மீள்பிரசுரம்: அக்டோபர் புரட்சியின் நினைவாக ……….
தேசிய இனப்பிரச்சினையில்--சுயநிர்ணய உரிமைப் பிரயோகம்
மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் "கோட்பாட்டு உருவாக்கம்" முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை. இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் - சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.