எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் 'கந்துலு நிம வன துரு'. - கண்ணீர் வற்றும் வரை - (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு)ஜி.ஜி,சரத் ஆனந்த

- எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் 'கந்துலு நிம வன துரு'. - கண்ணீர் வற்றும் வரை - (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு) -

நண்பர் ஜி.ஜி.சரத் ஆனந்த தகவலொன்றை அனுப்பியிருந்தார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

"உங்கள் சிறுகதையொன்றும் அடங்கியுள்ள புதிய தொகுப்பொன்று உடனே வெளிவரும் உங்கள் 'உடைத்த காலும் உடைத்த மனிதனும்' கதை தான். உங்கள் நல்லூர் ராஜதானி நூலை வெளியிட்ட அஹஸ மீடியா' வேர்க்ஸ் பப்ளிஷர்.  வட கிழக்கு, ,தோட்ட பகுதி, முஸ்லிம், அத்துடன் வெளிநாட்டில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன. நான்கு பெண் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். 12 எழுத்தாளர்கள் ( மூன்று தலைமுறையில்). 'கந்துலு நிம வன துரு'.. 'கண்ணீர் வற்றும் வரை' என்பது நூலின் பெயர். நூலில் இடம் பெறும் எழுத்தாளர்கள்: மு.சிவலிங்கன், நயீமா சித்திக், நீர்வை பொன்னையன், அழகு சுப்பிரமணியம், ராணி சீதரன், கே. ஆர்.டேவிட், ஆர்.ராஜேஸ்கண்ணன், ஆர். எம். நௌஷாத், வ.ந..கிரிதரன், பாலரஞ்சனி ஷர்மா, எம்.ரிஷான் ஷெரீப், மாதுமை சிவசுப்பிரமணியம்."

எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் 'கந்துலு நிம வன துரு'. - கண்ணீர் வற்றும் வரை - (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு)

இவர் ஏற்கனவே எனது சிறுகதைகளிரண்டை சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்திருக்கின்றார். எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலையும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்திருக்கின்றார். அந்நூலை ஆகஸ மீடியா வேர்க்ஸ் பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். அப்பதிப்பகத்தினரே இத்தொகுப்பு நூலையும் வெளியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வகையான மொழிபெயர்ப்புகள் மூலம் இலங்கையின் பல்லின மக்களுக்கிடையில் நல்லுறவினை வளர்ப்பதற்கு வாய்ப்புகளுள்ளன. அதற்காக எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்தவை வாழ்த்த வேண்டும். வாழ்த்துகள் நண்பரே. நூல் வெளியீடு வெற்றியடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்