குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்)ஈழத்தின் அதிமூத்த எழுத்தாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான குறமகள் என அழைக்கப்படும் வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்கள் நேற்று செப்டம்பர் 15 ஆம் திகதி ரொறன்ரோவில் காலமானார். புனைகதை எழுத்தாளர் கவிஞர் வானொலி – மேடைப் பேச்சாளர் விமர்சகர் ஆய்வாளர் விவாத அரங்கு மேலாளர் நடிகர் நாடகவியலாளர் இனப்பற்றாளர் சமூக சேவையாளர் என்று பல தளங்களை வெற்றிகரமாகச் சந்தித்த இவர் இலங்கையில் 27 வருடங்கள் பாடசாலை ஆசிரியராகவும் எட்டு வருடங்கள் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பெண் எழுத்தாளர்களுள் மிக முக்கியமான ஒருவராக மதிப்புப் பெற்ற இவரே கனடாவில் இலக்கிய பொன்விழா கண்ட ஒரேயொரு தமிழ் எழுத்தாளர். 1994 ஆம் ஆண்டு இவரது இலக்கியப் பணிகளை மதித்து தமிழர் தகவலால் விருதுடன் தங்கப் பதக்கம் சூட்டி இவருக்கு சிறப்புச் செய்யப்பட்டது. நான்காண்டுகளுக்கு முன்னர் வைரவிழா கண்ட இவர் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த 25 ஆண்டுகளாக கனடாவிலுள்ள பல பொது அமைப்புகளில் பிரதான பதவி வகித்து புகழ் பெற்ற குறமகளுக்கு நான்கு பிள்ளைகள் உண்டு. அவர்களின் ஒருவரான ரோசா மாவீரரானவர். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்களுக்கு 905-274-1136 அல்லது 647-878-2451 தொடர்பு கொள்ளலாம்.

தகவல்: லெ.முருகபூபதி -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R