சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன். அந்தனி ஜீவா [ 'சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன்' என்னும் அ.ந.க் பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில்12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ] "வாலிபத்தின்வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகரக் கல்லூரிக்கு வந்து விட்டு, மாலையில் கிராமத்தைநோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது என்கண்கள் வயல் வெளிகளையும், தூரத்துத் தொடு வானத்தையும் உற்று நோக்கும்....உள்ளத்திலும் உடம்பிலும்சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்து விட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம்....." பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும்,சிந்தனையாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் தன் இளமைக்காலநினைவலைகளை இவ்வாறு எழுதியுள்ளார். எழுத்தாளர்களின் இளமைக்கால நினைவலைகள் இவ்வாறாகத்தானிருக்கும். அமரரான அ.ந.க.வின் எழுத்துகளை மீண்டும் படிக்கும் பொழுதுஅந்தத் துள்ளும் தமிழும், துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. இலக்கியவானில் சுடர் நட்சத்திரம்... சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகனாக, ஈழத்து இலக்கியவானில் சுடர் நட்சத்திரமாகத் திகழ்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் 1968ம் ஆண்டு பெப்ரவரி14ம் திகதி அமரரானார். ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியரும், பிரபல நாவலாசிரியரும் ஒப்புயர்வற்றசிருஷ்ட்டிகர்த்தாவுமான அ.ந.கந்தசாமி அவர்களின் மறைவு கேட்டு இலக்கிய உலகமே நிலை கலங்கியது.இலக்கிய வானில் சுடர் நட்சத்திரமாக ஒளி வீசித் திகழ்ந்து கொண்டிருந்த அ.ந.கவின் மறைவு இலக்கியஉலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். முற்போக்கு - நற்போக்கு சலசலப்பிற்கிடையே அமைதியாகத்தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இலக்கியத்திற்குப் பாடுபட்ட அ.ந.கந்தசாமி தனக்குப்பின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்காகப் பாடுபடத் தேசிய இலக்கியப் பரம்பரை ஒன்றையே உருவாக்கியுள்ளார்.ஏழை பணக்கார பேதம், சதி, சமயப் பாகுபாடு, முதலாளி - தொழிலாளி பிரச்சினை ஆகிய விவகாரங்களில்சமதர்ம சமத்துவத்தை மூலக் கருவாக வைத்து, யதார்த்த இலக்கியம் படைத்த அ.ந.கந்தசாமி மறைவுக்குப்பின் அந்த இடத்தை நிறைவு செய்யும் தகுதி உள்ளவரைக் காண்பதரிது. இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும்தன்னிகரில்லாத தலைவனாக, தனிக்காட்டு ராஜாவாக விளங்கினார். கவிதை, சிறுகதை, கட்டுரை,நாவல், நாடகம், இலக்கியவிமர்சனம், வானொலி கலா விமர்சனம், பேச்சு, பத்திரிகைத்துறை, மொழி பெயர்ப்பு ஆகிய இலக்கியத்தின்எல்லாத் துறைகளிலும் எடுத்துக் காட்டக் கூடிய சாதனைகளை நிலை நாட்டியுள்ளார். 'அ.ந.க' என்ற மூன்றெழுத்துவளர்ந்து வரும் ஈழத்து இலக்கியத்தில் புதிய பரம்பரைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காகச் சுடர்விடுமென்பதில்ஐயமில்லை. சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் -2...உள்ளே சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் -3...உள்ளே சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் -4...உள்ளே சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் -5...உள்ளே சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் 6...உள்ளே |