சங்க இலக்கியத்தில் பாலைத்திணை மரங்கள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி,சென்னை- 42. -

முன்னுரை
பண்டைய தமிழர் விலங்கியல், தாவரவியல் பற்றிய புலமை பெற்றிருந்தனர். ஓரறிவு முதலான உயிர்களைக் குறித்த செய்திகள் தொல்காப்பியம் தொடங்கி சங்ககாலம், சங்க மருவிய இலக்கியங்கள் ஆகியவற்றில் காணக்கிடக்கின்றன. அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் அடைமொழியாகவும், உவமைகள் வாயிலாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக உயிரினங்களோடு இயைந்த தமிழர் தம் வாழ்வியல் தொடர்பையும் உயிரினங்கள் பற்றிய வாழ்வியல் பதிவுகளையும் சங்க இலக்கியம் விரிவாக விளக்கிக் காட்டியுள்ளது. அவற்றில் மரங்களின் வகைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பாலை நிலம்
காதலால் கூடிக் கலந்த இருவரது பிரிவு ஒழுக்கத்தினைக் குறிப்பது பாலைத்திணையாகும். இவை அகத்திணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கோடைக்காலத்தில் எங்கும் வெப்பம் பொறுக்கமுடியாத நண்பகலில் மரங்களெல்லாம் காய்ந்து கரிந்து நிற்கும் வெஞ்சுரம் மழையே இல்லாத கொடிய நிலம் என்று பாலை நிலம் பற்றிக் குறிப்பிடுவர்.
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை என்ற நான்கு திணைக்கும் நிலம் வகுத்த தொல்காப்பியர் பாலை என்றோர் நிலம் வகுக்கவில்லை.இதனை,
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் (தொல்.பொருள்.5)
எனும் சூத்திரம் வழி தெரிந்து கொள்ளமுடிகிறது.

இந்நூல், மக்சிம் கார்க்கி யின் அனைத்து நூல்களிலும் இருந்து வித்தியாசம் பெற்றது. இவ்வித்தியாச நூலை பின் வருமாறு வரையறுத்துக் கொள்கின்றார் கார்க்கி : ''இந்நூல் என் வாழ்நாள் சவால்... என் வாழ்நாள் சாதனை ”.



அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பி.ஜே.பி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன?
அகவயமான வாசிப்பினை வேண்டுவதே இலக்கியம். எனினும் புற உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பாலும் உட்பொருளாலும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. மனிதகுலமே கூர்ப்பின் வழி இன்றிருக்கும் வடிவில் வந்திருக்கும் போது, இலக்கிய வடிவங்களும் அதன் இலக்கணங்களும் மாறக்கூடாது எனக் கூறமுடியுமா?
"சங்ககாலத்திலிருந்து புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரசியல் பேசி வந்தவர்கள்தான். அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும், சங்க காலப்புலவர்கள் மன்னர்களை புகழ்ந்து பாடியே வாழ்க்கையை ஓட்டினர். விதிவிலக்காக"மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ..." என்று தமது தர்மாவேசத்தை கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பர். 

அன்பான தமிழ் உறவுகளே, உலக அளவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச ஆண்கள் தினமான Nov 19, இந்த வருடம் எதிர்வரும் Nov 19, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று, மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை (இலங்கை நேரப்படி) – காலை 7.30 – 8.30 மணி வரை (கனடா நேரப்படி) சர்வதேச ஆண்கள் தினம் – இலங்கை (International Men’s Day – Sri Lanka) மற்றும் ஆண்களின் குரல் 360 அமைப்பும் இணைந்து முன்னெடுக்க இருக்கும் இணையவழி கலந்துரையாடலில் இணைந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

- சுப்ரபாரதிமணியனின் ' சிலுவை ' நாவல் 300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல். 'சிலுவை' நாவல் சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது. நியூ செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. -


அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது கம்பராமாயணத்தின் பாவிகமாகும். இப்பாவிகத்தினைக் கம்பர் தேவைப்படும் இடங்களிலெல்லாம் கதாப் பாத்திரங்கள் மூலமும், ஆசிரியர் கூற்றின் வாயிலாகவும் வலியுறுத்திக் கூறுகிறார். உலகில் அறம்தான் வெல்லும், அறம்தான் வெல்லவேண்டும் என்ற பாவிகத்தைக் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
பிள்ளைவளர்ப்பு என்பது ஒரு கலை, அதில் யாருமே பாண்டித்தியம் பெற்றுவிடமுடியாது என்பதுதான் யதார்த்தம். ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கெட்டியவகையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பெற்றோரியத்தில் இதுதான் சரியான வழியென்று ஒன்றில்லை என்பதுடன், ஒரு பிள்ளைக்குச் சரிவரும் உத்திகள் இன்னொரு பிள்ளைக்குச் சரிவர மாட்டாது என்பதாலோ என்னவோ பெற்றோரியம் தொடர்பாகக் கற்பதிலோ, அது பற்றிய புத்தகங்களை வாசிப்பதிலோ அதிகமானோர் ஆர்வம் காட்டுவதில்லை.

நீ சொல்கிறாய்


இலங்கை மலையகத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளரும், சமூக ஆர்வளரும், மார்க்ஸிய சிந்தனையாளரும், சட்ட தரணியுமான தோழர் எல். ஜோதிகுமார் அவர்களால் எழுதப்பட்டு கடந்த வருடம் நந்தலாலா பதிப்பகத்தால் " பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும் " . என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந் நூல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது . இலங்கையில் 1980 களில் வெளிவந்த " தீர்த்தக் கரை " எனும் முற்போக்கு அரசியல் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய அனுபவம் உடைய எழுத்தாளர் ஜோதிகுமார் அவர்கள் தாயகம் திரும்பிய மலையக மக்களின் மன உணர்வுகளை அவர்களின் வாழ்வியலை நேரில் கண்ட அனுபவம் வாயிலாக இந்நூலை திறம்பட வடிவமைத்துள்ளார் .
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப் பெற்றது.


