Pathivukal

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)
ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                     Editor: V.N.Giritharan
   -மாதஇதழ்
 எமது  இணைய அங்காடி 
Hard to find products found here.

 

மேலும் புதிய பல்சுவை அம்சங்களுடனும்,புதுப் பொழிவுடனும்  அடுத்த ­தழ் வெளிவருகின்றது. உங்கள் ஆக்கங்களை அனுப்பி வையுங்கள். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: editor@pathivukal.com

மின்னஞ்சல்
தமிழ்எழுத்தாளர்களே!..

தமிழ் எழுத்தாளர்களே! ­லக்கியஅமைப்புக்களே! உங்கள் நூல்களைப் பற்றிய செய்திகளை, விமர்சனங்களை ­ப்பகுதியில் வெளியிட ­ருக்கின்றோம்.உங்கள் நூல்களில் ஒவ்வொரு பிரதியினை எமக்கு அனுப்பி வைக்கவும். அனுப்ப விரும்புபவர்கள் எமது editor@pathivukal.com மூலம் தொடர்பு   கொள்ளவும். ­லக்கிய விழாக்களைப்பற்றிய  கருத்தரங்குகளைப் பற்றிய
செய்திகளைஅனுப்பி வைக்கவும்.முரசு அஞ்சல் inaimathiTSC  மூலம் செய்திகளையோ ஏனைய 
விபரங்களையோ அனுப்பி வைக்கவும்.
 

Download Tamil Font
Clikhere to down load murasu anjal
மண்ணின்குரல்...

 

மண்ணின் குரல் நூல் வெளி வந்து விட்டது.நூலினை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: sales@pathivukal.com
 

­ணையத்தில் உழைப்போம்!

எமது சேவை...
விரைவில்பதிவுகள் புதுப் பொழிவுடனும் மேலும் பல புதிய அம்சங்களுடனும் வெளிவரவுள்ளது.

வர்த்தகர்களே! உங்கள் விளம்பரங்களைப்பதிவுகள்ில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

பதிவுகளில் விரைவில் மின்னஞ்சல்நண்பர்கள் பகுதி தொடங்கவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

­ணையத் தளங்களை வடிவமைக்க ,கிராபிக்? உருவாக்க எம்மை நாடுங்கள். மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.       sales@pathivukal.com


நிகழ்வுகள்!
[பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் Inaimathi, Inaimathitsc அல்லதுஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள்ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்குஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரிபிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத்தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ­ணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன்மூலம் கணிணியின் பயனை, ­ணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் ( ngiri2704@rogers.com ) பதிவு செய்துகொள்ளலாம்.] 

கனடா: 'காலம்' சஞ்சிகையின்'வாழுந் தமிழ்'
புத்தகக் கண்காட்சியும் இலக்கியச் சந்திப்பும்!

Puthumaippiththanகனடாவிலிருந்துசெல்வத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் காலம் சஞ்சிகை வருடா வருடம் 'வாழுந் தமிழ்' என்னும்புத்தகக் கண்காட்சியினை நடாத்துவது யாவரும் அறிந்ததே. இவ்வருடமும் 'காலம்' 'வாழுந் தமிழ்' புத்தகக்கண்காட்சியினை எதிர்வரும் யூன் மாதம் 2ந் திகதி 2723 St.Clair Avenue East (ChurchHall. O'Connor/St.Clair), Scarborough,Canada இல் பிற்பகல் 2 மணிக்கு நடாத்தவுள்ளதாகஅறிவித்துள்ளது. இம்முறை நிகழும் புத்தகக் கண்காட்சியில் தற்போது கனடா வருகை தந்திருக்கும் ஈழத்துப்பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான மு.பொ. என இலக்கிய உலகில் அறியப் பட்ட மு.பொன்னம்பலம் மற்றும்வெங்கடரமணன் ஆகியோருடனான இலக்கியச் சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை நடைபெறவுள்ள புததகக் கண்காட்சியில் வழக்கம் போல் தமிழகத்தின் தரமான பதிப்பகங்கள்வெளியிட்ட நூல்களை இலக்கிய ஆர்வலர்கள் வாங்கிச் சுவைக்கலாம். குறிப்பாக புதுமைப்பித்தன் பதிப்பகநூல்கள், மணிக்கொடி மற்றும் சுபமங்களா தொகுப்பு நூல்கள், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், டானியல்,எஸ்.பொ, ஜெயமோகன், மு.பொ, குமாரி ஜெயவர்த்தனாவுட்பட பல்வேறு இந்திய, ஈழத்து எழுத்தாளர்களின்நூல்கள் விற்பனை செய்யப் படவுள்ளதாகக் 'காலம்' அறிவிக்கின்றது. அத்துடன் இம்முறை அதிக அளவில்மொழிபெயர்ப்பு நூல்களும் விறபனை செய்யப் படவுள்ளதும் குறிப்பிடத் தக்கது. மேலதிக விபரங்களுக்குசெல்வம்: (416) -291-6971 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். தகவல்: 'காலம்'செல்வம்.

Meeting  Kannil
- தகவல்:ஜெயரூபன்


பாரிஸ்: எழுத்தாளர்கே.டானியல் 
ஆய்வுக் கருத்தரங்கு!

K.Danielஇடதுசாரிஇயக்கச் செயற்பாட்டாளரும் தலித் (பஞ்சமரிய) இலக்கிய முன்னோடியுமான தோழர் கே. டானியல் நினைவுக்கருத்தரங்கு எதிர்வரும் மே 12, 2002 ஞாயிற்றுக் கிழமை அன்று Salle De Parquet, 50 PlaceTorcey, 75018 Paris, France இல் காலை பத்து மணி முதல் தொடக்கம் மாலை எட்டு மணி வரைஇரு அமர்வுகளாக நடைபெறும். சி.சிவநேசன் தலைமையில் நடைபெறும் காலை அமர்வில் 'பஞ்சமர்களின்பார்வையில் படைப்பாளி டானியல்' என்னும் தலைப்பில் அருந்ததியும், 'டானியல் நினைவுகள்' என்னும்தலைப்பில் வி.ரி.இளங்கோவனும் ஆய்வுரைகள் நிகழ்த்துவார்கள். வி.ரி.இளங்கோவன் தலைமையில் நடைபெறும்பிற்பகல் அமர்வில் 'டானியல் சாதிய எதிர்ப்பில் ஒரு புதிய பரிமாணம்' என்னும் தலைப்பில் ஏ.ஜி.ஜோகராஜா(சுவிஸ்),'இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்' என்னும் தலைப்பில் சி.வா.செந்திவேல் (தேசியகலை இலக்கியப் பேரவை, இலங்கை) ஆகியோர் ஆய்வுரைகள் வழங்குவார்கள். ஒவ்வோர் உரையின் பின்னரும்கலந்துரையாடல் நடைபெறும். வை.வன்னியசிங்கம் நன்றியுரை வழங்குவார். மதிய போசனத்திற்கான ஒழுங்குகள்செய்யப் பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு:
உயிர்நிழல் (EXIL): 06 09 24 96 99 
அசை: சமூக அசைவுக்காக எழுத்தியக்கம் 06 17 87 68 27 
ஐரோப்பிய கீழைத்தேச தொடர்புமையம் (C.D.C)  06 64 66 39 28
தேசிய கலை இலக்கியப் பேரவை(ஐரோப்பா) 01 42 63 31 76
அசோக் (33)0142633176,கலைச் செல்வன் (33)0609249699, வி.ரி.இளங்கோவன் (33)0664663928
மின்னஞ்சல்danielninaivu@hotmail.com 

தகவல்: வெப்மாஸ்டர்,exilivre.com


கனடா:கலாநிதி மெளனகுரு/சித்திரலேகா மெளனகுரு 
ஆகியோருடனான இலக்கியச் சந்திப்பு!

எதிர்வரும் மே 11, 2002 அன்றுமாலை 5 மணிக்கு எக்ளிண்டன்/மிட்லாண்ட் சந்திக்கருகில் அமைந்துள்ள Mid Scarborough CommunityCenter இல அகவியின் ஏற்பாட்டில் கலாநிதி மெளனகுரு, கலாநிதி சித்திரலேகா மெளனகுரு ஆகியோருடனானஇலக்கியச் சந்திப்பினை அகவி வட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அனைவரையும் அகவி வரவேற்கிறது. தகவல்:ரகு: (905) 887 745

தோழர் மு. கார்த்திகேசன்அவர்களின்
சிறப்பு நினைவுமலர் வெளியீட்டு வைபவம்!

செப்டம்பர் 14ம் திகதி, சனிக்கிழமை,
பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறும்

இடம்: ஒன்ராறியோ அனைத்து தொழிற்சங்கநிறுவனம்
Ontario Federation ofLabour 
15 Gervais Drive (Eglintonand Don Mills) 
Don Mills, Ontraio 

இந் நிகழ்ச்சியில் அன்னாாின் தோழர்கள்,நண்பர்கள், பத்திாிகையாளர்கள், உறவினர்கள், சுற்றத்தினர் அனைவரையும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நினைவுமலரும், நிகழ்ச்சியும் சிறப்புடன்அமைய தோழர் மு. கார்த்திகேசன் அவர்கள் மேல் அன்பும் மதிப்பும் கொண்டு நெருங்கிப் பழகியவர்கள்அனைவாிடமிருந்தும் கட்டுரைகள், புகைப்படங்கள்(திருப்பிக் கையளிக்கப்படும்), வேறு விபரங்கள் ஆகியவற்றைஎதிர்பார்க்கிறோம்.]

தோழமை நிறைந்த அன்பர்கட்கு,

எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி,2002 ஆண்டு அமரர் தோழர் மு. கார்த்திகேசன் அவர்கள் மறைந்து 25 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளது. அதையொட்டிநினைவு மலர் வெளியீடு வைபவம் ஒன்றினை நிறைவேற்ற அமரர் தோழர் மு. கார்த்திகேசன் அவர்கள்மேல் அன்பும் மதிப்பும் கொண்டு நெருங்கிப் பழகிய சில தோழர்கள், ஆசிாியர்கள், மாணவர்கள், நண்பர்கள்,பத்திாிகையாளர்கள், உறவினர்கள் முன்வந்துள்ளனர். ஏனைய அனைத்து தோழர்கள், நண்பர்கள், சுற்றத்தார்அனைவரையும் தோழமை நிறைந்த உணர்வுடன் கைதந்து உதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இந்த வைபவம் சிறப்புற அமரர் தோழர்மு. கார்த்திகேசன் அவர்களின் கொள்கையை எடுத்தியம்பும் கட்டுரைகள், அவரது ஈடுபாடு சார்ந்த கட்டுரைகள்,கவிதைகள், ஆசிாிய தொழிலில் ஆற்றிய சேவை பற்றிய கட்டுரைகள், புகைப்படங்கள் (திருப்பிக் கையளிக்கப்படும்),அத்துடன் சம்பந்தப்பட்ட விடயதானங்கள், தொடர்புகள் ஆகியவையும், வேறு அமரர் பற்றி தாங்களே வரைந்தகட்டுரைகள், அவர் வாய்கேட்டு சுவைத்து மகிழ்ந்த விகடத் துணுக்குகள் ஆகியவற்றையே நாம் தங்களிடமிருந்துதற்போது எதிர்பார்க்கிறோம். தங்கள் தானம் இலகு மொழியில் (தமிழ், ஆங்கிலம் எதுவாயினும்) இருக்கவேண்டுவதுடன், அச்சடிப்பு வேலைகள் ஆரம்பிக்க கூடிய சீக்கிரமே அவற்றை எதிர்பார்க்கிறோம். அமரர்தோழர் மு. கார்த்திகேசன் அவர்களின் தோழமையும், தொடர்புகளும், சேவைகளும் மிகவும் பரந்துபட்டன.ஆதலால் பெரும்பாலோரும் பங்கேற்க வேண்டி ஒரு பொதுவான கோாிக்கையினையே விடுத்துள்ளோம்.

வேறு ஒலி, மேடை அமைப்பு, புகைப்படப்பிடிப்பு,வீடியோ படப்பிடிப்பு, வைபவம் பற்றி பிரச்சாரம் செய்ய பத்திாிகைகள், வானொலிகள், வேறு ஊடகங்கள்ஆகியவற்றின் உதவிகளையும் நாடி நிற்கிறோம். இவ் வைபவத்தை நடாத்த வேண்டுமென்று உற்சாகமூட்டியஅனைத்து தோழர்கள், நண்பர்கள், சுற்றத்தார் அனைவருக்கும் தோழமை நிறைந்த நன்றிகள். நினைவுதினம்இலங்கையிலும் நடைபெற சாத்தியம் உண்டு. விபரங்கள் தற்போது நிச்சயமாக்கப்படவில்லை. விடயதானங்கள்அனுப்பப்பட வேண்டிய விலாசங்கள் (ஏதேனும் ஒன்றிற்கு மாத்திரமே):

Janaki Balakrishnan
15 Deerford Road,
Willlowdale, Ontario M2J3H9
Canada
Tel: 416 490 0276
e-mail: janaki@netcom.ca

Rani Sinnathamby
Gnansampantha Lane, 
Vaddu West,
Vaddukoddai
Sri Lanka

Sumathy Kugathasan
39 Dhammalankara Mawatte,
Off Hill Street, 
Dehiwela
Sri Lanka
Tel: 94 171 2645
e-mail: sumathy1963@lycos.com 
 

தொடர்புகட்கு:  கனடா 416 490 0276, 416 224 0362
ஸ்ரீலங்கா-கொழும்பு  01 712 645 

தகவல்: - நினைவு மலர்க்குழு -ரொரன்றோ, கனடா
மார்ச் 10, 2002

கனடா:குரு அரவிந்தனின் 
நூல்கள், குறும் தட்டு வெளியீடு!

booksஎதிர்வரும்ஏபரல் 20ந் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு (Saturday, April 20, 2002) ஸ்கார்பரோநகராட்சி மண்டபத்தில் (Scarborough Civic Center, Ellesmere/ McCowan) பிரபல எழுத்தாளர்குரு அரவிந்தனின் நூல்கள் மற்றும் குறும் தட்டு வெளியீட்டு விழாவினை கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்நடாத்துகின்றது. இலக்கிய ர்வலர்கள் அனைவரையும் வருக வருகவென் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்வரவேற்கிறது. மேலதிக விபரங்களுக்கு (416) 425-5813 மற்றும் (416) 754-1577 ஆகிய தொலைபெசிஇலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.தகவல்: குரு அரவிந்தன்

பாரிஸ்: உயிர்நிழல்சஞ்சிகை 
மீதான மீள்நோக்கு!

Uyirwizal Logoஎதிர்வரும்பெப்ருவரி 03-02-2002 அன்று மாலை ஐந்து மணிக்கு 75 Rue Phillipe De Girard, 75018,பாரிஸ் என்னும் முகவரியில் அமைந்துள்ள தமிழர் வித்தியாலயம் பல்கலைக் கல்லூரியில் கடந்த மூன்று வருடங்களாகப்பாரிஸிலிருந்து வெளிவரும் புகலிட சஞ்சிகைகளில் புகலிட ­லக்கியத்திற்குக் காத்திரமான பங்களிப்புஆற்றிவரும் சஞ்சிகைகளிலொன்றான உயிர்நிழல் சஞ்சிகையின் மீள் நோக்கு, அதன் நகர்திசை குறித்தஆலோசனைகள் அறிவுறுத்தல்கள் சேகரிக்கும் முகமாக ­லக்கியக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. யா.பாலகிருஷ்ணன்தலைமையில் நடைபெற ­ருக்கும் ­ந்நிகழ்வில் உமாகாந்தன், சிவலிங்கம் சிவபாலன், நவா ஜோதி,புஸ்பராஜா, ரமேஷ் சிவரூபன், மனோகரன், வாசுதேவன், சிவலிங்கம் (­ங்கிலாந்து), குமார், அசோக்,அருந்ததி, ஞானி, ­யல்வாணன், கலைச்செல்வன் ஆகியோர் உரையாற்றுவார்கள். ­தனைத் தொடர்ந்து கருத்துப்பகிர்வும் நடைபெறும். ­லக்கிய ஆர்வலர்கள அனைவரையும் வருக வருகவென அழைக்கின்றனர் உயிர்நிழல்ஸ்தாபனத்தினர்.

நாளை நாடகப் பட்டறையினரின் இரு நாடகங்கள்!

'குளிக்குளிருந்து மீள்வதாய்...'!
'கதை படும் பாடு!'
Naalai Dramaஎதிர்வரும்ஆகஸ்ட் மாதம் 3ம், 4ம் திகதிகளில் யோர்க்வூட்ஸ் நாடக அரங்கில் பி.ப.3.30, பி.ப.7.30 காட்சிகளாகபா.அ.ஜயகரனின் 'குளிக்கு
ளிருந்து மீள்வதாய்...', 'கதைபடும் பாடு -குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்- ஆகிய ­ரு நாடகங்கள் மேடையேற்றப் படவிருக்கின்றன.அனைவரையும் வந்து பார்த்துக் களிக்கும் படி நாளை நாடகப் பட்டறையினர் அழைக்கின்றனர். மேலதிக விபரங்களிற்குஜயகரன்: (416) 467-4952.

மனவெளியின் 'நாற்காலிகள்', 
'புதியதொரு வீடு'

manaveliமனவெளிக்குழுவினரின் ஒன்பதாவது அரங்காடல் மார்ச் 16/17, 2002 ­ல் மார்க்கம் நாடக அரங்கில் நடைபெறவுள்ளது.­ந்நிகழ்வில் பி.விக்னேஸ்வரனின் ­யக்கத்தில் ­யுஜீன் அயனெஸ்கோவின் 'நாற்காழிகள்' , புராந்தகன்நெறியாழ்கையில் மகாகவியின் 'புதியதொரு வீடு' ஆகிய நாடகங்கள் நடைபெறுமென அறிவிக்கப் பட்டுள்ளது.மேலதிக தொடர்புகளுக்கு (416) 429-8854 , (416) 269-0078 ஆகிய தொலைபேசி ­லக்கங்களில்தொடர்பு கொள்ளவும்.

கனடிய ­ இலக்கியத் தோட்டமும் டொராண்டோப் பல்கலைக்கழகத் தென்னாசிய மையமும்  இ­ணைந்து நடத்தும் நூல் வெளியீடு.

Lutesong and Lamnet: Tamil writingfrom Sri Lanka

Book: Lutesong and Lamentமேற்படிநூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை ஜனவர் 19, 2002 மாலை 6.30ற்குத் தேநீர் விருந்துடன்ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெறும்.பேராசிரியர் செல்வா கனகநாயகம், ஏ.ஜே.கனகரத்னா,பேராசிரியர் சுரேஷ் கனகராஜா, பேராசிரியர் சிவசேகரம், சோ.பத்மநாதன் ஆகியோரால் மொழிபெயர்ப்புசெய்யப் பட்ட ஈழத்துப் படைப்புகளின் தொகுப்பு நூலான மேற்படி Lutesong and Lament: Tamilwriting from Sri Lanka என்னும் நூலில் கவிதைகள் சிறுகதைகள்அடங்கியுள்ளன. மஹாகவி, சேரன்,நீலாவணன், எஸ்.பொ., டொமினிக் ஜீவா, மு.பொன்னம்பலம், கி.பி.அரவிந்தன், தாமரைச் செல்வி,சிவரமணி, செல்வி, கஸ்தூரி, ஊர்வசி உட்படப் பலரின் படைப்புகள் அடங்கியுள்ளன. நூல் வெளியீட்டுவிழாவில் டொராண்டொப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மில்ரன் ­ஸ்ரேல்,கொலம்பியாப் பல்கலைக் கழக மானுடவியற் துறையைச் சேர்ந்த பேராசிரியர் வலன்ரைன் டானியல், மிச்சிகன்பல்கலைக் கழக உளவியற் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ராம் மகாலிங்கம் ஆகியோர் உரையாற்றுவார்கள்.தகவல்: செழியன்

நோர்வேயிலிருந்து'பறை'!
புலம் பெயர்ந்த சூழலில் புதியதோர் ­ இதழ்!

Book Image'சர்வதேசஅளவில் பரந்து வாழும் புகலிடத் தமிழ் மக்களின் குரல்களைச் சங்கமிக்கும் நோக்குடன் புகலிடத்தின் புதியவடிவங்களைக் கொண்டுள்ள பிரச்சினைகளை பற்றிய தேடல்களையும், தாயகப் பிரச்சினைகளையும் தாங்கியபடிமக்களின் வரலாற்றுப் பங்களிப்பாக வெளிக்கொணரப்படும் சமூக, கலை, ­லக்கிய , அரசியல் ­தழ் பறை'என்ற அறிவிப்புடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து புதியதொரு சஞ்சிகை 'பறை' நோர்வேயிலிருந்துவெளிவருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சரிநிகர் சரா (சரவணன்) வைப் பிரதம ஆசிரியராகக் கொண்டுவெளிவரவிருக்கும் ­ச்சஞ்சிகையின் வெளியீட்டு விழா டிசம்பர் 15, மாலை 16.00 மணிக்கு, SkuiGrendehus Honefoss Road) ­ல் நடைபெறும். விழாவில் நிகழ்சிகளை திருமதி. ர. சந்திராதொகுத்து வழங்க, வரவேற்புரையினைத் தமிழர் ஒன்றிய உபதலைவரான திரு.கு.தவேந்திரன் நிகழ்த்துவார்.விழாவின் தலைமையுரையினை 'பறை' ஆசிரியர் சரிநிகர் சரா நிகழ்த்த, 'தேசியம்' என்னும் தலைப்பில்விமர்சன உரையினை திரு. ­ளவாளை விஜேந்திரனும், பெண்ணிய விமர்சனத்தை திருமதி. வாசுகி ஜெயபாலனும், ஆய்வுரையினை திரு.சச்சு. ஆனந்தனும் நிகழ்த்துவார்கள். அதனைத் தொடர்ந்து நன்றியுரையினை தமிழர்ஒன்றிய செயலாளர் திருமதி. சாந்தி மோகன் நிகழ்த்துவார். விழாவில் ஒஸ்லோ சலங்கை நர்த்தனாலாயம்வழங்கும் 'வரவேற்பு நடனம்' , கவிதா விக்கினேஸ்வரனின் நடனம், வாசுகி ஜெயபாலனின் ­னிய கானங்கள்,ஒஸ்லோ திருமுழுக்குச் சபையின் தேவ கானங்கள் ஆகியவையும் நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு: தமிழர்ஒன்றியம், திரு.கு.தவேந்திரன் 92435341. தகவல்: சரிநிகர் சரா.

குமார் மூர்த்தி நினைவு 
கூட்டமும் நிகழ்வும்!

Kumaar Moorthyஎதிர்வரும்நவம்பர் 23ந் திகதி வெள்ளி மாலை ஏழு மணிக்கு 1785 பிஞ்ச் அவென்யு மேற்கு ( Finch Avenuewest) ­ல் அமைந்துள்ள யோர்க்வூட் நூலக அரங்கில் குமார் மூர்த்தி நினைவு தினக் கூட்டம் நடைபெறும்.­ந்நிகழ்வில் நினைவுரை, 'காலம்' ­தழின் குமார் மூர்த்தி நினைவுச் சிறப்பிதழ், நாளை நாடகப்பட்டறை வழங்கும் 'சப்பாத்து' நாடகம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு குமார்மூர்த்தி நினைவுக் குழுவினை (416) 703-8069 என்னும் தொலைபேசி ­லக்கத்தில் தொடர்பு கொள்ளவும். 

மனவெளியின் 'நாற்காலிகள்','புதியதொரு வீடு'

manaveliமனவெளிக்குழுவினரின் ஒன்பதாவது அரங்காடல் மார்ச் 16/17, 2002 ­ல் மார்க்கம் நாடக அரங்கில் நடைபெறவுள்ளது.­ந்நிகழ்வில் பி.விக்னேஸ்வரனின் ­யக்கத்தில் ­யுஜீன் அயனெஸ்கோவின் 'நாற்காலிகள்' , புராந்தகன்நெறியாழ்கையில் மகாகவியின் 'புதியதொரு வீடு' ஆகிய நாடகங்கள் நடைபெறுமென அறிவிக்கப் பட்டுள்ளது.மேலதிக தொடர்புகளுக்கு (416) 429-8854 , (416) 269-0078 ஆகிய தொலைபேசி ­லக்கங்களில்தொடர்பு கொள்ளவும்.

கனடா:குறமகள் அவர்களின் சிறுகதைத் தொகுதிகள் மற்றும் அமரர் ­ராமலிங்கம் பத்தாவதாண்டு நினைவஞ்சலிமலர் வெளியீட்டு விழா!

KuRamakal_ValliwaayakiIramalingakmஎதிர்வரும்சனிக்கிழமை , ஒக்டோபர் 27 2001, மாலை ஐந்து மணிக்கு 733 பேர்ச்மவுண்ட் சாலையில் (BirchmountRoad) அமைந்துள்ள கனடாக் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் ­லங்கையின் மூத்த தமிழ்ப் பெண் எழுத்தாளரானவள்ளிநாயகி ­ராமலிங்கம் (குறமகள்) அவர்களின் 'குறமகள் கதைகள்', 'உள்ளக் கமலமடி' என்னும் ­ருசிறுகதைத் தொகுதிகளும், அவரது கணவரான அமரர் திரு.வே.­ராமலிங்கம் அவர்களின் நினைவு மலராக'­ராமபாணம்' என்னும் கட்டுரைத் தொகுதியும் வெளியிடப்படுமென அறிவிக்கப் பட்டுள்ளது. சிறுகதைத்தொகுதிகளிரண்டும் தமிழகத்திலுள்ள 'மித்ர' பதிப்பக வெளியீடுகளாக , பிரபல எழுத்தாளர் ­ந்திராபார்த்தசாரதியின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளன. நிகழ்வு ­ரு அமர்வுகளாக நடைபெறும். முதலாவது அமர்வில்கவிஞர் கந்தவனம் தலைமையில் '­ராமபாணம்' அஞ்சலிக் கட்டுரைத் தொகுதி வெளியிடப்படும். ­ந்நூலிற்கானவெளியீட்டு உரையினைத் துஷி ஞானப்பிரகாசம் நிகழ்த்துவார். நூல் மதிப்புரையினை ஜவர்கலால் நேரு(ஓய்வுபெற்ற தபால் அதிபர்,­லங்கை) , நல்லைநாதன் ( ஓய்வுபெற்ற தபால் அதிபர்கள் சங்கம், கனடாவின்தற்போதைய தலைவர்) ஆகியோர் நிகழ்த்துவார்கள். ­ந்நூலில் 'சுடரொளி' மற்றும் 'துருவதாரை' ஆகிய­தழ்களில் வெளிவந்த குறமகள் அவர்களின் கட்டுரைகள் ­டம் பெற்றுள்ளன. ­ரண்டாவது அமர்வில் சிறுகதைத்தொகுதிகளிரண்டும் கலாநிதி பார்வதி கந்தசாமியின் தலைமையில் நடைபெறும். சிறுகதைத் தொகுதிகளை'தமிழர் தகவல்' திருச்செல்வம் வெளியிட்டு வைப்பார். ஆய்வுரைகளை எழுத்தாளர்கள் சந்திரமோகன் மற்றும்நவம் ஆகியோர் வழங்குவார்கள். அனைவரையும் வருக வருகவென விழாக் குழுவினர் அழைக்கின்றார்கள்.மேலதிகவிபரங்களுக்கு திருமதி வள்ளிநாயகி ­ராமலிங்கம் அவர்களை (416) 538- 8445 என்னும் தொலைபேசி­லக்கத்தில் தொடர்புகொள்ளவும்.

தமிழகம்:நவராத்திரி விழா! இன்னிசை நிகழ்ச்சி!

God Saraswathiஎதிர்வரும்ஒக்டோபர் 21ந் திகதி ஞாயிறு மாலை ஆறு மணிக்கு செல்விகள் சசிரேகா நரசிம்மன், பானுரேகாநரசிம்மன் குழுவினரின் நவராத்திரி ­சை நிகழ்ச்சி 158 வடக்கு உஷ்மான் சாலை, தி.நகரில் அமைந்துள்ளதருமை ஆதினம் சமயப் பிரசார நிலையத்தில் நவராத்திரு விழா நடைபெற ­ருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் வருக வருகவென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அழைக்கின்றார்கள். 

தகவல்: காந்தளகம்
மின்னஞ்சல்: sachi@giasmd01.vsnl.net.in

கலாநிதி பத்மாசுப்ரமண்யத்தின் 
நடனக் கச்சேரி!

ATN  நிறுவனத்தின் ஆதரவில்!

Dr.Padma Subramanyamஎதிர்வரும்ஒக்டோபர்14ந்திகதி மாலை 7 மணிக்கு, Toronto Centre for the Arts (5040 Yonge Street),ATNTelevision Network ஆதரவில் கலாநிதி செல்வி பத்மாசுப்ரமண்யத்தின் நடனக் கச்சேரி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. நுழைவுச்சீட்டுக்களைப்பெறவிரும்புவோர் 905-836-6460 என்னும் தொலைபேசி ­லக்கத்துடன் அல்லது Ticket Master: 416-870-8000என்னும் தொலைபேசி ­லக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். கலாநிதி பத்மா சுப்ரமண்யம்உலகப் புகழ் பெற்றபரதநாட்டியக் கலைஞர். 'தியாக பூமி' போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களை வழங்கிய டைரக்டர்கே.சுப்ரமண்யத்தின் மகள். ATN சாண் சந்திரசேகர், பாலகிருஷ்ணனின் சகோதரி. பத்மஸ்ரீ, கலைமாமணி,தமிழக அரசுக் கலைஞர், சங்கீத நாடக அகாடமி விருதுகளின் சொந்தக்காரரான ­வர் 'நிருத்யோதயா'நாட்டியக் கல்லூரியின் ­யக்குனர். பரதம் பயில விரும்பும் ஏழை மாணவிகளுக்கு 'நிருத்யோதயா' ­லவசமாகநடனக் கல்வியினை வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது. '­ந்திய நடனத்திலும் சிற்பங்களிலும் கரணங்கள்'என்னும் ஆய்விற்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற ­வர் 'பரதக் கலைகோட்பாடு' என்னும் புகழ் பெற்ற நூலின் ஆசிரியருமாவார். ­ந்நூல் வானதி பதிப்பாக வெளிவந்து பலரின்பாராட்டுதல்களைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத் தக்கது. வழுவூர் ராமையாப் பிள்ளை, மைலாப்பூர் கெளரியம்மாள்ஆகியோரிடம் நடனம் பயின்ற பத்மா சுப்ரமண்யம் தனது வாழ்வினையே நடனக் கலைக்காக அர்ப்பணித்துவாழும் உண்மைக் கலைஞர். 

பாரிஸ்: தமிழின் உப மரபுகளும் பின் நவீனத்துவவாசிப்புகளும்!

பிரேம் ரமேஸுடனான
­ இலக்கியச் சந்திப்பும் கலந்துரையாடலும்!

Paris meetingஎதிர்வரும்செப்டெம்பர் ஒன்பதாந்திகதி ஞாயிறு பிற்பகல்  மூன்று மணிக்கு பாரிஸில் புதுவை பல்கலைக் கழகத்தில்நாடகத்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் பிரேம் ரமேஸ்அவர்களுடன் ஓரிலக்கியச் சந்திப்புநடைபெறவுள்ளது

. ­வ்விலக்கியச் சந்திப்பில்பல்வேறு நூல்கள் 'புதைக்கப் பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்' (நாவல்), 'ஆதியிலே மாம்சம்­ருந்தது' (நாடகம்), '­ருபது கவிதைகளும் ­ரண்டாயிரம் ஆண்டுகளும்' (கவிதை), 'முன்பு ஒரு காலத்தில்நூற்றியெட்டுக் கிளிகள் ­ருந்தன' (சிறுகதை),'­ளையராஜா: ­சையின் தத்துவமும் அழகியலும்' (கட்டுரை),'சிதைவுகளின் ஒழுங்கமைவு: பின் நவீனத்துவப் பிரச்னைப்பாடுகள்' (கட்டுரை), 'கனவில் பெய்த மழையைப்பற்றிய ­சைக் குறிப்புகள்' (குறுநாவல்கள்) ஆகியன அறிமுகம் செய்யப்படுவதுடன் அவை பற்றிய கலந்துரையாடலும்நடைபெறுமென அறிவிக்கப் பட்டுள்ளது. முகவரி:சலி நெருடா (Salle Neruda)(சபாலிங்கம் மண்டபம்)நீச்சல் தடாகத்திற்கண்மையில் 95140 Garges Les Gonnesse , Paris

'தமிழ் ஹை-டெக் எக்ஸ்போ 2001'

Tamil Hi-Tech Expo 2001தமிழ்ஈழப் பொருண்மிய அபிவிருத்திக் கழகத்தினரின் கனடாப் பிரிவினரால் (TEEEDOR-Canada) எதிர்வரும்ஆகஸ்ட் மாதம் 12ந் திகதி 1250 எக்ளிண்டன் அவென்யூ கிழக்கு (Eglinton Avenue East) என்னும்முகவரியில் அமைந்துள்ள கிறவுண் பிளாஸா ஹொட்டலில் (Crown Plaza Hotel) 'தமிழ் ஹை-டெக்எக்ஸ்போ2001 (Tamil Hi-Tech Expo 2001)' என்னும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர்களது ­ணையத்தளத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது. கனடாத் தமிழர்கள் மத்தியில் உயர் தொழில் நுட்பச் சேவைகளை வழங்கிவரும் சேவையாளர்களை ஒருங்கிணைப்பதற்காகவும், அவர்களது சேவைகளை தமிழ் மற்றும் பிற ­ன வாடிக்கையாளர்களிற்குஅறிமுகம் செய்து வைப்பதற்காகவும் நடைபெறும் ­ந் நிகழ்வின் பிரதான நோக்கங்கள் கனடாத் தமிழ் சமுதாயத்தினரின்தொழில் நுட்ப ரீதியிலான கண்டு பிடிப்புகளை, சாதனைகளை அறிமுகம் செய்வதும், பொதுமக்களிற்குமுன்னணித் தொழில் நுட்பப் பிரிவுகள் சம்பந்தமான அறிவினைப் போதிப்பதுவும், மற்றும் தொழில் நுட்பவல்லுனர்களிற்கும், தொழில் நுட்பச் சேவையாளர்களிற்குமிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதுமேயென ­ந்நிகழ்வு தொடர்பான அறிவித்தலில் அறிவிக்கப் பட்டுள்ளது. ­வ்வகையிலானதொரு நிகழ்வு நடைபெறுவது­துவே முதல் முறையென்பது குறிப்பிடத் தக்கது. கண்காட்சியில் பங்கு பற்ற விரும்பும் தொழில் நுட்ப நிறுவனங்கள், ஆய்வுக கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் ஆய்வாளர்கள் , பொறியியல் திட்ட மாதிரி வரைபடங்களை(Engineering Design) சமர்ப்பிப்பதற்கான போட்டிகளில் பங்கு பற்ற விரும்புவோர் மேலதிக விபரங்களைhttp://www.teedor.ca/hitech.htm என்னும் ­ணையத் தளத்தில் அல்லது (416) 285-0175 என்னும்தொலைபேசி ­லக்கத்தில் அல்லது info@teedor.ca என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதன் மூலம்பெற்றுக் கொள்ளலாமென அறிவிக்கப் பட்டுள்ளது. 

யாழ் ­ இந்துக் கல்லூரியின்
'கலையரசி 2001'

Jaffna Hindu Collegeயாழ் இ­ந்துக் கல்லூரிக் கனடாச் சங்கத்தினரின் 'கலையரசி 2001' கலைவிழா செப்டம்பர் மாதம் எட்டாம்திகதி சனிக்கிழமை (September 8, 2001) மாலை 5.45 மணிக்கு, 2300 பார்மஸி அவென்யு,ஸ்கார்பரோவில் அமைந்துள்ள சேர். ஜோன். ஏ. மக்டானால்ட் கல்வி நிலையத்தில் (Sir John A.Macdonald Collegiate Institute) நடைபெறுமென அறிவிக்கப் பட்டுள்ளது. நுழைவுக் கட்டணமாகபத்து டொலர்கள் அறிவிக்கப் படும். சங்கத்தினர் யாழ் ­ந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் உட்படகனடாவாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றனர். அத்துடன் ­துவரை சங்கத்தின்உறுப்பினராகச் சேராதிருக்கும் பழையமாணவர்களை அங்கத்தவர்களாகச் சேர்ந்து சங்கத்தின் வளர்ச்சிக்குஉதவும்படியும் அவர்கள் வேண்டுகின்றனர். வருடாந்தச் சந்தா 15 டொலர்கள். ஆயுட்காலச் சந்தா 150 டொலர்கள்.மேலதிக விபரங்களிற்குச் சங்கத் தலைவரான கப்டன் சி.சந்தியாப் பிள்ளையை (416) 490-9338என்னும் தொலைபேசி ­லக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

கனடா: 'வடிவங்கள்'!
அகவியின் ஓவியக் கண்காட்சி!

VadivangkaL Imageயூலை28ந்திகதி சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, டொராண்டோ மாநகரில், 3600 கிங்ஸ்டன் சாலையில்(Kingston  Road) அமைந்துள்ள , ஸ்கார்பரோ கிராம பொழுதுபோக்கு நிலையத்தில் ( ScarboroughVillage Recreation Centre) ஓவியர் ஜீவனின் 'வடிவங்கள்' ஓவியக் கண்காட்சி 'அகவி'யின்ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. ஓவியர் ஜீவன் என்றழைக்கப் படும் நந்தகுமார் கந்தசாமி நல்லதொரு நாடறிந்த'நவீன' ஓவியக் கலைஞர். ஏற்கனவே ­வரது ஓவியக் கண்காட்சிகள் பல தடவைகள் நிகழ்ந்துள்ளன. அத்துடன்பல்லினமக்களையும் அவை கவர்ந்துள்ளனவென்பதும் குறிப்பிடத் தக்கது. கலை ­லக்கிய ஆர்வலர்கள் அனைவரையும்வருக வருகவென 'அகவி' அழைக்கிறது.

காற்றோடு பேசு!.. 
குறிப்புகள் சில!

[அண்மையில் தொராண்டோவில் நிகழ்ந்தcd வெளியீடு பற்றிய குறிப்புகள்.]

"காற்றோடு பேசு!' cd ஆக அருவிவெளியீடாக வருவது பாராட்டிற்குரியது. நல்ல முயற்சி. அன்றைய நாட்களில் 'மண் சுமந்த மேனியர்'நாடகத்துடன் சேரனின் ­ப்பாடல்கள் கவிதா நிகழ்வாக பட்டி தொட்டியெல்லாம் பல தடவைகள் அரங்கேறியவை.­தில் பேசியவர்களின் பெயர்கள் அவ்வளவாக பரிச்சயமில்லாததால் ­ன்னார் ­ன்னாரென்று குறிப்பிடாதுபொதுப்படையாகவே விமரிசனத்தை வைக்கிறேன். மன்னிக்கவும். ஒரு அன்பர் கவிதையொன்றில் ­டம்பெற்ற'பட்டிப்பூ"பற்றிப் பேசினார். பாலஸ்த்தீனக் கவிதையொன்றிலும் வாசித்ததாக ஞாபகம். ­ப்பட்டிப்பூநம்பிக்கையின் அடையாளமாக வாசித்ததாக ஞாபகம்.விடுதலை உணர்வு எல்லோரிற்கும் பொதுவானதாகவேயிருக்கின்றது. 

சேரனின் கவிதைகள் அன்றும் சரி­ன்றும் சரி மனதைக் கொள்ளை கொள்வன. அதில் மாற்றுக் கருத்துகளில்லை. அன்று கண்ணனின் ­சையமைப்பில்பன்மடங்கு எல்லோரையும் கட்டிப் போட்டிருந்தன. ஜெயகரனின் பின்புலச் சூழல் பற்றிய பேச்சு தெளிவாகவிருந்தது.'மூங்கில்கள் நெரியும்..' என்ற பாடலிற்கு ஒரு சகோதரி நடனம் ஆடினார். அபிநயங்களைப் பார்த்தபோதுபழைய ஞாபகங்கள் வருவது போலவேயிருந்தது. cdயைக் கேட்டபோது ..அன்று பலர் கோரஸ்ஸாக சேர்ந்துபாடியிருந்தார்கள். ­தில் பாடியவர்கள் பரவாயில்லை எனப் பட்டது. 'அதிகாலையில் பனி வீழ்கிறது..'பாட்டில் கொஞ்சம் பழைய தொனி குறைந்தது போலவேயிருந்தது. ஆனாலும் பரவாயில்லை. மற்றைய பாடல்களெல்லாம்அதே தொனியைத் தொட்டது போலவேயிருந்தன. ஒட்டு மொத்தத்தில் 'நல்ல முயற்சி'யென்று மன நிறைவாகவிருக்கின்றது.

- கடல் புத்திரன் 
எழுத்தாளர் சுந்தர ராமசுவாமிக்கு
' இயல்' விருது!

டொராண்டோ பல்கலைக் 
கழகம் வழங்குகிறது!

Sunthara Ramasuwami Imageடொராண்டோபல்கலைக் கழகத்தின் (University of Toronto) 'தெற்காசியக் கல்விக்கான மையம்' (Centerfor South Asian Studies)கனேடிய தமிழ் ­லக்கியத் தோட்டத்துடன் ­ணைந்து எதிர்வரும் மே 25,2001அன்று மாலை 7 மணிக்கு, 6 ஹாஸ்கின் அவென்யு, டொராண்டோவில் அமைந்துள்ள சேலி ஹாலில் மேற்படிவிருதினை வழங்குகின்றது. மேற்படி விருதானது திரு.சு.ரா அவர்கள் தனது வாழ்நாளில் ஆற்றிய ­லக்கியப்பணிக்காக (Life Time Achievement Award) வழங்கப் படுவது குறிப்பிடத் தக்கது. மேற்படி விருதுடன்சு.ராவிற்கு 1500 கனேடிய டொலர்களும் வழங்கப்படும். சு.ரா. அவர்கள் மேற்படி வைபவத்தில் சிறப்புரையாற்றிவிருதினைப் பெற்றுக் கொள்வார். 'ஒரு புளியமரத்தின் கதை', 'ஜே.ஜே.சில குறிப்புகள்', 'குழந்தைகள்,பெண்கள், ஆண்கள்' போன்ற நாவல்கள் ­வரது படைப்பாற்றலையும் புலப்படுத்துவன. ­வரது சிறுகதைகள் 'காகங்கள்','சுந்தர ராமசுவாமி சிறுகதைகள்' ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. தகழியின் 'செம்மீன்','தோட்டி மகன்' ஆகிய நாவல்களை தமிழிற்கு மொழிபெயர்த்துமிருக்கிறார். 'பசுவைய்யா' என்னும் பெயரில்பல கவிதைகளைத் தமிழ் ­லக்கியத்திற்குத் தந்துள்ள ­வரது ­லக்கிய விமர்சனக் கட்டுரைகள் 'காற்றில்கலந்த பேரோசை', 'விரிவும் ஆழமும் தேடி', 'ந.பிச்சமூர்த்தியின் கலை:மரபும் மனித நேயமும்'ஆகிய தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. தமிழ் ­லக்கிய வானில் பவனி வந்து கொண்டிருக்கும் 'காலச்சுவடு'சஞ்சிகையின் ஸ்தாபகரும் ஆசிரியரும் ­வரே. எழுபது வயதினை எட்டும் சு.ரா கடந்த ஐம்பது வருடங்களிற்கும்மேலாகத் தமிழ் ­லக்கிய உலகிற்கு ஆற்றிவரும் பணிக்காக கிடைக்கப்பெறும் ­வ்விருது பொருத்தமானதே.தமிழ் மக்கள் அனைவரும் தலைநிமிர்ந்து பெருமைப்பட வேண்டியதொரு விடயமும் நிகழ்வுமிது. சு.ராவிற்குப்பதிவுகள் தன் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

காற்றோடு பேசு!

அருவியின் C.D ­ இசைத்தட்டு வெளியீடு!

கண்ணனின் ­சையமைப்பில் 
கவிஞர் சேரனின் பாடல்கள்!

எதிர்வரும் ஜூன் மாதம் 2ந்திகதிமாலை ஆறு மணிக்கு 3600 கிங்ஸ்டனில் அமைந்துள்ள Scarborough Village Community Cenre­ல் 'காற்றோடு பேசு!' CD ­சைத்தட்டு வெளியீட்டு விழா நடைபெற ­ருப்பதாக அருவி நிறுவனம் அறிவிக்கின்றது.1985-1987 காலப் பகுதியில் யாழ்ப்பல்கலைக் கழகக் கலாச்சாரக் குழுவினரால் நடாத்தப் பட்ட 'மண்சுமந்த மேனியர்' (நாடகம்), 'எங்கள் மண்ணும் ­ந்த நாட்களும்' (கவிதா நிகழ்வு) மற்றும் 'மாயமான்'(வீதிநாடகம்) ஆகிய நிகழ்வுகளில் ­டம்பெற்ற கவிஞர் சேரனின் பாடல்களில் சிலவற்றைத் தொகுத்து ­ந்த­சைத்தட்டினை அருவி நிறுவனம் வெளியிடுகின்றது. கண்ணன், எஸ்.வீ.வர்மனின் ­சையில் திவ்வியராஜன்,ஞானாந்தன், உமா ரமணன், வருணா ராமேஸ்வரன் ஆகியோரின் குரல்வழியே பாடல்களை நீங்கள் கேட்கலாம்.விழாவிற்கு வருகை தருமாறு அனைவரையும் அருவி நிறுவனம் அழைக்கின்றது. விபரங்களிற்கு பாபு பரதராஜாவை(416) 264-6567 என்னும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

கனடா: ஜெயமோகன் படைப்புகள் பற்றிய ஆய்வரங்கு!

Jeyamoganஎதிர்வரும்சனிக்கிழமை மே 19ந் திகதி மாலை 4 மணிக்கு 3600 Kingston என்னும் முகவரியில் அமைந்துள்ளScarborough Village Recreation Centre ­ல் எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகள் பற்றியஆய்வரங்கு நடைபெறவிருப்பதாக அகவி வட்டம் அறிவிக்கின்றது. ­ந் நிகழ்வில் ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்'நாவல் பற்றி 'பூரணி' மகாலிங்கம், 'பின் தொடரும் நிழலின் குரல்' பற்றி சிவம், 'ரப்பர்' பற்றிசுமதி ரூபன், 'கன்னியாகுமரி' பற்றி ரதன், ஜெயமோகன் சிறுகதைகள் பற்றி அ.முத்துலிங்கம், ஜெயமோகனின்'நாவல்' பற்றிய நூல் பற்றி 'காலம்' செல்வம் ஆகியோர் தமது ஆய்வுகளை வழங்கவுள்ளனர். அனைவரையும்'அகவி' வட்டம் அழைக்கின்றது. மேலதிகத் தொடர்புகளிற்கு ரதனை (416) 609-8113 என்னும்
தொலைபேசி ­லக்கத்தில் தொடர்புகொள்ளவும்.

நாடகப் பட்டறை வழங்கும்
 நான்கு நாடகங்கள்!

matku paintingஎதிர்வரும்ஜுன் மாதம் 9ந் திகதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கும் மற்றும் 10ந் திகதி ஞாயிறு மாலை 3.30ற்கும்டொராண்டோ மாநகரிலுள்ள 1785 பிஞ்ச் அவென்யு மேற்கு (Finch West) என்னும் முகவரியிலமைந்துள்ளயோர்க்வூட் நூலக அரங்கில் நாடகப் பட்டறை வழங்கும் பா.அ.ஜயகரனின் நாடகங்களான பாபு பரதராஜா,பி.ஜே.டிலிப்குமார், றெஜி மனுவல்பிள்ளை, தான்யா தில்லைநாதன் ஆகியோர் நடிக்கும் 'எல்லாப் பக்கமும்வாசல்', சுமதி ரூபன், சத்தியா தில்லைநாதன் நடிக்கும் 'எதிர்க் காற்றினிலே...' பா.அ.ஜயகரன்நடிக்கும் 'சொல்லின் ஆழத்துள்', பி.ஜே.டிலிப்குமார், வின்ஸ்லஸ் செல்வதுரை, பாலன் திருநாவுக்கரசு,பாபு பரதராஜா, சுமதி ரூபன், பா.அ.ஜயகரன், சத்தியா தில்லைநாதன் நடிக்கும் 'மீறல்' (­ரு பகுதிகள்)ஆகிய நான்கு நாடகங்கள் நடை பெறவுள்ளன. மேலதிகத் தொடர்புகளிற்கு (416) 703-8069 என்னும்தொலைபேசியிலக்கத்தில் அல்லது naalai@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

சுலேகா.காம்!
இலக்கியத்திற்கான 
­ இணையத் தளம்!

sulekha.com image­ இணையத்தில்­ இலக்கியத்திற்கான தளங்களில் முக்கியமான தளம் சுலேகா.காம் (http://www.sulekha.com).பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற தளமிது. 250,000ற்குமதிகமான பக்கங்களைக் கொண்ட­த்தளத்திற்கு 50ற்குமதிகமான நாடுகளிலிருந்து பலர் பங்களிப்பு செய்கின்றார்கள். கலந்துரையாடல்,உரையாடல், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், கலை,ஓவியம்,நூல் விமர்சனம், சினிமா விமர்சனம்...எனத்தளம் விரிந்து செல்கின்றது. தற்போது அமெரிக்காவில் வசிக்கும் சத்யா பிரபாகர், ­வர் ஆந்திராவைச்சேர்ந்தவர், சங்கீதா செட் ரி , ­வர் கல்கத்தாவைச் சேர்ந்தவர், ஆகியோரால் 1998 ­ல் சிறு வித்தாகவிதைக்கப்பட்ட சுலேகா.காம் ­ன்று ஆலமரமாக விஸ்வரூபமெடுத்திருப்பது பாராட்டிற்குரியது. ­ந்திய உபகண்டத்தைச்சேர்ந்தவர்களிற்குரிய ­லக்கியத்திற்கான தளங்களில் சுலேகா.காம் முக்கிய ­டத்தைப் பெறுகின்றது.'சுலேகா' என்றால் சமஸ்கிருத மொழியில் 'நல்ல எழுத்து' என்று பொருளாம். நல்ல எழுத்தை ­ணையத்தில்வாசிக்க விரும்புவோரிற்கு உண்மையிலேயே சுலேகா.காம் நல்லதொரு தளம் தான்

உயிர்நிழல்' கலைச்செல்வனுடன்
ஒரு கருத்தரங்கு..

அண்மையில் உயிர்நிழல் ஆசிரியர்களிலொருவரான கலைச்செல்வனுடன் நிகழ்ந்த ­ இலக்கியச் சந்திப்பில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'காலம்' செல்வம்,'பூரணி' மகாலிங்கம், கவிஞரும் நாடகாசிரியருமான பா.அ.ஜயகரன், வசந்தி ராஜா, சுமதி ரூபன்,முன்னாள் யாழ் பலகலைக் கழக விரிவுரையாளர் ராஜேந்திரன், எழுத்தாளர் சிவம், 'காந்தீயம்' சண்முகலிங்கம்,­லங்கையன், எழுத்தாளர் நவம், கவிஞர் திருமாவளவன், நடிகர் பாபு பரதராஜா, பாடகர் திவ்வியராஜா...­வ்விதமாகப்பல்வேறு முகங்களையும் காண முடிந்தது. விரிவுரையாளர் ராஜேந்திரன் தலைமையில் நிகழ்ந்த கருத்தரங்கில்தலைமையுரையாற்றிய ராஜேந்திரன் 'புலம் பெயர் ­லக்கியம்' பற்றியும் அதன் 'போக்குகள்' பற்றியும்நீண்டதொரு உரையினையாற்றினார். உயிர்நிழல் ஆசிரியர் கலைச்செல்வன் 'புலம் பெயர் ­லக்கியம்'பற்றியும், 'உயிர்நிழல்' எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றியும் உரையாற்றினார். ­றுதியாக உயிர்நிழல்­தழில் வெளிவந்த விடயங்கள் பற்றிய தமது கருத்துகளைப் பார்வையாளர்கள் பகிர்ந்து கொண்டதுடன் அமர்வுநிறைவு பெற்றது.

புலம்பெயர்  இ­லக்கியம் பற்றிய கலந்துரையாடல்!

உயிர்நிழல் ஆசிரியர் 
கலைச்செல்வன் கனடா வருகை!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ந் திகதிஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு ,மார்க்கம் எக்ளிண்டன் சந்திக்கண்மையிலமைந்துள்ள ScarboroghVillage Community Center ­ல் தற்போது கனடாவிற்கு விஜயம் செய்திருக்கும் உயிர் நிழல் ஆசிரியர்கலைச்செல்வனுடன் புலம் பெயர் ­லக்கியம் சம்பந்தமான கலந்துரையாடலொன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.­லக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலதிக தொடர்புகளிற்குசண்முகலிங்கம் அவர்களை (416) 431-5095 என்னும் ­லக்கத்தில் தொடர்புகொள்ளவும். 

புதிய தமிழ் மாத ­ இதழ்: 'மித்ர'
மித்ர பதிப்பக வெளியீடு!

பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ.வின்மித்ர பதிப்பகம் 'மித்ர' தமிழ் மாத ­தழினை வெளிக்கொணர ­ருப்பதாக அறிவித்துள்ளது. ­தழிற்குஉங்களது படைப்புகளையும், ஆலோசனைகளையும் அனுப்பி வையுங்கள்.  புதிய வாழ்க்கை அனுபவங்கள்,மொழி பெயர்ப்புகள் போன்றவற்றை வெளிப்படுத்தும் சர்வதேசத் தமிழரின் படைப்புகள் போன்றவற்றுடன்சமகால ஈழத்துத் தமிழக, உலக அரசியல் விடயங்களிற்கும், நிகழ்வுகளிற்கும் முக்கியத்துவம் கொடுத்துசமுதாய உணர்வினை வெளிப்படுத்துமொரு ­தழாக 'மித்ர' வெளிவரட்டும். ­து ஒரு மித்ர பதிப்பக வெளியீடாகும்.மித்ர பதிப்பகம் ஏற்கனவே பல தரமான படைப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேசதமிழர்களை மையமாக வைத்து வெளிவர ­ருக்கும் 'மித்ர' ­தழினை நம்பிக்கையுடன் வரவேற்போம். தொடர்புகளிற்கு:மித்ர பதிப்பகம், 375/8-10 Arcot Road, Chennai 600 024, India என்னும் முகவரியுடன்தொடர்பு கொள்ளவும்.

ஆறாந்திணையின் 
புதிய ­ இதழ்: 'தென்றல்

thendral magazine cover imageபிரபல­ணைய ­தழான 'ஆறாந்திணை'யினை வெளியிடும் சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் வட அமெரிக்கத் தமிழர்களைமையமாக வைத்து 'தென்றல்' என்னும் ­தழினை அஷோக் சுப்ரமணியத்தினைப் பதிப்பாசிரியராகக் கொண்டுவெளியிட்டு வருகின்றார்கள். ஆன்மீகம், சினிமா, விளையாட்டு, சிறுகதைகள், குறுக்கெழுத்துப் போட்டி,ராசி பலன், தொழில் நுட்பம், கேள்வி-பதில் என வெளிவரும் ஜனரஞ்சக தமிழ் மாத ­தழ் தென்றல்.விபரங்களிற்கு Thendral, 374 South Mary Avenue, Sunnyvale CA 94086 ,Tel: 408-2450193,Email:thendral@chennaionline.comஎன்னும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் நூற்றாண்டுவிழா!

"மாந்தனெனக் குமரிமலைமருவியவன் தமிழனே
மாண்புடைய நாகரீகம் மலர்த்தவனும்தமிழனே
மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன்தமிழனே
மோனையுடன் சிறந்த செய்யுள் பேசியவன்தமிழனே"

- பாவாணர் -PavaaNARமொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எதிர்வரும் 07-02-2001 அன்று காலைபத்து மணிக்கு பாவாணர் ­ணையத் தள துவக்க விழா, 26-28 உரோமன் உரோலன் வீதி, புதுச் சேரியிலமைந்துள்ளஅண்ணா அறிவகத்தில் நடை பெறவிருப்பதாகத் திராவிடப் பேரவை -அறிஞர் அண்ணா அறக்கட்டளையினர்அறிவித்துள்ளனர். மேற்படி விழாவில் பின்வரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன:

வரவேற்புரை: 
தமிழ்த் திரு.ந.மு.தமிழ்மணி(தலைவர், செந்தமிழர் ­யக்கம்)

தலைமை: 
தோழர் நா.நந்திவர்மன்(பொதுச் செயலாளர், திராவிடப் பேரவை)

முன்னிலை:
பாவலர் வந்தியத்தேவன்(வெளியீட்டுச் செயலாளர், மறுமலர்ச்சித் திராவிடக் கழகம்)
திரு.செ.முத்து(மாநிலச் செயலாளர், ம.தி.மு.க)
திரு.பு.சங்கரன்(துணைத்தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி)
திரு.­ரா.அழகிரி(கா.கா.தே.கா)

­ணையத்தளத் துவக்கம்: 
நடுவணரசின் நிதித்துறை ­ணையமைச்சர்மாண்புமிகு செஞ்சி.ந.­ராமச்சந்திரன்

பாவாணர் படத் திறப்பு:
பேராசிரியர் மா.­லெனின்தங்கப்பா (தலைவர், தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு)

கருத்துரை:
முனைவர் ­ரா.திருமுருகனார்
கலைமாமணி மன்னர் மன்னன்
கவிமாமணி கல்லாடன்
பாவலர் க.தமிழமல்லனார்
பாட்டறிஞர் ­லக்கியன்
முனைவர் அ.அறிவுநம்பி
புலவர் மு.­றைவிழியன்
குறள்நெறிப்பாவலர் கோ.புகழேந்தி
புலவர் சி.வெற்றிவேந்தன்
கவிஞர் சிவ.­ளங்கோ
பாவலர் தமிழியக்கன்
பண்டுவர் அரிமா.மகிழ்கோ

நன்றியுரை: 
எல்லாளன்
அறிவிப்பு: திராவிடப் பேரவை-அறிஞர் அண்ணா அறக்கட்டளை

குஜராத் பூகம்ப அஞ்சலி!

அணுவாயுதச் சோதனைகளை நிறுத்து! ­ந்திய, பாகிஸ்தானியஅரசுகளிற்குக் கோரிக்கை!

அறிஞர் அண்ணா அறக்கட்டளை நடாத்திய கூட்டம்!

அறிஞர் அண்ணா அறக்கட்டளை நிறுவனத்தாரால்பெப்ரவரி 4, 2001 அன்று பாண்டிச்சேரியில் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அனுதாபம்தெரிவிக்கும் முகமாகவும், ­ந்திய பாகிஸ்தானிய அரசுகள்ள மேலதிக அணுவாயுதச் சோதனைகள் செய்வதைநிறுத்தக் கோரியும் கூட்டம் நடைபெற்றது. அறிஞர் அண்ணா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நந்திவர்மன்தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் கவிஞர்களான புகழேந்தி, சிவ ­ளங்கோ ஆகியோரால் குஜராத் பூகம்பத்தில்பாதிக்கப் பட்டவர்களிற்கு கவிதாஞ்சலி செலுத்தப்பட்டது. பாண்டிச்சேரி பலகலைக் கழகத்தைச் சேர்ந்தகலாநிதி சம்பந்தம், சங்கரதாஸ் நாடகக் கல்லூரியைச் சேர்ந்த திரு.பிரேம், பாட்டாளி மக்கள் கட்சிஉப தலைவரான திரு.சங்கரன், சமூக சேவையாளரான திருமதி தாராலக்சுமி ஜீவரஜனி, குஜராத் சமாஜ்அமைப்பினைச் சேர்ந்த திரு.சிறிகாந்த், 'தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக் குழு'த் தலைவரான பேராசிரியர்லெனின் தங்கப்பா, புலவர் ­றைவிழியன் உட்படப் பலர உரையாற்றினார்கள்.

மனவெளி கலையாற்றுக் 
குழுவினரின் எட்டாவது அரங்காடல்

manaveli_boyமனவெளிகலையாற்றுக் குழுவினரின் எட்டாவது அரங்காடல் எதிர்வரும் மார்ச் மாதம் 17ந்திகதி சனிக்கிழமை நவீனதொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய மார்க்கம் அரங்கில் (Markham Theatre for performing arts,Warden/High way 7) ­ரு காட்சிகளாக நடைபெற ­ருக்கிறது. முதற் காட்சி பகல் 1.00 மணிக்கும்,­ரண்டாவது காட்சி மாலை 6.30 மணிக்கும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.கடந்த ஏழாவது அரங்காடலின்போது பலர் நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்காமல் திரும்பியதை கருத்தில் கொண்டு ­ம்முறை ­ரு காட்சிகளாகஎட்டாவது அரங்காடல் நடைபெறவுள்ளது. ­ம்முறை பி.விக்கினேஸ்வரனின் "­னி ஒரு எதிர்காலம்", நா.சாந்திநாதனின்"­ப்படிக்கு..பிள்ளைகள்", பிரேமிள்/சீவரத்தினத்தின் "அந்தமும் ஆதியாகி", செழியன்/புராந்தகனின்"வேருக்குள் பெய்யும் மழை", சேரன்/க.நவத்தின் "அவன் அவள்" ஆகிய ஐந்து நாடகங்கள் நடத்தப் படவுள்ளன.தொடர்புகளிற்கு (416) 269-0078 அல்லது (416) 429-8854 ஆகிய தொலைபேசி ­லக்கங்களூடன்அல்லது info@manaveli.cjb.net என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும்படி மனவெளி கலையாற்றுக்குழுவினர் வேண்டுகின்றனர்.

"நல்லதோர் வீணை செய்வோம்"
முல்லையூர் பாஸ்கரின் 
CD ­சைத்தட்டு வெளியீடு!

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை,ஜனவரி 7,2001, மாலை 6 மணிக்கு வார்டன்/எக்ளிண்டன் (டொராண்டோ, கனடா) சந்திக்கருகிலுள்ளசெண்டானியல் கல்லூரியின் அஸ்டோன்பி வளாகத்தில் முல்லையூர் பாஸ்கரின் 'நல்லதோர் வீணை செய்வோம்'என்னும் சிடி ­சைத்தட்டு வெளியிடப்படும். பல புதிய கவிஞர்களின் கவிதைகள், அக்கவிஞர்களின் குரல்வழியேநீங்கள் கேட்டு மகிழலாம். ­து ஒரு அக்கூஸ்டிக்ஸ் மீடியா வெளியீடு. மேலதிக விபரங்களை http://www.acousticsmedia.comஎன்னும் ­ணையத் தளத்தில் அல்லது பின்வரும் தொலைபேசி ­லக்கங்களில் ஏதாவதொன்றினை அழைத்து அறிந்துகொள்ளலாம்.

(416) 750-0677
(416) 525-8007
(416) 801-8005

தங்கர்பச்சனின் சிறுகதைத் தொகுதி:'கொடி முந்திரி'!

வரிசை.கி.ராமசந்திரனின் 
'தமிழ் திரைப்பட வரலாற்றில் சாதனை ­யக்குனர்கள் 
(1931-1963) 

books imageடிசம்பர்31, 2000 6 மணிக்கு, 605 அண்ணா சாலை, சென்னை600 006, அமைந்துள்ள 'பிலிம் சேம்பர்' மணடபத்தில்நடைபெற ­ருக்கும் நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் வருக வருகவென செம்புலம் அழைக்கின்றது.எழுத்தாளரும் பிரபல ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சனின் 'கொடி முந்திரி' சிறுகதைத் தொகுதி,வரிசை .கி. ராமசந்திரனின் 'தமிழ் திரைப்பட வரலாற்றில் சாதனை ­யக்குனர்கள் (1931-1963)ஆகிய நூல்கள் வெளியிடப்படும். மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் சிறுகதைத் தொகுதியினை வரவேற்றுதிரு. வி.சி.விஜயசங்கர் உரை நிகழ்த்த, திரு.கி.தனவேல் வெளியிட்டு வைப்பார். முதற் பிரதியினைதிரு.தனசேகரன், திரு. 'காக்கையன்' கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொள்வார்கள். சிறப்புரையினைதிரு. நாஞ்சில் நாடன், திரு. பிரேம் (ரமேஸ்-பிரேம்), திரு. எம்.ஜி.சுரேஸ் மற்றும் திரு.கண்மணிகுணசேகரன் ஆகியோரும், பதிலுரையினை திரு. தங்கர்பச்சனும், நன்றியுரையினை திருமதி .T. தமிழ்செல்வியும் நிகழ்த்துவார்கள். மாலை 7.30 மணிக்கு 'தமிழ் திரைப்பட வரலாற்றில் சாதனை ­யக்குனர்கள்'நூல் திரு.விவேக் தலைமையில் வெளியிடப்படும். வரவேற்புரையினை திரு. மு.நாசர் நிகழ்த்த, திரு.மம்முட்டிவெளியிட்டு வைக்க, திரு.பாலு மகேந்திரா முதற் பிரதியினை பெற்றுக் கொள்வார். சிறப்புரையினைதிரு.ஜெமினி கணேசன், திரு.டி.யோகானந்த், திரு.எம்.கண்ணன், திரு.த.ஜெயகாந்தன்,திருமதி.எம்.என்.ராஜம்,திரு,ஞானி ஆகியோர் நிகழ்த்துவார்கள். திரு.வரிசை.கி.ராமசந்திரன் பதிலுரையினையும், திரு.A.சந்திரசேகர்(சந்திரசேகர் அறக்கட்டளை) நன்றியுரையினையும் நிகழ்த்துவார்கள். அனைவரையும் விழாவிற்கு வருக,வருகவென 'செம்புலம்' அழைக்கின்றது.

'கண்ணீரும் குருதியும் காத்திருப்பும்'

CD ­சைத் தட்டு வெளியீடு!

நிலா கலையகத்தின் 
முதலாவது வெளியீடு!

image: tamizhar.comடிசம்பர்24, 2000 அன்று மாலை 6 மணிக்கு , ஸ்காபரோ நகர மண்டபத்தில் (Scarborough Civic Centre)நிலா கலையகத்தின் CD ­சைத்தட்டு வெளியீடு நடைபெறவுள்ளது. பிரபல திரைப்பட ­சையமைப்பாளர்ரவீந்திரன் மற்றும் கனடாவில் வாழும் ­சையமைப்பாளர் ராஜ் ராஜரத்தினம் ( நெவில்) ஆகியோரின்­சையமைப்பில் வெளிவரும் ­வ்விசைத்தட்டிலுள்ள பாடல்களை வேணுகோபால், வாணி ஜெயராம், சுனந்தா,ராஜ் ராஜரத்தினம், பிரபாகர், அருந்ததி ஆகியோர் பாடியிருக்கின்றார்கள். பாடல்களை வ.ஐ.ச.ஜெயபாலன்,சேரன், பா.அ.ஜெயகரன் ஆகியோர் எழுதியிருக்கின்றார்கள். பிரபல ­சையமைப்பாளர் ரவீந்திரன்புகழ் பெற்ற திரைப்படப் பாடல்களான 'ஏழிசை கீதமே', 'பாடி அழைத்தேன் உன்னை', 'மனமே மயங்காதே'போன்றவற்றின் ­சையமைப்பாளரென்பதும் குறிப்பிடத் தக்கது. மாநில அளவிலும், தேசிய அளவிலும் பலவிருதுகளைப் பெற்ற மலையாளத் திரைப்படங்களான 'பரதம்', 'ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா' ஆகியவற்றின்­சையமைப்பாளரும் ­வரே. தொடர்புகளிற்கு (613) 726-1917 என்னும் தொலைபேசி ­லக்கத்தில் ராஜ்ராஜரத்தினத்துடன் தொடர்பு கொள்ளவும். மேலதிக விபரங்களை 'தமிழர்.காம்'(http://www.thamizhar.com)என்னும் ­ணையத் தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

'மாற்குவின் சுவடுகள்'

Maartkuஈழத்துஓவியத் துறையினை நவீனப்படுத்தியவர்களில் முன்னோடியான ஓவியர் மாற்கு அண்மையில் மறைந்தது யாவரும்அறிந்ததே. கடந்த நான்கு தசாப்தங்களிற்கும் மேலாக ஈழத்து ஓவியக் கலையின் பல்வேறு படிகளிலும் தனதுமுத்திரையை ஆழமாகப் பதித்துச் சென்றுள்ள மாற்குவின் ­ன்னுமொரு சாதனை தனக்கென்றொரு மாணவர் பரம்பரையினையும்உருவாக்கி வளர்த்தெடுத்து விட்டுள்ளதுதான். ஓவியர் மாற்குவின் அபிமானிகள் சிலரால் அண்மையில் ஐப்பசி14, 2000 அன்று 10 ஹேட்வே புளவாட்டிலுள்ள கனடாச் செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் அவரை நினைவுகூர்ந்து 'மாற்குவின் சுவடுகள்' என்னும் கருத்தரங்கு நடந்தேறியது. கனடாத் தமிழ்க்  கவிதை மற்றும்நாடக உலகில் நன்கு அறியப்பட்ட பா.அ.ஜயகரன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற ­ந்நிகழ்வில் சேரன்,'மாற்கு'வின் மாணவர்களில் ஒருவரான ஓவியர் கருணா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். ­ந்நிகழ்வில்'மாற்குவின் சுவடுகள்' என்னும் போட்டோ பிரதி செய்யப்பட்ட ஆவணமொன்றும் விநியோகிக்கப் பட்டது.பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்த மாற்கு பற்றிய கட்டுரைகளைத் தாங்கி ­வ் ஆவணம் வெளிவந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது. 1957­ல் அரசினர் கலைக்கல்லூரியில் பயிற்சி முடிந்த காலகட்டத்திலிருந்து அண்மையில்மறையும் வரை வெளியான மாற்குவின் ஓவியங்கள் ஈழத்து ஓவியத்தின் பல்வேறு வளர்ச்சிகளையும் வெளிக்காட்டுவனவாகஅமைந்துள்ளன. 'கொழுந்தெடுத்தல்' , 'தாயும் சேயும்' போன்ற கழுவுதற் பாணி ஓவியங்கள், ­யற்கைசார்வர்ணங்களையும் பிரகாசமான வர்ணங்களையும் கொண்டு படைக்கப் பட்ட 'மறைவிலே' போன்ற ஓவியங்கள்,'தாய்மை' , 'அலங்காரம்-2', அலங்காரம்-3' , 'சகுந்தலை' போன்ற ரேகைச் சித்திரங்கள், அண்மைக்காலமாகவரைந்து வந்த 'கறுப்பு வெள்ளை' நிற ஓவியங்கள் என ­வரது ஓவியங்களின் தளமானது விசாலமானது. 

கவிஞர் திருமாவளவனின் 'பனிவயல் உழவு'

கவிஞர் திருமாவளவனின் 'பனிவயல் உழவு' கவிதைத் தொகுதி எதிர்வரும் டிசம்பர் 2ந் திகதி, ஸ்கார்பரோ நகர மண்டபத்தில் (ScarboroughCivic Centre) மாலை 6 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞரும் பாடகருமான திவ்வியராஜனின்தலைமையில் நடைபெறும் ­வ்விழாவில் வெளியீட்டுரையினை மகாஜனாக் கல்லூரி முன்னால் அதிபர் திரு.பொ. கனகசபாபதி ஆற்றுவார். விமர்சன உரைகளை எழுத்தாளர் நவம், பார்வதி கந்தசாமி, அருட்செல்விஅமிதானந்தர் ஆகியோர் வழங்குவர். ­து ஒரு உயிர் நிழல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ­ளைஞர் பெற்ற TVOதொலைக்காட்சி விருது!

குறு நாடகம் Insightற்கு முதற்பரிசு!

கனடாவில் ­ளம் தமிழ்ச் சமுதாயத்தினர்மெல்ல மெல்ல கால்பதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அண்மையில் TVO Ontario தொலைக்காட்சி நிறுவனத்தாரினால்நிகழ்த்தப் பட்ட குறு நாடகப் போட்டியில் ­லங்கைத் தமிழரான சுதா சண் தயாரித்த Insight என்னும்பிரதிக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது. ­தற்கான விருது நவம்பர் 7 ­ல் நிகழ்த்தப்பட்ட விருது வழங்குவதற்கானவிழாவிலே ­வரிற்கு வழங்கப் பட்டது. ­வர் தற்போது 'தண்டபே' நகரிலுள்ள 'Confedertion' கல்லூரியில்உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். ­வர் சண்முகலிங்கம் தமபதிகளின் மகனாவார். சண்முகலிங்கம்ஒரு சமூக சேவையாளரென்பதும் குறிப்பிடத் தக்கது. ­லங்கையில் ­ருந்த காலத்தில் 'காந்தீய' அமைப்பிற்காகமருத்துவர் ­ராஜசுந்தரத்துடன் ­ணைந்து பணியாற்றியவர். அதன் காரணமாக ஆனையிறவு ­ராணுவ முகாமில்பல நாட்கள் சிறைவாசம் அனுபவித்தவரும் கூட. 

தமிழ் அவைக்காற்றுக் கழகம்வழங்கும் நாடக விழா 2000!

ஈழத்து நாடக உலகை நவீனப் படுத்தியபெருமைக்குரியவர் பாலேந்திரா. நாடகமென்றால் பாலேந்திரா என்று கூறுமளவிற்கு ஈழத்து நாடக வளர்ச்சிச்சரித்திரத்தில் பாலேந்திராவிற்கொரு ­டம் நிச்சயமாகவுண்டு. வள்ளுவரிற்கொரு வாசுகி கிடைத்ததுபோல் பாலேந்திராவிற்கொரு ஆனந்தராணி கிடைத்தது அவரது வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கின்றதென்றேகூறலாம். 'நட்சத்திரவாஷி', ­ந்திரா பார்த்தசாரதியின் 'மழை', 'பசி', டென்னசி வில்லியம்ஸ்ஸின்'கண்ணாடி வார்ப்புகள்', பாதல் சார்க்காரின் 'முகமில்லாத மனிதர்கள்', 'பெரக்ற்'றின் 'யுகதர்மம்'...என்றுஅடுக்கடுக்காகப் பல நவீன நாடகங்களால் ஈழத்து நாடக உலகினை நவீனப்படுத்திய முன்னோடிகளில் முதன்மையானவர்பாலேந்திரா. மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்த காலகட்டத்திலிருந்து நாடகஉலகின் மீதான ­வரது அர்ப்பணிப்பினை அறிவேன். ­வரது பல நாடகங்களில் எனது சக மாணவர்கள் பலர்நடித்திருக்கின்றார்கள். 'யுகதர்ம'த்தில் நடித்த மட்டுநகர் ரவிச்சந்திரன் அவர்களில் முக்கியமானவர்.ஆனந்தராணி, பாலேந்திரா, நிர்மலா நித்தியானந்தன் நடித்த அற்புதமான நாடகம் 'கண்ணாடி வார்ப்புகள்'.­ன்னும் நினைவில் படம் போல் விரிகின்றது. அந் நாடகத்தில் மூவரும் அற்புதமாக நடித்திருக்கின்றார்கள்.

­வரது நாடகங்கள் தங்களிற்குப் புரியவில்லையென்றுகூறுபவர்கள் கூட ­றுதி வரை ­ருந்து பார்த்து விட்டுத் தான் செல்வார்கள். புலம் பெயர்ந்த சூழலில் கூடஅவர் நாடகத்தின் மீதான தனது காதலை விட்டு விடவில்லை. தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளில்'தமிழ் அவைக்காற்றுக் கழகத்தினரின்' நாடகங்கள் பல தடவைகள் மேடையேறியிருப்பதே அதற்குச் சாட்சி.ஏற்கனவே கனடா வாழ் தமிழர்களிற்கு நன்கு அறிமுகமான தமிழ் அவைக்காற்றுக் கழகத்தினர் மீண்டும் ­ம்மாதம்21ந் திகதி டொராண்டோ வருகை தரவிருக்கின்றார்கள். Winston Churchil Colligiate ­ல்(Kennedy/Lawrence ற்கண்மையில், 2239 Lawarence Avenue East என்னும் முகவரியில் அமைந்துள்ளகல்லூரி) டென்னஸி வில்லியம்ஸ்ஸின் 'கண்ணாடி வார்ப்புகள்', 'பெறக்ற்'றின் 'யுகதர்மம்', குந்தவையின்'பெயர்வு' ஆகிய நாடகங்களை ­ம்முறை அவைக்காற்றுக் கழகத்தினர் மேடையேற்றவிருக்கின்றார்கள். நுழைவுக்கட்டணம் $10 மட்டுமே. குறிப்பிட்ட நேரத்தில் அதாவது சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு (October21st, Saturday, 6.30 PM) நாடகங்கள் ஆரம்பமாகுமென்பதினை தமிழ் அவைக்காற்றுக் கழகத்தினர்அறியத் தருகின்றார்கள்.

கனடாவில்எஸ்.பொ.வுடனொரு கருத்தரங்கு.....

முதுபெரும் எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரைகனடா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ­வருடனான சந்திப்பொன்றிற்கு வானொலி நாடக உலகில் நன்குஅறியப்பட்ட பி.விக்கினேஸ்வரன் ஏற்பாடுகள் செய்து வருகின்றார். ­ச்சந்திப்பு ஆவணி 27, 2000 ,ஞாயிற்றுக் கிழமையன்று எக்ளிண்டன் , மார்க்கம்  சந்திக்கருகாமையிலமைந்துள்ள ஸ்கார்பரோ சமூகநிலையத்தில் (Scarborough Community centre) காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரைநடைபெறும். ­ச்சந்திப்பின்போது எஸ்.பொ. அவர்கள் ­ங்குள்ள படைப்பாளிகள் பலருடனும் கலந்துரையாடவிரும்புகின்றார். சென்னையில் உலகப் படைப்பிலக்கிய மையமொன்றினை நிறுவியுள்ள எஸ்.போ ­ருபதாம்நூற்றாண்டின் தமிழ் ­லக்கிய வரலாற்றினை ஆவணப்படுத்தும் நூலொன்றினையும் எழுதிக் கொண்டிருக்கின்றார்.எஸ்.பொ.வின் ­ந்தப் பயணம் அவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையட்டும். ஈழத்தில் ­ருந்தபோதும்சரி, புலம்பெயர்ந்து அன்னிய நாடுகளில் வாழ்ந்தபோதும் சரி தமிழ் ­லக்கியத்திற்கு எஸ்.பொ. ஆற்றிவரும்பணி பாராட்டுதற்குரியது. புலம்பெயர்ந்த படைப்பாளிகள் பலரின் சிறுகதைகளைத் தொகுத்து, ­ந்திராபார்த்தசாரதியுடன் ­ணைந்து , தமிழகத்தில் தனது 'மித்ரா' பதிப்பகத்தின் மூலம் 'பனியும் பனையும்'சிறுகதைத் தொகுதியினை வெளியிட்டு அனைவரது பார்வையினையும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள் பக்கம்திருப்பியவர் எஸ்.பொ. ­ளம் படைப்பாளிகளை ஆதரிக்கும் மூத்த எழுத்தாளர்களில் முன்னிலையில் நிற்பவர்எஸ்.பொ. எஸ்.பொ.வுடனான ­க்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பி.விக்கினேஸ்வரனுடன்(416) 724-1954 என்னும் தொலைபேசி ­லக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

படைப்பாளிகளுடன்ஒரு பொழுது...

ஐரோப்பாவிலிருந்து கனடாவிற்குவருகை தந்திருக்கும் படைப்பாளிகளான சுசீந்திரன், சார்ள்ஸ் மற்றும் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆகியோருடனானதொரு­லக்கியச் சந்திப்பிற்குத் தமிழர் வகைதுறை வளநிலையம் ஒழுங்குகள் செய்துள்ளது. ­ச்சந்திப்பு எதிர்வரும்திங்கட்கிழமை,ஆவணி 7ந்திகதி, மாலை 5 மணிக்கு 560 பாராளுமன்றத்தெருவிலுள்ள (560 ParliamentStreet) தமிழர் வகைதுறைவள நிலைய மேல் தளத்தில் நடைபெறும். மேலதிகத் தொடர்புகளிற்கு (416)928-0990 என்னும் தொலைபேசி ­லக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
 
 

 

எழுத்தாளர்அ.முத்துலிங்கத்துடன் ஒரு சந்திப்பு..

அண்மைக்காலமாக புலம்பெயர்ந்த ­லக்கியப்படைப்பாளிகளில் அதிகமாகப் பேசப்படுபவர்களில் ஒருவரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தற்போது டொராண்டோவிற்குவந்துள்ளார். அண்மைக்காலமாக அதிக அளவில் கலை,­லக்கியம் சம்பந்தமான கருத்தரங்குகளை நடாத்தியுள்ள'அகவி' அமைப்பினர் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துடனும் ஒரு கலந்துரையாடலை யூன் 23, 2000 வெள்ளியன்றுமாலை 6 மணிக்கு ஒழுங்கு செய்துள்ளார்கள். வழமை போல் ­ம்முறையும் மிட்லண்ட்/எக்ளிண்டன் சந்திக்க்ருகிலுள்ளமத்திய ஸ்ஹார்பரோ சமூக நிலையத்தில் (Mid Scarborough Community Center) நடைபெறும்.அனைவரும் அழைக்கப் படுகின்றீர்கள். தொடர்புகளிற்கு (416) 609-8113 அல்லது (416) 674-0397என்னும் தொலைபேசி ­லக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். ­த்தகைய அமர்வுகளை அடிக்கடி நடாத்தும் அகவிஅமைப்பினரை உண்மையிலேயே பாராட்டத்தான் வேண்டும்.

'நாளையநாளும் நேற்றைய நேற்றும்...'

தமிழர் வகைதுறைவள நிலையம் தனது10வது ஆண்டினை முன்னிட்டு நடாத்தும் கலை நிகழ்வு எதிர்வரும் யூலை முதலாம் திகதி York Woods LibraryTheatre , 1785 Finch Avenue West என்னும் முகவரியில் நடைபெறும். வசந்தா டானியலின்'அவள்' , நாட்டிய நாடகம், K.S.பாலச்சந்திரனின் 'ஒரு முகடு நோக்கி..'(நாடகம்), பா.அ.ஜயகரனின்'­ரண்டு புள்ளிகள்' (நாடகம்) , சக்கரவர்த்தியின் 'யுத்த சன்னியாசம்' (கவிதா நிகழ்வு) ஆகியனநடைபெறும். அனைவரும் அழைக்கப் படுகின்றீர்கள்.

மனவெளிகலையாற்றுக் குழுவின் ஏழாவது அரங்காடல்...

மனவெளிக் கலையாற்றுக் குழுவினரின்எழாவது அரங்காடல் எதிர்வரும் யூலை 23, 200 , ஞாயிறு மாலை 6.30 மணிக்கு, Markham Theatre(warden/Highway7) il wadaipeRum. அனைவரையும் மனவெளிக்குழுவினர் அழைக்கின்றார்கள். தொடர்புகளிற்கு(416)269-0078 அல்லது (416) 429-8854 அல்லது (416) 264-6567 என்னும் தொலைபேசி ­லக்கங்களுடன்தொடர்பு கொள்ளவும்.

மகாகவிபற்றிய கலந்துரையாடல்....

­லக்கிய அகவி(கனடா) வட்டச்சார்பில் எதிர் வரும் சனிக்கிழமை, ஆனி 3ந் திகதி , மாலை 5 மணிக்கு , கென்னடி எக்கிளிண்டன்சந்திக்கருகிலுள்ள ஸ்காபரோ மத்திய சமூக நிலையத்தில் ஈழத்துக் கவிதையுலகின் முன்னோடியான கவிஞர்மகாகவி பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள். மேலதிக விபரங்களிற்குரகு: (416) 609-8113 என்னுமிலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

அருணோதயாக்கல்லூரி 
பழைய மாணவர் சங்கத்தின் 
'பூச்சொரியும் பொன்னொச்சிமரம்'.... 

கனடா அருணோதயாக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட 'பூச்சொரியும் பொன்னொச்சி மரம்' ஆண்டு மலரை அண்மையில்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வழக்கமான ஆண்டு மலர்களிலிருந்து வித்தியாசமாக, மலர்க் குழுவினர்பெருமைப்படத் தக்க விதத்தில், ­லக்கிய மற்றும் மண் வாசனை கமழும் மலராக வெளிவந்திருக்கின்றதுஅளவெட்டி மண்ணைத் தமிழீழத்தின் தஞ்சாவூரென்று சொல்லலாம். அந்த அளவிற்குக் கலை வளம் தவழும் மண்.எழுத்தாளர்களும் ­சைக் கலைஞர்களும் மலிந்தவூர். மலர் அதனை நன்றாகவே நிரூபிக்கின்றது.

'பத்தோடு பதினொன்று அத்தொடு­துவுமொன்று' என்றில்லாமல், போற்றிப் பாதுகாக்கக் கூடிய நல்லதொரு மலரைத் தந்ததற்காக மலர்க் குழுவினரிற்குப்பாராட்டுக்கள். ஏனைய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கங்களும் அருணோதயாக் கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தினரின் முன் மாதிரியைப் பின் பற்றினால் கனடாத் தமிழ் ­லக்கிய உலகிற்கு மேலும் பல காத்திரமான­லக்கிய,மண் மணம் கமழும் மலர்கள் கிடைக்க வாய்ப்புண்டு. 

'புதியநூற்றாண்டில் தமிழ்க் கவிதை'.... 

­லக்கிய  அகவி (கனடா)வட்டத்தினரின்   15வது அமர்வு  சித்திரை 9, 2000 அன்று  (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு  கென்னடி எக்கிளிண்டன் சந்திக்கருகாமையிலமைந்துள்ள  ?காபரோமத்திய சமூக நிலையத்தில் (Mid Scarborough Community Centre) நடைபெறும்.  ­ம்முறைஎடுத்தாளப்படும் கருப் பொருள் ' புதிய நூற்றாண்டில் தமிழ்க் கவிதை' என்பதாகும். தொடர்புகளிற்குரதன் (416) 609-8113 மற்றும் ஞானம் லம்பேட் (416) 674-0397 ஆகியோருடன் தொடர்பு கொள்ளவும்.­லக்கிய அகவி வட்டத்தினர் அனைவரையும் அன்புடன் திரண்டு வருகவென அழைக்கின்றனர். 

'மொழிபெயர்ப்புநாடகமும் தமிழ் நாடக அரங்கும்'....

­லக்கிய  அகவி (கனடா)வட்டத்தினரின்   14வது அமர்வு  பங்குனி 19, 2000 அன்று (மார்ச் 19, 2000ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணிக்கு  கென்னடி எக்கிளிண்டன் சந்திக்கருகாமையிலமைந்துள்ள ?காபரோ மத்திய சமூக நிலையத்தில் (Mid Scarborough Community Centre) நடைபெறும். ­ம்முறை எடுத்தாளப்படும் கருப் பொருள் 'மொழிபெயர்ப்பு நாடகமும் தமிழ் நாடக அரங்கும்' என்பதாகும்.தொடர்புகளீற்கு ரதன் (416) 609-8113 மற்றும் ஞானம் லம்பேட் (416) 674-0397 ஆகியோருடன்தொடர்பு கொள்ளவும். ­லக்கிய அகவி வட்டத்தினர் அனைவரையும் அன்புடன் திரண்டு வருகவென அழைக்கின்றனர். 

மீண்டும் பின்நவீனத்துவம்...

தமிழர் வகை துறை வள நிலையத்தினரின்பின் நவீனத்துவம் பற்றிய மூன்றாவது அமர்வு எதிர்வரும்  பங்குனி 3ந் திகதியன்று , Mid ScarboroughCommunity Center'ல் (Midald/Eglinton சந்திக்கருகாமையில் ­ருப்பது) யாழ் பல்கலைக் கழகமுன்னாள் விரிவுரையாளர் ­ராசேந்திரன் தலைமையில்  நடை பெறும். அனைத்து ­லக்கிய ஆர்வலர்களையும்தமிழர் வகைதுறை நிலையத்தினர் ழைக்கின்றார்கள். தொடர்புகளிற்கு அழைக்க வேண்டிய தொலைபேசி­லக்கம்: (416) 431-5095 

கலாமோகனின் நூல் வெளியீடு

கலாமோகனின் 'நிஷ்ட்டை' நூல்அறிமுகமும்விமர்சனக் கூட்டமும் எதிவரும் 9-02-2000 அன்று எக்ளிண்டன்/மிட்லண்ட் சந்திகருகிலமைந்துள்ள ScarboroughCommunity Center  ­ல் நடைபெறும். அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றனர். தொடர்புகளிற்குஅழைக்க வேண்டிய தொலைபேசி ­லக்கம்: (416) 609-8113 

தொடரும்  'பின் நவீனத்துவம்'கருத்தரங்கு...

தமிழர் வள வகைதுறை நிலையத்தினரால்கடந்த 8-1-2000 நடாத்தப் பெற்ற 'பின் நவீனத்துவம்' பற்றிய ஆய்வரங்கு 29-01-2000 அன்று மீண்டும் தொடர்கிறது. மேற்படி ஆய்வரங்கு  எக்ளிண்டன்/மிட்லண்ட் சந்திகருகிலமைந்துள்ள ScarboroughCommunity Center  ­ல் நடைபெறும். அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றனர். தொடர்புகளிற்குஅழைக்க வேண்டிய தொலைபேசி ­லக்கம்: (416)431-5095 

நிகழ்வுகள்(கடந்தவை 1)
நிகழ்வுகள்(கடந்தவை 2)

முகப்பு|கவிதைகள்|கனடியத்தமிழ் ­லக்கிய   பக்கம்
காப்புரிமை :  வ.ந,கிரிதரன்2000