ஒரு வேண்டுகோள்! 
                  தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி!  - லதா 
                  ராமகிருஷ்ணன் -
                   மதிப்பிற்குரியீர், 
                  வணக்கம். சமீபத்தில் மறைந்த சக மொழிபெயர்ப்பாளர் 
                  தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி செய்யும்பொருட்டு 
                  தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சியில் 
                  உங்களுடைய உதவியாதரவைக் கோருகிறோம். வாழும் காலத்தில் தங்களை 
                  முன்னிலைப்படுத்திக்கொள்ளப் பிடிக்காதவர்களாய் ஆற்றொழுக்காய் 
                  இலக்கியவெளியில் இயங்கி மறைந்தவர்களை நம்மால் மறந்துவிட இயலாது; 
                  அப்படி மறந்துவிடவும் கூடாதில்லையா? அப்படித்தான் எழுத்தாளர் 
                  கோபிகிருஷ்ணனுடைய குடும்பத்திற்கு உதவிசெய்வது நம் கடமை என்று 
                  நாங்கள் நிதியுதவி கோரியபோது எங்களுடைய முயற்சிக்கு உங்கள் 
                  அனைவரிடமிருந்தும் கிடைத்த பேராதரவை இந்தத் தருணத்தில் நன்றியோடு 
                  நினைவுகூர்கிறோம். தோழர்.சிங்கராயர் குடும்பத்திற்கு 
                  நிதிதிரட்டும் எங்கள் முயற்சிக்கும் அத்தகைய நல்லாதரவை 
                  உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். கிடைக்குமென்று மனப்பூர்வமாக 
                  நம்புகிறோம். தோழர் சிங்கராயர் குறித்து அமரந்த்தா எழுதியுள்ள 
                  சிறு கட்டுரையும், அடுத்த மாதம் 10ஆம் தேதி சென்னையில் 
                  நடைபெறவுள்ள தோழர் சிங்கராயர் நினைவுக்கூட்ட அழைப்பிதழும் இங்கே 
                  தரப்பட்டுள்ளன.

                  தோழமையுடன்
                  லதா ராமகிருஷ்ணன்
                  
                  ramakrishnanlatha@yahoo.com
                  தோழர்.சிங்கராயர் நினைவுதினக் 
                  கட்டுரை! சிங்கராயர் எனும் மொழிபெயர்ப்பாளர். - அமரந்த்தா -.....உள்ளே
                  தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் 
                  சங்கம். தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், 
                  மொழிபெயர்ப்பாளருமான தோழர்.சிங்கராயர் நினைவுக் கூட்டம் ....உள்ளே