ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்சங்க காலத்தில் இனக்குழு சமூகம் அழிந்து பொறுப்புகள் எல்லாம் பெண்ணின் கைகளில்  தோன்றிய போதே குடும்பம் என்ற அமைப்பு உருவாகியது. குடும்பம் என்பது கணவன் மனைவி இருவரும் ஒன்று கலந்த வாழ்வாகும். குடும்ப உருவாக்கத்தின்போதே பெண்ணுக்கு கற்பு என்பது வழியுருத்தப்பட்டன. இக்கற்பு தொடக்க காலத்தில் முல்லை நிலத்திலே முதலில் தோற்றம் கண்டன. அதனால் முல்லையை முல்லை சான்ற கற்பு என்று  அழைக்கப்பட்டன. கணவனுக்காக காத்திருக்கும் நிலை என்று பெண்ணுக்கு தோன்றிதோ அன்றே அப்பெண்ணின் கற்பும் வலியுருத்தப்பட்டன.  பின்பு கணவன் இறந்த பின்பு சமூகத்தில் தனித்து அடையாளப்படுத்திக் காட்டுவதற்கு பெண்ணுக்கு உறுதுணையாகவும்  இருந்தன. இக்கற்பு இரட்டைக்காப்பியங்களில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது. கற்பு உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்ன? அனைத்து வகையான பெண்களுக்கும் கற்பு பொதுப்படையாக ஏற்படுத்தப்பட வேண்டிய காரணம். பெண்கள் ஆண்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கும்  தனித்து அடையாளப்படுத்துவதற்கும் உண்டான நிலைகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

கற்பு  பொது விளக்கம்
கற்பு என்பது கணவன் மனைவி இருவரிடையே ஏற்படும் பற்று மாற உறுதிப்பாடு. இக்கற்பு என்பதற்கு இளம்பூரணர், “மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது”1 என்கிறார். நச்சினார்க்கினியர், “தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள்”2 என்கிறார். வ.சுப.மாணிக்கம், “கற்பு என்பது அகத்திணை வலியுறுத்தும் அறங்களுள் தலையானது”3 என்கிறார். புலவர் குழந்தை, “கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் நெஞ்சுகலந்த அன்பின் பயனே கற்பு ஆகும்”4 என்கிறார். ஆகவே கற்பு என்பது ஆண், பெண் இரு உள்ளங்களின் ஒன்று கலந்த அன்பாகும்.

ஆணுக்கும்  பெண்ணுக்கும் பொதுவான  நிலையில் சொல்லப்படுகின்ற இக்கற்பு உடல் தூய்மை நிலையில் பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது என்று பொதுமைப்படுத்தப்படுகிறது. வடமொழியில் இக்கற்பு என்பதற்கு “பதிவிரதா தா்மம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது கடவுளுக்கு நிகரான தலைவன், கணவனுக்கு அடிமையானவள் என்று பொருள் சொல்லப்படுகிறது. தொல்காப்பியா் கற்பு என்பதற்கு “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கம்” இஃது கிழவோளுக்கு மட்டும் உரியது என்று கூறுகிறார். வள்ளுவரும் பெண்ணின் கற்பு என்பதற்கு தெய்வத்தோடு தொடா்பு படுத்தாமல்  தனது கணவனோடு தொடா்பு படுத்தியே கூறுகிறார்.

“தெய்வம் தொழாள் கொழுநன்  தொழுதழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்.55)

இங்கு பெண்ணின் கற்பு “பதிவிராத தா்மம்” நிலையில் கணவணோடு தொடா்பு கொண்டு பேசப்படுகிறது. ஆக, கணவனோடு இருக்கும் பெண்களுக்கு கற்பு என்பது உரித்தானதாகக் கொண்டால் கணவனில்லாப் பெண்களின் கற்பினை எவ்வாறு இனங்காண முடியும் என்ற ஐயமும் எழுகிறது. அப்பெண்கள் சமூகத்தில் தனது கற்பினை வெளிக்காட்ட சில முன்னெடுக்கைகளை செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம் அவா்களது வாழ்வு அடையாளப்படுத்தப்படுகிறது.

கணவனில்லா பெண்களின் கற்பு
கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரையான காலத்தை காவியகாலம் என்று கூறப்படுகிறது. தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரம், அதனனோடு தொடா்புடைய  மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களும்  இக்காலகட்டத்தில்  தோற்றம் பெற்றன. அதனால் இது இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகிறது. இக்காப்பியங்களை முதன்மையாகக்  கொண்டு தமிழிலக்கிய வரலாற்றில்   பல்வேறு காப்பியங்கள் எழுந்தன. அதில் இரட்டைக் காப்பியங்கள் முழுமுதற் காப்பியமாகக் கைக்கொள்ளப்பட்டன. அக்காலத்தில் பெண்களின் கற்பு எத்தகைய நிலையில் இருந்ததென்றால் சமூக ஒடுக்குமுறை, குலமரபு, சமுகத்திலிருந்து பெண்னை  தனித்து இனங்காணல், கணவன், காதலனை இழந்த பெண்கள் சமூகத்தில் மறுதலில்லா வாழ்க்கை வாழ்ந்தனா். சில மரபில் கணவன் இறந்த உடன் அப்பெண்ணுக்கு சமூகத்தில் சிலக் கட்டுப்பாடுகள் இட்டனா். சிலப் பெண்கள் தாங்களாகவே கட்டுப்பாடுகளை  ஏற்படுத்திக் கொண்டனா். அதில்,

கணவன் உற்ற கடுந்துயா் மனைவி எய்துதல்.
கணவன் இறந்த உடன் தானும் உயிர்த் துறத்தல்.
நாணத்தை இழந்து வாடுதல்.
பொது வீதிகளில் ஆடல், பாடல் நிகழ்வுகளில் பங்கேற்காமை இருத்தல்.
கணவனுடன் ஈமத்தியில் விழுந்து இறத்தல்.
கணவனுடன் மறுமையில் உறைந்து வாழ்க்கை நிகழ்த்த கைம்மை நோன்பு கோலம் கொண்டு உடலை வருத்துதல்

எனப் பலவாறு கடைபிடித்தனா். இச்செயல்கள் எல்லாம் கற்புடைய மகளிர்கள் சிலருடைய கற்பு நிலையாக இருந்தன. மணிமேகலையில், மாதவி கோவலன் இறந்து பட்ட செய்தியறிந்து தனது தோழியான வயந்தமாலையிடம் தனது கற்பு ஒழுக்கம் குறித்து எடுத்துரைக்கிறாள்.  அதனால் சீத்தலைச்சாத்தனா், சமூக வயத்தளத்தில் கணிகையா் குலத்தை சோ்ந்த பெண்களை பொதுப்பொருளாகவே பயன்படு்தினா். ஆனால்  மாதவி கணிகையா் குலத்தை சோ்ந்தவளாக இருந்தாலும் பெண் நிலையில் தனது கற்பு ஒழுக்கத்தை தனித்து வெளிக்காட்டியுள்ளார். கணவன் இறந்த பின்பு அழகு வெளிப்பாடு இல்லாதிருத்தல், பொதுநிகழ்வுகளில் களந்து கொள்ளுதலை தவிர்த்தல் என்று தனக்குத் தானே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறாள். இதனை,

“காதலா் இறப்பின் கனை எரி பொத்தி
ஊது உலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது
இன் உயிர் ஈவா் ஈயார் ஆயின்
நல் நீா்ப் பொய்கையின் நளி எரி புகுவா்
நனி எரி புகா அா் ஆயின் அன்பரோடு
உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று, உடம்பு அடுவா்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து
அத்திறத்தாளும் அல்லள் எம் ஆய் இழை
கணவற்கு உற்ற கடுந் துயா் பொறாஅள்  (மணிமேகலை5.43.51)

என்று கூறுகிறார் சாத்தனார். காதலா் இறப்பின் தானும் ஈமத்தியிலிருந்து மாண்டு விழுதல் சமூக மரபாக வழக்கத்தில் இருந்துள்ளன. இதில் குலத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும், கற்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாதவி கணவன் இறந்த பின்பும் தான் இறக்க வில்லை. ஆனால் கற்புக்கான நெறியை மட்டும் கடைபிடித்து வாழ்கிறாள். சங்க காலத்தில் கணவரை இழந்த மகளிர்களின் நிலையை “தாபத நிலை” என்று சுட்டுகின்றன. ஆக கற்பு உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உயிருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன.

உயிரோடு கூடிய கற்பு
உடம்போடு கூயடிது உயிர். உயிரோடு கூடியது கற்பு. வினைப்பயன் கொண்டது. நல்வினை தீவினைகளுக்கு விளை நிலமாக அமைவது. சிலம்பில் கண்ணகியின் கற்பு நிலையோ மேற்சொன்ன நிலைகளன்களிலுக்குள் அடங்காதவையாகும். கணவனுக்கு நோ்ந்த கடுந்துயரை பொறுத்தாளாத தன்மையில்,

கூந்தலை முதுகுப்புறத்தே கிடத்தச் செய்தல்.
கண்ணீரால் நனைந்த கொங்கையை திருகி எறிதல்.
அதன் மூலம் நெருப்பு  வைத்தல்.

இடங்களை அழித்தல்
என்ற செயல்களைச் செய்ய முற்படுகிறாள். இங்கு பெண்ணான (கண்ணகி) கற்பு பத்தினி யாக்கத்தில் மட்டும் இன்றி, தனது ஆழ்மனத்திற்குள் எழுந்த மனப்பிளவினை நேரடியாகப் புறத்தே வெளிக்காட்டுகிறாள். அவ்வாறு வெளிக்காட்டும்போது அழிக்கும் கருவியாகத் தனது உடல் உருப்புகளைப் பயன்படுத்துகிறாள்.

இம்மரபு இனக்குழு சமூகத்திலும், பண்பாட்டின் வழிபாடாகவும் கடைபிடிக்கப்பட்டன. இன்றும் கிராமப்புறங்களில் நாட்டுப்புற வழிபாட்டில் சிறுதெய்வங்களுக்கு பலிகொடுக்கும் வழக்கம் உள்ளது. இரவு நேரங்களில் வேட்டையின்போது பலிகொடுப்பதற்கு பலிப்பொருட்கள் இல்லாத நிலையில், அல்லது பலிபொருட்களான எலுமிச்சை, முட்டை போன்ற பொருட்களை காவு ஏற்காதபோதும் உடலிலுள்ள உருப்புகளையோ, உடலிலுள்ள தசைகளையோ பலிப்பொருளாகக் காவு கொடுக்கப்படுகிறது. இச்செயல் சாந்து செய்வித்தல். நிவா்த்தி செய்தல், கோபத்தை நிறைவு செய்தல் என்று சொல்லப்படுகிறது. இம்மரபு மக்கள் வழக்கத்தில் இன்றும் நிலவி வருகிறது.

கண்ணகியின் இச்செயல்பாடும் குலக்குறி மரபில் இனக்குழு கூட்டத்தின் கீழ் வந்தது ஆகும். இங்கு கற்பின் தன்மையை உயிர் நிலையில் வெளிக்காட்ட வேண்டுமே தவிர, நேரடியாகக் கற்புக்கான நிலையை அடைய விரும்பவில்லை. உடலும் ஒரு பொருட்டாகக் கருதாமல் தான் செய்கின்ற செயலில் உடல் அழிபடு பொருளாகக் கொண்டு  உயிரே பெண்ணின் கற்பாக உறுதிபடுத்தப்  படுகிறது.

ஏனென்றால் உடலில் புனையப்படும் மணப்பொருள்களை நீக்கி விட்டால்  இவ்உடல் புறத்தே வீசியெறியத்தக்க முடை நாற்றம் உடையது. இளமை மாறி முதுமை எய்திச் செத்து அழியக் கூடியது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாகத் உள்ளது. பற்றுக்கள் பற்றும் இடமாகத் திகழ்வது. பாம்பு தங்கும் புற்றுப் போலச் சினம் தங்கும் இடமாக இருப்பது. வருத்தம், கவலை, செயலற்ற தன்மை, வாய்விட்டு அழக்கூடிய பெருந்துன்பம் ஆகிய நான்கும் நீங்காத உள்ளத்தைத்  தன்பால் கொண்டு விளங்குவது. இத்தகைய எண்ணங்களைக் கொண்டது உடம்பு. இதனை உள்புறமாக இனங்கண்டால் பெண்ணின் கற்பு வெளிப்பட்டு நிற்கும். ஆகையால், கண்ணகி மற்றப் பெண்களைப் போன்று கணவன் இறந்தவுடன் தனக்குத் தானே மாய்த்துக் கொள்ளவில்லை. மாறாக தன்னைச் சார்ந்துள்ள உடம்பையும், புறப்பொருட்களான இடங்களையும், பொருட்களையும் அழிபடு பொருளாக்க  முயற்சி செய்கிறாள். அதன் வாயிலாகவே அவளது கற்பும் தனித்து உயிரோடு அடையாளப்படுத்தபடுகிறது.

தீ  தீண்டா கற்பு – (தலைமைக்கற்பு)
கணவன் இறந்த செய்தி அறிந்தவுடன்  மனைவி ஊரார் முன்பு  பொது இடத்தில் தீ இட்டு இறத்தல் கற்பின் முதல் நிலையாகும். இதனை தலைக்கற்பு என்று அழைத்தனா்.  இதனை இன்று உடன்கட்டை ஏறுதல் என்று அழைக்கிறோம். இப்பெண்கள் கணவன் இல்லை என்றால் வாழ்வே இல்லை என்னும் அளவிற்கு ஆணுக்கு முக்கியத்துவம் கொடுத்து உயர்த்திக் காட்டும் நிலையாகும். குடும்ப நிலையில் வாழும் பெண்கள் இச்செயல்களைச் செய்ய முற்படுகின்றனா். கணவன் இறந்தவுடன் அவனை தீயிலிட்டு எரிக்கும்போது தானும் அத்தீயில் விழுந்து மாய்ந்து போதலை சங்க காலத்தில் “மூதானந்தம்” என்று அழைத்தனா்.

இப்போக்கினை மணிமேகலையில் ஆதிரையின் வாழ்வு வாயிலாகக் காணமுடிகிறது. வியாபாரத்திற்காகக்  கடல் கடந்து பிரிந்து  செல்கிறான் சாதுவன். அலை வீசும் பெருங்கடலில் மரக்கலம் உடைந்து போக அதில் அகப்பட்டு உயிர் இறந்தவா்களுடன் சோ்ந்து சாதுவனும் உயிர் துறந்தான் என்ற செய்தியை ஊரார் வாயிலாகக் கேட்ட ஆதிரை, பெரிதும் துன்புற்று சுடுகாட்டில் பெரிய குழி தோண்டி அதில் விறகுகளை இட்டு தீ மூட்டப்பட்டு உயிர் துறக்க எண்ணுகிறாள்.

எரி குழியில் அவளுக்கென அமைத்து வைத்த படுக்கையிலும் உடுத்திய ஆடையிலும், தீ பற்றவில்லை. உடம்பில் அப்பிய சந்தனமும், கூந்தலில் சூடிய மாலையும் நிறம் மாறாமல் அப்படியே இருந்தன. மணம் மிக்க தாமரை மலரைப்போன்று இனிதே இருந்தாள். தீயிலிருந்து வெளியே வந்தவள் இனி நான் என்ன செய்வேன் என்று அழுது புலம்பினாள். இங்கு ஆதிரை கணவன் இறந்த செய்தி கேட்டவுடனே தனது உயிரை மாய்த்துக் கொள்ள துணிகிறாள். இப்பெண்களின் கற்பொழுக்கத்தால் தீ கூட அவளைத் தீண்டுவது இல்லை. இஃது பெண்களின் தலைமைக்  கற்பு நிலையாகும்.

முடிவுகள்
சங்க காலத்தில் கற்பு என்பது திருமணத்துடன் தொடா்கொண்டிருந்தது. இக்கற்பு குடும்பம் என்ற நிலையிலே வலியுறுத்தப்பட்டன. கற்பினை இரட்டைக்காப்பியங்களில் தலைமைக் கற்பு, இடைக்கற்பு, கடைநிலைக் கற்பு என்று மூன்று நிலைகளாக இனங்காட்டுகிறது. கண்ணகியின் கற்பு உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. கற்பு ஆண், பெண் என்ற நிலையில் பெண்ணுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. கற்பால் பெண் சமூகத்தில் தனியுரிமை பெற்று தனித்து அடையாளப்படுத்தப்பட்டாள். இக்கற்பால் பெண்ணுக்கு தனி மதிப்பும் சமூகத்தில் கொடுக்கப்பட்டன.

துணை நூற்பட்டியல்
நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் உரை (1970), கழக வெளியீடு, சென்னை.
இளம்பூரணர், தொல்காப்பியம் பொருளதிகாரம் உரை (1986), கழக வெளியீடு, சென்னை.
மாணிக்கம்.வ.சுப, தமிழ்க்காதல் (2007), சாரதா பதிப்பகம், சென்னை.
புலவர் குழந்தை, தொல்காப்பியம் பொருளதிகாரம் உரை (2007) பூம்புகார் பதிப்பகம், சென்னை.


* கட்டுரையாளர் -  - முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R