தமிழ்
மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்
தமிழின்
குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான
தோழர்.சிங்கராயர்
நினைவுக் கூட்டம்
நாள்: ஜூலை 10,2010 (சனிக்கிழமை)
நேரம்: சரியாக மாலை 5 மணி
இடம்: டிஸ்கவரி புக் ஹவுஸ்,
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்)
நெசப்பாக்கம் பகுதி, கே.கே.நகர்
”மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது
இயங்கமுடியாது என்பதும் இன்றைய
அறிவியல்-தொழிலியல்-தகவல்பரவல்-ஊடகங்கள்-பாட நூல்கள் அரசியல்-கலை
இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும்
நடப்புண்மை.ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய மதிப்பு
வழங்கப்படுவதில்லை என்பது தான் சிக்கல்”
என்று கூறி மொழிக்காவலர்களின் மனசாட்சியை அசைத்துப்பார்த்த தோழர்
சிங்கராயர், சமூக-மேம்பாட்டிற்கான எழுத்தாக்கங்களை மட்டுமே
மொழிபெயர்ப்பது என்ற தீர்மானத்தோடு இயங்கிவந்த அரிய மனிதர்
இவ்வாண்டு ஜனவரி 25 அன்று மரணமடைந்தார். அவருடைய மொழிபெயர்ப்புப்
பணியையும், பிற பல பங்களிப்புகளையும் நன்றியோடு நினைவுகூரும்
விதமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்
சிங்கராயருடன் பல்வேறு நிலைகளில் இலக்கிய அரசியல் பணிகளில்
இணைந்து இயங்கியவர்கள் தம் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து
கொள்கிறார்கள்.
• திரு. கோவை ஞானி _ மார்க்சிய அறிஞர்
• திரு. துரை மடங்கன் _ யாழ் நூலகம், கோவை
• பேரா.தங்கவேல் _ சிங்கராயரின் நண்பர்
• அமரந்த்தா _ மொழிபெயர்ப்பாளர்
அறிவிப்புகள்:
• சிங்கராயர் குடும்ப நிதி திரட்டுவது குறித்து
• தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான தோழர் சிங்கராயர் விருது
அனைவரும் வருக!
அமரந்த்தா வெளி ரங்கராஜன் லதா ராமகிருஷ்ணன்
தோழர்.சிங்கராயர் நினைவுதினக் கட்டுரை! சிங்கராயர் எனும்
மொழிபெயர்ப்பாளர். - அமரந்த்தா -.....உள்ளே
ஒரு வேண்டுகோள்!
தோழர்.சிங்கராயருடைய குடும்பத்திற்கு நிதியுதவி! - லதா
ராமகிருஷ்ணன் ....உள்ளே
ramakrishnanlatha@yahoo.com