பவதாரணியின் பாரதி கலைக்கோயிலின் நட்சத்திர இரவு - 2011
கடந்த 29-10-2011, சனிக்கிழமை, ரொறன்ரோ 50, ஜாவேயிஸ் டிரைவில் உள்ள கலையரங்கில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் பெருமையுடன் வழங்கிய நட்சத்திர இரவு - 2011 இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்இந்தியா, இலங்கை போன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி நடத்தி, கனடாவில் 24 மணிநேர தொடர் இசை நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்து, பிரபல திரை உலக இசை அமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், மற்றும் இசை ஆர்வலர்கள் பலரின் பாராட்டையும், அபிமானத்தையும் பெற்று வெற்றி நடை போடும் பவதாரணியின் பாரதி கலைக் கோயில் இசைக் கலைஞர்களும், மாணவர்களும் ஒருங்கிணைந்து நடத்திய நட்சத்திர இரவு, இனிமை, புதுமை, குதூகலம் அனைத்தும் ஒன்றுகூடிய இசை நிகழ்ச்சியாக இசை ஆர்வரர்கள் பலராலும் பாராட்டத்தக்க வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தமிழில் வெளிவந்த மாற்று ஊடகம் சார்ந்த சிற்றிதழ்களை ஒருங்கே இணையத்தில் வாசிக்கக் கொடுப்பதில் தமிழ் ஸ்டுடியோ செயல்பட்டுக் கொண்டிருகிறது. அதன் ஒரு பகுதியாக
அன்புள்ள அண்ணா பற்றாளர்களுக்கு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சிறப்புகளும், அது மாற்றப்படுவதற்கான கண்டனங்களும்
அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம். பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா 12-11-2011, 13-11-2011 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது, உறவுகளுடன் நண்பா்களுடன் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்!
அக்டோபர் புரட்சி பற்றி அறியாத முற்போக்குக் கருத்துடையோர் இருக்க முடியாது. இது ரஷ்யப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும்.1917ம் ஆண்டில் நடந்தது. இரண்டாவது அக்டோபரில் நிறைவுற்றது. முதலாவது 1917 பெப்ரவரியில் நிகழ்ந்தது. மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சி இதுவாகும். 1922ல் சோவியத் ஒன்றியம் உருவாவதற்கு முன்னோடியாக அமைந்தது இதுவெனலாம். இந்த மகத்தான நிகழ்வின் நினைவாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின ஆதரவில் பேருரையும் நூல் வெளியீடும் நடைபெற்றன.மகத்தான அக்டோபர் புரட்சி நினைவாக பேருரை செல்வி திருச்சந்திரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஆதரவில் இன்று , நவம்பர் 5, 2011, 'டொராண்டோ' வில் எழுத்தாளர் நரசய்யாவுடனொரு சந்திப்பு நடைபெற்றது. நான் சென்றபோது கூட்டம் தொடங்கிவிட்டது. நரசய்யா ஆரம்பகாலக் கடற்படைப் பொறியியலாளராகப் பணியாற்றிய தனது அனுபவத்தையும், ஆனந்தவிகடனுக்குக் கதைகள் எழுதிய அனுபவத்தையும் விபரித்துக்கொன்டிருந்தார். தனது முதற் சிறுகதையே விகடனில் முத்திரைக் கதையாக வெளிவந்த அனுபவத்தையும் நினைவு கூர்ந்தார். - சுற்றிவரப் பார்த்தேன். எழுத்தாளர்களான என்.கே.மகாலிங்கம், அ.முத்துலிங்கம், செழியன், டானியல் ஜீவா, க.நவம், திருமாவளவன், சுமதி ரூபன், 'காலம்' செல்வம் எனப் பலர் சமூகமளித்திருந்தனர். - முனைவர் செல்வா கனகநாயகம் அவர்களின் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
திருவண்ணாமலையில் மிக சிறப்பாக நடைபெற்ற முற்றம் இலக்கிய சந்திப்பில் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமைகள் பங்கேற்று, உரையாற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போது நம்மிடையே இல்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற காலங்களில் அதில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கில்லாமல் போனதே என்று பலரும் வருத்தப்படும் அளவிற்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இருந்தாலும் அந்த ஆளுமைகளின் குரலை முற்றம் நிகழ்ச்சியை நடத்தி வந்த எழுத்தாளர் பவா செல்லதுரை பதிவு செய்து வைத்துள்ளார். ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் அறிய வாய்ப்பை எனக்களித்திருந்தார். இது மிக முக்கியமான வரலாற்றுப் பணி. தமிழின் மிக முக்கிய ஆவணம், இந்த முற்றம் இலக்கிய நிகழ்வு. இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்கு தேவைப்பட்ட பொருளாதார உதவியை நண்பர் தவநெறி செல்வன் செய்துக் கொடுத்தார்.
இலங்கை தேசிய இன ஒடுக்குமுறை குறித்த கருத்துப்பரிமாற்றத்திற்கான சந்திப்பு ஒன்றை பிரான்ஸ் சமூகப் பாதுகாப்பு அமைப்பும் (CDS – Comité de Defense Social -France) அசை-சமூக அசைவிற்கான எழுத்தியக்கமும் இணைந்து சனிக் கிழமை 22.10.2011 பாரிசில் ஒழுங்கமைத்திருந்தன . இதில் கலந்துகொள்ள பிரான்சில் இருக்கும் பல்லின இடதுசாரி செயல்பாட்டு ஆர்வலர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். “திட்டமிட்ட இனப்படுகொலை” என்ற எல்லைவரை சென்றிருக்கும் இலங்கை தேசிய இன ஒடுக்குமுறை தொடர்பாக சர்வதேச இடதுசாரி அமைப்புக்கள் மத்தியில் போதிய தெளிவின்மை காணப்படுவது பற்றியும் பிரதானமாக உரையாடப்பட்டது.
List of Employers for JOB FAIR and Training Expo THURS. OCT. 20, 2011 International Centre - Mississauga. PLEASE forward this email to friends. NAPP Canada Jobfair and Training Expo HAPPENING 



தமிழ் கலை இலக்கியப் பரப்பில் 'பேராசிரியர் க.கைலாசபதி மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அவர் மறைந்து சுமார் 30 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் அவரது பெயர் குறிப்பிடப்படாத அரங்கு இல்லை எனச் சொல்லுமளவிற்கு இன்றும் பேசப்படுகிறார். விமர்சனங்கள் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் எழுப்பப்பட்டபோதும் அவரது பெயர் தொடர்ந்தும் உச்சரிக்கப்படுகிறது. அவரது எழுத்துகளிலிருந்து உதாரணங்கள் காட்டப்படுகின்றன. அவரது நூல்கள் பாடப் புத்தகங்களாகவும் பயிலப்படுகின்றன. ஆயினும் அவரை நேரடியாகத் தெரியாத, அல்லது அவரது காலத்தில் வாழ்ந்திராத இளம் எழுத்தளார்களும் ஏனைய மாணவர்களும் இருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினருக்கு 'பேராசிரியர் க.கைலாசபதி பற்றிய ஒரு சிறிய ஆனால் காத்திரமான அறிமுகத்தைத் தருவதற்கான ஒரு நூல் தேவை என உணரப்பட்டது. இந்நிலையில் திரு லெனின் மதிவானம் எழுதி குமரன் புத்தக நியைத்தின் வெளியீடாக ஒரு நூல் வெளிவந்துள்ளது. 'பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்' என்ற லெனின் மதிவானம் அவர்களின் இந் நூல் ஆய்வு விழா 09.10.2011 ஞாயிறு மாலை நடைபெற்றது.
சென்னையில் உள்ள சிறந்த புத்தக விற்பனையகமான டிஸ்கவரி புக் பேலஸ் துயில் நாவல் குறித்து கலந்துரையாடல் மற்றும் வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார், இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’ ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்திடம் தனது நாட்டியக் கலையை தொடர்ந்து முறையாக முழுமையாகப் பரதத்தைப்பயின்று அண்மையில் லண்டன் The Orchard Theater இல் அரங்கேற்றம் கண்டுகொண்டார். பரதக்கலை மட்டுமன்றி அக்கலையோடு பிணைந்திருக்கும் சங்கீதக் கலையையும் நான்கு சகாப்தங்களாக பரதநாட்டியஇ குச்சுப்பிடி அரங்கேற்றங்களுக்குப் பாடிவரும் ‘நாட்டியக் கோகிலவாணி’ ஸ்ரீமதி அம்பிகா தாமோதரத்திடம் கற்றுத் தேறிய பெருமைக்குரியவராவார் இந்த இளம் சாகித்தியா.
“வெகுஜனப்போராளி கிருஷ்ணபிள்ளை” என்ற நினைவு நூல் 05.09.2011 அன்று காலை தொண்டைமானாற்றில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. கிருஷ்ணபிள்ளையின் 31 வது நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓய்வுபெற்ற அதிபர் செ. சதானந்தன் தலைமை வகித்தார். நிகழ்வில் சி.க செந்திவேல் அவர்களுக்கு நூலின் முதற்பிரதியை கிருஷ்ணபிள்ளையின் மகன் கி. நவநீதன் வழங்கினார். இந்நூலில் வே.சிவயோகன், சி.காசெந்திவேல், ,சி.வன்னியகுலம், க.தங்கவடிவேல், செ.திருநாவுக்கரசு, கி.கணேசன், நந்தினிசேவியர், எம்.கே சிவாஜிலிங்கம், வையாபுரி, தெணியான், திருமதி பிறேமா மதுரநாயகம், வ.சின்னத்தம்பி, தணிகையன், குணசிங்கம் மற்றும் சீனியர் குணநாயகம் ஆகியோரின் கட்டுரைகள் ,குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









