ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets)- மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் | தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
எழில் இனப் பெருக்கம்


முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.
ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர்களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.


திருவள்ளுவர், முப்பானூல், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை என்று பல்வேறு நாமங்கள் சூட்டிப் போற்றப்படுகின்றது திருக்குறள். மனிதகுலம் எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எந்தச் சூழலில் வாழ்க்கை முறையை மெற்கொண்டிருந்தாலும் அங்கெல்லாம் ஒளியைப் பாய்ச்சி வாழ்வு சிறந்து விளங்க வழிகாட்டும் நூல் திருக்குறளாகும். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்துக் குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால். இன்பத்துப்பால் என்று மூன்று பிரிவுகளாக வருகின்றன.
பெண்ணியம் என்ற சொல் 1890 களில் இருந்து பாலின சமத்துவ கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இலங்கங்களையும், குறிக்கப் பயன்பட்டு வருகிறது. தமிழில் பெண்ணியம், பெண்நிலை வாதம், பெண்ணுரிமை ஏற்பு என்ற சொற்கள் பயன்பட்டு வருகிறது. பெண்ணியம் பெண்கள் அனுபவிக்கும் எல்லா விதமான அடக்குமுறைகளையும், எதிர்ப்பது மட்டுமன்றி, பெண்களின் மேம்பாட்டிற்குரிய வழிமுறைகளையும் ஆராய்ந்து செயற்படுத்துகின்றது. இதனையே புட்சர் “பெண்ணியம் என்பது, பெண்கள் பாலின பாகுபாட்டால் அனுபவிக்கும் தனிப்பட்ட பொருளாதாரத் துன்பங்களை எதிர்த்து மேற்கொள்ளும் இயக்கமே” என்கின்றார். பெண்ணியவாதிகள் ஆண்களை வெறுப்பவர்கள் அல்லர். இருப்பினும் ஆண் நாயகத்தையும் வெறுப்பவர்கள். பெண்ணியம் ஆண்களுக்கும்ää பெண்களுக்கும் பொதுவான நேர்மையான சமத்துவத்துடனும், சுதந்திரத்துடனும் கூடிய சமூகம் உருவாக வேண்டுமென்று விரும்புகின்றது.

ஈழத்தில் 1930 முதல் சிறுகதைகள் புதிய வடிவமும் சமூக சீர்திருத்தப் பார்வை கொண்டனவாகவும் வெளிவரத்; தொடங்கின. முன்னோடிப் படைப்பாளிகளாகத் திகழ்ந்தவர்களின் ஆங்கில மொழிப் பயிற்சியும், தமிழக இதழ்களில் வெளியான சிறுகதைகள் மீதான பார்வையும் அவர்கள் சிறந்த கதைகளைப் படைக்க ஏதுவாகவிருந்தன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மூலவர்களில் ஒருவராகவும் அன்றுதொட்டு இன்றுவரை இலக்கிய வரலாற்றில் முக்கியமானவராகவும் பலராலும் குறிப்பிடப்படுபவர் இலங்கையர்கோன. இவரது இயற்பெயர் த. சிவஞானசுந்தரம். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆங்கில மொழிமூலம் கல்விகற்று நிர்வாக சேவைக்குத் தெரிவுசெய்யப்பட்டுக் காரியாதிகாரியாக (னு.சு.ழு.) கடமையாற்றியவர். சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் திகழ்ந்தவர்.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன்.
கவிதை புனைவதோடு இலக்கிய உலகில் பிரவேசித்துää சுமார் முப்பதாண்டுக் காலமாகத் தமிழ் சிருஷ்டி இலக்கியத்தின் சகல கூறுகளிலும் தன் கைவண்ணத்தைக் காட்டி அவற்றில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்துள்ள ஈழத்தின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான அகஸ்தியர் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிட்டியது. எடுத்த எடுப்பிலேயே. எழுத்துத் துறையில் புகுவதற்கு எவை தூண்டுதலாக இருந்தன என அவரைக் கேட்டேன். அடக்கு முறைகளையும். ஒடுக்கு முறைகளையும். சுரண்டலையும் நேரடியாகக் கண்டு அவற்றுக்கு எதிராகப் பணியாற்ற வேண்டுமென்ற அவாவே அவரை எழுதத் தூண்டியது என்றும். தான் சேர்ந்த முற்போக்கு இயக்கமும் அவ்வியக்கத்துத் தோழர்களிடமிருந்து தான் பெற்ற போதமும். மக்களிடமிருந்து கற்றவையுமே சரியான பாதை எது என்பதை அவருக்குக் காட்டித் தந்தன எனச் சுட்டிக் காட்டினார்.

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவர், பல்துறை ஆற்றலாளர் அ. ந. கந்தசாமி. பத்திரிகைத்துறை ஜாம்பவான். எழுத்தாளர், கவிஞர். வீரகேசரி, தேசாபிமானி, சுதந்திரன், மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளான ஒப்சேவர், ரிபுயூன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர். இலங்கை அரசாங்கத் தகவற்பிரிவின் வெளியீடான 'ஸ்ரீ லங்கா" என்ற இதழின் ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை என யாவற்றிலும் தனக்கெனத் தனிமுத்திரை பதித்தவர்.
"நான் யாழ்ப்பாணத்திலே ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஏழைகளின் துன்ப துயரங்களையும், அவலங்களையும், பசிபட்டினிகளையும் அவர்களது கல்வி அறிவின்மையையும் நான் அனுபவரீதியாக அறிவேன். நாம் வாழும் இலங்கைச் சமூகம் மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கின்ற ஓர் அமைப்பாகும். பெரும்பான்மை மக்களின் வாழ்வு துன்ப துயரங்கள், அமைதியின்மைகள், வறுமையின் தாக்கங்கள் நிறைந்ததாயிருப்பதற்கு மனிதனை மனிதன் சுரண்டுகின்ற வர்க்க சமுதாயமே காரணமென்பதை அறிந்தேன். அரசியலே சகலவற்றையும் தீர்மானிக்கின்றது. இந்த ஓர வஞ்சகமான சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு உழைக்கும் மக்களின் அரசியலாலேயே முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இச்சமுதாய அமைப்பை மாற்றி அமைத்து, சகலரும் சரிநிகர் சமானமாக, சுபீட்சமாக வாழத்தக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த மார்க்சிய இயக்கத்திலே இணைந்து உழைத்தேன். அந்த இயக்கம் எனக்கு ஒரு சரியான உலகப் பார்வையை அளித்தது. மக்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது. மக்களிடம் கற்று மக்களிடமே மீண்டும் அளித்தல் வேண்டும் என்ற கோட்பாட்டைப் போதித்தது. இவைகளால் தெளிவும், பரந்த உணர்வும் பெற்ற நான் மனிதனை மனிதன் சுரண்டுவதை அம்பலப்படுத்தவும், சுரண்டலினால் மக்கள் வாழ்வில் விளைகின்ற துன்ப துயரங்கள், அவலங்கள், ஏக்கங்கள், கல்வி அறிவின்மை, அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுதல் முதலியவைகளை வெளிப்படுத்தவும் நான் எழுதத் தொடங்கினேன்." எனப் பிரகடனப்படுத்துகிறார் சிறந்த முற்போக்கு எழுத்தாளர் யோ. பெனடிக்ற் பாலன்.
- கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும்,ந.சுப்புரெட்டியார் 100 கல்வி அறக் கட்டளையும் இணைந்து நடத்தும்,இணையவழிப் பண்பாட்டுக் கருத்தரங்கத் தொhடர் நிகழ்ச்சிகள் -
இலங்கை முற்போக்கு இலக்கியம் பற்றிய முக்கியமான ஆய்வுக்கட்டுரையினை எழுத்தாளர் நந்தினி சேவியர் எழுதியிருக்கின்றார். இதனைத் தினக்குரல் பத்திரிகை வெளியிட்டிருந்தாலும் நான் அறிந்துகொண்டது வசந்தன் பக்கம் வலைப்பூ மூலமே. அதற்காக அவ்வலைப்பூவுக்கு நன்றி. இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் முற்போக்கு இலக்கியமென்றால் அது ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மார்க்சியக் கருத்துகளை விதைத்த முன்னோடிகளிலிருந்து தொடங்க வேண்டும். சிலர் இலங்கையின் முற்போக்குத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதுகையில் 1956ற்குப்பிற்பட்ட எழுத்தாளர்களை மட்டும் பட்டியலிடுவதையும் கண்டிருக்கின்றேன். ஆரம்பகாலப் படைப்பாளிகளை இருட்டடிப்பு செய்திருப்பதையும் கண்டிருக்கின்றேன். அவ்வகையில்தான் இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. விரிவான ஆய்வு நூலொன்றினை இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்கியம் பற்றிய விரிவானதோர் ஆய்வுக்கு உதவக்கூடிய ஆரம்ப ஆய்வுக்கட்டுரையிது. இதற்காக நந்தினி சேவியருக்கு நன்றி.
- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்மாதம் ( ஓகஸ்ட் ) 15 ஆம் திகதி நடத்திய – போர்க்கால இலக்கியம் – தொடர்பான இணைய வழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட தொடக்கவுரை. - 
பொதுவாக துறைசார் பாடநூல்கள் தவிர்ந்தவை இலக்கிய நூல்களாகவோ ஆய்வு நூல்களாகவோ அமையும் . இலக்கியம் மனித மெல்லியல்புகளின் வெளிப்பாடு . இதயத்துடன் தொடர்புபட்டது. ஆய்வு அறிவின் தொழிற்பாடு . மூளையுடன் தொடர்புபட்டது . கோபம் , குரோதம் போன்ற தீய இதய வெளிப்பாடுகள் மூளையை மழுங்கடையச் செய்வதால் வேண்டத்தகாத சம்பவங்கள் இடம்பெறும். அதுபோல் அறிவு, தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும்போது இன்னல்களிலிருந்து காப்பாற்றப்படுவோம் .அதனால்தான்போலும் ஆரம்பத்தில் சிற்றிலக்கியம் படைப்பவர்கள் அறிவு முதிர்ச்சி ஏற்பட விமர்சனம் ,மதிப்பீடு போன்ற ஆய்வுகளில் ஈடுபடுவர்.
தேம்பாவணி பெருங்காப்பிய மரபிற்கேற்ப கொன்ஸ்ரைன் ஜோசப் என்னும் இயற்பெயர்கொண்ட வீரமாமுனிவரால் ஆக்கப்பட்டது. இதன் ஆசிரியரான வீரமா முனிவர் தமிழ் நூல்களை ஐயந்திரிபுறக் கற்று தமிழ்ப் பணி பல புரிந்துள்ளார். எனவே இலக்கிய இலக்கண மரபுகளை நன்கு அறிந்து அம்மரபுகளுக்கேற்ப தனது தேம்பாவணி என்னும் காப்பியத்தை ஆக்கியளித்துள்ளார்.
‘பெண்ணியம்.இலக்கியம்,ஊடகம்,சமூகம்’என்ற தலையங்கத்தில் காந்தி கிராமமப் பல்கலைத் துறைத் தமிழ்த் துறையினர் ஐந்து நாட்களுக்கு நடத்தும் இணையவழி சிறப்புத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் என்னைக் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்ட முனைவர் இரா பிரேமா அவர்களுக்கு நன்றி. அத்துடன் அறிமுக உரைதந்த போராசிரியர்.திரு பா ஆனந்தகுமார்,தமிழ்,இந்தியமொழிகள் அன்ட் கிராமியக்கலை புலம்.அவர்கட்கும்,நன்றியுரை சொல்லவிருக்கும் முனைவர்.மீ சுதா அவர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களான போராசிரியர்.வீ.நிர்மலராணி அவர்களுக்கும், இணையவழி ஒருங்கிணைப்பு செய்யும் உதவிப் பேராசிரியர் திரு சி.சிதம்பரம் அவர்களுக்கும் மற்றைய பேராசிரியர்கள்,பங்கெடுக்கும் ஆய்வாளர்கள், மாணவர்கள், யாவருக்கும் எனது மனமார்ந்த காலைவணக்கம்.
முன்னுரை
- அண்மையில் முகநூலில் அஞ்சலி' சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' சிறுகதை பற்றிய பதிவொன்றினையிட்டிருந்தேன். இங்கும் பதிவு செய்திருந்தேன்.அதற்கான ஜெயபாலனின் அவரது முகநூற் பக்கத்தில் வெளியான எதிர்வினையிது. - வ.ந.கி -

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத் தமிழ்ப்பிரிவின் சார்பாக 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் “உலக, இந்திய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - என்ற பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
கடல் ஓரத்திலே கடற்கரை மணலிலே படம் வரையும் சிறு நண்டுகளின் அற்புதமான கற்பனைப் படங்களை, கடற்கரையின் குளிர் காற்றை அனுபவிக்கச் சென்றவர் பலரும் பார்த்து மகிழ்ந்திருப்பர். அந்தப் படம் வரையும் சிறு சிறு நண்டுகள் தமது உள்ளத்து எண்ணங்களை ஓவியமாக மணலிலே அழகாக வரைகின்றன. ஆனால் சில வேளைகளில்…….!? கடல் அலைகள் பெருமூச்சுடன் கரையில் வந்து மோதி, சிறு நண்டுகளின் மாதிரிப் படங்களை மட்டும் அல்ல, அந்த நண்டுகளையுமே அடித்துச் சென்றுவிடும். இதை தமது கவித்திறனால் அன்று தமிழ் செய்தவர் அன்று வாழ்ந்த கவிஞர் (இன்று அமரர்) மஹாகவி உருத்திரமூர்த்தி. அவரின் பாடலடிகளை நான் ஏன் தற்போது நினைவுட்டுகிறேன் தெரியுமா.. ? ஆமாம்…. முன்பு, ஈழத்திரு நாட்டில் வாழ்ந்து பின்பு பிரான்ஸ் நாட்டில் குடியேறி வாழ்ந்த எனது நீண்ட கால நண்பரும் கலை ஆசனுமாகிய இரகுநாதனுக்கும் அப்பாடல் அடிகள் மிகவும் பொருத்தமாக உள்ளன.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









