அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள் - 3 அமரர் எஸ்.அகத்தியர் ஓர்இலக்கியவாதிபோல் கருத்தியலை ஜனநாயக பூர்வமாக வலுப்படுத்தும் பிரசார வேட்கை அவரிடம் இயல்பாகவிருந்தது.ஆனால், எழுதத்தெரியாத இலக்கியத்திற்கு நடையாய் நடந்து விளம்பரம் தேடும் பாமரத்தனவெறி அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. அதனால்தான் அவர் இலக்கியக் களத்தில் சுத்த வீரன் போல்இருந்தார். 1959இல் எழுதிய எனது 'எரிமலை' நாவலை அநக படித்து விட்டு, "இது உடனே நூலாக வரவேண்டும். கணேசலிங்கனிடம் கொடுத்தால் இந்தியாவில் போடுவார்" என்றார். 'பொற்காலம்'தாமதித்தே விடியும்' என்பதும் சரிதான். அநகவின் 'மதமாற்றம்' நாடகம் நான் பார்த்ததில்லை.இலங்கை பூராவும் மதமாற்றம் நாடகம் பற்றியே பேச்சு. பேர்னாட் ஷா நாட்கங்களுக்கு ஈடாக விமர்சிக்கவும் பட்டது. சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை நெறியாள்கை அந்நாடகத்திற்குமெருகூட்டியதாகவும் பேசப்பட்டது. 'மதமாற்றம்' விமர்சிக்கப்படாத பத்திரிகை இல்லை. அதனைப் பார்க்கும்போசிப்பினை இழந்தமை இன்றும் கவலை. "அப்பேர்ப்பட்ட நாடகக் கருவின் மையக்கரு என்ன?" என்றுஒருநாள் அவரிடமே கேட்டேன். வழக்கம்போல் அவர் 'கல'த்துச் சிரித்தார். "நல்ல முழு முட்டாள்களின்படுபயங்கர முட்டாள்தனமே அதன் மூலக்கரு" என்று சுருக்கமாக சொன்னார். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த யுவதிகள் மதங்களால் ஒன்றுசேரமுடியாமல் தங்கள் வாழ்வை மதமாற்றம் செய்து ஈற்றில் தனிமைப்பட்டு வெறுமையாய்ப் போன அவலத்தைஅமபலப்படுத்துகிறதாக நாடகம் அமைகிறது. வாழ்க்கைக்காக மதம் என்ற அறியாமையும் போய் மதத்திற்காக வாழ்வு என்றாகிவிட்ட மூடத்தனத்தை அதில் அவர்நேர்த்தியாகக் கையாண்டிருப்பதாகவும் விமர்சகர்கள் வியந்தனர். பேர்னாட் ஷாவுக்குப் பின் இப்படியான கருவைக் கையாண்டு வெற்றி கண்டவர் அநக ஒருவர்தான் என்றும் விமர்சனங்கள் கூறின. "இலக்கியம் கடைச் சரக்கல்ல" என்னும் நேர்மையான போர்க்குணம்மிக்க எழுத்தாளன் கூற்றுக்கு இலங்கையில் நானறிந்தவரை இலக்கணமாகத் திகழ்ந்தவர் அநக ஒருவர்தான். குறிப்பு- அநகவின் இலக்கிய வாழ்கையைச் சொல்வதாயின்ஒரு நூல் எழுத வேண்டும். இது சிலேடையான ஓர் அவசரக் குறிப்பு மட்டுமே. [ அடுத்த 'பதிவுகள்' இதழில் தொடங்குகிறது அந்தனி ஜீவா அநக பற்றி எழுதியுள்ள கட்டுரைத்தொடரான 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்'. ] அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்- 1...உள்ளே அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்- 2...உள்ளே நன்றி: தினகரன்ஆகஸ்ட் 18, 1991 [ அ.ந.க.வின் நினைவு தினம் பெப்ருவரி14. அதனையொட்டிய நினைவுக் கட்டுரை ] |