எண்ணப் பதிவுகள்! - ஊர்க்குருவி -
கலைஞர் மு.கருணாநிதியின் தமிழ்மொழிப் பங்களிப்பு - குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா & திருக்குறள் உரை!
கலைஞர் மு.கருணாநிதியின் குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா. திருக்குறள் உரை & சங்கத்தமிழ்த் தொகுப்புகளை அவரது முக்கிய தமிழ்மொழிப்பங்களிப்புகளாக நான் கருதுகின்றேன். இவற்றுடன் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து அவர் எழுதிய நாடகம், அதனையொட்டி வெளியான பூம்புகார் திரைப்படம் இவையும் முக்கியமானவை. பாடல்கள் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ்த் திரையுலகை வசனத்துக்குத் திருப்பியதில் கலைஞரின் வசனங்கள் முக்கியமானவை. பராசக்தி, மனோஹரா, ராஜாராணி & பூம்புகார் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அவர் ஆட்சியில் அமைத்த வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அமைத்த வள்ளுவர் சிலை இவையும் முக்கியமான பங்களிப்புகள். இவை தவிர அவரது பல படைப்புகள் புனைகதைகளாக, அபுனைவுகளாக, நாடகங்களாக & திரைக்கதைகளாக வெளிவந்துள்ளன. ரோமாபுரிப்பாண்டியன், பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் - சங்கர் ஆகியவை முக்கியமான வரலாற்றுப் புனைவுகள். பல பாகங்களாக் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி சுயசரிதையும் முக்கியமான தொகுப்புகள்.
கலைஞரின் 'தொல்காப்பியப் பூங்கா' , குறளோவியம், திருக்குறள் உரை ஆகியவை தற்போது இணையத்தில் கிடைக்கின்றன.


இன்று கவனயீர்ப்புப் பெறும் சமகால ஈழத்துக் கவிஞர்களுள் இக்பால் அலியும் ஒருவராவார். இவர் ஓர் ஊடகவியலாளராக தன்னை அடையாளப்படுத்தும் அதேவேளை நாடறிந்த கவிஞராகவும் அறியப்படுகிறார். ஓர் ஊடகவியலாளன் தன்னைச் சுற்றி நிகழும் அசாதாரண சம்பவங்களை செய்திகளாக்குவது போல ஒரு கவிஞனும் தான் காணும் சமூக மாற்றங்களை தன் கவிதைகளுக்குள் பாடுபொருளாக்குகின்றான். இவ்வகையில் இக்பால் அலியின் கவிதைகளை நோக்கும்போது ஓர் ஊடகவியலாளனுக்குரிய செய்திப் பார்வையும், நுணுகிய நோக்கும்; இவரின் கவிதைகளில் இயல்பாய் இணைவதோடு சமுதாயப் பற்றுமிக்க கவிதா ஆற்றலும் அதனை மொழிவயப்படுத்துவம் திறனும் இவரிடம் ஒருங்கே அமைந்துவிடுகின்றன.
இன்றைய உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின் அமைதியைக் கெடுக்கின்றது.
ஆழ் மனத்திரைக்குள் பதிந்திருக்கும் பக்கங்களைப்புரட்டிப் புரட்டி மறுபடியும் அப்புத்தகத்தை வாசிப்பதில் அத்தனை சுகம்!அதற்குள்தானே நிரம்பிக்கிடக்கின்றன அத்தனையாயிரம் கதைகள்?ஓடி ஓடி களைத்துப்போகும் வாழ்வெனும் வட்டத்திற்குள் அவற்றைப்பகிர்ந்திட எமக்குத்தான் நேரமில்லையே!எப்போதாவது முதுமைக்கு நரையழகாகும் பருவத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வாழ்வின் புதிய பயணத்தை ஆரம்பிக்கும்போதுதான் கதை சொல்லியாக இது கைகூடும் என்றால் அதுவும் ஆனந்தம்தான்!அதற்கும் அப்பால் ஞாபகங்களை கரைந்துவிடாது காத்திட பக்கங்களைப்புரட்டிப்பார்ப்பதும்கூட மனநலத்திற்கான ஆரோக்கியமும்கூட !























பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









