பதிவுகள் முகப்பு

உணர்வால், புகழால் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன்: ஏப்ரில் 24 - பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம்

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அன்புள்ள  நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். ஜெயகாந்தன் 87 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு  கடந்த 24 ஆம் திகதி நடந்த இணையவழி காணொளி அரங்கு பற்றி சென்னை இந்து தமிழ் இதழில் வெளியான செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.  நன்றி.
அன்புடன், -  முருகபூபதி -


இந்து தமிழ்: உணர்வால், புகழால் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன்: ஏப்ரில் 24 - பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம்

சென்னை,
உணர்வாலும், புகழாலும் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன் என்று, அவரது பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம் சூட்டினர். எழுத்தாளர் ஜெயகாந்தனின் 87-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், சர்வதேச அளவிலான இணையவழிக் கருத்தரங்கை இந்திய-ரஷ்ய வர்த்தகசபையும், ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து நடத்தின. ‘இந்து தமிழ்’ நாளிதழும் எழுத்தாளுமையைக் கொண்டாடும் இந்நிகழ்வில் தன்னை இணைத்துக்கொண்டது. இதில், தமிழகம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜெயகாந்தன் வாசகர்கள் பங்கேற்றனர்.

ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்குநர் கெனாடி ரகலேவ், திராவிடர் கழகப் பொதுச் செயலர் கி.வீரமணி, பத்மபூஷன் சிவதாணுப் பிள்ளை, திரைக் கலைஞர் நாசர், ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ், கலை இயக்குநர் ஜெயக்குமார், எஸ்பிஐ காப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த பி.பாலசேகர் ஆகியோருடன், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுத்தாளர் எல்.முருகபூபதி, கனடாவிலிருந்து எழுத்தாளர் மூர்த்தி, சிங்கப்பூரிலிருந்து தொலைக்காட்சி தயாரிப்பாளர் முகமது அலி, அமெரிக்காவிலிருந்து பொறியாளர் சிவகேசவன், பிரிட்டனிலிருந்து நாடகக் கலைஞர் பால சுகுமார், இலங்கையிலிருந்து எழுத்தாளர் எஸ்.மதுரகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் படிக்க ...

தொடர்: பயிற்சி முகாம்! அத்தியாயம் ஐந்து: பாம்பு, செண்பகச் சமையல்! - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
25 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார்.  பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-     


அடுத்த நாளும் இதே பயிற்சிகள் தொடர்ந்தன. விரும்பின தோழர்க‌ள் இன்னொரு முறையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள். ஆறுதலாகக் குளித்து கொட்டிலினுள் புகுந்தார்கள். அரசியல் அமைப்பில் உறுப்பினர், ஆதரவாளர் என்ற பிரிவுகள் இருக்கின்றன. ஆதரவாளர் அதிக தளர்வுள்ளவர். விலகப் போகிறேன்; வெளிநாடு போகப் போகிறேன், கல்யாணம் முடிக்கப் போகிறேன்...எனக் கதைத்துப் பேசி இலகுவாக வெளியேறி விட முடியும். உறுப்பினர்கள் வெளியேற முடியா விட்டாலும் தீவிரமான விதி முறைகள் அமுலாக்கல்கள் இல்லை. ஆனால் பின்தளப்பயிற்சி பெற்றவர்கள் தளத்தில் பயிற்சி பெற்றவர்களிற்கு இறுக்கம் காணப்படுகின்றது. இந்த இறுக்கத்தால் அரசியலுக்கும், இராணுவத்திற்குமிடையில் மட்டத்தில் ஒருவகை ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இராணுவத்திற்கு உள்ளேயே தண்டனை வழங்கும் முறையும் இருக்கவே செய்கின்றது. ஒரு முறை, "காதல் கடிதம் கொடுத்தார்" என்ற முறைப்பாடு ஒரு தோழருக்கு எதிராகக் கொண்டு வரப்பட மூன்று மாசங்கள் பணியில் ஈடுபட முடியாது என்ற விலத்தலுடன் மொட்டையும் அடிக்கப்பட்டார். இப்படி பல நிகழ்வுகள் ஏ.ஜி.ஏ (A.G.A) பிரிவுகளிலே நிகழ்ந்துள்ளன. காம்பை விட்டு ஓடியதிற்காக கொட்டிலில் முழங்காலிருக்கும் தண்டனையில் இருத்தி விட்டு உடற்பயிற்சிக்குப் போய் விட்டார்கள். இரண்டு,மூன்று மணி நேரம் யாருமே கொட்டிலினுக்குள்ளே வரவில்லை.சமையல் குழு கவனிக்கவும் இல்லை. தவிர கவனிக்கலாமா என்பதும் தெரியாது.

பாரி வந்த போதே பார்த்தான். சிறுவர்கள் கள்ளம் செய்யப் பயந்து அப்படியே இருந்ததினால் ஒருத்தனுக்கு சிராய்ப்பு போல காயமும், மற்றவனுக்கு தோல் உரிந்து இரத்தம் வடிவது போன்ற நிலையிலும் இருந்தன. உடனேயே இருவரையும் எழுப்பி தண்ணீரால் கழுவிப் பார்த்தான். வலியால் அணுங்கவே பாவமாகப் போய் விட்டது. சமையல் குழுவிடம் தேனீர் போட்டுக் கொடுக்கச் சொல்லிப் போட்டு உடற்பயிற்சித் தளத்திற்கு வந்து சிவா ஆசிரியரிடம் தெரிவித்தான். " திரும்ப பிடித்த போது நிறைய பயந்து போய் விட்டார்கள். வாய் இல்லாப் பூச்சிகள். கட்டுப்பாடுகள் இருக்கட்டும் இப்படி மணிக்கணக்கில் தண்டனை கொடுக்க வேண்டுமா? " எனக் கேட்டான். " மறந்தே போய் விட்டேன் " என சிவா தவறை ஒப்புக் கொண்டார். விஜயனையும், செழியனையும் உடனேயே இருவரையும்  சைக்கிளிலே ஏற்றிக் கொண்டு இராசைய்யா பரியாரியாரிடம் அனுப்பினான். கட்டுப் போட்டுக் கொண்ட அந்த தோழர்களிடம் எல்லாருக்குமே அன்பு பிறந்து விட்டது. அதுவரையில் விசாரிக்க முடியுமா ? எனத் தெரியாதிருந்த தோழர்கள் முதலில் சாப்பிட விட்டு விட்டு " ஏண்டா ஓடினனீர்கள் ? " எனக் கேட்டார்கள். " அம்மாவைப் பார்க்க " என்று கண்கலங்கக் கூறிய போது எல்லோருமே நெகிழ்வுக்குள்ளாகி விட்டார்கள். முதலில் இவர்களையே பயிற்சிக்கு எடுத்திருக்கக் கூடாது. " டேய் ,இன்னமும் 15 நாள்கள் தானே இருக்கின்றன. பயிற்சி முடிந்த பிறகு தான் போக வேண்டும் " .இனிச் சொல்லி என்ன பிரயோசனம்?. சிவா ஆசிரியர், பிறகு இருவரையும் பயிற்சியில் ஈடுபடுத்தவில்லை. "பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். புரிந்து கொள்வீர்கள். காயம் முதலில் மாறட்டும், ஈடுபடலாம் " என்றார். அவர்களாகவே முயன்றால்... செய்ய விட்டும் பார்த்துக் கொண்டார்.

மேலும் படிக்க ...

அஞ்சலிக்குறிப்பு : நூறாண்டு காலம் வாழ்ந்து விடைபெற்ற திருமதி மகேஸ்வரி சொக்கநாதர் அம்மையார் ! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
25 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இந்த அஞ்சலிக்குறிப்பினை குற்றவுணர்வுடனேயே பதிவுசெய்கின்றேன். கடந்த ஆண்டு ( 2020 ) ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிதான் எமது மதிப்பிற்குரிய திருமதி மகேஸ்வரி சொக்கநாதன் அம்மையாரின் நூறாவது பிறந்த தினத்தை அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், மற்றும் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும் மானசீகமாக வாழ்த்திக்கொண்டாடியதை அறிந்திருந்தேன். எலிஸபெத் மகாராணியாரும் அம்மையாரை வாழ்த்தி சான்றிதழ் வழங்கியிருந்தார். அவுஸ்திரேலியப்பிரதமர், ஆளுநர் தம்பதியர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினரும் வாழ்த்தியிருந்தார். சமூகத்திற்கு பயன்மிக்க பணிகளை மேற்கொண்டவர்கள் பற்றி, முடிந்தவரையில் அவ்வப்போது அவர்கள் வாழும் காலப்பகுதியிலேயே எனது அவதானக்குறிப்புகளை எழுதிவந்திருக்கின்றேன். எனினும், எனது கணினியில் நேர்ந்த வைரஸ் தாக்கத்தினால், அம்மையாரின் படங்கள், தேடிச்சேமித்துவைத்திருந்த சில குறிப்புகள் மறைந்துவிட்டன. பின்னர் எழுதலாம் என்று காலம் கடந்தது. சமகாலத்தின் கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் இடைவெளி பேணும் கலாசாரத்திற்கு கட்டுப்பட்டு, வீடடங்கியிருந்து இணையவெளி அரங்குகளில் நேரத்தையும் காலத்தையும் செலவிட்டதனால், உடனடியாக அம்மையார் பற்றி எழுதமுடியாமல் போனதையிட்டு, இதனைப்படிக்கும் அன்னாரின் குடும்ப உறவுகளிடமும், வாசகர்களிடத்திலும் மன்னிப்பு கேட்டவாறே இந்த அஞ்சலிப்பதிவுக்குள் வருகின்றேன்.

மக்களுக்காக, குறிப்பாக மாணவர் சமுதாயத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றுபவர்கள், வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் மறைந்த பின்னர் பாராட்டுவதும், விருது வழங்கி கௌரவிப்பதும் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் சுயவிருப்ப இயல்புதான். எனினும், மறைந்தவர்களின் ஆன்மா எங்கிருந்தாலும், பார்த்துக்கொண்டிருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையுடனயே மறைந்தவர்கள் பற்றிப்பேசி கொண்டாடி வருகின்றோம். ஒவ்வொருவரது பிறந்த தினம் வரும்போதும், அவர்களது நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள், “ நூறாண்டு காலம் வாழ்க…  நோய் நொடி இல்லாமல் வளர்க, ஊராண்ட மன்னர் புகழ் போலே, உலகாண்ட புலவர் தமிழ் போலே,  நூறாண்டு காலம்  வாழ்க “ என்று மானசீகமாக வாழ்த்துவார்கள். ஆனால், அந்த வாழ்த்துக்கேற்ப நூறாண்டுகள் வாழ்ந்து சாதனை புரிபவர்கள் சொற்பம்தான்.

மேலும் படிக்க ...

கோவிட் 19: தப்பி வாழும் வழிமுறைகள்! - அன்ரனி யூட் -

விவரங்கள்
- அன்ரனி யூட் -
நலந்தானா? நலந்தானா?
25 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

2020 என்பது பெரும்பாலான உலகமக்களுக்கு வித்தியாசமான அனுபவம் என்பதில் சந்தேகமே கிடையாது. 1918 இல் உலகம் தழுவிய இன்புழுவன்சா தாக்கிய போது வாழ்ந்தவர்கள் தவிர மிச்ச அனைவருக்கும் முதலாவது உலகப் பெருந்தொற்று அனுபவம் இது. பல மறைத்தன்மையான விளைவுகளோடு இந்தப் பெருந்தொற்று சில நேர்த்தன்மையான தாக்கங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. சாதாரண தனிப்பட்ட சுகாதாரத்தின் முக்கியத்துவம், விஞ்ஞானம் எப்படி செயல்படுகிறது என்ற ஆர்வத் தேடல் என்பவற்றோடு அடிப்படை ஆரோக்கியம் பேணல் என்பதிலும் மக்களின் கவனம் ஈர்க்கப் பட்டிருக்கிறது. இந்த இறுதி நன்மை கோவிட் தொற்றிலிருந்து மட்டுமல்லாமல் பல தொற்றும் தொற்றா நோய்களில் இருந்தும் காக்கும் வழிகளை எமக்கு கோவிட் பரிசாக விட்டுச் செல்லும் என நினைக்கிறேன்.

அடிப்படை உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான தூண்கள் எவையெனப் பார்த்தால் நான்கு விடயங்கள் பதிலாகக் கிடைக்கின்றன: 1. மனப்பதற்றம் குறைத்தல் 2. தூக்கம் 3. போசணை 4. உடல் உழைப்பு. இவை ஒவ்வொன்றின் முக்கியத்துவம், அதன் பின்னாலுள்ள விஞ்ஞானம், அடையக் கூடிய வழிமுறைகள் என்பன பற்றிப் பேசுவதே கட்டுரையின் நோக்கம்.

மன-உடல் அமைதி

70 களில் பிலிப் மொறிஸ் என்ற புகையிலைப் பொருள் தயாரிப்பு நிறுவனம் "புகைப் பிடித்தல் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடல்ல" என்ற வாதத்தை மேற்கு நாட்டு அரசாங்களுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. புகைத்தலைக் கட்டுப் படுத்தும் சட்டங்களை அரசுகள் அறிமுகம் செய்வதற்கு எதிராக இந்த முயற்சியை எடுத்த பிலிப் மொறிஸ் நிறுவனத்திற்கு சாட்சியாக செயல்பட்டவர் டாக்டர் ஹான்ஸ் செல்யி என்ற கனேடிய விஞ்ஞானி. ஹான்ஸ் மனிதனின் எல்லா நோய்களுக்கும் stress எனப்படும் மனப்பதற்றமே காரணம் என்ற கருத்தை வலுவாக முன்வைத்த முதல் நவீன கால விஞ்ஞானி. இதனால் பதற்றத்தைக் குறைக்கும் புகைப்பழக்கம் நோய்களையும் குறைக்க வேண்டும் என்று ஹான்ஸ் சாட்சியம் சொல்லி வந்தார். ஆனால், பிலிப் மொறிஸ் நிறுவனம் அவரது வங்கிக் கணக்கில் இட்ட ஐம்பதினாயிரம் டொலர்களால் தான் ஹான்ஸின் சாட்சியத்திற்குக் காரணம் என்பது சில காலங்களின் பின் வெளிவந்தது. உலகமும், புகைப்பிடித்தலின் ஆரோக்கியக் கேடுகளை ஏற்றுக் கொண்டு பல தடைகளை புகையிலைக் கம்பனிகளுக்கு விதித்தது.

மேலும் படிக்க ...

டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
அரசியல்
24 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இன்று (ஏப்ரில் 24)  டேவிட் ஐயா (எஸ்.ஏ. டேவிட் ஐயா) அவர்களின் பிறந்ததினம். அவரது பிறந்த தினத்தையொட்டி  'டேவிட் ஐயா வாழ்வும் மரணமும் (1924 - 2015) ' என்னும் தலைப்பில் காணொளியொன்று உருவாகியுள்ளது. 2012இல் உருவான காணொளி. இரு பகுதிகளைக் கொண்டது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் அசோக் (யோகன் கண்ணமுத்து) அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்  உருவான காணொளியை இயக்கியவர் டி. அருள் எழிலன். காணொளிக்காக டேவிட் ஐயாவை நேர்காணல் செய்தவர் எழுத்தாளர் சயந்தன்.

இது பற்றி எழுத்தாளர் சயந்தன் தனது முகநூற் பதிவில்  குறிப்பிட்டிருப்பது:

"பிரான்சில் வாழும் அசோக் யோகன் சொல்லி 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது சென்னையில் வசித்த டேவிட் அய்யாவை முடிந்த அளவு காட்சிப்படுத்தினேன்.  அவரது நீண்ட வாழ்வை விடியோவாக பதிவு செய்தேன்.  பல்வேறு சூழல் காரணமாக அவரது பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 24) இப்போது அதனை வெளியிடுகிறோம். சாலமோன் டேவிட் அருளானந்தம் என்னும் டேவிட் அய்யா ஒரு  இயக்கமாக, சிந்தனையாக, தனிமனிதனாக வரலாறாகவும் கனவாகவும் வாழ்ந்தவர்.அவர் வாழ்வும் மரணமும் ஒரு அனுபவம் ஒரு செய்தி ஈழத் தமிழர் அரசியல் வரலாற்றிலும் போராட்ட வரலாற்றிலும் மின்னி மறையும் மேகம் போல சில செய்திகளையும் வாழ்வையும் விட்டு சென்றிருக்கிறார். 1924-ஆம் ஆண்டு பிறந்து 2015-ஆம் ஆண்டு மறைந்த டேவிட் அய்யாவின் வாழ்க்கை எங்கிருந்து துவங்கி எப்படி முடிந்தது என்பதை ஒரு தடமாக ஆவணப்படுத்துகிறது இந்த பதிவு."

கட்டடக்கலைஞராக, நகர அமைப்பு நிபுணராக இலங்கை மற்றும் பிற நாடுகள் பலவற்றில் பணியாற்றிய டேவிட் ஐயாவை அவரை இலங்கையில் நடைபெற்ற  அகிம்சை ரீதியிலான தமிழர் விடுதலைப்போராட்டம் தன் பக்கம் ஈர்த்தது. அதே சமயம் எழுபதுகளில் அவர் காந்தியத்  தத்துவத்திலும் ஈடுபாடு காட்டினார். அதன் விளைவாக உருவானதே காந்திய அமைப்பு. அவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட காந்திய அமைப்பு பின்னர் இலங்கைத்  தமிழர் ஆயுதப்போராட்டத்திலுமோர் அங்கமாக மாறியது காலத்தின் கோலம்.

மேலும் படிக்க ...

ஞானம் சஞ்சிகை தொடர்பான கலந்துரையாடல்! - தகவல்: - தி. ஞானசேகரன் (ஞானம் ஆசிரியர்) -

விவரங்கள்
- தி. ஞானசேகரன் (ஞானம் ஆசிரியர்) -
நிகழ்வுகள்
23 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

ஜெயகாந்தன் : உலகப்பொதுமனிதன் - ஏப்ரில் 24 பிறந்த தினம்! - தகவல்: - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
நிகழ்வுகள்
23 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதல் மரியாதை தமிழில் ஒரு செவ்வியல் திரைப்படமா ? - நடேசன் - அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- நடேசன் - அவுஸ்திரேலியா -
கலை
21 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முதல் மரியாதையில் நடிகர் திலகம் ராதாவுடன்...

இளமைக்காலத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் மரியாதை திரைப்படத்தை பார்த்தபோது, என்னைக் கவர்ந்தது என்னவென்றால், அக்காலத்தில் சிவாஜி ரசிகனாக இருந்த எனக்கு மத்திய வயதான ஒரு வருக்கு இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது. இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது. சமீபத்தில் அதனை தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு பலர் எழுதியதைப் படித்தபின்பு, மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல, படு பிற்போக்கு வாதத்தை வெளிக்கொணருகிறது என நினைக்க வைத்தது .

மேலும் படிக்க ...

ஆய்வு: சமூக நோக்கில் இணையவழி - ‘தமிழ் கவிதைகள்’ முனைவர். கு. செல்வஈஸ்வரி -

விவரங்கள்
- முனைவர். கு. செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
20 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆங்காங்கே சிதறிக் கிடந்த நூல்களைத் தொகுத்து விளக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் நமது சான்றோர் ஆவார். அச்சிடப்பட்டு தொகுத்துரைத்த காகிதங்களை நூல் வடிவத்தில் படிப்பதற்கு உறுதுணையாய் பாடுபட்டுள்ளனர். மலிந்த நூலாயினும் அதன் தரத்தையும், இன்பச்சுவையையும் பருகிட வாசகர்களுக்கு உதவியாய் இருந்தது. இணையத்தின் வரவால் விலையற்ற பொருளாக நூல்கள் எளிதாகக் கற்க தற்போது வெளியிடப்பெறுகின்றன. காலநேரத்தை வீணாக்காமல் கையடக்கமாகக் கொண்டு செல்ல தமிழ் இலக்கியங்கள் புதுவடிவெடுத்து வருகின்றது. கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்ற கட்டமைப்பில் படைக்கப்பெறும் கவிதை வடிவங்களை இணையவழியில் அச்சின்றி புகுத்துவது வரவேற்கத்தக்கதாகின்றது. இவற்றால் நூல்களின் எண்ணிக்கை அளவு குறையக் கூடும் என்பது வருந்ததத்தக்கது ஆகும். ‘தமிழ் கவிதைகள்’ என்ற தலைப்பில் கௌதம் என்பவரால் வெளியிடப்பெற்ற இணைய கவிதைகளை மட்டும் சமூக நோக்கில் ஆராய்வதாக இக்கட்டுரை படைக்கப்பெறுகின்றது.

உழைப்பின் மேன்மை

“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து” 1

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க உழவனே உலகத்திற்கு அச்சாணியாக இருப்பதால் நாம் உழைப்பின் மேன்மை உணரமுடிகின்றது. மூடநம்பிக்கையின்றி உடல் உழைப்பால் முன்னேறினால் எல்லா வளங்கள் பெறக் கூடும். உழைப்பாளரின் மகத்துவம் பற்றி கூறுகையில்,

“கழுதைக்கு
கல்யாணஞ் செஞ்சு வச்சா
கொட்டிப்புடும் மழை
அம்பலக்காரர்
அழுத்திச் சொல்ல
மழை கொட்டாது
……………….
உடலால் உழைப்பதற்கு
ஊருச் சனமிருக்கு
வெட்டுகிற மண்ணெடுத்து
கொட்டுவதற்கு நாங்க இருக்கோம்…..
ஒரே மாசத்துல கெணறு
வெட்டி முடிச்சிடலாம்……
நட்ட பயிர் கடத்திலாம்….
நாட்டை கரை
சேர்த்திடுவோம்
எல்லோரும் சேர்ந்துழைச்சா
எதுக்கய்யா கவர்மெண்டு?” (கு.கௌதமன்., தமிழ்கவிதைகள் , கவர்மெண்டு……?)

மேற்கண்ட கவிதை வரிகள் உழைப்பின் உன்னத நிலையை விளம்புகின்றன. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன்கைகளை ஏந்த வேண்டும் அரசாங்கத்திடம் என்ற வினா நோக்கோடு ஆசிரியர் வினவுகிறார். இங்கு உழைக்கும் தோழர்கள் ஒன்று கூடினால் நாளைய நாடு நமதாக வெற்றி பெறலாம் என்பது குறிக்கப்பெறுகின்றது. மழையையோ, அரசாங்கத்தையோ நம்பி வாழாமல் உழைக்கும் கைகளை நம்பி வாழ வேண்டும் என்பது சமூக எழுச்சியாகப் படைக்கப்பெறுகின்றது. இதே கருத்து,

மேலும் படிக்க ...

பொலனறுவை வானவன்மாதேவி ஈஸ்வர ஆலயச் சிற்பங்கள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
20 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பொலனறுவை வானவன் மாதேவி ஈஸ்வரம்

அண்மையில் பொலனறுவைக்குச் சென்றிருந்த எழுத்தாளர் காத்யான அமரசிங்க அங்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த (2019) 'பண்டைத் தொழில்நுட்ப  அருங்காட்சியக'த்துக்குச் (Ancient Technology Museum) சென்றிருக்கின்றார். அங்கு சேகரிக்கப்பட்டிருந்த , சோழர்களின் காலத்தில் , பொலனறுவை இலங்கையின் இராஜதானியாக விளங்கிய சமயத்தில் கட்டப்பட்ட வானவன்  மாதேவி ஈஸ்வரமென்றழைக்கப்படும் சைவ ஆலயத்தின் மாதிரி, மற்றும் அந்த ஆலயத்திலிருந்த நடராஜர், பார்வதி, அப்பர் ,  பிள்ளையார் சிலைகள் ஆகியவற்றைப் படமெடுத்து அனுப்பியிருந்தார்.அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

மேலும் படிக்க ...

கவிதை: காலிக்கோப்பை! - அருணா நாராயணன் -

விவரங்கள்
- அருணா நாராயணன் -
கவிதை
20 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

என் கோப்பையை நான் எப்போதும் காலியாகவே வைத்திருக்கிறேன்.
என் மேசையின் எதிர் இருக்கை
தினம் தினம் காலியாகவே இருக்கிறது.
இன்று என்னோடு ஒருமுறை மட்டும் வந்து அருந்திப் பாருங்களேன்.
குடித்து முடிக்கும் வரை நிபந்தனை இல்லாமல் தொடங்குவோம்.
பின் முடிவு செய்துகொள்ளலாம்
யார் கொடுப்பது என்று.

மேலும் படிக்க ...

ஆய்வு: சிலம்பில் மருதநில மக்களின் வாழ்க்கை நிலை! - முனைவர் மூ.சிந்து -

விவரங்கள்
- முனைவர் மூ.சிந்து எம்.ஏ.,பி.எட்.,எம்ஃபில்.,பிஎச்.டி.,(யுஜிசி.செட்.,நெட்.), உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்-641048. -
ஆய்வு
20 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

மக்கள் குழுவாக ஒருங்கிணைந்து உருவாக்குவது சமூகமாகும். அத்தகைய சமூகத்தின் ஒவ்வொரு சிறப்பும் மனிதனின் சிறப்பாகவே கருதப்படுகிறது. தாம் வாழும் நிலத்தின் தன்மையைப் பொறுத்து மக்கள் பிரிக்கப்பட்டனர் என்பதையும், வயலும் வயல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மருத நில மக்களின் சிறப்பையும், அவர்களின் தொழில் பெண்களின் நிலையையும் எடுத்துக் கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

மருதநில மக்கள்

ஆற்று நீரை வாய்க்கால்கள் மூலம் ஏரி குளங்களில் நிரப்பி நெல், கரும்பு, மஞ்சள் போன்றன பயிரிடும் வயல்களை உடைய நிலம் மருத நிலம் எனப்பட்டது. அங்கு வாழ்வோர் உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர் ஆவர். இவர்கள் வாழ்விடத்தை ஊர், பேரூர் என வழங்கினர். வெண்ணெல் அரிசி, பால், பரும்பின் தீஞ்சாறு போன்றன இவர்கள் உணவில் அடங்கியிருந்தன. மருத நாட்டில் பண்டைய நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாக இருந்தது என்பது வியக்கக் கூடியதாகும். வளமார்ந்த மருதநில மக்கள் ஏனைய திணை மக்களை விட நாகரிகத்தில் மேம்பட்டவர்களாக இருந்தமையைக் காணமுடிகிறது. சங்க காலத்திலிருந்தே தமிழகம் உழவுத் தொழிலில் சிறப்புற்றிருந்தமையும், மன்னரின் வெற்றி உழவரின் கலப்பையை நம்பியிருந்தனைப்

‘பொருபடை தரூஉம் கொற்றமும் உழவர்
ஊன்றுசால் மருங்கின், இன்றதன் பயனே’  (புறம் பா.எ.35 )

என்ற புறநானூற்று வரிகள் வாயிலாக அறியலாம். ‘திருவள்ளுவர் உழவுக்குத் தனிஅதிகாரம்’  (குறள் அதி.104) அமைத்தார். உழவுத்தொழிலால் உணவும், பிறவும் நிறையப் பெற்று வாழ்ந்தவர்கள் மருத நிலத்தினர். ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணியாவார்’  (குறள் 1032) மருத நிலத்தினர் காவிரியின் புதல்வரைப் போல் வாழ்ந்தமையைக் காணமுடிகிறது.

மேலும் படிக்க ...

ZOOM வழியான ,நான்காவது தொடர் கலந்துரையாடல்: - கே.டானியல் ( நாவலாசிரியர், சிறுகதையாளர், அரசியல், சமூக செயற்பாட்டாளர்)

விவரங்கள்
- தகவல்: பெளசர் -
நிகழ்வுகள்
18 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலியா - மெல்பனில் மிருதங்க அரங்கேற்றம்! - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
கலை
18 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இந்நிகழ்வுக்கான தகவல் இறுதி நேரத்தில் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் பிரசுரமாகத் தவறி விட்டது. வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. நிகழ்வு பற்றிய தகவல்களை அனுப்புவோர் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பவும். அதன் மூலம் இது போன்ற தவறு நடைபெறாது. சாத்தியங்கள் அரிது. - பதிவுகள் -


எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான ஆவூரான் சந்திரன் – உஷா தம்பதியரின் செல்வப்புதல்வன் துவாரகன் சந்திரன், செல்வப்புதல்வி அபிதாரிணி சந்திரன் ஆகியோரின் மிருதங்க அரங்கேற்றம், இன்று 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மெல்பனில் Rowville Secondary College மண்டபத்தில் நடைபெறும். வாழ்த்துகள்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: 'சின்னக் கலைவாணர்' விவேக் மறைவு! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
17 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நடிகர் விவேக் மாரடைப்பினால் மறைந்து விட்ட செய்தி துயரகரமானது. மாரடைப்பு சிலரைச் சிலரைச் சடுதியாகத் தூக்கிச் சென்று விடுகின்றது. ஏற்கனவே விவேக் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது இதுதான் முதன் முறையா தெரியவில்லை.  விவேக் 59 வயதில் நம்மை விட்டுப்பிரிந்துள்ளார். அவரது மறைவு என் தந்தையாரின் மறைவினை நினைவு படுத்தியது.  என் தந்தையார் எம் பதின்ம வயதில் எம்மைவிட்டு , மாரடைப்பினால்  சடுதியாகப்பிரிந்தபோது அவருக்கு வயது 58.

மானுடர் வாழ்வு நிரந்தரமானதல்ல. நிச்சயம் முடிவுண்டு. இருக்கும்வரை இன்புற்று இருப்பதுடன், 'எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே' என்றும் இருப்பது இருப்பது இருப்புக்குப் பயன் தருவது. நடிகர் விவேக் அவர்களின் இருப்பு எமக்கு மகிழ்ச்சியை, சிரிப்பினைத் தந்த அதே சமயம் சிந்திக்கவும் வைத்தது. அதற்காக அவருக்கு எம் நன்றி எப்பொழுதுமிருக்கும். மக்கள் கலைஞர்கள் மடிவதில்லை. அவர்கள்தம் கலைகளினூடு எம்முடன் நிரந்தரமாக நிலைத்து நிற்பார்கள். இன்று வரை அவரைப் பார்த்து இரசித்ததைப்போல் இனியும் பார்த்து இரசிப்போம். மகிழ்வோம்.

அவரது நினைவாக அவர் கவிஞர் வைரமுத்துவைப்போல் நடித்த காணொளியொன்றினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். கலைஞர்களை அவர்கள் உயிராக நினைத்து வாழ்ந்த அவர்கள்தம் கலையினூடு நினைவு கூர்வதே மிகச்சிறந்ததென்பேன்.  அவர் கவிஞர் வைரமுத்துவை உள்வாங்கி நடித்த அவரது நடிப்பாற்றல் என்னை  மிகவும் கவர்ந்தது. உண்மையில் அவர் திரையுலகுக்கு வருவதற்குக் காரணமே அவரது கவிஞர் வைரமுத்துவைப்போல் நடித்த நடிப்பே என்பதை இக்காணொளியில் அவரே கூறியுள்ளார். அதனைப்பார்த்தபின்னரே இயக்குநர் கே.பாலச்சந்தர் அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினாராம்.

அதே சமயம் இன்னுமொன்றினையும் இங்கு கூறிட விரும்புகின்றேன். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் நடிகர் விவேக் பற்றி எழுதிய இரங்கற் கவிதையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு! (2006 -9) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
17 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் 9

அவனது பாட்டன் பெருவளவுக்காரராயும், பெரிய உபகாரியாயும் இருந்தார். அதனால் கிராமத்திலும், அயல் கிராமங்களிலும்கூட, பெருமதிப்புப் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் அவர்களது குலத்தொழில் துணி துவைப்பதாகவிருந்தது. நான்கு ஐந்து தலைமுறைகளுக்கு முந்திய காலத்திலிருந்து வெள்ளைக்காரச் சேவகத்தில் பரம்பரைத் தொழில் கைவிடப்பட்டு, பெருநிலவுடைமைக் குடும்பமாக அது ஆகியிருந்தது. பெருநிலங்களில் ரப்பர் பணமாய் வழிந்துகொட்டியது. சீமைச் சாராய குடியும் கூத்தியாள்களுமாய்  பெருவளவுக் குடும்பத்துக்கு கிராமத்திலிருந்த அவப்பெயரை அவனது பாட்டன்தான் ஓரளவேனும் மாற்றிவைத்தார். அப்பொழுதும் அந்த மதிப்பை அவருக்கு மட்டுமாகவே கிராமம் ஒதுக்கிக்கொடுத்தது.

கும்பிடுகளையும் முகமன்களையும் முன்னால் கண்ட மற்றைய பெருவளவுக்காரர், முதுகில் அவை சிரிப்பாய் ஒலிக்கக் கேட்டு குறண்டிப் போகிறவர்களாகவே இருந்துவந்தார்கள். அதைத் தடுக்கவோ தவிர்க்கவோ அவர்களால் முடியாதிருந்தது. அவர்கள் முன்புறத்தில் கிடைத்த முகமன்களில்மட்டும் அமைதி காணவேண்டியதாயிற்று.

பாட்டன் காலத்திலேயே பெருவளவில் மூன்று குடும்பங்கள் முளைத்திருந்தன. பாட்டனின் பின் அவரது நான்கு பிள்ளைகளில் மூத்தவராகவிருந்த அவனது தந்தை ஜெயசேகர மல்வான குடும்பத்தின் தலைமையேற்றார். அவர் பெரிய வேட்டைக்காரரும். அவரது தந்தையின் காலத்திலிருந்து சுவரில் மாட்டப்பட்டிருந்த துப்பாக்கியை அவர் மட்டுமே கையாளக்கூடியவராய் இருந்தார். அவரால் சுடப்பட்ட புலி, மான் ஆகியவற்றின் தோல்களும் தலைகளும் சுவர்களில் மேலும் மேலும் மாட்டப்படலாயின. யானைத் தந்தந்தங்கள் அலங்காரப் பொருட்களாய் வீட்டை நிறைத்தன. அதனால் ஜெயசேகர மல்வானவுக்கு கிராம மக்களிடத்திலான மதிப்பை தக்கவைக்க முடிந்ததோடு, பெருவளவு வீட்டின் அதிகாரத்தை முழுவதுமாய் பெற்றுக்கொள்ளவும் ஏலுமானது.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: பயிற்சி முகாம்! (4) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
17 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார்.  பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-


அத்தியாயம் நான்கு: தொடரும் பயிற்சி!

     நண்பகல் பயிற்சியின் போதும் சிவா ஆசிரியர் வந்து சேரவில்லை. செழியனும், பாரியுமே பயிற்சிகளைக் கவனித்தார்கள். மூன்றரை மணி போல தடைப் பயிற்சியின் போதே ஆசிரியர் வந்து சேர்ந்தார். இரவில் அரசியல் வகுப்பு நடைபெற வேண்டும் என்பதை ஏ.ஜி.ஏயுடன் கலந்தாலோசிக்கவே சென்றிருக்கிறார். " இன்னிரவு உங்களுக்கு அரசியல் வகுப்பு நடைபெறும் " எனக் கூறினார். தடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் . நிமிர்ந்து நிற்கிற பனை மரத்தில் 15 அடி உயரத்தில் ஒரு ஆள் சுயாதீனமாக நின்று சுற்றிவரப் பார்த்து நடமாடக் கூடியதாக 5 அடி நீளமும், 6 அடி அகலத்தில் பனையின் ஒரு பக்கத்தில் இரண்டடியாகவும், மறுபுறத்தில் நாலு அடியுமாக மரப்பீடம் வெளித்தள்ளலாக கயிறுகளால் வரிந்து இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. அதில் சாரணர்களின் அனுபவம் தெரிந்தது. நிலத்திலிருந்து துலா போன்ற பனைக்குற்றி(கால்) பீடத்திற்கு ஏறக் கூடியதாக கயிற்றுக்கட்டுடன் கிடந்தது. வழக்கம் போல ரஜனி, தியாகுவும் சரிவான  கோலிலே கையால் பிடியாமலே , நிலத்தில் ஓடுறது மாதிரியே  ஓடி பீடத்தில் ஏறினார்கள். பிறகு மேலே இருந்து ஒருவர் பின் ஒருவராக நிலத்தில் குதித்தார்கள். சாதாரணமாக எழும்பி வந்தவர்களை "கால் நோகவில்லையா ? " என ஜீவன் கேட்டான் . " இல்லை. நெடுகக் குதித்தால் நோகப் பார்க்கும் " என்று தியாகு பதிலளித்தான். ஆனைக்கோட்டைத் தோழர்கள் முதல் தடவைக் குதிக்கிறார்கள் போல இருக்கிறது. சரிவில் அரைவாசிக்கு ஓடி ஏறியவர்கள் மீதி தூரத்தைத் கையால் பிடித்து, பிடித்து விரைவாகத் தட்டிற்கு வந்தார்கள். குதிக்கிற போதும் சிறிது தடைப்பட்டு நின்று விட்டு குதித்து விட்டார்கள். இந்தப் பயிற்சிகள் குறைந்த பட்சம் இரண்டு நாள்களாவது நடை பெறும்.எனவே, சமையற்குழு பயிற்சி எடுக்கத் தவறி விடுவதில்லை.

மேலும் படிக்க ...

ஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும்! முனைவர் கோ.சுனில்ஜோக -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர். -
ஆய்வு
16 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி படகர் இன மக்களின் பூர்வகுடித் தன்மைக்குரிய, அவர்களின் பல்வேறு தனிக்கூறுகளுள் நீலகிரியைப் பற்றிய நிலவியல் அறிவும் இன்றியமையான ஒன்றாகும். நீலகிரியில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் படகர்களால் பெயரிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெயர்கள் படகர்களின் தனித்திராவிட மொழியான படகு மொழியின் தொன்மையினை விளக்குவனவாகத் திகழ்கின்றன.

மலையைக் குறிக்கப் படகர்கள் “கிரி”, “கோ”, “பெட்டு”, “மந்த”, “மந்து” போன்ற பல பெயர்களை வழங்குகின்றனர். அதனடிப்படையில்தான் “நீலகிரி”, “தொட்ட பெட்டா” போன்ற படகர்களின் சொல்வழக்குகள் விளங்கிவருகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் இன்றும் படகர்களிடம் வழக்கில் உள்ளவைகளாகும். நீலநிறமுடைய குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் மலை என்ற காரணத்தினால் இம்மலைக்கு “நீலகிரி” என்று பெயரிடப்பட்டதாகக் கருதினாலும் இம்மலையினைச் சூழ்ந்த நீலவானம் மற்றும் பனிப்பொழிவுக் காலத்து நீலநிறக் கதிர்களின் சிதறல் போன்றவையும் இம்மலைக்கான காரணப் பண்புப் பெயருக்கு ஆகிவந்தது எனலாம். குறிஞ்சி மலரைக்கொண்டு இம்மலைப் பெயரிடப்பட்டது என்பதைவிட வானத்து நீல நிறத்தாலும், நீலநிறக் கதிர்களின் ஊடுறுவலாலும் பெயரிடப்பட்டது என்பதே நிலவியல் அடிப்படையில் சரியாகப் பொருந்துகின்றது.

நீலகிரியைப் படகர்கள் தமக்குள் “நாக்குபெட்டா” என்று விளிக்கின்றனர். அதாவது நான்கு மலைகள் என்பது இதன் பொருள். நீலகிரியின் நிலவியல் அமைப்பும் இதனை ஒத்துள்ளது. இந்த நான்கு பெட்டாவிலும் கால்வழியின் அடிப்படையில் வாழ்ந்துவருகின்ற படகர்கள் அதற்குத் “தொதநாடு”, “பொரங்காடு”, “குந்தெ”, “மேக்குநாடு” என்று பெயரிட்டுள்ளனர். இந்த நான்குப் பெயர்களுக்குப்பின்பு “சீமை” என்ற பின்னொட்டையும் இட்டு அழைப்பதுண்டு. “அட்டி”, “ஊரு”, “கேரி”, “சீமெ”, “நாடு”, “ஹட்டி” போன்றவைப் படகர்களின் நிலப் பொதுப்பெயர்களாகும். இதில் “நாடு” மற்றும் “சீமெ” என்பது பெரிய நிலப்பரப்பினைக் குறிப்பனவாகும்.

மேலும் படிக்க ...

யாழ்ப்பாணத்தில் ஒலி-ஒளிப்பதிவுக் கலையின் முன்னோடியாக விளங்கிய நியூவிக்ரேர்ஸ் குணம்விடைபெற்றார்! - எஸ்.கே.ராஜென் -

விவரங்கள்
- எஸ்.கே.ராஜென் -
கலை
15 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

யாழ்ப்பாணத்தில் இயல்,இசை, நாடகம்  எனும் முத்தமிழ் கொலுவிருந்த ஓர் இனியகாலம். யாழ்.திறந்தவெளியரங்கம், வீரசிங்கம் மண்டபம் என்பன வாரம்தோறும் கலைநிகழ்ச்சிகளால் களை கட்டியிருந்த சிறப்பான காலகட்டம். யாழ் மண்ணின் ஏனைய பகுதிகளிலும் அப்பொழுது கலை நிகழ்ச்சிகள் நிறைவாகநடைபெற்று வந்தன. யாழ்ப்பாணம் என்றால் அங்கே பல அடையாளச்சின்னங்கள் எம் மனக்கண்ணில்எழும். அவை பாரம்பரியத்திற்குரியவையாகவும் நவீனத்துவமானவையாகவும் அமைந்துள்ளன. அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அன்றுடன் முடிந்துவிடும். நிழல் படங்கள் மட்டும் பார்வைக்கு இருக்கும். அவையும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அமைந்துவிடுவதில்லை. 1970கள் யாழ்ப்பாணம் பல்வேறு விதமான நவீன தொழில் நுட்பங்களைதம்மகத்தே உள்வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம். அப்பொழுதுதான் ஒலிப்பதிவுகள் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்பட்டன. இசைப்பிரியர்களை மகிழ்வித்துவந்த இசைக்களஞ்சியமாக யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக அக்காலகட்டத்தில் திகழ்ந்தது நியூ விக்ரேர்ஸ். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில், யாழ்.பொது மருத்துவமனைக்குப் பின்புறமாகஇந்த நிறுவனம் அமைந்திருந்தது. அப்பொழுதெல்லாம் திரைப்படப்பாடல்கள் கேட்பதென்றால் இலங்கை வானொலிஒன்றே வழியாக இருந்தது. வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்கும் இசைப் பிரியர்கள் மீண்டும்அப்பாடல்களைக் கேட்பதற்கு யாழ்ப்பாணத்தில் பெரும் வரப்பிரசாதமாகஅமைந்தது நியூ விக்ரேர்ஸ் நிறுவனம்.

தென்னிந்தியாவில் வெளிவரும் திரைப்படங்களின் பாடல்கள் 45RPM இசைத்தட்டுக்கள், LP இசைத்தட்டுக்கள் என்பவற்றில் வெளியாகும். அந்த இசைத்தட்டுக்களை யாழ்ப்பாண மக்கள் பார்க்கக்கூடியதாகவும், அதிலிருந்து பாடல்களை ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து கொள்வதற்கும்வழி வகுத்த முன்னோடிகள். இசைப்பிரியர்களின் இசைத்தாகத்தைத் தீர்ப்பதில் பெரும்பணியாற்றியவர்கள். பாடல், பாடியவர்கள், இசையமைப்பாளர், திரைப்படம் ஆகிய விபரங்கள் உள்ளடங்கிய புத்தகம் ஒன்றையும் அச்சடித்து தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தார்கள். அவர்கள் அதிலிருந்து பாடல்கள் தெரிவுசெய்து பதிவு செய்து கொள்வார்கள். ரி.டி.கே, மக்ஸெல், சொனி கசெற்றுக்களிலேயே பெருமளவான ஒலிப்பதிவுகள் நடைபெறும். ஒலியமைப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள் ஸ்பூல் நாடாவில் பதிவு செய்து கொள்வார்கள். நகரத்தின் பல பகுதிகளிலும் ஒலியமைப்பாளர்களாகப் பணியாற்றிவந்தவர்கள் தங்கள் சேவையில் பரவசமூட்டும் பக்திப்பாடல்களையும் நாதஸ்வர தவில்கச்சேரிகளையும் புதிய பழைய திரைப்படப்பாடல்களையும் ஒலிபரப்புவதற்கு சிறந்த தொழில் நுட்பத்தில் அவற்றைப்பதிவுசெய்து வழங்கியவர்களில் நியூவிக்ரேர்ஸ் தனியிடம் பெற்றவர்கள். நியூ விக்ரேர்ஸ் வழியில் காலப்போக்கில் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒலிப்பதிவுக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் படிக்க ...

இன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது ! படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
15 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

”கிழக்கு வானில் சூரியன் தங்கப்பாளமாக ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான். சூரியோதயத்தை நான் முன்னர் கடற்கரையோரங்களில் நின்று பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால், உயரத்தில், பறந்துகொண்டிருக்கும் விமானத்திலிருந்து, புதிய கோணத்தில் வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும் மேகங்களினூடாக அந்த அழகிய காட்சியைப்பார்த்தபோது நான் மெய்மறந்துபோனேன். ஆதவனின் ஒளிப்பிழம்புகள் கணத்துக்குக்கணம் புதிது புதிதாய் கொள்ளை அழகை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”

இலங்கையிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வானத்தில் பறந்து வரும்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் இறங்கும் தருணத்தில் விமானம் தரைதட்டுவதற்கு முன்னர் அந்த அதிகாலைப்பொழுதின் உள்ளங்கவர் காட்சியை தரிசித்த இலக்கியப்படைப்பாளி ஞானசேகரனின் அன்றைய வர்ணிப்புத்தான் அந்த சூரிய உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில் இலக்கியவானில் ஞானம் கலை, இலக்கிய மாத இதழின் பரிமாணத்துடன் அவருக்கு பேருதயமாகியது என்பதற்கு ஒரு நேரடி சாட்சியாகி, இன்று ஏப்ரில் 15 ஆம் திகதி தமது எண்பது வயது பிறந்த தினத்தை கொண்டாடும் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன்.

இலங்கையில் 1999 வரையில் நான் இவரை சந்தித்திருக்கவில்லை. 1999 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வதியும் தமது புதல்வரிடம் இவர் தமது துணைவியாருடன் புறப்படுவதற்கு முன்னர் மல்லிகை ஜீவாவிடம் எனது தொடர்பிலக்கம் பெற்றுள்ளார். ஒருநாள் சிட்னியிலிருந்து ஞானசேகரன் தொலைபேசியில் அழைத்தபோது, மெல்பனுக்கு அழைத்தேன். எமது இல்லத்தில் ஒரு மாலைவேளையில் இலக்கியச்சந்திப்பும் இரவு இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்தபொழுது , மெல்பன் இலக்கிய ஆர்வலர்கள் செல்வத்துரை ரவீந்திரன் , டாக்டர் சத்தியநாதன், நடேசன், புவனா ராஜரட்ணம், அருண். விஜயராணி, பாடும்மீன் சிறிகந்தராசா ஆகியோர் கலந்துகொண்டனர். மெல்பனில் பாலம் லக்ஷ்மணன் அவர்களின் இல்லத்திற்கும் மாவை நித்தியானந்தனின் பாரதி பள்ளிக்கும் வேறு சில இடங்களுக்கும் அழைத்துச்சென்றேன். காரில் அமர்ந்தவாறே குறிப்புகள் எடுத்துக்கொண்டார். பயணக்கதைக்கு அவர் தயாராகிவிட்டார். இலங்கை திரும்பியதும் தினக்குரல் வார இதழில் அவுஸ்திரேலியப்பயணக்கதையை சில வாரங்கள் தொடர்ந்து எழுதி – இறுதியில் அந்தத்தொடரையே நூலாக்கினார். பேராசிரியர் சி. தில்லைநாதனின் அணிந்துரையுடனும் எனது முன்னுரையுடனும் அந்த நூல் வெளியாகியது. அவ்வேளையில் ஞானசேகரன் தமது மருத்துவப்பணி நிமித்தம் கண்டியில் வசித்தார். கண்டி முகவரியிலிருந்து ஞானம் பதிப்பகத்தினால் 1999 மார்கழியில் அந்த நூல் வெளியானது. அவுஸ்திரேலியா வந்தவர், இந்தக்கங்காரு நாட்டைப்பற்றி மாத்திரம் தகவல் சேகரிக்கவில்லை. இங்கிருந்த எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, அருண் . விஜயராணி முதலான படைப்பாளிகள், நாடகக்கலைஞர் சி. மனோகரன் ஆகியோருடனான நேர்காணலையும் பதிவுசெய்துகொண்டு, சிட்னியில் 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இன்பத்தமிழ் வானொலி இயக்குநர் பாலசிங்கம் பிரபாகரனுக்கும் நேர்காணல் வழங்கிவிட்டு தாயகம் திரும்பினார்.

மேலும் படிக்க ...

தொடர் நாவல் : பயிற்சிமுகாம்! (2 & 3) - கடல்புத்திரன் -

விவரங்கள்
- கடல்புத்திரன் -
நாவல்
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 - எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். \ பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-


அத்தியாயம் இரண்டு:பெரிய டேவிட்!

        ஜீவன் பொதுவாகவே 'எனக்கே அரசியல் தெரியாது, இவர்களுக்கு எப்படித் தெரிய வரும் ?... என அனுதாபத்துடன் தோழர்களிடம் தெரிந்ததைக் கூறி வருபவன். கிராமப் பொறுப்பாளராளராக இருக்கிற போது அடிக்கடி ஏ.ஜி.ஏ பிரிவிற்கும் சென்று வருவது அங்கிருந்து அறிந்தவற்றை  அராலித் தோழர்களும் அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான். அதாவது ஒரு தபால்காரனின் வேலை தான் என்னுடையது என்பதை உணர்ந்திருந்தான். ஏ.ஜி.ஏ பொறுப்பாளர் மாலித் தோழர் தான் அவனுடைய குருஜி.  காரைநகர்... முதலிய தீவுப்பகுதிகளில் எல்லாம் இவரின் கால் பதியாத இடமில்லை என்றுச் சொல்லுவார்கள்.

        ஜீவன் இயக்கத்திற்கு வர முதல், சங்கானை, வட்டுக்கோட்டை, தெற்கு அராலிக் கிராம வாசிகசாலைகளிற்கெல்லாம் சென்று பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் மேய்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவன். அச்சமயம் முறையான புத்தகங்கள் அவனுக்குக் கிடைத்திருக்கவில்லை. சஞ்சிகைகளில் வரும் தொடர்களை விடாமல் வாசிக்கிறதுக்காக செல்ல வேண்டி இருந்தது. அப்படித் தான் எழுத்தாளர் பாலகுமாரனின் "தாயுமானவர் "தொடரை குமுதத்தில் வாசித்தான். சிவசங்கரியின் "ஒரு மனிதனின் கதை" தொடர், முகமத் அலியின் " ஜெயித்துக் கொண்டே இருப்பேன் " தொடரையும் மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். முழுதையுமே சஞ்சிகைகளிலே வாசித்தவன். ஆனால் நெடுகவல்லவா செல்கிறான். அத்தியாயம் வாசிச்சு முடிந்திருக்கும். பத்திரிகைகள் வாசிக்கிறது குறைவாகவே இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். தலையங்கத்தைத் தட்டுவான் என்று சொல்லலாம். ஆனால் சஞ்சிகைகளை மேய்வான். ஒரு கட்டத்தில் விளம்பரம் , நகைச்சுவைத் துணுக்குகள் என வாசிக்க ,மேய இல்லாது  ஏற்பட்டிருந்தது. அந்தக் குணம் மாலியோடு வடையும் ,தேனீரும் குடிக்கிற போது வடை சுற்றி வந்திருந்த பேப்பர் துண்டையும் எடுத்து வாசித்துக் கொண்டிருந்தான். " நீ எதையுமே வாசிக்கிற பிரகிருதி " என மாலி சொல்லிச் சிரித்தான்.

மேலும் படிக்க ...

('சிறுவர் இலக்கியம்') ஆளுமைகளை அறிந்து கொள்வோம்: கவிஞர் சாரணாஹையூம் (ஜனாப் என்.எஸ்.ஏ.கையும்) - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
சிறுவர் இலக்கியம்
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள் -


கவிஞர் சாரணாகையூம் (இயற்பெயர் ஜனாப் என்.எஸ்.ஏ.கையூம்) பதுளையைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இலங்கைத்  தமிழ் இலக்கியத்தில் குழந்தைகள் இலக்கியமென்றால்  சோமசுந்தரப்புலவர், வேந்தனார் இவர்களுடன் என் நினைவுக்கு வரும் அடுத்தவர் இவர். என் மாணவப் பருவத்தில் ஈழநாடு மாணவர் மலரில் வெளியாகிய இவரது குழந்தைக் கவிதைகளைப் படித்து இன்புற்றதுண்டு/. இலங்கையில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றில் இவரது கவிதைகளும் இடம்  பெற்றிருக்கும்.

குழந்தைகளுக்காகக் கவிதைகள், கதைகள் எழுதும் பலர் அத்துறையில் சிறந்து விளங்காமலிருப்பதற்கு முக்கிய காரணங்களிலொன்று குழந்தைகளுக்கான படைப்புகளை அவர்கள் பெரியவர்களாகிய அவர்களது பார்வையில் படைப்பதுதான். குழந்தைகளாக மாறிப்படைப்புகளைத் தருவதை அவர்கள் மறந்து விட்டிருப்பார்கள். அதனால் குழந்தைகள் பலரையும் அவர்களது படைப்புகள் கவராமல் போய்விடுவதில் ஆச்சரியமில்லை.

குழந்தைகளின்  உளவியலை நன்கு உள்வாங்கிக் கவிதை படைத்த கவிஞர்களில் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் குழந்தை அழ.வள்ளியப்பா, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, வேந்தனார், சோமசுந்தரப்புலவர், சாரணாகையூம். இவர்கள்தம் குழந்தைக் கவிதைகளில் இவர்கள் குழந்தைகளாகவே மாறி விடுவார்கள். குழந்தைகளுக்குத்தேவை எளிமையான சொற்கள், மீண்டும் மனத்தில் பதியும் வகையிலான எளிமையான அதே சமயம் பாடுவதற்குரிய சந்தச்சிறப்பு மிக்க வரிகள். அவற்றை வாசிக்கையில் குழந்தைகளின் உள்ளங்களில் அவை விபரிக்கும் காட்சிகள் படம் விரிக்க வேண்டும். 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை. ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே (சோமசுந்தரப்புலவர்) ', 'காலைத்தூக்கிக் கண்ணிலொற்றி கட்டிக்கொள்ளும் அம்மா' (வேந்தனார்) போன்ற கவிதைகளைப் படிக்கையில் குழந்தைகளுக்கு அக்கவிதைகள் விபரிக்கும் காட்சிகள் மனக்கண்ணில் படமாக் விரிந்து மகிழ்வினைத் தருகின்றன. இவை போன்ற குழந்தைக்கவிதைகளை எழுதியவர் கவிஞர் சாரணாகையூம்.

மேலும் படிக்க ...

காலத்தால் அழியாத கானங்கள்: "உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது" -ஊர்க்குருவி -

விவரங்கள்
Administrator
கலை
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கே.வி.மகாதேவனின் இசையில், கவிஞர் வாலியின் கருத்துச்சிறப்பு மிக்க வரிகள், டி.எம்.எஸ்ஸின் குரல், எமஜிஆர்,ஜெயலலிதா மற்றும் சக நடிகர்களின் (சந்திரபாபு, சோ என)  நடிப்பு இப்பாடலை எனக்குப் பிடித்த பாடல்களிலொன்றாக்கி விட்டன. பாடலில் வாத்தியக் கலைஞர்களின் கைவண்ணம், கோரஸ் பாடும் குழுவினரின் திறமை இவற்றையெல்லாம் மிகவும் இரசித்தேன். பாடல் மிகவும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க ...

ஆளுமைகளை அறிந்துகொள்வோம்: எழுத்தாளர் முனியப்பதாசன்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் முனியப்பதாசனின் எழுத்துப்பிரவேசம் 1964இல் கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'வெறியும் பலியும்' சிறுகதை முதற்பரிசு பெற்றதுடன் ஆரம்பமாகியது. கடற் தொழிலாளர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதை. கலைச்செல்வியின் ஆசிரியரும், பதிப்பாளருமான சிற்பி சரவணபவன் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார். அவர்களில் இவருமொருவர்.

இவரது இயற்பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ் இந்துக் கல்லூரியின் அருகிலிருந்த ஒழுங்கைப்பகுதியில் வாழ்ந்ததாக அறிகின்றேன். இவரது கதைகள் ஈழநாடு, சுதந்திரன், கலைச்செல்வி, விவேகி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகின. ஈழநாடு ஆசிரியர் ஹரன் இவரது எழுத்தின்பால் பெரு மதிப்பு மிக்கவரென்றும், அவரே இவரது சிறுகதையொன்றை ஆனந்தவிகடனுக்குக் கொண்டு சென்று கொடுத்ததாகவும், அது விகடனில் முத்திரைக்கதையாக வெளியாகியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஐம்பதுக்கும் குறைவான  கதைகள் வரையில் எழுதியுள்ளதாக ஈழநாடு குறிப்பிடுகின்றது. எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர் இருபது சிறுகதைகளே எழுதியுள்ளதாகக் குறிப்பிடுவார். அவற்றில் சிலவற்றை எழுத்தாளர் செங்கை ஆழியான் சேகரிக்க , எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது மல்லிகைப்பந்தல் பிரசுரமாக வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முற்போக்காளரான டொமினிக் ஜீவா அவர்கள் ஆன்மிகப்போக்குள்ளவரான முனியப்பதாசனின் சிறுகதைகளைத்  தனது பதிப்பக வெளியீடாக வெளியிட்டுள்ளதும் முக்கியமானது. இத்தொகுதியை நூலகம் எண்ணிம நூலகத்தில் வாசிக்கலாம்.

மேலும் படிக்க ...

இலக்கியவெளி சஞ்சிகை இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 4: “ஹைக்கூ பார்வையும் பதிவும்” - அகில் -

விவரங்கள்
- அகில் -
நிகழ்வுகள்
14 ஏப்ரல் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. இணைய வழிக் கலந்துரையாடல்: “மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
  2. நெஞ்சிருக்கும் ஆசைகளை நீ செய்வாய் சித்திரையே! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -
  3. பதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜீவன் கந்தையாவின் (மொன்ரியால் மைக்கல்) ஆறு கட்டுரைகள்: வீரன், காடேறி நிலவைக் கொய்தல், சூரையங்காடு, காடேறி வலயம், வான்கோழி நடனம், நடுகல்
  4. அறிமுகம்: ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்! - ஊர்க்குருவி -
  5. தமிழ்மொழிச் செயற்பாட்டகம்: சி.வி.வேலுப்பிள்ளை! - பெளசர் -
  6. படித்தோம் சொல்கின்றோம்: சிங்கள மூத்த எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் - எங்கள் கிராமம்! அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன்! - முருகபூபதி -
  7. சிறுகதை: புண்ணியத்தை தேடி .... - இணுவை சக்திதாசன் டென்மார்க் -
  8. ஆய்வு: பழங்குடி மொழிகளில் பால்பகுப்பு! - முனைவர் செ. துரைமுருகன் -
  9. கோ.நாதனின் 'அரவம் புணர்ந்த அடவி' - சு.கருணாநிதி -
  10. ஜெயகாந்தன் ( 1934 – 2015 ) ஏப்ரில் 08 நினைவுதினம்! நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்! சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்! - முருகபூபதி -
  11. 'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) காலாண்டிணைய இதழும், எனது கவிதைகளிரண்டும்! - வ.ந.கிரிதரன் -
  12. தொடர் : பயிற்சிமுகாம் (1) - கடல்புத்திரன் -
  13. காலத்தால் அழியாத கானங்கள்: "நான் காற்று வாங்கப் போனேன்! ஒரு கவிதை வாங்கி வந்தேன்!" - ஊர்க்குருவி -
  14. ஜீவநதியின் 150ஆவது இதழ் : 'ஈழத்து நாவற் சிறப்பிதழ்"
பக்கம் 102 / 107
  • முதல்
  • முந்தைய
  • 97
  • 98
  • 99
  • 100
  • 101
  • 102
  • 103
  • 104
  • 105
  • 106
  • அடுத்த
  • கடைசி