விளம்பர உத்திகள்!
1.0. ‘உத்தி’ என்பது இல்லையென்றால், வாழ்க்கையே இல்லை எனுமளவிற்கு நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது. அந்த வகையில், விளம்பரம் என்பது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களது பொருளை விற்க மேற்கொள்ளும் வணிக உத்திகளில் ஒன்றாகும்.
1.1. உத்தி விளக்கம்:
உத்தி என்பதற்கு அகராதிகளும், அறிஞர்களும் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றனர். உத்தி என்வபது கலை ஆக்க முறையாகும். ஒன்றைச் சொல்ல, ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்ல செயற்கையாகக் கலை நுணுக்கத்துடன் விளம்பரங்களில் அமைக்கும் முறையே உத்தியாகும். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற விருப்பம், விரைவூக்கம், முனைப்புப் போன்றவற்றை ஏற்படுத்த கவர்ச்சியான அம்சங்களை விளம்பரங்களில் புகுத்துவதே உத்தி எனப்படுகின்றது. தொல்காப்பியரும், நன்னூலாரும் பல்வேறு உத்திகளைக் கூறுகின்றனர்.
1.2. விளம்பர உத்திகள்
விளம்பர உத்திகளை, காட்சிப் பயன்பாட்டு உத்திகள், மொழிப்பயன்பாட்டு உத்திகள், பிற உத்திகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.


தமிழ் மரபிலக்கணங்களை ஆய்வறிஞர்கள் அகத்தியம், தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோகவிவேகம் என நான்கு மரபுகளாக இனங்காண்கின்றனர். இவ்வகைப் பிரிப்புமுறைகள் இலக்கண உருவாக்க நோக்கம், புறக்கட்டமைப்பு, முன்னோர் நூலைப் பின்பற்றும் பொதுமரபு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன எனலாம். தமிழ் மொழிக்குரிய முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், அதன் மரபாக்கம் குறித்தும் விளக்க முனைகின்றது இக்கட்டுரை.


மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது. எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.



ஆற்றுப்படை இலக்கியம் வளர்வதற்கு காரணம் அக்காலச் சூழலே காரணமாகும். ஏனெனில் சங்க காலம் மன்னரின் ஆட்சிகாலம் என்பதால் அவை சமூக உணர்வு நோக்கோடு செயல்பட்டது. மன்னனுக்காக சமுதாயமும் வாழ்ந்த காலம் சங்ககாலம். மன்னர்கள் வீரம் கொடை என்ற இரண்டையும் உயிராக மதித்து வாழ்ந்துள்ளார்கள். ஆகையால் கலைஞர்கள் மன்னரிடம் செல்லும்போது அக்கலைஞர்களை மன்னாகள்; ஆதரித்துப் போற்றியுள்ளனர். இருவரிடையே இணக்கமான நட்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் போற்றி வாழ்ந்தமையால் ஆற்றுப்படை இலக்கியம் தோன்றலாயிற்று. சங்ககால ஆற்றுப்படைக்கு பின்னர் எழுந்தது பிற்கால ஆற்றுப்படை. கால மாற்றத்திற்கேற்ப அறிவியலின் பரிமாண வளர்ச்சி போன்றுää இலக்கியத்திலும் காலத்திற்கேற்றவாறு பாடுபொருளில், மாற்றத்தினையும் வளர்ச்சியினையும் பார்க்க முடிகிறது. இவ்வகையில் வளர்ந்தது தான் பிற்கால ஆற்றுப்படை....
தோழி தலைவியைத் தலைவன் வரைந்துகொள்ளாது காலந்தாழ்த்தும் சூழலில் தலைவனிடம் தலைவியை வரைந்து கொள்ளுமாறு பல்வேறு காரணங்களைக் கூறியும் தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளைக் (வெறியாட்டுää இற்செறிப்பு, அலர், தலைவனையே எண்ணி தலைவி மெலிதல், வருந்துதல்) கூறியும் வரைவினை வேண்டுவாள். இது ‘வரைவு கடாதல்’ ஆகும். இவ்வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்திலும் எட்டுத்தொகை அகநூல்களுள் ஒன்றான அகநானூற்றிலும் எவ்வாறு அமைந்துள்ளது என்றும், அகநானூற்றில் அமைந்துள்ள வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்துடன் எவ்வாறு பொருந்தியும் மாறுபட்டும் அமைந்துள்ளது என்றும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. “வரைவு கடாதல் - மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்: கடாவல் -திருமணத்தில் செலுத்தல்”1 என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழியகராதி குறிப்பிடுகிறது. மு. இராகவையங்கார் வரைவுகடாதல் என்பதற்கு, “தலைவன் இருவகைக்; குறிகளிலும் பலகாலும் வந்தொழுகும் இடத்து, இக்களவு வெளிப்படச்; சுற்றத்தார் இற்செறிப்பரோ என்றும், வழியாலும் பொழுதாலும் தலைவற்கு ஏதம் வருங்கொல் என்றும்; தோழி அச்சமுற்று, இவ்வொழுக்கமொழுகல், நுங்குடிப் பிறப்புக்குஞ் சிறப்புக்கும் பொருந்தாமையின், இனி நீவிர் இவளை மணந்து கொள்வதே தகுதியென்று தலைவனை வரைவுகடாவத் தொடங்குவாள் (வரைவு கடாதல் - மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்)”2 என்று விளக்கமளிக்கின்றார்.. ...
உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால சமூகத்தினை இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிருவாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் நிகழ்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது. நிலவுடைமைச் சமூகத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையினையும், சிலப்பதிகாரத்தில் பெண் விற்கப்படுதலையும் பற்றி ஆராய்ந்தறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1.0 முன்னுரை
ஒழுக்கநெறி சார்ந்த சமண பௌத்த சமயங்களின் வரவால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழில் தோன்றின. அப்பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் நீதிநூல்களாய் அமைந்தன. கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, காமம் இன்மை, கள்ளாமை எனும் பஞ்சசீலக் கொள்கைள் இவ்விலக்கியங்களால் புதிய கருத்தாக்கமாய் முன்நிறுத்தப்பட்டன. அக்காலப் புலவர்கள் மருத்துவர்களாகவும், இருந்ததால் உடல்நோயை, உள்ள நோயை நீக்குவதற்கு இலக்கியத்தையே மருந்தாகக் கருதினர். பரத்தமை ஒழுக்கம், கள் அருந்துதல், அளவுக்கதிகமாய் உணவு அருந்துதல் போன்றவற்றை நோய்க்கான காரணிகளாகச் கண்டு, எளிமையான யாப்பமைப்பில் உடல், உள்ள நோயை நீக்க இலக்கியங்கள் படைத்தனர். வாதம், பித்தம், கபம் எனும் மூன்றே நோய்களுக்குக் காரணமாக அப்புலவர்கள் கண்டனர்.

முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு எளிய கிராமத்துச் சிறுவனுக்கு தமிழ் வழியாக என்ன வாசிக்க கிடைத்திருக்கும்? முதலில் ராணி, தேவி, கல்கண்டு. பின்னர் மெல்ல குமுதம், கல்கி, விகடன். அவற்றின் வழியாக சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான தொடர்கதைகள். அவற்றில் ஒரு பக்கத்துக்கு மிகாமல் வரும் கட்டுரைகள். அவற்றின் வழியாக தெரியவரும் உலகம் ஒரு உள்ளங்கைக் கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்த்துக்கொள்வது போன்றது. அவ்வளவுதான். அதற்குமேல் அவனை தற்செயல்கள் உந்திச்சென்று எங்காவது சேர்ப்பித்தால் ஒழிய அவனுக்கு இன்னொரு உலகம் அறிமுகம் ஆகப்போவதில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த உலகம் விரிவடையப்போவதில்லை. மெல்ல சலித்து அவன் தன் அன்றாட வாழ்க்கையின் முடிவில்லா அலைகளில் மூழ்கி மறைந்து போய்விடுவான். இந்த ஒற்றைப்பெரும்பாதைக்கு மாற்றாக அன்று இருந்த ஒரே சிறுபாதை சோவியத் நூல்களினால் ஆனது. சோவியத் ருஷ்யாவின் ராதுகா பதிப்பகம், முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் ஓர் ஆர்வமுள்ள தொடக்க வாசகனுக்கு அவனுடைய இளமையை சவாலுக்கு அழைக்கும் அற்புதமான பாதை ஒன்றை அறிமுகம் செய்தன. பேரிலக்கியங்களின் ஒளிமிக்க கனவுகளின் வழியாக அவனை நடத்திச்செல்லும் பாதை.
குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. -
ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும். அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடைய செய்துவிட முடியாது, அவை புகைமயக்கம் மட்டுமே, ஒவ்வொரு நாவலின் பின்னேயும் எழுத்தாளர்கள் வெளியே பகிர்ந்து கொள்ளாத கஷ்டங்கள். நெருக்கடிகள். நாவலை எழுதுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவங்கள். நிஜமனிதர்களின் சாயல்கள் என வாசகஉலகம் அறியாத எவ்வளவோ இருக்கின்றன. அவை எழுத்தாளனின் ரகசியங்கள். அவற்றை தனக்குள்ளாகவே புதைத்துவிடவே எழுத்தாளன் எப்போதும் விரும்புகிறான், அரிதாக சிலர் தனது நாவலின் அந்தரங்கக் குறிப்புகளில் ஒன்றிரண்டைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை புகழ்ந்து பேசப்படுகிறது, தோற்ற குதிரை புறக்கணிக்கப்படுகிறது ஆனால் ஒடி வலித்த அதன் கால்களின் வேதனையை ஒருவருமே கவனிப்பதில்லை, அப்படி பட்டது தான் நாவலின் வெற்றி தோல்வியும், அதன் முன்னே எழுத்தாளின் வலிகள் கண்டுகொள்ளபடாமல் போகின்றன,
கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள்.
யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து போயினர். கலப்பு மணம் புரிந்து கணவனைப் பிரிந்து வாழ்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததனால் இவருக்கும் ஊரின், உறவின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. அருந்ததி ராய்க்கு சமூகம் எதிர் உலகமாகத்தான் முதலில் அறிமுகமாகியது. பின்னர் எல்லாவற்றையும் மீறி நீலகிரியில் பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பில் சேர்ந்தார். உடன் படித்த ஒருவரைக் காதலித்து மணந்த தால் படிப்பு பாதியில் நின்றது. அந்த வாழ்க்கையும் நான்கு ஆண்டுகள்தான் நிலைத்தது. அவரிடமிருந்து பிரிந்த பின்னர் “பிரதீப் கிரிஷன்’ என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து திரைப் படம் எடுத்தனர். இவ்வாழ்க்கையும் இவருக்கு நிலைக்க வில்லை. இவரின் கட்டற்ற சிந்தனை அடக்குமுறைக்கு அடங்காதவராக இவரை வடிவமைத்திருந்தது. மேலும் புரட்சிச் சிந்தனை மிக்கவராகவும் இவர் இருந்தார். இவரின் முதல் ஆசிரியரே இவரின் தாய்தான். “”உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள். நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற பாடம் அவருக்குச் சூழலே கற்றுக் கொடுத்தது. அதனால் எல்லாவற்றின்மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி படைப்புகளின் மூலம் பலரின் கவனம் பெற ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 1997-ல் அவர் எழுதிய “த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small things) என்னும் நாவல் புக்கர் பரிசினைப் பெற்றது. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர்தான்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









