பவதாரணி: 'மயில் போல பொண்ணு ஒன்னு!"
இளமையில் மரணம் கொடிது. பாடகி பவதாரணி இன்னும் நீண்ட காலமிருந்து இசையுலகில் மேலும் பல சாதனைகளைச் சாதித்திருக்க வேண்டியவர்.
'பாரதி' பாடத்தில் பாடிய 'மயில் போல' பாடல் மூலமே என் கவனத்தை ஈர்த்தவர். இப்பாடலுக்காகச் சிறந்த பாடகிக்கான இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர். தந்தையின் இசையமைப்பில் இவ்விருதை இவர் பெற்றதும் முக்கியத்துவம் மிக்கது.
அவர் மறைவால் ஆழ்ந்த துயரில் ஆழ்ந்திருக்கும் இசைஞானி மற்றும் குடும்பத்தவர் , இரசிகர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
அவர் நினைவாக 'மயில் போல பொண்ணு ஒன்னு' - https://www.youtube.com/watch?v=QjDek8QpnWc


ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய விவேகி மாத இதழின் அன்றைய விலை நாற்பது சதம்தான். “நாற்பது சதமா…?“ அது எப்படி இருக்கும் என்று சமகாலத்தில் எமது குழந்தைகள் கேட்பார்கள். இலங்கையில் பணவீக்கம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, அக்கால நாணயங்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டது. அதற்கு காரண கர்த்தாக்கலான அரசியல்வாதிகளும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிய அரசுகளும் நாணயமற்றுப் போனதன் விளைவை இலங்கை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.







மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. இசைக்கருவிகளைத் தமிழர்கள் தோல் கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, கஞ்ச கருவி, மிடற்றுக்கருவி எனப் பகுத்து வைத்தனர்.அரசனது அறிவிப்புகளை மக்களுக்கு முரசறைந்து அல்லது பறையடித்துச் சொல்வது மரபாகும்.இலக்கியங்களில் திருமணச்செய்தியை அறிவிக்க,முடி சூட்டு விழாவை அறிவிக்க, போர்த் தொடக்கத்தை அறிவிக்க, போர்ப் பூவைப் பெற்றுக்கொள்ள, போர் ஆரம்பித்து விட்டது என்பதை அறிவிக்க, சமாதானத்தை அறிவிக்க, போர் வெற்றியை அறிவிக்க, பிறந்தநாள் விழாவை அறிவிக்க,விழா நடைபெற இருப்பதை அறிவிக்க என்று பல அறிவிப்புகளை மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவே முரசு முழக்கப்பட்டதை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
என் கணவர் ஆபிரகாமின் இரண்டாவது தங்கை திரேசாவுக்கும் - ஸ்டீபனுக்கும் புனிதவியாகப்பர் ஆலயத்தில் நடந்துகொண்டிருந்த திருமணம், மணப்பெண்ணின் மறுப்பினால் பாதியிலே தடைபட்டது.
4


தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம் 
'
மேற்கு நாடொன்றில் ஒரு சித்திரம் பார்த்தேன். அதில் தேவதை ஒன்று பரிசுத்த மத்தியு பின்பாக கையை பிடித்து வேதநூலை எழுதுவது போல் தீட்டப்பட்டிருந்தது. சாதாரண வரி வசூலிப்பாளரான மத்தியுவிற்கு எவ்வளவு எழுத தெரியும்? அதுவும் கிரேக்க மொழியில் என்பது சந்தேகமே! சாமானியர்களை வாழ்வை இலக்கியமாக எழுத்தில் கொண்டு வந்தது புதிய வேதங்கமே.


குஜராத்தி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக, நவீன குஜராத்தி உரைநடையின் பிதாமகராக காந்தி கருதப்படுகிறார். பெரிதும் பக்திக்கே பயன்பட்டுவந்த நெகிழ்ச்சியான, இசைத்தன்மைகொண்ட , அலங்காரம் நிறைந்த உரைநடையை காந்தி அக்கால பிரிட்டிஷ் உரைநடையின் இடத்துக்குக் ஒரே தாவல் மூலம் கொண்டுவந்தார். கறாரான கூறுமுறை, கச்சிதமான சொற்றொடர்கள், உணர்ச்சிகள் வெளிப்படாத நேரடியான எளிய நடை ஆகியவை காந்திக்கே உரியவை. அது குஜராத்தி இலக்கியத்தை சட்டென்று அடுத்த கட்டத்துக்கு கொண்டுசென்றது.