருந்த சரவணபவனுக்குப் போனோம். வட இந்திய உணவுகளை மட்டுமே அங்குண்ணலாம் என்றானபோது, சரவணபவன் என அவர்கள் பெயரிடாமலிருந்திருந்தால், நாங்கள் ஏமாந்திருக்க மாட்டோமே எனச் சலித்துக்கொள்ள மட்டுமே எங்களால் முடிந்தது.
அன்று மாலையில் என்னைச் சந்தித்த பூபதி அண்ணா, ATBC வானொலிக்காக எழுத்தாளர் கானா பிரபா என்னைப் பேட்டி காண்பதற்கான ஒழுங்குகளைச் செய்திருப்பதை ஞாபகப்படுத்திச் சென்றிருந்தார். மின்கணினிக்கூடாக என்னைப் பேட்டிகண்ட கானா பிரபா என்னைப் பற்றிய இலக்கிய விபரங்களை முன்பே சேகரித்து வைத்திருந்து வித்தியாசமாகவும் சிறப்பாகவும் அதனைச் செய்திருந்தார். மறுநாள், என் பாடசாலையான மகாஜனக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான ரோகிணி ரீச்சரின் மகனும், எங்களின் அயல் வீட்டுக்காரருமான ராஜன், Twelve Apostles என்ற இடத்துக்கு என்னைக் கூட்டிப்போயிருந்தார்.

"படிப்பைக் கொண்ட வேலையில் நாட்டம் அதிகமாக , அரசவேலையில் வசதிகள் எனஂற மானுக்குப் பினஂனால் ஓட கடல் தொழிலைச் செய்கிறவர்கள் அருகி விட்டது" என்று சங்கர் குறிப்பிடுறது அனஂனருக்கு நினைவுக்கு வருகிறது . அப்ப தான் இவரும் ' சேர் , இங்கே சாதியம் என்பவை பொய் ' என விளக்க முற்பட்டார் . " நாடார்களின் போராட்டங்களும் ,விடுதலையும் " என்ற நூலை வாசிக்கும் வரையில் அவருக்கும் கூட பல விசயங்கள் தெரிந்திருக்கவில்லை . பனம்தொழிலைச் செய்கிறவர்களும் , கடல்தொழில் செய்கிறவர்களும் உண்மையில் சாதியப் பிரிவினரே இல்லை . அவர்கள் பாண்டியகுலத்தையும் , சோழர் குலத்தையும் சேர்ந்த , மக்கள் பிரிவினர் எனஂற உண்மை அவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது . ஒருகாலத்தில் , லெமூரியா , இந்தியாவை விட பெரிய நிலப்பரப்பைக் கொண்ட ... நாடாக இருந்திருக்கிறது . அது , இனஂறு இந்து சமுத்திரத்தினுள் நீரினுள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது . பாண்டியரின் பொற்காலம் அந்த நிலப்பரப்பிலே எழுந்து புதைந்து போய் இருக்கிறது .அந்த காலத்திலேயே பாண்டியருக்கும் , சோழர்களுக்கும் இடையில் பகைமை கொடிவிட்டு படர்ந்திருக்கிறது . சேரர்கள் இருதரப்பிலும் மணத் தொடர்புகளை கொண்டு பகையை வளராது வைத்திருக்கிறார்கள். வெற்றி ,தோல்விகள் சகஜம் . பகை குலங்களை நசிபட வைத்து தீண்டாச்சாதியாகவும் , ஒருபடி இறங்கிய( குறைந்த) சாதியாகவும் ஆக்க வல்லவை . அந்த வரலாறையே அந்நூல் விபரிக்கிறது . கத்தியில் நினஂறு கூறுகிறது போல கூறுகிறது .

மகாத்மா காந்தியின் சத்திய சோதனை இன்றளவும் பேசப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் உண்மையும் நேர்மையும் சத்தியமும் நினைவாற்றலும் இழையோடியிருந்தன. அரை நூற்றாண்டுக்கும் மேலாக வானொலி – தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் , தொகுப்பாளராகவும் பணியாற்றிவந்திருக்கும் பி. எச். அப்துல் ஹமீத், தன்னை ஒரு சிறந்த எழுத்தாளனாகவும் நிரூபித்திருக்கிறார். எனினும், அவரிடம் இயல்பாகவே குடியிருக்கும் தன்னடக்கம், தானும் ஒரு எழுத்தாளன்தான் எனச்சொல்வதற்கு தடுக்கிறது.








சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தமிழில் காப்பியங்கள் தோன்றலாயின. தமிழில் முதன்முதலில் தோன்றியனவும், பிறமொழிகளிலிருந்து தமிழிற்கு வந்தனவும், சமயம் தழுவி எழுந்தனவும், தலபுராணங்களும் எனக் காப்பிய வரிசை தொடர்ந்து வருகின்றது. இக்காப்பியங்களில் பிற சமயங்களின் கருத்துகள் உள்ளன என்றும் பிற சமயங்களின் தாக்கத்தினால் உருவானவை என்றும் அறிஞர்கள் கூறுவர். எனவே, தமிழ்மொழியில் உள்ள காப்பியங்களை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
சமூக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஓர் உருவம் கொடுப்பதிலும், அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக்குப் பெரும் பங்குண்டு. அந்த நிகழ்வுகளுக்குக் கொடுத்த உருவம்தான் இந்த அமெரிக்கா என்ற இச்சிறு நூலாகும். இதிலுள்ள ஏழு சிறுகதைகளையும், குறுநாவலையும் படிக்கிறபொழுது Georgi Plekhanov இன் ஒரு கூற்று ஞாபகத்துக்கு வருகின்றது. அவர் சொல்கிறார்:







