முதல் சந்திப்பு : அமுதா விழா காணும் கலை, இலக்கிய ஆர்வலரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் - முருகபூபதி -

"உரிமைக்கோ அன்றில் விடுதலைப் போராட்டத்திற்கோ வன்முறை நியாயமானதுதானா..? ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா…? என்ற வாதம் எப்போழுதுமே காலத்துக்கு காலம் மேலோங்கியிருக்கிறது. அப்படியான போரில் நின்ற ஒருவனை விடுதலை வீரன் என்று ஒரு பக்கம் பார்க்கும் அதே சமயம், அதன் மறுமுனையில் அவனை தீவிரவாதி என்று பட்டம் சூட்டுவது சாதாரணம். இது பிரபல்யமாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சரித்திரத்தில் காணப்பட்டது. தீவிரவாத குற்றவாளியாக காணப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அன்று மௌனம் சாதித்தன. தென்னாபிரிக்க கறுப்பர்களுக்கு அவர் விடுதலை கோரினார் என்பது பிழை என்பதனால் அல்ல, அவரது அரசியல் இயக்கம் தீவிரவாதத்தால் அரசை பணிய வைக்க முயன்றது என்பதனாலேயே.
ஆனால், அதே நெல்சன் மண்டேலா பின்னாளில் ஜனாதிபதியாகத் தோன்றி, தன்னை முன்னர் தடை செய்த எல்லா நாடுகளாலும் ஓர் உன்னத மனிதனாக கௌரவிக்கப் பட்டு அழைக்கப்பட்டார். அந்த அளவில்லாவிட்டாலும் ஒரு வகையில் இவை கியூபாவின் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராக்கும் பொருந்தும். அவர்கள் இலங்கை வந்தபொழுது தங்கள் நினைவாக மரங்கள் நாட்டிச் சென்றார்கள். அப்போது அவர்கள், வன் முறையாளராக பார்க்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் எவ்வளவோ கொடூர சம்பங்கள் இடம் பெற்றன. ஆனால், வழிமுறைகள் நோக்கத்தின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன என்ற சித்தாந்தம் உண்டு. (End Justifies the means)."
இந்த வரிகள் இடம்பெற்ற அரசியல் ஆக்கம் ஒன்றை முன்னர் எழுதியவர் பற்றித்தான் இந்த முதல் சந்திப்புத் தொடரில் எழுதுகின்றேன். அவர்தான் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சிரேஷ்ட சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன். கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் ஆய்வாளர். இம்மாதம் அவருக்கு எண்பது வயது பிறக்கிறது. எம்மால் அன்புடன் என்றென்றும் , 'ரவி அண்ணன்' என அழைக்கப்படும் அவரை வாழ்த்திக்கொண்டே இந்த அங்கத்தை தொடருகின்றேன். தொடக்கத்தில் நான் இங்கு குறிப்பிட்ட வரிகளை தான் எழுதிய , ' இந்தியா - ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னணியில் வன்முறையும் அகிம்சையும்' ! என்ற கட்டுரையில் ரவி அண்ணன் எழுதியிருந்தார்.

மலையக மக்கள் குடியேறி, கிட்டத்தட்ட 140 ஆண்டுகள் அல்லது நான்கு ஐந்து தலைமுறைகள், கழிந்தப் பின், மலையக மக்கள் தாமும் இந் நாட்டில் ஒரு குடியினர்தாம் என்று தமது சமூக இருப்பை இந்நாட்டில் கட்டமைத்து வேர்பதித்து கொள்ளத்துவங்கியதன் பிரதிபலிப்பாய், அவர்களின் பிரதிநிதியாய் தோன்றியிருக்கக்கூடிய ஒரு கவிஞன் இப்படியாய்ப் பாட முன் வந்தான். பெயர்: சீ.வி. வேலுப்பிள்ளை.



சென்ற சனிக்கிழமை 16 ஆம் திகதி ஸ்காபரோவில் உள்ள ஸ்காபரே சிவிக் சென்றர் மண்டபத்தில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட ‘கனடா வரலாற்றில் தமிழர் படகுகள்’ என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நூலில் புகைப்படங்களுடன் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.



தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று அசதியாடல் ஆகும். அசதியாடல் குறித்துப் பல்வேறு இலக்கியங்களில் காணப்பட்டாலும் பக்தி இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. சிலம்பில் இளங்கோவடிகளும், பெரியபுராணத்தில் சேக்கிழாரும், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், திருவானைக்கா அகிலாண்டநாயகி மாலை ஆகிய நூல்களிலும் அசதியாடல் குறித்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.கம்பரும் தம் இராமாயணத்தில் அசதியாடல் குறித்துப் பாடியுள்ளார் என்பது குறித்து இக்கட்டுரையில் ஆராய்வோம்.
நாளும் நலம் பாட ஆசை ! ஆனால் , தறஂபோதைய.... தாயகத் தலைவரினஂ பேச்சுகள் ....சலிப்பையே தருகினஂறன . அழகிய தீவு , கலிங்கத்துப்பரணியினஂ போர்க்காட்சிகளையே விரும்பி நிறஂகினஂறது . முனஂனைய தலைவரை (மாமனாரிடம்) விட இவரிடம் பார்ப்பது , எதிர்பார்த்தது , தவறு தானஂ . இவர் , ' இஸ்ரேலினஂ வழியே சரி ' எனஂற நோக்கில் " ஐ .நா .அவை , இஸ்ரேலுக்கு ஒரு நோக்கு , எமக்கு இனஂனொரு நோக்கை ...வைத்திருப்பது தவறு" எனஂகிறார் . நம் நாட்டிலும் நடந்த " கொத்துக் கொலைகளை" எவ்வளவு இலகுவாக கடந்து போய் விட்டிருக்கிறார் , போய் விடச் சொல்கிறார் . போர்க்குறஂற விசாரணைகளே அவசியமறஂறவை எனஂகிறார் . உக்ரேனுக்கு , இஸ்ரேலுக்கு , நம்நாட்டுக்கு ....' வெளி நாட்டவர்களே ஆயுதங்களை எல்லாம் வழங்கியவர்கள் ' எனஂற முறையில் சரி தானஂ . ஒனஂறைக் கவனித்தீர்களா , ஐ .நாஅவை , ஆயுதங்களைப் பறஂறி எப்பவும் ஒனஂறுமே ...சொல்வதில்லை . நம்நாடும் ஒரு பாலைத் தராத கறவை மாடு தானஂ . அங்கே , பேசப்படுகிற இரட்டைப் பிரதேசக் கொள்கை இங்கேயும் ஏறஂபுடையது எனஂபதை கண்டுக்கிறதில்லை . உலகம் உண்மையிலே நியாயம் பேச முனஂ வர வேண்டும் . நாடுகளில் , இன வாதங்கள் அனைத்துமே சிறைக்குள் அடைத்துப் பூட்டப் பட வேண்டியவை . பெரிய நப்பாசை தானஂ .

கொஞ்ச நாட்களாக அம்மாவில் சில மாறுதல்களை அவதானிக்கத் தொடங்கினேன். அந்த அவதானிப்பு என்னையும் மீறி வளர்ந்துகொண்டே போனது. அம்மா இப்போ இடையிடையே தன்பாட்டில் சிரிக்கிறார். தனது அலங்காரங்களில் அதிக அக்கறை செலுத்துகிறார். முன்பெல்லாம் நான் நினைவூட்டி நெருக்கும்போதுதான் தலைக்கு சாயம் தீட்டுவார். இப்போது மாதம் இரண்டு தடவை, சிலவேளைகளில் மூன்றுதடவையும் கூட நடக்கிறது. தொலைபேசி சத்தம் கேட்டால் அம்மா பரபரப்பாக ஓடுகிறார். கையில் என்ன வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தடவைகள், சமைத்துக் கொண்டிருக்கும்போதும் இப்படி நடந்தது. சட்டி அடிப்பிடித்தது மட்டுமல்ல வீடெல்லாம் பெரும் புகை. பெரும் ஆபத்தில்கூட முடிந்திருக்கலாம்.


காலங்காலமாக ஆரம்பநிலை பள்ளியின் சுவர்கள் பாசிக் கரைபடிந்த சுவர்களோடு காட்சியளித்தன. மேற்கூரை ஒழுகும் வண்ணமாக உடைந்த ஓடுகளாய் சொருகியிருந்தன. பள்ளியின் வலது புறம் ஆசிரியர்களுக்கென்று.. ஒரே ஒரு கழிவறை மட்டும் அதுவும் நிரந்தப் பூசனம் பூத்ததாய் நிராகரிக்கப்பட்டிருந்தது. கழிவறையை ஒட்டி உயரமாக வளர்ந்து நின்ற ஒற்றை புளியமரம். புளியமரத்திற்கென்று தனி வரலாறும் உண்டு.. புளிய மரத்தின் கதையைக் கேட்கும் போதெல்லாம் ராசமணி தான் ஞாபகத்திற்கு வருவதுண்டு.

ஒலி எந்த உயிரினத்தையும் ஒரு கணம் திசைதிரும்ப வைக்கும். தொட்டிலில் அழும் குழந்தை, திடீரென ஒரு வேற்று ஒலியைக் கேட்டதும், தன் அழுகையைச் சட்டென நிறுத்திவிடுகிறது. எங்கோ ஒரு மூலையில் தானியங்களைக் கொறித்துக்கொண்டிருக்கும் ஒரு முயல்க்குட்டி சற்றே தொலைவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டதும் அது கொறிப்பதை நிறுத்தித் தன் காதுகளை மேலே உயர்த்திச் சு10ழ்நிலையை அவதானிக்கிறது. உலகிலுள்ள உயிர் வர்க்கங்கள் யாவுமே ஒலி அலைகளையும் ஒலிக் குறிப்புகளையும் வைத்தே தம்மையும் தம் இனத்தையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்கின்றன.

எனது படைப்புகள் பற்றி வெளியான ஆய்வுகள் பற்றி நானறிந்த தகவல்கள் இவை. தமிழகம் , இலங்கையில பட்டப்படிப்பு மாணவர்களால், பேராசிரியர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்கள் கீழேயுள்ளன. இவர்கள் அனைவருமே என் படைப்புகளூடு என்னைக் கண்டடைந்தவர்கள். நான் நேரில் அறிந்தவர்கள் அல்லர். படைப்புகள் தம் வாசகர்களைக் கண்டடையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை மிக்கவன் நான். அவ்விதமான படைப்புகளே நின்று பிடிக்கும் என்பதிலும் நம்பிக்கை மிக்கவன் நான். 
வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர். புதுமைக்கு வித்திட்ட புரட்சிக்கவி.விடுதலைக்குக் கீதம் இசைத் திட்ட வீரக்கவி.இருப்பதில் இன்பத்தைப் பெருக்கிப் பார்த்திட்ட ஏற்றமிகு கவி.பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்திட்ட பாரத்தின் பண் பாடும் கவி. அஞ்சாத சிங்கமாய் ஆர்ப்பரித்து நின்ற அழகு தமிழ்க் கவி. அந்தக் கவிதான் எங்கள் முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் எடுப்பாய் திகழ்ந்து - பாரதி என்று பட்டொளி வீசி நின்ற கவிக் குயிலாகும். பாரதி என்றதுமே அதில் ஓர் அதிர்வு உருவாகிறதல்லவா ! பாரதி என்றதுமே அதில் ஒரு புது உற்சாகம் பீறிட்டு வருகிறதல்லவா ! பாரதி என்றதும் தளர்வு அகன்று நிமிர்வு எழுகிறதல்லவா ! அந்தளவுக்கு " பாரதி " என்பது ஒரு மந்திரமாய் தமிழுலகில் நிலைத்து நிற்கிறது என்பதை மனத்திருத்துவது அவசியமாகும்.

