லண்டனில் ‘விம்பம்’ கலை இலக்கிய அமைப்பினூடாக குறும்பட விழாக்கள், ஓவியப் போட்டிகள், மலையக இலக்கியம், சமகால நாவல், சிறுகதை, கவிதை இலக்கியங்கள் குறித்த விமர்சன நிகழ்ச்சிகள் என நீண்டகாலமாக பயணித்து வருகின்றமை மிச்சிறப்பான விடயமாகும்.

விம்பத்தின் முக்கிய அமைப்பாளரான ஓவியர் கே.கே.கிருஷ்ணராஜா அவர்கள் தனது தாராள மனத்துடனும், மனித நேயத்துடனும் முன்னெடுத்துச் செல்லும் இத்தகைய பணி பெரிதும் பாராட்டுக்குரியன.

அந்த வகையில் கடந்த பத்தொன்;பதாம் திகதி லண்டன் ஈஸ்ற்ஹாம் பகுதியில் அமைந்த ரிறினிற்ரி மண்டபத்தில் ஒன்பது பெண் படைப்பாளிகளின் நூல்களின் விமர்சன அரங்கை ‘விம்பம்’ ஏற்பாடு செய்திருந்தது. முழுநாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த நூல்களின் அறிமுகம், விமர்சன நிகழ்வு சமகால இலக்கியங்களை அறிந்து கொள்ளவும், அவற்றைப் புரிந்து கொள்ளவும், புரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளும் களமாக அமைந்திருந்தது.

இவ்விழாவிற்கு நோர்வேயிலிருந்து கவிதா லட்சுமி, ரூபன் சிவராஜா போன்ற இளம் படைப்பாளிகள் வருகை தந்து அன்றைய நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர். அத்தோடு அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்திருந்த பிரபல எழுத்தாளர் முருகபூபதி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை இந்நிகழ்வுக்கு மேலும் மெருகு சேர்த்திருந்தமை குறிப்பிட்டுக் கூறவேண்டிய தொன்றாகும்.

இரு அமர்வுகளாக இடம்பெற்ற நிகழ்ச்சிகளை அஞ்சனா சிவாகரன், நவஜோதி ஜோகரட்னம் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.

அஞ்சனா சிவாகரன் தனது தலைமை உரையில் ‘லண்டனில் ‘விம்பம்’ அமைப்பினால் தொடர்ந்து கொண்டிருக்கும் செயற்பாடுகள் தனக்கு இலக்கியத்தின்பால் மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகக் கூறியிருந்தார். அந்த வகையில் பெண் ஆளுமைகளின் அறிமுக விமர்சனத்தை இந்த நிகழ்வு தேர்ந்தெடுத்திருப்பதைத் தான்; பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டிருந்தார்’

தொடர்ந்து கறுப்பி சுமதியின் ‘உங்களில்  யாராவது முதல் கல்லை எறியட்டும்’ என்ற நூலை பூங்கோதை ஸ்ரீதரன் அவர்கள் பேசும்போது: ‘புலம்பெயர் தமிழ் மக்கள் வாழ்வின் சமூகக் கட்டமைப்பு மாற்றமடைவதற்கான அகப்புறக் காரணிகளை கோடிட்டு காட்டுவதோடு, சரிபிழை என்பதைக் கூறி நியாயத் தீர்ப்பு சொல்வதைவிட்டு சுயபரிசோதனை செய்வதை வலியுறுத்தும் தோரணையிலும், பெண்ணியக் கருத்துக்களோடும் சமூக நீதிக்குக் குரல் கொடுக்கும் உணர்வுப்பதிவாக அவரின் சிறுகதைகள் அமைந்திருப்பதைச்’ சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.

குமாரி அவர்களின் ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகள்’ என்ற நூலை தோழர்; வேலு, ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் போன்றோர் தத்தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் பேசும்போது ‘கடத்தப்பட்ட இளம் சமூகத்தினர்பற்றி ஒரு வித்தியாசமான எழுத்து நடையில் இந்நூல் அமைந்திருப்பதை எடுத்து விளம்பினார். கடத்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள், அவர்களின் சொந்த பந்தங்களின் அவலங்களையும், தனது அனுபவத்தையும் துன்ப உணர்வுகளையும் இந்த நூலில் அசத்தலாகவே பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். அரசியல் மாற்றங்களையும் அழகாகச் சித்தரிப்பதையும் எடுத்துக் கூறியிருந்தார்.

தோழர் வேலு மேலும் ‘சுருக்கப்பட்ட நெடுங்கதைகளை’ வேறு கோணங்களில் சிலாகித்து அருமையாகவே  பேசியிருந்தார். ‘இதனைச் சுருக்கப்பட்ட உரையாடல் எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும் எனக்கூறிய தோழர் வேலு அவர்கள் இரு சமூகங்களுக்கிடையே நடந்த போராட்டத்தை ஒரு சிங்களக் குடும்பம் எப்படிப்புரிந்து கொள்கின்றது என்பதைப் பார்க்கமுடிகின்றது என்றார். குழந்தைப்போராளிகளின் துயரங்கள், இயற்கை அழுத்தங்கள், குழந்தைகளைக் கடத்தல் போன்ற பல்வேறு நெருடல்களை எளிமையாகச் சொல்லும் கனதியான தொகுப்பு’ என்று கூறியிருந்தார்.    

கவிதா லட்சுமியின் ‘வீட்டு எண் 38ஃ465’ என்ற நூல குறித்து  மாதவி சிவலீலன் அவர்கள் பேசும்போது: ‘அழகிய சொல்லாடல்களைக் கையாண்டு கட்டுரைகளை நகர்த்திய விதம் சிறுகதைகளை வாசிக்கும் உணர்வினை ஏற்படுத்தியதாகக் கூறியிருந்தார். அதில் அடங்கியுள்ள பன்னிரண்டு கட்டுரைகளும் ஆழமாக, நுணுக்கமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்தததாகவும்’ தெரிவித்திருந்தார்.

இந்நூல் குறித்து எஸ் கஜமுகன் கருத்துத் தெரிவிக்கையில் ‘கவிதா’வின் கட்டுரைகளில் வீPட்டு எண் 38ஃ465 கட்டுரை தன்னைக் கவர்ந்ததாகவும். தேவதாசிக் குடும்பத்தின் மாற்றங்களை அதாவது முன்பு இருந்த மரபையும் தற்போதைய நிலையையும் ஆராய்ந்து எழுதிய கட்டுரையாக அமைந்திருந்தது. முன்பு சமூகத்தின் பரதநாட்டியக் கலையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்கள் தற்போது முதுமை, சமூகப்பார்வை அத்துடன் பொருளாதார வறுமைக்குத் தள்ளப்பட்டு இருப்பதையும், தற்போதைய பரநாட்டியக்கலையின் நிலையை அக்கட்டுரை அழகாக வெளிப்படுத்தியருப்பதாகக’; கூறியிருந்தார்.

கபர் என்ற நாவல் குறித்து ராதா தினேஷ் தனது கருத்தை முன்வைக்கும்போது ‘வரலாற்று உண்மைகளையும்; இரண்டு பெண்களுக்கிடையில் உள்ள மனப் போராட்டங்களையும், ஒரு மலையாள குடும்ப வாழ்க்கையில்; பெண்களுக்குரிய பண்புகளோடு அந்நாவல் விரிந்து செல்வதாகத்’ தனது உரையில் தெரிவித்திருந்தார்.

கவிதா லக்சுமி ஸ்ரீவள்ளியின் கவிதை நூல் ‘கனதியான சொற்களை கொண்டதாக அமைந்தவை என்றும், சொற்களின் தொன்மை சங்ககாலத்தின் தொடர்ச்சியாக அக்கவிதைகள் அமைந்திருப்பதை தாந் அவதானித்தமையை வெளிப்படுத்தியிருந்தார். நுண் உணர்வுகளை அகம் - புறம் என்று வகைப்படுத்தும் வகையில் அக்கவிதைகள் அமைந்திருப்பதும், பாரதியாரின் கவிதைகளில் சித்தாந்தம் தொனிப்பதையும், காலத்தை பாரதியார் மனித மனதின் ஒரு கருவி என்கின்றார். நான் என்பதை எப்போது இழக்கிறோமோ அப்போதுதான் எமக்குப் பேரின்பம் கிடைக்கும் என்ற சித்தாந்தத்தை’ தனது உரையில் தெரிவித்திருந்தார்.

எம்.என்.எம் அனஸ் அவர்கள் ஸ்ரீவள்ளியின் கவிதை பற்றிக் கூறும் போது ‘ ‘தற்போது உலக அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை மீட்டு, அவரின் ‘மீட்சி’ என்ற கவிதையைச் சுட்டிக்காட்டி மனிதநேயத்தை இழந்திருக்கும் சமூகங்களைப்பற்றி’ எடுத்துரைத்தார்.    

பூங்கோதை கலா ஸ்ரீஞ்சன் அவர்கள் ரொக்கேயா பேகம் அவர்களின் ‘சுல்தானாவின் கனவு’ என்ற வங்காள மொழிபெயர்ப்பு நூல் குறித்துக் கருத்து தெரிவிக்கையில் ‘நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ரொக்கேயா பேகம் பெண்;ணியக் கருத்துக்ளோடு அதாவது பெண் அடிமைத்தனம், பெண்கல்வி, ஆண்- பெண் சமத்துவம் பற்றிய சிந்தனைகளோடு இந்நூல் புரட்சிகரமான கருத்துக்களோடு புனைந்திருப்பது நோக்கப்பட வேண்டிய தொன்றாகும்’ என்று தெரிவித்தார்.

ஹரி ராஜலட்சுமி வி.வி.கணேஷானந்தனின் டீசழவாநசடநளள Niபாவ  இன் மொழிபெயர்ப்பு நாவலைத் ‘தனது பாணியில் அழகாக விவரித்திருந்தார். இந்நாவல் யாழ்ப்பாணத்து பெண் போராளிகள், அங்கு நடைபெற்ற வன்முறைகளை மற்றும் யாழ்ப்பாணத்து குடும்ப விழுமியங்களை ஒரு சாராம்சவாத அடிப்படையில் சித்தரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருத்தார். அந்நாவலில்; சிலவற்றை வாசிக்கும்போது கீழைத்தேய மனோநிலையில் சொல்லப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

ரூபன் சிவராஜா ’ஒரு அடிமைச்சிறுமியின் லாழ்க்கை நிகழ்வுகள்’ என்ற ஹெரியட் ஜேகப்ஸின் சுயசரிதை நூலை விவரிக்கும்போது ‘150 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூலின் பெறுமதியை இலக்கியத்துக்குரிய தகமைகளுடன் எழுதப்பட்ட உணர்வு பூர்வமான நூல் எனக் குறிப்பிட்டார். பெண்ணியப் போராட்டத்துக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக, மிக மோசமான அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் காலகட்டங்களைக்கூறும் சிறந்த ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் என்றும்’ குறிப்பிட்டிருந்தார்.

நிர்மலா ராஜசிங்கம் இச் சுயசரிதை நூல் குறித்துத் தொடர்ந்துப்  பேசுகையில்: ’சமரசமற்ற உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட இச்சுயசரிதை வாசகனைப் பின்னிப் பிணைத்துவிடுகின்றது. அன்றைய கறுப்பின மக்களின் கொடூரமான வாழ்க்கை நிலைப்பாட்டை விபரித்த அவர், கறுப்பின மனிதர்கள் பண்டமாக விற்கப்பட்டதை மனித நேயம் ததும்ப விபரித்தார். வெள்ளை இனத்தின் மனதைத் தட்டி எழுப்பக்கூடிய வகையில் இச்சுயசரிதை அமைந்திருப்பதையும், அவ்வேளை கிறிஸ்த்தவ மதம் அடிமை முறையை நியாயப்படுத்தும் முறையில் செயற்பட்டதையும் சுட்டிக்காட்டிப்’ பேசியிருந்தார்.

மார்புப் புற்றுநோய் குறித்து பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து ‘புற்றிலிருந்து உயிர்த்தல்’ என்ற சாலை செல்வம் அவர்களின் நூலை நிரோஜினி றமணன் அவர்கள் நுணுக்கமாக விபரித்திருந்தார்.

நோர்வேயிலிருந்து வருகை தந்த படைப்பாளிகளின் நேரடி நேர்காணல்கள் இடம்பெற்தோடு, ‘கவிதையின் அசைவு’ என்ற கவிதா லட்சுமியின் அழகான சிறப்பு நாட்டிய நிகழ்வோடும், சுiவாயன உணவோடும் அன்றைய பொழுதை இனிமையாக ரசித்தோம் என்றால் அது மிகையாகாது.

திரு..சாந்;தன் அவர்கள் படப்பிடிப்புகளை அவதானத்துடன் மேற்கொண்டிருந்தார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.