logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)
ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                Editor: V.N.Giritharan
அக்டோபர் 2003 இதழ் 46- மாத இதழ்
 விளம்பரம்
இங்கே விளம்பரம் செய்யவேண்டுமா? ads@pathivukal.com
Computer Image
Computer Training!
[விபரம்உள்ளே]
தமிழ்எழுத்தாளர்களே!..
அன்பானணையவாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள்.'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணையவாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசுஅஞ்சலின் Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்editor@pathivukal.comமூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்குஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழைவளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்குமுதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனைஅனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில்தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். 
DownloadTamilFont
மண்ணின்குரல்.. 
மண்ணின் குரல் நூல் வெளி வந்துவிட்டது. நூலினை வாங்க விருப்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: editor@pathivukal.com
இணையத்தில்உழைப்போம்!
எமதுசேவை...
விரைவில்பதிவுகள் புதுப் பொழிவுடனும் மேலும் பல புதிய அம்சங்களுடனும் வெளிவரவுள்ளது.

வர்த்தகர்களே! உங்கள் விளம்பரங்களைப் பதிவுகள்ில் பதிவுசெய்து கொள்ளுங்கள்.

பதிவுகளில் விரைவில் மின்னஞ்சல் நண்பர்கள் பகுதி தொடங்கவுள்ளது.ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விபரங்களை அனுப்பி வைக்கவும்.

ணையத் தளங்களை வடிவமைக்க , கிராபிக்ஸ் உருவாக்கஎம்மை நாடுங்கள். மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.     editor@pathivukal.com

அறிஞர்அ.ந.கந்தசாமி
சாகாத இலக்கியத்தின் 
சரித்திர நாயகன் - 6

அந்தனி ஜீவா

['சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன்' என்னும் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில்12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும்.] 

நாடகத்துறை....

A.N.Kanthasamiநாவல்துறையில் மாத்திரமின்றி நாடகத் துறையிலும் அ.ந.க.வின் விசேட கவனம் சென்றது. வீழ்ச்சியுற்றுக்கிடக்கும் நாடகத்துறையில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தார். 'மதமாற்றம்'என்ற நல்லதொரு நாடகத்தை தந்தார். 'மதமாற்றம்' நாடகத்தைப் போல் அந்தக் காலகட்டத்தில் ஈழத்துநாடக மேடையைப் பாதித்தது வேறு எந்த நாடகமும் இல்லை எனலாம்.கொழும்பில் தற்போது அரங்கேற்றப்படும்சில நாடகங்களைப் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் 'ஆகா' எனக் கைதட்டிச் சிரிப்பதைக் காண்கின்றோம்.நாடகத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும் எதுவும் மனதில் தங்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட போலிஇரசிகத்தன்மையை வளர்க்கும் நாடகங்களில் மாறுபட்டு நின்றது 'மதமாற்றம்'.

பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'ஒப்சேவர்' ஆங்கிலப்பத்திரிகையில் தமிழ் நாடகங்களைப் பற்றி எழுதியபொழுது 'இதுவே தமிழில் எழுதப்பட்ட நாடகங்களில்ஆகச் சிறந்த நாடகம்' எனக் குறிப்பிட்டார். ஆமை வேகத்தில் இயங்கிய ஈழத்துத் தமிழ் நாடகமேடைஅ.ந.க. 'மதமாற்றம்' ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சிறிது துரித வேகத்தில் இயங்க ஆரம்பித்ததுஎன்பது நாடக அபிமானிகள் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.

Audience for A.N.K's MathamaaRRam'மதமாற்றம்'முதன் முதலில் அரங்கேற்றப்பட்டதும் அதைப் பற்றிய காரசாரமான விவாதங்களும், விமர்சனங்களும் இலக்கியஉலகில் பெரும பரபரப்பை  ஏற்படுத்தின. சில விமர்சகர்கள் அ.ந.க. முற்போக்குவாதி என்றகாரணத்தினால், அவரை வைத்தே நாடகத்தை எடை போட்டு, நடுநிலை நின்று உண்மை கூறாது 'மதமாற்றத்'தைக்குறை கூறினார்கள். 'மதமாற்றத்'தைப் பிரசாரபலத்தினால் பிரபலப்படுத்த முனைகிறார்கள் என ஒரு விமர்சகர்நாடகத்தைப் பார்க்காமலே விமர்சனம் பண்ணினார். ஆனால் கண்டனத்திற்கு எல்லாம் கலங்காத கந்தசாமி'மதமாற்றம்' தலை சிறந்த நாடகம் என்பதை நிரூபித்தார். [அ.ந.க.வே 'மதமாற்றம்'பற்றியதொரு விமர்சனக் கட்டுரையினை எழுதியுள்ளார். இது யூலை 3, 1967இல் வெளிவந்த 'செய்தி'ப்பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை பின்னர் 'பதிவுகள்' இதழில் வெளியாகும். அக்கட்டுரையில்காணப்படும் புகைப்படத்தினையே இங்கும் காண்கின்றீர்கள். - ஆசிரியர்]

எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள்விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள். நாடகத்தைஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவின் நாடகங்களோடு ஒப்பிடலாம் என்று சில இலக்கிய விமர்சகர்கள் அபிப்பிராயம்தெரிவித்தனர். 'அமரவாழ்வு' என்ற இன்னொரு நாடகத்தையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[தாஜ்மகால்உதயம் பற்றிய 'கடைசி ஆசை' என்றொரு குறு நாடகத்தையும் அ.ந.க. எழுதியுள்ளார். - ஆசிரியர்]'மனக்கண்'நாவலை நாடகமாக எழுதித் தருவதாக என்னிடம் குறிப்பிட்டார். அவரது ஆசையை நாடகக் கலைஞர்களாவதுநிறைவேற்றுவார்களா? [அ.ந.க.வின் நெருங்கிய நண்பரான சில்லையூர் செல்வராஜன்அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலை வானொலி நாடகமாக வழங்கியதை மறந்து விட்டீர்களா? - ஆசிரியர்]

இலக்கிய விமர்சனம்
இலக்கிய விமர்சனத் துறையில் 'தேசிய இலக்கியம்' என்றகருத்தைப் பற்றி அந்த இயக்கம் ஈழத்தில் வலுவடைந்த காலத்தில் அ.ந.கந்தசாமி பல அரிய கட்டுரைகள்எழுதியுள்ளார். அத்துடன் 'சிலப்பதிகாரம்', 'திருக்குறள்', 'எமிலிஸோலா' போன்ற பரபரப்பானகட்டுரைகள் எழுதினார்.

அறிவுலகவாதியான அ.ந.கந்தசாமி எழுதும் கட்டுரைகள் புதுமைநோக்குடன் இருக்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் பண்டிதர் முதல் பட்டதாரிவரை பெரும்பாலோரிடையேபெரும் சர்ச்சைக்குள்ளாகின. 'தினகரன்' வாரமஞ்சரியில் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்'என்ற கட்டுரைத் தொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்ககட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது.

தகவல்பகுதியினரால் வெளியிடப் பெற்ற 'ஸ்ரீலங்கா' சஞ்சிகையிலும்ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சரித்திர நிகழ்ச்சிகளையும் நிலைக்களனாகக் கொண்ட கதைகள் எழுதியுள்ளார்.வானொலியில் மேல் நாட்டு நாடக ஆசிரியர்களைப் பற்றிச் செய்த விமர்சங்கள் தினகரனில் தொடராகவெளிவந்த பொழுது நாடகத்துறையிலீடுபட்டவர்கள் அதனைவிரும்பிப் படித்தார்கள். ஹென்றிக் ஹிப்சனின்அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்றபெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது. வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம்'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டுகொள்ள உதவியது.

அறினர் அ.ந.கந்தசாமி இலக்கிய விமர்சனத்துடன் நில்லாதுஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியாரின் ஞானகுருவாகிய யாழ்ப்பாணத்துச்சாமியார் யார் என்பதை ஆராய்ந்து பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வாயூர் அருளம்பலதேசிகர் என்ற உண்மையை நிலைநாட்டினார். அருளம்பல தேசிகர் பற்றிய விரிவான நூல் எழுதுவதற்குரியகுறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார். மகாகவி பாரதியாருக்கு 'பாரதி' பட்டம் கொடுத்த இலங்கையர்யார் என்பதை மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் ஆராய்ந்து கொண்டிருந்தார். உலகப் பேரழகிகிளியோபறாவைப் பற்றிப் பல ஆங்கில நூல்களை ஆராய்ந்து அரியதொரு கட்டுரையை 'ராதா' வார இதழில்வரைந்தார். ஆறுமுக நாவலரைப் பற்றி விரிவானதொரு நூல் எழுதப் போவதாகக் குறிப்பிட்டதுடன் அவ்வப்போதுபல நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் ஒழுங்காகச் சேகரித்து வைத்திருந்தார்.

மேல்நாட்டு எழுத்தாளர் ஓ ஹென்றியின் சிறுகதை உத்திகளையும்,திருப்பங்களையும் பாராட்டும் அ.ந.க. அவற்றை இளம் எழுத்தாளர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்று அவற்றைமொழிபெயர்த்து வெளியிட்டார். அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரைஅறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர்ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார்.  எப்பொழுதும் தன் எழுத்துக்களால் பிறர்பயன் அடைய வேண்டும் என்று விரும்பும் அ.ந.கந்தசாமி 'வெற்றியின் இரகசியங்கள்' என்ற தத்துவநூல் ஒன்றினையும் எழுதியுள்ளார். இது தமிழகத்தில் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இஃதுஎல்லா வகையிலும் சிறந்து வாழ்க்கையைப் படிப்பிக்கும் நூலாகும்.[இதே பாரி நிலையத்தினர்பின்னர் வெளியிட்ட அகிலனின் நூலொன்றிற்கும் 'வெற்றியின் இரகசியங்கள் என்னும் பெயரினை வைத்துள்ளதானதுநேர்மையற்ற வெட்கங்கெட்ட செயலாகும். - ஆசிரியர் -] 

சாகாத இலக்கியத்தின் 
சரித்திர நாயகன் - 7

சீர்திருத்தத் துறை
A.N.Kanthasamiஅ.ந.கந்தசாமிஇலக்கியத் துறையோடு நிற்காது சமுதாயச் சீர்திருத்தத்துறைகளிலும் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்புவதிலும்நெடுங்காலமாக ஈடுபட்டு வந்தார். சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்ட கந்தசாமி, சுயமரியாதைஇயக்கத்தின் தலைவருமாயிருந்தார். இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கும்பொழுது தமிழ் எழுத்தாளர்களிடையேஅ.ந.கந்தசாமி பன்முகங்கொண்ட விஸ்வரூபனாகக் காட்சியளித்தார். இவரின் திறமையையும் இலக்கியஆளுமையையும் மதித்த பேராசிரியர் கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்ற நூலை அ.ந.கந்தசாமிஅவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

அ.ந.க.வெற்றியின் இரகசியம்
இலக்கிய உலகில் ஈடு இணையற்ற ஜாம்பவானாக அ.ந.கதிகழ்வதற்குக் காரணமென்ன? புதுமைச் சமுதாயத்தைக் காணத் துடித்த புதுமையாளனாக விளங்கினார். உழைக்கும்தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகக் போராடினார். அந்தத் தொழிலாளர் வர்க்கத்துடன் தனனை இணைத்துக்கொண்டார். தான் படைக்கும் இலக்கியத்தைக் கூட அந்தக் கண்ணோட்டத்துடன் தான் படைத்தார்.

கடும் நோயின் பாதிப்புக்குள்ளாகிய அ.ந.கந்தசாமி அதைப்பற்றியே கவலைப் படவில்லை. சிறூவயதிலிருந்தே 'எக்ஸிமா' என்ற நோய்க்கு ஆளாகிய அவர், அந்தநோயைக் குணப்படுத்துவதற்குப் பல முயற்சிகள் செய்து தோல்வி கண்டு, தமிழ் நாட்டில் வேலூர் வைத்தியசாலையில்சில காலம் தங்கியிருந்து சுகப்படுத்த முடியாமல் மற்றும் பல்வேறு வைத்தியங்கள் செய்தும் சில புதிய நோய்களின்பாதிப்புக்கு ஆளானார். ஆனால் மனத் தைரியத்தை மட்டும் விடவில்லை.

வாழவேண்டும், வாழ்ந்து கொண்டு பேனா முனை கொண்டு பெரும்போராட்டம் நடத்த வேண்டும் என்ற வர்க்க உணர்வின் காரணமாக நம்பிக்கை இழக்காமல் ஊசிகளாலும் மருந்துக்குளிகைககளாலும் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டு, அவர் எழுத்துலகில் பல சாதனைகளை நிலை நாட்டியதுவியப்பிலும் வியப்புக்குரியதாகும்.

அ.ந.க. 'வெற்றியின் இரகசியம்'
அ.ந.கந்தசாமி அவரது 'வெற்றியின் இராக்சியங்கள்'என்ற நூலில் 'உங்களுக்கு இருக்கக் கூடிய நோய்களைப் பற்றி எண்ணுவதில் நேரத்தை செலவிட வேண்டாம்.ஏனெனில் உங்களிடம் உண்மையான நோய்கள் இல்லாவிட்டால் அவைகள் உங்கள் எண்ணத்தின் சக்தியால் தோன்றிவிடக்கூடும்' என்ற எமில் கூ அவர்களின் கருத்தை எமக்கு எடுத்துச் சொல்கிறார். இது போன்ற அரிய கருத்துகளைத்தேடிப் படித்ததால் தான் தனது நோயைப் பற்றிச் சிந்திக்காமல் தன்னால் முடிந்த அளவு சாதித்தார். தன்னைப்போல் மற்றவர்களும் இலட்சியத்துடன் வாழ வேண்டும் எனக் கருதியே 'வெற்றியின் இரகசியங்கள்' என்றநூலையும் தந்தார்.

சரித்திர நாயகன்!
'எழுதுகோல் தெய்வம்- இந்த எழுத்தும் தெய்வம் என்ற் அப்பாட்டுகொருபுலவன் பாரதியின் வாக்குப் படி எழுத்தைத் தெய்வமாகப் போற்றி வந்தார் அ.ந.க.  அந்த இலக்கியத்தின்சரித்திர நாயகனாக, அறிவுலக மேதையாகத் திகழ்ந்த அ.ந.கந்தசாமி 'புதுமை இலக்கியம்' என்றமுற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட மாத ஏட்டில் 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்ற தலைப்பில் தான்எழுத ஆரம்பித்த கால சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டினார். அதில் சில வரிகளைக் கீழே தருகிறேன்:

 
"..இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக்காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும்,கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழும் உலகம் இருக்கிறது.ஏழ்மைக்கும் , செல்வத்துக்கும் நடக்கும் போரும், உயர்ந்த சாதியாருக்கும், தாழ்ந்த சாதியாருக்கும் நடக்கும்போரும், அசுர சக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக்கொண்டிருக்கின்றன. போர்களினால் வாழ்வே ஒரு சோக கீதமாகி விட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில்ஒழித்து விட முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்து விட வேண்டும். அதன் பின் போரொழிந்த சமத்துவசமுதாயம் பூக்கும். அதனைப் பூக்க வைக்கும் பெரும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டுமென்றகருத்தைப் புகழ் பெற்ற பேனா மன்னர்கள்  என் மனதில் தோற்றுவித்தனர்."


இவ்வாறு கூறியது மாத்திரமின்றி அ.ந.கந்தசாமிசமுதாயச் சுரண்டலை ஒழிக்க , சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு போன்ற கொடுமைகளைப் பேனா முனைகொண்டுசாடினார். அவரின் கனவை நனவாக்க அவரைச் சார்ந்த அணியினர் இயக்கமாக இயங்கினார்கள்.

அ.ந.கந்தசாமியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட எமக்குஅவரின்பாடையைப் பார்த்தபொழுது புதுமைப் பித்தனின் பாடலொன்றுதான் நினைவிற்கு வந்தது. இதை அருகிருந்தஎழுத்தாள நண்பரிடம் தெரிவித்தேன்.

"பாரதிக்குப் பின் பிறந்தார்.
பாடை கட்ட வைச்சிட்டார்.
ஆரதட்டிச் சொல்வார்.
அவரிஷ்ட பாரதனே!"

இந் நான்கு வரிகளையும் கேட்ட நண்பர் அ.ந.க.வின் இடத்தைநிரப்ப நீண்ட காலம் பிடிக்கும் என்றார். சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகனாக அ.ந.க. என்றஅந்த ஆளுமைமிக்க படைப்பாளி திகழ்கிறார் என்ற உண்மையை யாரும் மறக்க முடியாது.

முற்றும் 

[இத்துடன் அந்தனி ஜீவா அறிஞர் அ.ந.கந்தசாமிபற்றித் தினகரனில் எழுதி வெளிவந்த 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரைத்தொடர் முற்றுப் பெறுகிறது. அடுத்த 'பதிவுகள்' இதழிலிருந்து அறிஞர் அ.ந.கந்தசாமியின் உளவியல்நூலான 'வெற்றியின் இரகசியங்கள்' என்னும் நூல் தொடராக வெளிவருமென்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன்அறியத் தருகின்றோம்.]
 

சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்-1...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன் -2...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன் -3...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன் -4...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திரநாயகன் -5...உள்ளே

[தொடரும்]
முகப்பு|கவிதைகள்|கனடியத்தமிழ்லக்கிய  பக்கம்
காப்புரிமை :  வ.ந,கிரிதரன்2000