வினாக்கள் ?

உனது குற்றங்களை மன்னித்து                     
உன்னை ஏற்றுக் கொண்டவரை
குற்றம் சுமத்தி
தண்டிப்பது  என்ன​ நியாயம் ?
யேசுகள் என்றும்
தண்டிக்கபடுவது ஏனோ ?

சிவன் பன்றிக்குட்டிகளுக்கு
தாய்பன்றியாகி பால் கொடுத்தது ,
இராவணன்  தவவேடம் தாங்கி
சீதையை சிறை வைத்தது ,
அன்னை தெரேசா  கருவுற்று
தாயாகாமல் இருக்கலாம்
கருணையுற்று அனைவருக்கும் அன்னை  ஆனார் .
யேசுநாதர்  மக்களுக்காக​ சிலுவை சுமந்தார் .
உறவுகள் ....துர்பிரயோகம் !
கருணை ?
அன்பு ?
சுயநலம் . துரோகம் ...ஏன் , ஏன் ...?

மழழை

கல்லறையில் எழுத​ வாசகம்
தேடிக் கொண்டிருந்தவனுக்கு
கருவறையிலிருந்து வந்த​
குழதையின் அழுகுரல் சொன்னது
அன்பு செய்ய​ ஆன்மாக்கள்
ஆயிரம் உண்டு என்று
ஆனந்தம் அங்காங்கே உண்டு என்று !

உலகத்தின் விடிவும்
உனது சிரிப்பும்
என் கண்களை  நிறைத்திட​
புதிய​ ஆண்டு மலரட்டும் !

பொங்கல்

போகிப் பொங்கலில் புதிய​
எண்ணங்களை விதைத்து ,
சூரியப் பொங்கலில் நன்றி
உணர்வினைப் படைத்து ,
மாட்டுப் பொங்கலில்
ஜீவகாருணியம் உணர்ந்து ,
காணும் பொங்கலில் உறவுகள்
கண்டு மகிழ்ந்து தனித்துவங்களை
அங்கீகரித்து
சமத்துவங்களைப்
பேணி  மகிழ்வோம் .
பொங்கட்டும் உள்ளம்
புரிந்து உணர்ந்து கொண்டு
புத்துணர்வு கொண்டு ...!

வாழ்த்து

காதல் சொல்லி வரும் காற்றே
வருக​ !
கண்களிலிருந்து
காதல் மழை பொழிக​
பூக்களைப் பெற்ற மரம் போல​
பூமகள்  மனம்  நிறைக​
புன்னகை சிந்திய​ பொழுதே  தருக​
பாக்களில் சொல்லாத​
பாசம் பொழிக​
பாரினில் என் நாளும் .
 
நினைக்க​ வேண்டியதை மறந்து
மறக்க​ வேண்டியதை
நினைத்து
நீயும்  நானும்
இருப்பதேனோ?
வாழ்வின் நிலையை
இழப்பதேனோ ?

சில​ முற்றுப்புள்ளிகள் , அடுத்த​
அதையும் ஏற்க​ வேண்டியது தானே
நடப்பதை அமைதிப் படுத்தும் எனில் .

மை பூசாத​ உன் கண்கள் ,
ஒரு மகிழ்ச்சிக் கடலை
ஒன்றுகூட்டி
மனதில் அலை அடிக்க​ வைத்தது .

இது உனக்கு கிடைத்த​ மரக்கட்டை
இதை வைத்து கரை ஏறுவதும்
கப்பல் செய்து கடலை ஆள்வதும் உன்
திறமையைப் பொறுத்தது .

இஸ்ரேல் போர்

கடலின் அலைகள் தொட்டுப் பார்க்க​
மறுக்கவில்லை
கால்கள் கறுப்பாக​ இருப்பதால்
நீ  இன்னும்  பூ நூல்களோடு
புதிர் போடுகின்றாய்
இரவு விடியாது என்று ?

இருள் சூழ்ந்த​ தேசத்திலும்

இசைக்கத் துடிக்கும்
குழந்தைகளின் இதயத் துடிப்பை
நிறுத்தி விட்டு
சாதனைப்  பட்டியலை
எத்தனை  காலம்   தான்
எழுதப் போகிறீர்கள் ?

பெளர்ணமி நிலவு
இருந்து என்ன​ ?, உள்ளே
அவன் வாழ்வு இருள்
சூழ்ந்து கொண்டே இருந்தது !

சிததிரா பெளர்ணமி நாள்

நிலவு முழுமையடையும்
ஒரு பெளர்ணமி இரவு வரலாம்
இன்று இல்லாத​ எத்தனையோ
மனிதர்கள்
நினைவுகளில் நீ  மிதக்கலாம்
வெளிச்சம் உன் மீது படும் போது
உனக்கு வெளிச்சம்
கொடுத்த​ கண்களை
நீ தேடலாம்
காலம் மாறியதால் நீ
கண்ணீருடன்
நிலை மாறலாம்
கண்களின் வலியை
மேலும் கூட்டி  
விட்டுச் செல்லலாம் எனினும் என்ன​
இவை தானே வாழ்க்கை
இதையும் கடந்து போவது தானே
மானுட​ வாழ்க்கை .

ழும் அன்னையர்

காயப்படுத்தியவரிடமே
சரணாகதி அடைந்து எப்படி ஒரு கண​
வாழ்வில் ஒளி ஏற்ற முடியும் ?

கலைந்து கலைந்து கூடும்
மேகங்கள்
கனிந்து , கனிந்து  மணக்கும்
கனிகள்
விழுந்து , விழுந்து நகரும்
நாட்கள்
விரிந்து , விரிந்து  பறக்கும்
கன்வுகள்
விதைத்து , விதைத்து விளையும்
விண்மீன்கள்
இசைத்து , இசைத்து இனிமைத்தரும்
இன்னிசைகள்
இருக்க​ ஏன் நீ மட்டும்
தனிமையில் தவிக்கிறாய்

எத்தனை மனிதர்களை  இழந்தாலும்
எம் மெளனத்தை மட்டும் இழக்கவில்லை ,
( நாம் எவ்வளவு தைரியமானவர்கள்
என்பது இப்போ புரிகிறதா? )