'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2006 இதழ் 73 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான ணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சிலம்புமடல்!
கடந்தவை...உள்ளே


சிலம்பு மடல் - 20    மதுரை மாநகர்!
மதுரை: ஊர்காண் காதை:

Silappathikaramகாவிரிக்கரையில் மாதவியைப் பிரிந்து, பின்னர் அக்காவிரி வாழ் சோழ நாட்டையும் பிரிந்து, தற்போது கண்ணகியையும்,  இவ்வையத்தையும் தன் கரையில் பிரியப் போகும் கோவலனை நினைத்துத்தான் வையை அழுதிருக்க வேண்டும்! அவ் வையை நதியைக் கடந்து மதுரை சேர்ந்ததும் கோவலன், காவுந்தி அடிகளிடம் தன் மனைவியைப் பாதுகாக்கச் சொல்லிவிட்டு நகர வாணிகம் பற்றியறிய புறப்படுகிறான்; அதன்முன் கண்ணகிக்கு துன்பம் நேருமாறு நடந்து கொண்டதை எண்ணி கலங்குகிறான். ஊர் பெயர்ந்தாலே துன்பம்தான். னால் இவனோ முன் பின் அறியா நாட்டுக்குள் மனைவியையும் அழைத்துக் கொண்டு ஏழ்மையாய் வந்து நிற்கிறான். முதன் முதலாய் வேற்று நாட்டுக்கு வாழப்போகும் மனிதன் இந்நாளும் அடையும் துன்பங்களைத்தான், அச்சங்களைத்தான் அன்று கோவலனும் பெற்றிருந்தான். 

வாழ இடம் இல்லை; பொருளீட்ட வகையில்லை!  சுற்றி நிற்க சுற்றம் இல்லை!.

ஒரே ஒரு றுதல் அவனுக்கு! அங்கும் அவன் பேசிய அதே மொழி. அதுவும் அன்னைத் தமிழ் நாடே! தமிழ் மட்டுமே அவனை அரவனைத்துக் கொண்டது.

இன்று, புலம் பெயர்ந்த தமிழர்களால், போய்வர தமிழருக்கு நாடிருப்பது போல!.

கோவல-கண்ணகி சோழ நாடு நீங்கி பாண்டிய நாடு சேர்ந்தபோதும் பின்னர் கண்ணகி மட்டும் மதுரை நீங்கி சேர நாடு  சேர்ந்தபோதும் எங்கும் குடியுரிமைத் தேவைகள்(Passport, Visa, Immigraion ) இருந்திருக்கவில்லை!

இன்று அமெரிக்க அய்ரோப்பிய நாடுகள் மற்றும் சில தூர கிழக்கு நாடுகள் கொண்டுள்ள புரிந்துணர்வைப்போல!

சேரமாயும், சோழமாயும் பாண்டியமாயும் இன்ன பிறவாயும் தமிழகம் அந்த காலத்தைய குறைந்த போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகளுக்கு ஏற்றவாறு பிரிந்திருந்தாலும் தமிழ்த்தேயமாய் இணைந்திருந்ததின் பயனே "து!

ஒரு நாள் நேரத்தில் உலகையே சுற்ற முடிந்த இந்த காலத்தில் உலகுவாழ் தமிழர்களை எங்கும் காணமுடிவது "தே தமிழ்த் தேயத்தை சிந்தையில் மலரச் செய்கிறது.
  
       "காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
        'நெறியின் நீங்கியோர் நீர்மையேன் கி
        நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
        அறியாத் தேயத்து ர்இடைஉழந்து
        சிறுமை உற்றேன்! செய்தவத் தீர்!யான்
        தொல்நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
        என்நிலை உணர்த்தி யான்வருங் காறும்
        பாதக் காப்பினள் பைந்தொடி கலின்
        ஏதம் உண்டோ அடிகள்ஈங்கு' என்றலும் ......"        

        (அறியாத் தேயத்து=முன் பின் அறியா நாட்டில்)
         
என்று மேற்கண்டவாறு கோவலன் அடிகளிடம் வேண்ட; தீவினை ஊட்டும் (மற) செயல்களை நீக்கி அறச் செயல்களைச் செய்வீர் என்று "நாவென்ற குறுந்தடியால் வாய் என்ற பறையை அறைந்து" அறத்துறை மாக்களாகிய நாங்கள் எவ்வளவு சொன்னாலும் உறுதியான அறிவில்லா மனிதர்கள் அதன்படி நடக்காமல் பின்னர் தீவினை வந்து சேர்ந்ததும் வருந்துகின்றனர் என்று அடிகளும் வருத்தப்படுகிறார்.

       "கவுந்தி கூறும்; 'காதலி தன்னொடு
        தவம்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்!
        மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று
        அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி
        நாக்கடிப்பு ஆக வாய்ப்பறை "றையினும்
        யாப்பு அறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்"

மேலும் அடிகள், "நீ மட்டும் அல்ல; உன் போல் பலர் தீச்செயல் காரணமாக மனைவியுடன் நாட்டை விட்டு வெளிப்போந்து துயருற்றனர்; நீ நாடு மாறி உறும் துன்பங்கள் போலவே இராமன் சீதையுடனும், நளன் தமயந்தியுடனும் நாடு நீங்கித் துயருற்றனர்! " என்று உரைத்தார்;

       "தாதை ஏவலின் மாதுடன் போகிக்
        காதலி  நீங்கக் கடுந்துயர் உழந்தோன்..."
        (தயரதன் ஏவலால் சீதையுடன் காடு போன இராமன் )

       "வல்லாடு யத்து மண்"ரசு இழந்து
        மெல்இயல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன்...."
        
        (வல்=சூது; நளன் சூதாடி நாட்டைத் தோற்று           
         தமயந்தியுடன் காடு போனது )

ஒருபுறம் வருத்தம்; மறுபுறம் உற்சாகத்தோடு  மதுரை மூதூரை உலாவிப் பார்க்கிறான் கோவலன். காண்கிறான் முதலில் பரத்தையர் வீதியை; 

இக்காதையின் பாதிக்கு பரத்தையர் காதை என்று இளங்கோவடிகள் பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். பரத்தையரை ஆராய்வோர்க்கு திரளாகச் செய்திகள் உண்டு; புகார் பரத்தையரை மதுரை பரத்தையரோடு ஒப்பிட்டும் பார்க்கலாம். 

காலை முதல் இரவு வரை பரத்தையரின் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், கார், கூதிர்,முன்பனி,பின்பனி,இளவேனில் மற்றும் முதுவேனில் காலங்களில் அவர்களின் உடைகள் மற்றும் ஒப்பனை வேறுபாடுகளின் விளக்கம் பல செய்திகளைத் தருவதாக அமைந்திருக்கிறது.

மதுரை மாநகரில், பரத்தையர் வீதி, அரசப் பரத்தையர் வீதி, கலைஞர்கள் வாழ்ந்த இரு பெரும் வீதிகள், அங்காடி வீதி,மணிக்கல் வீதி, பொன் கடை வீதி, அறுவை வீதி (பருத்தி, எலி மயிர், பட்டு கியவற்றால் நெய்யப்பட்ட துணிகள் விற்கப்படும் வீதி), கூலவீதி (தானியங்கள், பாக்கு, மிளகு போன்றவை விற்கப்படும் வீதி), இவை யாவையையும் கோவலன் சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் கண்ணகியும் காவுந்தியும் இருந்த புறஞ்சேரிக்கு மீள்கிறான்!

"னைத்து வீதிகளிலும், இந்த மணிக்கல் வீதியில் விற்கப்பட்ட ஒன்பது வகை மணிகள் பற்றிய குறிப்புக்கள் சிறப்புவாய்ந்தவை. 

வயிரம்:
காகபாதம், களங்கம், விந்து, இரேகை என்ற நான்கு குற்றங்களும் இன்றி, நுட்பமான முனைகளையும், நால்வகை நிறத்தையும், நிறை ஒளியையும் கொண்டவை வயிர மணிகள். வயிரத்தில் வகைகள் வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என நான்காகச் சொல்லப்பட்டிருக்கிறது.

       "காக பாதமும் களங்கமும் விந்துவும்
        ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
        நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
        நால்வகை வருணத்து நலம்கேழ்  ஒளியவும்...."

மரகதம்
கீற்று, மாலை, இருள் என்னும் மூன்று குற்றங்கள் இல்லாது பசுமையான நிறத்தையும், இளங்கதிரின் ஒளியை உடையது.

       "ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
        பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்..."

மாணிக்கம்:
பதுமம்(சிவப்புக்கல்) , நீலம், விந்தம்(குன்றுமணி நிறம்), படிதம்(கோவைப்பழ நிறம்) என்று நால்வகையான, விதிமுறை மாறாத மாணிக்க மணிகள்:

       "பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
        விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்...."

புருடராகம்:
பூச மீனின் வடிவமும், பொன்னைத் தெளிய வைத்தைப் போன்ற நிறமும் கொண்டது:

        "பூச உருவின் பொலம் தெளித்தனையும்"

வைடூரியம்:
குற்றமற்ற ஞாயிற்றின் ஒளி போலவும் தெளிந்த தேன்துளி போன்ற நிறத்தையும் கொண்டது:
        
        "தீது"று கதிர்ஒளித் தென்மட்டு உருவவும்"

நீலம்:
இருளைத் தெளிய வைத்தாற் போன்ற நீலமணிகள்.

        "இருள் தெளித்தனையவும்....."

கோமேதகம்: 
மஞ்சள் சிவப்பு என்ற இரு நிறங்கள் கலந்தது.

        "இருவேறுரு உருவவும்......."

மேற்கண்ட மானிக்கம், புருடராகம்,வைடூரியம்,நீலம்,கோமேதகம் கிய ஐமணிகளும், ஒரே பிறப்புடையது/தோற்றத்துடையது ஆனால் ஐந்து வேறுபட்டவனப்பினை உடையவை.

        "ஒருமைதோற்றத்து ஐவேறு வனப்பின்
         இலங்குகதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும்"

முத்து:
காற்று, மண், கல், நீர் என்பவற்றால் ஏற்பட்ட குற்றங்கள் சிறிதும் இல்லாமல், தெளிந்த ஒளியுடையனவும், வெள்ளியையும் செவ்வாயையும் (கோள்கள்) போல வெண்மையும் செம்மையும் உடையனவும், திரட்சியுடையவவுமான முத்துக்கள்.

        "காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
         தோற்றிய குற்றம் துகள்அறத் துணிந்தவும்
         சந்திர குருவே அங்கா ரகன்என
         வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்.."

பவளம்:
நடுவே துளையுடையனவும், கல்லிடுக்கிற்பட்டு வளைந்தனவும், திருகுதல் பெற்றனவும் என்னும் குற்றங்கள் நீங்கிய கொடிப்பவளங்கள்.        

        "கருப்பத் துளைவும் கல்லிடை முடங்கலும்
         திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்..."

இப்படியான ஒன்பது வகை மணிகளும் ஆங்கு விற்கப்படுதலை கோவலன் கண்டான்.

சிலம்பு மடல் - 21 அடைக்கலமாய்த் தந்த கொடை!
மதுரை:அடைக்கலக்காதை:

பொதிகை வலம் வந்து, குமரியில் நீராடி ஊர் திரும்பும் வழியில் மாடலன் கோவலனைக் காண்கிறான். கோவலன் அவனை வணங்குகிறான்; இருவரும் உரையாடுகின்றனர், மாதவியின் மகப்பேறு குறித்து; மாடலன் சொல்வான்;

தலைக்கோலி என்ற பட்டம் பெற்ற மாந்தளிர் மேனியாள் மாதவி, பால்வாய்க் குழந்தையைப் பெற்றெடுத்தாள்! வாலாமை நாள்கள்  (தூய்மையின்மை நாட்கள் அல்லது தீட்டு நாட்கள்) நீங்கிய பின்னர் உன் எண்ணப்படியே, மணிமேகலா என்ற உன் குல தெய்வத்தின் பெயரையே உன் மகளுக்கு ஆயிரம் கணிகையர் வாழ்த்துக் கூற வைத்தனள் மாதவி!

       "வேந்துஉறு சிறப்பின் விழுச்சீர் எய்திய
        மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
        பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து.
        வாலா மைந்நாள் நீங்கிய பின்னர் 
        மாமுது கணிகையர் மாதவி மகட்கு
        நாம நல்லுரை நாட்டுதும் என்று....

        எம்குல தெய்வப் பெயர்ஈங்கு இடுகஎன
        அணிமே கலையார் ஆயிரம் கணிகையர்
        மணிமே கலையென வாழ்த்திய "ான்று....."

கோவலனோ, கனவொன்று கண்டேன் மாடல, நள்ளிருள் யாமத்தில்!. கருத்துற்றேன்! தீங்கொன்று தேடி வருகுது போல் தெரிகிறது! கவலை கொண்டேன்;  உரைப்பேன் கேள்!

"மதுரை மண்ணில் கீழ்மகன் ஒருவனால் கண்ணகி நடுக்குற்றாள்! என் ஆடையைப் பிறர் பறித்துக் கொள்ள எருமையின்மேல் ஏறிப் பயணித்தேன்! கண்ணகியோடு சேர்ந்து நானும் பெரியோர் பெறும் பேறுற்றேன்! காமன் தன் மலரம்புகளை எறிந்து விட்டு வருந்துமாறு, போதிமரத்தடி புத்ததேவன் முன் மணிமேகலையைத் துறவி ஆக்கினாள் மாதவி! " என்றான்;

       "கோவலன் கூறும்:'ஓர் குறுமகன் தன்னால்
        காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
        நாறுஐங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக் 
        கூறைகோள் பட்டுக் கோட்டுமா ஊரவும்,
        அணித்தகு புரிகுழல் யிழை தன்னொடும்
        பிணிப்புஅறுத் தோர்தம் பெற்றி எய்தவும்
        மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
        காமக் கடவுள் கையற்று ஏங்க
        அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
        மணிமே கலையை மாதவி அளிப்பவும்,
        நனவு போல நள்இருள் யாமத்துக்
        கனவு கண்டேன் கடிதுஈங்கு உறும்'என,...... "

புறஞ்சேரி என்பது அறவோர் வாழும் எளிமையான இடம்; அது இல்லறத்தார் தங்க ஏற்ற இடம் அன்று! "மாசாத்துவான்மகன்" என்று உரைத்தால் போதும் அரசர்க்கு அடுத்தநிலையில் உள்ள வணிகர் யாவரும் உன்னைப் பெருமையுடன் ஏற்றுக் கொள்வர்; அப்படியான ஒருவரின் இடத்தில் நீயும் கண்ணகியும் தங்குக என்று காவுந்தியாரும் மாடலனும் கோவலனிடம் உரைத்தனர்;

        "....இங்கு ஒழிகநின் இருப்பு
        காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
        மாட மதுரை  மாநகர் புகுக'என
        மாதவத்து ட்டியும் மாமறை முதல்வனும்
        கோவலன் தனக்குக் கூறுங் காலை.."

அவ்வேளை, இயக்கி (இசக்கி?)எனும் தெய்வத்துக்குப் பால்சோறு படைத்துத்திரும்பின மாதரி என்ற இடையர் குல மூதாட்டி காவுந்தி ஐயையைக் கண்டதும் அடி தொழுதனள்;

மாதரியின் முதுமையையும் , நேர்மைச் சிறப்பையும் அறிந்திருந்த அடிகள் மாதரியிடம் கண்ணகியைத் தங்க வைப்பதில் தவறிருக்காது என்று கருதி,

மாதரி கேள்! "ஊருக்கும் நாட்டிற்கும் புதியவர்களான இப் பெருஞ்செல்வ மடந்தைதன் கணவனின் தந்தையின் பெயரைக் கூறினால் போதும், இந்நகர்ப் பெருஞ்செல்வர் இவர்களைத் தன் விருந்தினராக  ஏற்றுக் கொண்டுப் பெருமை கொள்வர்; அப்படி அவள் செல்லும் வரை இக்கண்ணகி நல்லாளை உன்னிடம் அடைக்கலமாகத் தருகிறேன்! காத்திருப்பாய்! மேன்மைச் சிறப்பு பெற்ற அவளுக்குத் தாயும் நீயேயாகி தாங்கிடுக! என்றார் மாதரியிடம்;"

பெரும் பேறாய் ஏற்றுக் கொண்டனள் மாதரி!

       "புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
        பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
        ஆயர் முதுமகள் மாதரி என்போள்
        காவுந்தி ஐயையைக் கண்டு"டி தொழுது....

       "மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
        ஏதம் இன்றுஎன எண்ணினள் ஆகி
        மாதரி கேள்! .. .. 
        
        உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்
        இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்;.. ..  
        ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
        தாயும் நீயே ஆகித் தாங்கு;"

ஊரறிந்த நாடறிந்த பெருஞ்செல்வன் மாநாய்கன்தன் மகள் கண்ணகி நல்லாள், நல்லுலகம் எல்லாம் அறிந்த அருஞ்செல்வ மாசத்துவான் மகனின் மனைவியானாள்!

செல்வச் சிறப்பில் சீருடன் வாழ்ந்து வந்த மெல்லியலாள்!

அவளின் மென்மைக்கும் அவள் பாதங்களின் மென்மைக்கும் இலக்கணமாய்த்தான், இன்பம் பாடிய அய்யன் வள்ளுவ நாயனார் 

        "அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
         அடிக்கு நெருஞ்சிப் பழம்"

என்று கூறிப்போனாரோ?' என்று எண்ணக்கூடிய அளவிற்கு மென்மையானவள் கண்ணகி!

ஆதலின், காவுந்தியார் கண்ணகியை அடைக்கலம் கொடுத்து, மாதரியிடம், "காலடிகளை நிலமகளும் அறிந்திரா அளவிற்கு செல்வச் செழிப்பால் மேன்மையானவள் கண்ணகி" என்று உரைக்கிறார்!

        ".......ஈங்கு
        என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
        வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்!"
        
பெண்மையின் அடிகளை அளந்து ஈரடியில் பெருங்கோ சொன்னதை, ஓரடியில் இளங்கோ செய்தான்  "வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்" என்று, கண்ணகிக்காக!

"அத்தகைய மென்மையாள், தாம் நடந்து வருகையில் கணவனுக்குக் கதிர்வெம்மையால் ஏற்பட்ட துன்பம் கண்டு வருந்தினாளன்றி தம் துயரம் வெளிப்படுத்தாத்  தகுதியினள்! இப்படிப்பட்ட ஒரு பெண்ணரசியை நான் கண்டதில்லை! என்று அய்யை கூறினார்;

       "தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
       இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
       கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
       பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்;.."

பிறரின் துன்பத்திற்காக வருந்துபவர்களை, ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும், குடும்ப வாழ்விலாயினும் சரி, பொது வாழ்விலாயினும் சரி, அறவாழ்விலாயினும் சரி உயர்ந்த நோக்கமுடையவராகத்தான் சமுதாயம் போற்றி வருகிறது;

அந்த உயர்நோக்கோடு, ஒழுக்கமும் ஒருவரிடம் இருக்குமானால் சமுதாயத்திற்கு நேர்மையான வழிகாட்டியாக  அவர்கள் ஆகிவிடுகிறார்கள்!

இங்கே, கண்ணகியின் துயரங்களுக்காக கோவலனும் கோவலனின் துயரங்களுக்காக கண்ணகியும் வருந்துகின்ற நட்பின் பாங்கு ஒரு சராசரி நிகழ்ச்சிதான்;

'இணைந்துவிட்ட இதயங்களின் துடிப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்தடம் கொடுக்கும் உயிர் வாழ்க்கை அது!'

ஆயினும் கண்ணகியின் பல்வேறு சிறப்புக்களும்  ஒருங்கே பார்க்கப்படும் போது  அவள் மிக உயர்ந்து தெரிகிறாள்! அதைத்தான் "பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலமால்" என்று காவுந்தியார் கூறுகிறார்;

மெல்ல மெல்ல கதிரவன் மறையத் தொடங்குகிறான்; "வன் ஒளியையும் வெப்பத்தையும் கொண்டு  ஆக்கம் செய்துவிட்டு  அந்திப் பொழுதில் இல்லம் கூட ஓடிவருகின்றன ஆடுகளும் மாடுகளும்; ஆய்ச்சியரும் இடையர்களும்! உழவரும் இருந்திருக்க வேண்டும்?

அதே நேரத்தில் பெண்மைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற  கண்ணகி நல்லாள்,  தாயும்  ஆகித் தாங்கும் மாதரியின் மனைக்கு  அடைக்கலம் செல்கிறாள்; 

அதிவிரைவில்  கோவலன் கொலைக்களம் போகப்போவதை  அறவே அறியாதவளாய்!.
 


Naga Elangovan'சிலம்பு மடல்கள்' நூலின் ஆசிரியரான சென்னையில் வசித்து வரும் நாக இளங்கோவன் ஒரு பொறிஞர். சென்னையிலிருந்து இயங்கி வரும் உலகத் தமிழர் தன்னார்வ இணைய அமைப்பின் (http:///www.thamizham.org) செயலாளர். பாரதிதாசன் வைய விரி அவையின் (http://bharadhidasan.net) நிறுவனர். எசுபிளனேடு, சென்னையிலமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ பட்டி மன்ற உறுப்பினர்.நாக இளங்கோவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள விரும்புகின்றவர்கள் elangov@md2.vsnl.net.in என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கடந்தவை...உள்ளே


© காப்புரிமை 2000-2004 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner