பதிவுகள்

 • Increase font size
 • Default font size
 • Decrease font size
பதிவுகள்

ஆய்வு: வள்ளுவர் உணர்த்தும் உழவுச் செய்திகள்

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமாக பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் உழவுக் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உழவு என்பதன் பொருள்
சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில தமிழ் அகராதி உழவு என்பதற்கு வேளாண்மை,விவசாயம் என்று பொருள் விளக்கம் தருகிறது. தமிழ் - தமிழ் அகரமுதலி உழவு என்பதற்கு உழவு நிலத்தை உழும் தொழில்,வேளாண்மை,உடம்பினால் உழைக்கை என்று பல்வேறு விளக்கம் தருகிறது.

திருக்குறளில் உழவு என்ற அதிகாரம் 104 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.சிறுபான்மை வணிகர்க்கும்,பெரும்பான்மை வேளாளர்க்கும் உரிதாய உழுதல் தொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்கும் உரித்து என்பர் பரிமேலழகர்.அக்கால நிலை அது போலும்,ஆனால் திருவள்ளுவர் உழந்தும் உழவே தலை,சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் (1031)உழுவார் உலகத்தார்க்கு ஆணி (1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (1033) என்பர்.அவர் உழவை மிக மதித்தார் என்பதும் அரசரே உழவர்க்கு அடுத்தபடிதான் என்பதும் அவர் குறளாலேயே விளக்கமுறும்  (1034).

Last Updated on Friday, 26 May 2017 07:32 Read more...
 

நூல் அறிமுகம்: எகிப்திய வரலாறு

E-mail Print PDF

நூல் அறிமுகம்: எகிப்திய வரலாறுஎழுதப்பட்டது அல்லது பதியப்பட்டதே வரலாறு. மற்றவை ,வரலாறுக்கு முந்தியவை என வரையறுக்கப்படுகிறது வரலாறு என்பதன் ஆங்கிலப்பதம் (History) கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதன் கருத்து அறிந்து ஆராய்தல் – அல்லது விசாரித்து அறிதல் எனப்பொருள்படும். இதற்கு கிளையோ (Clio) என்ற பெண்தெய்வம் அருள் பாலிப்பதாக கிரேக்கர்களால் உருவகிக்கப்படுகிறது.

எகிப்திய வரலாறு மிகத்தொன்மையானது மட்டுமல்ல, பல புதிர்களையும், ஆச்சரியங்களையும் தொடர்ச்சியாக கொண்டிருக்கிறது. வரலாற்றாசிரியர்களால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக புதிர்களும், மர்மங்களும் கட்டுடைக்கப்பட்டுகிறது. இதனால் இந்த வரலாறு எகிப்தில் தற்காலத்தில் தொடர்ச்சியாக வளர்ந்து பெருகிக் கொண்டு வருகிறது.எகிப்திய நாட்டின் உருவாக்கம் கிறீஸ்துவுக்கு முன்பாக 3000 ஆண்டுகள் முன்பே தொடங்கியது.

ஹேரெடொரஸ் ( Herodotus) ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர். இவரே வரலாற்றின் தந்தையாக கருதப்படுபவர். அவர் எகிப்து சென்று அங்கு கேட்டவை, கண்டவை என எழுதிய பல விடயங்கள் இக்காலத்தில் தவறாகிப் போய்விட்டது. தற்போதைய எகிப்தியலாளர்கள் விஞ்ஞானத்தின் பயனாக கிடைத்த பல கருவிகளின் துணைகொண்டு பல புதிய விடயங்களை அறிகிறார்கள் . அதே நேரத்தில் இன்றைக்கு அறிந்து கொள்ளும் விடயங்கள் பிற்காலத்தில் தவறாகவோ அல்லது மேலும் புதிய விடயங்களை இணைப்பதாகவோ மாறலாம். அப்பொழுது எகிப்தின் வரலாறு குறித்த பார்வை எமது இளம் சந்ததியினருக்கு மாறுபடலாம்.

எனது எகிப்திய பயணத்தின் நோக்கம் எகிப்தின் வரலாற்று சின்னங்களான பிரமிட், அக்கால மன்னர்களின் மம்மிகள் மற்றும் கோயில்களை நேரடியாக பார்ப்பதாகவே இருந்தது. காலம் காலமாக அங்கே சென்ற இலட்சக்கணக்கான உல்லாசப்பயணிகள்போலத்தான் நானும் அங்கு சென்றேன். நான் எதிர்பார்த்துச் சென்றவற்றைப் பார்த்ததும் – அவற்றின் தோற்றம், பின்புலம் என்பவற்றை வழிகாட்டி மூலம் அறிந்தபோது அவைகளின் மீது மீளமுடியாத காதல் தோன்றியது. எனது இந்தவயதில் எகிப்திய ஆராய்ச்சியாளனாகவோ அல்லது சிலகாலம் எகிப்தில் வாழ்வதாகவோ விரும்பினாலும் சாத்தியமற்றது என்பதை உணர்ந்தேன்.

Last Updated on Tuesday, 23 May 2017 09:02 Read more...
 

யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மே மாதத்தில்.... இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடத்தும், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றுகூடல்

E-mail Print PDF

இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடத்தும், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றுகூடல் இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடத்தும், போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒன்றுகூடல் அவுஸ்திரேலியாவில் கடந்த 29 வருடங்களுக்கும் மேலாக இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்,  எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை வரையில் யாழ். மாவட்ட அரச செயலகத்தில் ( கச்சேரியில்)  குறிப்பிட்ட நிதியத்தின் உதவியுடன் கல்வியைத் தொடரும் யாழ். மாவட்ட மாணவர்களுடனான ஒன்றுகூடலை நடத்துகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட காலமாக இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர்கல்வி நிதியம் அவுஸ்திரேலியாவில் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும். கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்ட மாணவர் கண்காணிப்பு தொடர்பாடல் நிறுவனமான சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையம் மேற்குறித்த மாணவர் ஒன்று கூடலை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியை இடைநிறுத்தாமல் தொடரும் வடக்கு, கிழக்கு உட்பட போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் பெரிதும் பாதிக்கப்பட்l  வன்னி மாவட்ட மாணவர்களுக்கான ஒன்றுகூடல், தகவல் அமர்வு என்பன இந்த மே மாதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி எதிர்வரும் 20 ஆம் திகதி  சனிக்கிழமை யாழ். அரச செயலகத்தில் (கச்சேரி மண்டபத்தில்) ஆரம்பமாகிறது. யாழ். அரச அதிபர் திரு. என். வேதநாயகம் பிரதம அதிதியாக கலந்துகொள்வார். மங்கல விளக்கேற்றலுடன்  நீடித்த போரில் உயிரpழந்த மக்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் தொடக்கிவைக்கப்படும். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய பரிபாலன சபை உறுப்பினர், திரு. த. ஜெயந்தன் வரவேற்புரையும், நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு. சொ. யோகநாதன் தகவல் அமர்வு உரையும் நிகழ்த்துவர்.

Last Updated on Friday, 19 May 2017 06:52 Read more...
 

முள்ளிவாய்க்கால்: வரலாற்றுப்பதிவுகள் சில.

E-mail Print PDF

முள்ளிவாய்க்காலின் இறுதிக்கட்ட அவலங்களைப் புகைப்படக்கலைஞரும், எழுத்தாளருமான அமரதாஸ் அவர்கள் பதிவு செய்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றையே இங்கு காண்கிறீர்கள். முள்ளிவாய்க்காலின் இறுதிக்கால அவலங்களை வெளிப்படுத்தும் இவ்விதமான புகைப்படங்கள் யுத்தத்தின் அவலங்களை வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகள்.  நன்றி:  புகைப்பட உதவி - குளோபல்தமிழ் நியூஸ் - http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132287/language/ta-IN/article.aspx

முள்ளிவாய்க்கால்: வரலாற்றுப்பதிவுகள் சில.முள்ளிவாய்க்கால்: வரலாற்றுப்பதிவுகள் சில.

Last Updated on Thursday, 18 May 2017 08:14 Read more...
 

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

E-mail Print PDF

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

Last Updated on Thursday, 18 May 2017 08:16 Read more...
 

மே18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் -அவுஸ்திரேலியா

E-mail Print PDF

வணக்கம் நண்பர்களே, இத்துடன் அவுஸ்திரேலியா மெல்பேர்ன், சிட்னி, பேர்த் நகரங்களில் நடைபெறவுள்ள "மே18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கைகள், விளம்பரமும், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய் து ”மெல்பேர்ன், சிட்னி, பேர்த் இன் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் ​நிகழ்வுகள்”​ ​சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங் களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின் னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்.வணக்கம் நண்பர்களே, இத்துடன் அவுஸ்திரேலியா மெல்பேர்ன், சிட்னி, பேர்த் நகரங்களில் நடைபெறவுள்ள "மே18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள்" பற்றிய விபரங்கள் ஊடக அறிக்கைகள், விளம்பரமும், பிரசுரமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவு செய் து ”மெல்பேர்ன், சிட்னி, பேர்த் இன் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் ​நிகழ்வுகள்”​ ​சம்பந்தமான இச் செய்தியையும் மற்றைய அறிவித்தல்களையும் உங்கள் ஊடகங் களில் வெளியிடுவதோடு உங்களிற்கு தெரிந்த நண்பர்களிற்கும் மின் னஞ்சல்களுாடாக தெரியப்படுத்தவும்.

தயவுசெய்து அந்நாளின் முக்கியத்துவம் மற்றும் வலிகள் அறிந்து உங்களினால் முடிந்த ஆதரவினை நல்குவதோடு, மே மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை மெல்பேர்னில் மாலை 6.30 மணிக்கு, Hungarian Community Centre மண்டபத்திலும், சிட்னியில் மாலை 7 மணிக்கு, Wentworthville Redgum Hall மண்டபத்திலும், பேர்த் நகரில் மாலை 7.15 மணிக்கு, Mandogalup ஸ்ரீ பாலமுருகன் ஆலய மண்டபத்திலும் முழுக்குடும்பத்துடன் வந்து இந்நிகழ்வுகளில் பங்குகொண்டு, ஆயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளை மீட்டி, தொடரும் இலட்சிய  பயணத்தில் இணைந்து கொள்வோம்!! 2 009யில் எம் தமிழ்மக்கள் மீது இடம்பெற்ற அப்பேரவலத்தையும், போர்குற்றத்தையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துவோம். ! உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

Last Updated on Wednesday, 17 May 2017 06:57 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 235 (அன்னையர்தினச்சிந்தனை) - தாயே! உன் நினைவாக.....; மோடியின் இலங்கைப் பயணமும், முள்ளிவாய்க்கால் படுகொலையும், மே மாதமும், மகிந்த பற்றிச் சில சிந்தனைகள்...

E-mail Print PDF

அம்மா: நவரத்தினம் டீச்சர்.அம்மாவை ('நவரத்தினம் டீச்சர்') நினைத்ததும் நினைவுக்கு முதலில் வருவது குடும்பத்துக்கான அவரது அர்ப்பணிப்புத்தான். வவுனியாவில் அவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றிய சமயம் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்த அந்தக்காலம்தான் முதலில் நினைவுக்கு வரும். அதிகாலையில் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். சமையல் அனைத்தையும் (காலை, மதியம்) சலிக்காமல் செய்வார். எங்கள் எல்லாருக்கும் மதிய உணவை வாழை இலையில் வைத்துக்கட்டி எடுத்து வருவார். சில நாள்களில் வெள்ளிப்பாத்திரங்களாலான உணவுத்தூக்கியில் மதிய உணவை எடுத்து வருவார். மதிய உணவைப் பாடசாலையில் ஒன்றாக இருந்துதான் உண்போம். மறக்க முடியாத பசுமையான நினைவுகள் அவை.

ஒரு நாள் , இரண்டு நாள் அல்ல , ஆண்டுக்கணக்காய் , காலையில் உதிக்கும் சூரியனைப்போல் அலுக்காமல், சலிக்காமல் இவ்விதமே அதிகாலையில் எழுந்து , நீராடி, உணவு சமைத்து, எல்லாருக்கும் உணவை வாழையிலைப் பொதிகளாக அல்லது வெள்ளியாலான உணவுத்தூக்கியில் எடுத்து வருவதை எப்பொழுது நினைத்தாலும் எனக்கு வியப்பும், அவரது அர்ப்பணிப்பு மிக்க அன்பினை எண்ணிப் பெருமிதமும் ஏற்படும்.

அதிகாலைகளில் அப்பொழுதெல்லாம் அவருடன் கூடத்தான் செல்வோம். வயல்களும், வனங்களும், குளங்களும் மலிந்த வவுனியாவின் தெருக்களினூடு அதிகாலைகளில் அவ்விதம் நடந்து செல்வதே நெஞ்சில் பசுமரத்தாணியாகப்பதிந்து விட்ட அனுபவம்.

அவ்விதமாக அதிகாலைகளில் பாடசாலை நோக்கி ஸ்டேசன் வீதி வழியாக எதிர்ப்புறமாக ஒருவர் மடித்துக் கட்டிய வேட்டியும், வெறும் தோளுமாக, வேப்பங்குச்சியால் பற்களை விளக்கியபடி செல்வார். பார்த்தால் அசல் என்.எஸ்.கிருஷ்ணனைப்போலவே இருப்பார். அவரைப்பார்க்கும் நேரமெல்லாம் நான் அம்மாவிடம் 'என்.எஸ்.கிருஷ்ணன் வாறார்' என்று கூறுவேன். ஒருநாள் அம்மா அவரிடம் 'இவர் உங்களைப்பார்க்க என்.எஸ்.கிருஷ்ணனைப்போல இருக்குதாம் என்று கூறுகிறான்' என்று கூறி விட்டார். அதைக்கேட்டதும் பல்லை விளக்கியபடி வந்து கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனின் 'வாயெல்லாம் பல்'. :-) இப்பொழுதும் நினைவில் பசுமையாக நினைவிலுள்ளது.

Last Updated on Monday, 15 May 2017 23:42 Read more...
 

கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்பாளுமை

E-mail Print PDF

விஞர் வெள்ளியங்காட்டான் - வீ.கே. கார்த்திகேயன் , முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),கோவை. -பழம்பெரும் தமிழறிஞர் வெள்ளியங்காட்டான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த படைப்பாளி. கவிஞர் வெள்ளியங்காட்டான், கவிதை பாடும் பொழுது மரபுக்கவிஞர்!  காவியம் படைக்கும் பொழுது புரட்சிப் பாவலர்!  கட்டுரைகள் எழுதும் பொழுது ஆய்வியல் அறிஞர்! கதைகள் கூறும் பொழுது பகுத்தறிவுச் சிந்தனையாளர்! புதினங்கள் படைப்பில் இணையில்லா நாவலாசிரியர்! கடிதங்கள் எழுதும் பொழுது அனுபவ ஊற்று! மொழிபெயர்ப்புகள் செய்யும் பொழுது மொழியியல் வல்லுநர்!  பொன்மொழிகள் சொல்லும் பொழுது தத்துவ ஞானி! மொத்தத்தில்  பன்முக எழுத்தாளர்!  இத்தகைய தமிழறிஞர் கவிஞர் வெள்ளியங்காட்டான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை.

1904 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 21 ஆம் நாள், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை பகுதியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் பிறந்தவர் தான்  என்.கே. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட  வெள்ளியங்காட்டான்.  அவரது தந்தையார் சொந்த நிலமற்ற ஏழை விவசாயி. தாயார் காவேரி அம்மாள்.  வெள்ளியங்காட்டானோடு உடன் பிறந்தவர்கள் பத்து பேர். 

தன் ஊர், கிராமம், தன்னைச் சுற்றியுள்ள நகரம் என்று வாழ்கின்றவர்களால் இனம் கண்டுகொள்ளப்படாத-பரம்பரையாக வறுமையில் வாடிய ஒரு குடும்பத்தில் முகிழ்த்தவர்தான் கவிஞர் வெள்ளியங்காட்டான்.  அவருக்கு மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்று போனது.

இளமையில், தந்தையாரோடு சேர்ந்து பாத்தியில் நீர் பாய்ச்சிக் களையெடுப்பதும் மாடு மேய்ப்பதும் எனத்தனது பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் உதவ வேண்டிய, வறுமைச் சூழல். அந்நிலையில்தான்  சுயமாகத் தமிழ்க் கற்கத் தொடங்கினார்.   தமிழ் மீது கொண்டிருந்த பற்றினால் தொடர்ந்து பல இலக்கண இலக்கியங்களைப் படித்தார்.  திருக்குறளையும் புறநானூற்றையும் நன்கு கற்றறிந்தார்.   தந்தையாருடன் வயலில் உதவி வந்த நேரம் போக மற்ற நேரங்களில் புத்தகமும் கையுமாகவே இருந்தார்.

Last Updated on Monday, 15 May 2017 07:17 Read more...
 

சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்

E-mail Print PDF

சுப்ரபாரதிமணியன் -சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்  ராசபாளையம் கிளை ராசபாளையத்தில்  7/5/17 அன்று நடத்தியது.  விசயராணி தலைமை வகித்தார்.

மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் –( சுடுமணல் நாவல் ) , மருத்துவர் சாந்திலால் செந்தழல் சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் ( விமோசனம் தொகுப்பு ), சாயத்திரை நாவல் ( வே.பொன்னுசாமி ), அபூர்வன்ராஜா ( மற்றும் சிலர் நாவல் ) வீரபாலன் ( கோமணம் நாவல் ) திருமுத்துலிங்கம் ( சமையலறைக்கலயங்கள் நாவல் )  இராமையா ( ஓ ..செகந்திராபாத் ) நித்யா, விசயராணி (சுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ( மந்திரச்சிமிழ்  ),  பற்றிப் பேசினர். சுப்ரபாரதிமணியனின்  கதைகளின் பொதுவான த்ன்மை பற்றி கண்மணி ராசாஅ உரையாற்றினார் . பெ.சரவணன் நன்றி கூறினார்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் சமூக அக்கறையுடன் எழுதும் எழுத்தாளர் என்பதை அவரின் 15 நாவல்கள் உட்பட 50 நூல்களின் மடைப்பு மையங்களே சொல்லும்.எதிர்கால சமூகம் பற்றிய நல்ல கனவுகளை நோக்கி இன்றைய யதார்த்த உலகை அவரின் படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன..மனசாட்சியின் குரலாய் ஒலிக்கும் அவரின் இலக்கியக் குரல் தனித்துவமானது. எழுத்துப்போராளியாகவும் அவர் விளங்கி வருவதை சுற்றுச்சூழல் சார்ந்த அவரின் நூல்கள் அடையாளம் காட்டும்  என்றார் முன்னேற்றப் பதிப்பகம் உரிமையாளர் வீரபாலன்.

நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.

Read more...
 

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: வைகாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்

E-mail Print PDF

தமிழ்க் கவிதையின் மரபுசார் வடிவங்கள் - தமிழ்ப் யாப்பு வடிவங்கள் பற்றிய அறிமுகமும் நிகழ்வரங்கும்

தமிழ்க் கவிதையின் மரபுசார் வடிவங்கள் - தமிழ்ப் யாப்பு வடிவங்கள் பற்றிய அறிமுகமும் நிகழ்வரங்கும்

Read more...
 

கோபன் மகாதேவாவின் இலக்கியப் பணிகள்: சில குறிப்புகள் (2009 வரை)

E-mail Print PDF

-பேராசிரியர் கோபன் மகாதேவா -▬என். செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்▬பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் தமிழ்,  ஆங்கில மொழிகள் மூலமான 2009 வரை இலக்கிய முயற்சிகள் பற்றிய சிறு பதிவாக இக் கட்டுரை அமைகின்றது.

கோபன் மகாதேவா 05.01.1934 அன்று,  ஈழத்து யாழ்ப்பாணச் சாவகச்சேரி மட்டுவிலில் பிறந்தவர்.  தனது 14ஆவது வயதில், பாடசாலை நாட்களிலேயே, 1948 ஜனவரியில் மகாத்மா காந்தி  பற்றி ஆங்கிலக் கவிதை ஒன்றையும், விண்வெளி ஆராய்ச்சி  என்ற தலைப்பில் தமிழ்க் கட்டுரை ஒன்றை வீரகேசரியிலும் எழுதி இலக்கிய உலகில் கால் பதித்தவர்.

தொடர்ந்து Perennialis Schoolis (1949), A Childhood Visitor (1950) போன்ற ஆங்கிலக் கவிதைகளை எழுதித் தன் இலக்கியப் புலமையை வளர்த்து 2009 அளவில் ஆங்கிலத்திலும், ஓரளவு தமிழிலும் கவிதைகளை எழுதி வருபவர்.

முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆரம்பக் கல்வியை தமிழில் மேற்கொண்டு இருந்தாலும், பின்னாளில் பல்கலைக் கழகம் புகும் வரை ஆங்கிலமூலம் தனது இடைநிலை, உயர் கல்வியை மேற்கொண்டதால் இவரது ஆங்கில இலக்கியப் பரப்பு விரிவு கண்டது என்று கருதலாம்.

கோபன் மகாதேவாவின் கவிதைகளின் கரு, காலத்துடன் ஒத்தியைவதாக இருப்பதைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது.  இவர் தனது வாழ்வின் முற்பகுதியை 1961வரையும், பின்னர் இடைப்பட்ட கால கட்டத்தை 1966 முதல் 1978 வரையிலுமாக இலங்கையில் கழித்தவர்.   எஞ்சிய காலத்தை பிரித்தானியா நாட்டிலும் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான Trinidad இலும் வாழ்ந்து அவ்வந்நாடுகளில் பணியாற்றியவர்.  இவரது படைப்புக்களில் காணப்படும் தேசம் கடந்த தேடல்களுக்கும் இந்தப் பயணங்களில் ஏற்பட்ட வாழ்வனுபவங்களே காரணமாகின்றன என்று எளிதில் அனுமானிக்க முடிகின்றது.

Last Updated on Sunday, 14 May 2017 08:03 Read more...
 

பாப்பா சொல்லும் கதை ('பாப்பா'ப் பாடல்கள்)!

E-mail Print PDF

பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -

1. புலியாரும் , புள்ளி மானும்!

அழகிய பச்சைக் காடாம்
அருகே பெரிய குளமாம்
தண்ணீர் குடிக்க மிருகங்கள்
தேடி அங்கே வருமாம்..

ஒட்டகம் எருமை யானை
ஓநாய் கரடி எனவே
காட்டில் மிருகம் பலவாம்
குயிலும் மயிலும் உண்டாம்..

சிவப்புக் கண்ணை உருட்டி
சீறிப் பாயும் புலியாம்
காட்டில் ராஜா என்றே
கர்ச்சனை செய்யும் சிங்கமாம்..

Last Updated on Sunday, 14 May 2017 07:38 Read more...
 

ஆய்வு: தொல்காப்பியவழி புறநானூறு தெளிவுறுத்தும் பாடாண் திணை

E-mail Print PDF

தொல்காப்பியப் புறத்திணைச் சிறப்பு
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -உலக மொழிகளின் இலக்கணங்கள் எல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே அமைந்திருக்க, தமிழ் மொழியில் மட்டும் பொருளுக்கும் இலக்கணம் கண்டுள்ளமை தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எழுத்தும் சொல்லும் உரைத்த தொல்காப்பியம், இவ்விரண்டும் அறிந்தவர்கள் இலக்கியமும் தெளிதல் வேண்டும் என்று கருதியே இலக்கிய, இலக்கணம் கூறும் பொருளதிகாரம் கண்டார். மொழிக்கும், மொழி வழித் தோன்றிய இலக்கியங்களுக்கும் மட்டுமல்லாது, மொழி பேசும் மக்களுக்கும் அவர்களின் வாழ்வியல் நெறிகளுக்கும் இலக்கணம் வகுத்துரைத்தவர் தொல்காப்பியர். எனவேதான், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைச் ‘சமூக நூல்’ என்றும், ‘தமிழர்களின் நாகரிகக் கையேடு’ என்றும் கூறுகின்றனர். தொல்காப்பியத்தைத் ‘தமிழின் உயிர்நூல்’ என்கிறார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள். உலக மொழிகளில் எம்மொழியும் பெறாத தனிச்சிறப்பு பொருளதிகாரத்தால் தமிழ் பெற்றுள்ளது.

அகத்திணை ஏழு என்பதற்கேற்பப் புறத்திணையும் ஏழு எனவே கூறி, அவ்வகத்திணைகளைப் புறத்திணைகளுக்கு இனமான திணைகள் என்று தொல்காப்பியர் வகுத்துள்ளார்.

வெட்சி    - குறிஞ்சியின் புறம்
வஞ்சி    - முல்லையின் புறம்
உழிஞை    - மருதத்தின் புறம்    
தும்பை    - நெய்தலின் புறம்
வாகை    - பாலையின் புறம்
காஞ்சி    - பெருந்திணையின் புறம்
பாடாண்    - கைக்கிளையின் புறம்

இதன்வழி தொல்காப்பியப் புறத்திணைப் பகுப்பு அகத்திணைப் பகுப்பின் அடிப்படையிலேயே எழுந்தது என்பதனை அறியலாம்.

தொல்காப்பியப் புறத்திணையியல் போர் பற்றிக் கூறுவதிலும்கூட அறத்தையே பெரிதும் நிலைநாட்ட விரும்புகின்றது. அரசன் வலிந்து போர் செய்தல் இல்லை. தன் மண்ணைக் காக்கவும், தன் அரண் காக்கவும், தன் வலிமையை மாற்றானுக்கு உணர்த்தித் தன் வீரத்தை நிலை நிறுத்தவுமே போர்கள் நடைபெற்றன. காலப்போக்கில் இக்கோட்பாடுகள் நிலை பேற்றையடைய முடியவில்லை. அகம்-புறம் என்ற பகுப்பும், அகப்புறம்-புறப்புறம்-புறஅகம் என வளரலாயின. புறத்திணைகள் ஏழு என்ற நிலையிலிருந்து பன்னிரண்டு எனப் பெருகின. இவற்றுள் பாடாண் திணை குறித்த செய்திகளை எடுத்துரைப்பதாய் இக்கட்டுரை அமைகின்றது.

Last Updated on Sunday, 14 May 2017 07:15 Read more...
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்பு

E-mail Print PDF

ஆய்வு: சங்கஇலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்புகதைசொல்வது மரபு ரீதியான ஒன்று. மனிதன் தன் அனுபவங்களை அடுத்தவர்க்கும் அடுத்த தலைமுறையினர்க்கும் சொல்கிறான். கதை இலக்கியங்களில் சொல்லும் முறை காலநிலைக்கு ஏற்ப பல வடிவங்களில் நிகழ்ந்துள்ளன. சங்ககாலத்தில் செய்யுட்களின் மூலமாகச் சிறு, சிறு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை அடிப்படையிலும் கற்பனைகள் கலந்தும் புனைந்துரைக்கப்பட்டன. ஓர் கதைப்பாடலுக்கு கரு, கருவைச் சுமந்துசெல்லும் மாந்தர்கள், பயணிக்கும் சூழல் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றது. அவை குறுங்கதைகளைப் போலவும் நெடுங்கதைகளைப் போலவும் காணப்படுகின்றன. இத்தகைய மரபின் அடிப்படையில் காணப்படுகின்ற சங்க இலக்கியத்தினை  கதைப் பொதிக்கவிதைகள் என்பதை பதிவுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை விளங்குகிறது.

சங்க இலக்கியம் கதைக்கூற்றுக் கவிதைகளாக காணப்படுகின்றன என்று விளக்கும் கதிர் மகாதேவன், “எல்லா புறநாற்றுப்பாடலும் பதிற்றுப்பத்துப் பாடலும் கதைக்கூற்றுக் கவிதையாய் இன்று நமக்குப் புலப்படவில்லை. ஆனால், திணை துறை அமைப்பு நாடக முன்னிலைக்கு உரியது. ஆயின், சிறுகதைக்கு உரிய பாங்கு அனைத்தும் பெற்றவை அகப்பாடல்கள். புறப்பாடல்கள் பாடிய புலவர்கள் பலரும் அகப்பாடல்கள் பாடியுள்ளனர். முதல், கரு, உரிப்பொருள்களின் அமைப்பில் இரண்டும் ஒரு தன்மையான இலக்கியக் கொள்கைகள் பெற்றவையே.  மன்னனை அன்று மக்கள்  தம் உயிராக மதித்தனர். அவனைப் பற்றிய எண்ணங்களே சுவைக்கு உரிய கற்பனையாக அக்கால(வீரநிலைக்கால) மக்களுக்கு இருந்திருக்க  வேண்டும். களநிகழ்ச்சிகள் என்றுமே கதைநிகழ்ச்சிகள். நிகழ்ச்சிகள் நடந்த காலத்து, அவை ஓவியம் போல் வீரநிலைக் காலத்து மக்கள் உள்ளத்துப் பற்பல கற்பனைளைத் தோற்றுவித்திருக்கக் கூடும், எடுத்துக்காட்டாக,

“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்  திங்கள்  இவ்வெண்  நிலவின்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டர் யாம் எந்தையும் இலமே”(புறம்-112)

Last Updated on Sunday, 14 May 2017 06:52 Read more...
 

ஆய்வு: ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கிய படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான அறநெறிகளை எடுத்து இயம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம்,வழக்கம்,நீதி,கடமை,ஈகை,புண்ணியம்,அறக்கடவுள்,சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18)

ஆத்திசூடியில் அறநெறிகள்
ஆத்திசூடி அமர்ந்த தேவனை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே (ஆத்தி.கடவுள் வாழ்த்து)என்று இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.ஆத்திமாலை அணிந்த இறைவன் சிவபெருமான்.ஆத்திசூடி என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர்பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்துக்கு ஒரு பாடலாக மொத்தம் 108 பாடல்கள் உள்ளன.ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது.இதற்கு ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும் என்ற யாப்பருங்கலம் விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் பகர்கிறது.ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளன.சிறுவர்கள் மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற வடிவில் உள்ளது.

Last Updated on Saturday, 13 May 2017 21:32 Read more...
 

நெய்தல் கவிதை இதழ்

E-mail Print PDF

நெய்தல் கவிதை இதழ்

வணக்கம், நெய்தல் எனும் பெயரில் கவிதை இதழ் வரவுள்ளதால் அதற்காக கவிதை,ஹைக்கூ,கவிதைகள் /கவிதை இதழ்கள்  கட்டுரை,கவிதை நூல் அறிமுகம் என அனுப்பலாம்.நூல் அறிமுகத்திற்கு இரண்டு பிரதிகள் அனுப்பவேண்டும்.
நட்புடன்,

முல்லைஅமுதன்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 10 May 2017 05:57
 

கவிதை: குளம்!

E-mail Print PDF

கவிதை: குளம்!

குளம்
எனக்காக
அமைதியாக இருந்தது.
காற்றும் அப்படியே.
வானத்தில் விமானம் பறப்பிலில்லை.
பறவைகள்
எங்கோ
தூரமாய் போயிருக்கவேண்டும்.
புடவைகளின்
மணம் அருகிலுமில்லை.
குளத்தை
அப்படியே மூச்சுக்காற்றால்
உள்ளிழுத உணர்வு
ஏதோ
பல கதைகள்
கன நாளாய்ச் சொல்லியது
எவ்வித ஆர்பாட்டமுமின்றி..

Last Updated on Wednesday, 10 May 2017 05:55 Read more...
 

நிலாரவி கவிதைகள்!

E-mail Print PDF

கவிதை: முகமூடி - நிலாரவி.

1. கவிதை: முகமூடி

எத்தனை முகமூடிகள்
என் முகத்தின் மேல்
ஒப்பனை என்கிற
பெயரில்தான் வந்து
ஒட்டிக்கொண்டது
என் முதல் முகமூடி

பின்
கற்பிக்கப்பட்டவைகளின் சாயங்கள்
அடுகடுக்காய் பூசிக்கொண்டன
என்முகத்தை

கோபத்திலும்
உணர்ச்சிகளிலும்
கோரமாய் ஒட்டிக்கொண்டவைகளை
நிரந்தரமாக நீக்கிவிட
முயன்று தோற்கிறேன்

Last Updated on Wednesday, 10 May 2017 05:47 Read more...
 

மூன்று மூலிகை மருந்தான திரிகடுகம் கூறும் அறக் கூற்றுக்கள்

E-mail Print PDF

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

எட்டுத் தொகையும், பத்துப் பாட்டும் சங்க இலக்கியங்களாகும். இப் பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். அதே போல, சங்க மருவிய காலத்தில் எழுந்த பதினெட்டு நூல்களான திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபங்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. இப் பதினெட்டு நூல்களையும் குறிக்கும் நாலடி வெண்பா ஒன்றையும் காண்போம்.

'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுங்   கோவை பழமொழி – மாமூலம் 
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய  வாங்கீழ்க் கணக்கு.'

மேலும், இப் பதினெட்டு நூல்களையும் முப்பகுதிகளான 1. நீதி கூறும் 11 நூல்கள், 2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள், 3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் என்று வகுத்துக் கூறுவர்.

1. நீதி கூறும் 11 நூல்கள் - திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது,
இன்னா நாற்பது,  திரிகடுகம்,  ஆசாரக் கோவை,  சிறுபஞ்சமூலம்,  பழமொழி  நானூறு,  
முதுமொழிக் காஞ்சி, ஏலாதி.

2. அகம் சார்ந்த ஆறு (06) நூல்கள் - ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை
எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது.

3. புறம் சார்ந்த ஒரு (01) நூல் -  களவழி நாற்பது.

இனி, மேற்கூறிய நீதி கூறும் நூல்களில் ஒன்றான திரிகடுகம் என்ற நூல் கூறும் செய்திகளை ஆய்வதுதான் இக்கட்டுரையின் நோக்காகும். இந் நூலை நல்லாதனார் (நல் 10 ஆதனார்) என்னும் புலவர் இயற்றினார். இவர் வைணவ மதத்தைச் சார்ந்தவர். இவர் திரிகடுகத்தில் காப்புப் பாடலைத் தவிர, நூறு (100) பாடல்களைப் பாடியுள்ளார்.  திரிகடுகம் ஸ்ரீ  திரி 10  கடுகம்.  திரி ஸ்ரீ   மூன்று.    கடுகம் ஸ்ரீ   மருந்து.  சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய முப்பொருள்களால் ஆகிய மருந்து உடல் நோயைத் தீர்ப்பன. அதேபோல், இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப் பெறும் மூன்று கருத்துக்கள் உள்ளன. அவை நோயைப் போக்கும் தன்மை கொண்டன.

Last Updated on Wednesday, 10 May 2017 05:35 Read more...
 

தமிழ் இன அழிப்பு நாள் மே 18

E-mail Print PDF

Last Updated on Tuesday, 09 May 2017 21:23
 

" புலம்பெயர் எழுத்தாளர்களது எதிர்காலத் தலைமுறைகள் தமிழில் இலக்கியம் படைக்கப்போவதில்லை"

E-mail Print PDF

 'ஞானம்' ஆசிரியர் தி. ஞானசேகரன் - அவுஸ்திரேலியா,  மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில்  இலங்கை  ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் " ஈழத்து இலக்கியத்தின்  இன்றைய நிலை"  என்ற தலைப்பில்  நிகழ்த்திய உரையின் முழுவடிவம். 'பதிவுகள்' இணைய இதழுககு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி-


ஈழத்தில் இடம்பெற்ற  போர்காரணமாக, ஈழத்து இலக்கியத்தின் இயங்குநிலை இருவேறு தளங்களில் இயங்கிவருவதை அவதானிக்க முடிகிறது. ஒன்று, ஈழத்தின் தேசிய புவியியல் மற்றும் வாழ்வியல் அமைவுகளுக்கு ஏற்ப படைக்கப்படும் இலக்கியம். இது ஈழத்தின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியவாதிகளால் படைக்கப்படுவது. மற்றது, போர்காரணமாக ஈழத்தில் இருப்பது பாதுகாப்பில்லை என்று அஞ்சி பல்வேறு நாடுகளுக்கும் சென்ற ஈழத்தவர்கள் படைக்கும் இலக்கியம். இது புலம்பெயர் இலக்கியம் என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு  ஈழத்து இலக்கிய இயங்குதளங்கள் பற்றியும் இவற்றின் இன்றைய நிலை பற்றியும் விளக்குவதே இந்த உரையின் நோக்கமாகும். முதலில் புலம்பெயர் இலக்கியத்தின் இன்றைய நிலைபற்றிக் கூறுவது இந்த உரையின் ஒட்டுமொத்தமான உட்பொருளை விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.

புலம்பெயர் இலக்கியமானது ஈழத்து இலக்கியத்தின் நீட்சி எனக்கொள்ளப்படுகிறது.  அதாவது ஈழத்து இலக்கியம் ஈழத்து இலக்கியமாக மட்டுமில்லாமல் புலம்பெயர் இலக்கியமாகவும் உள்ளது. இது ஈழத்தமிழர்கள் படைக்கும் இலக்கியமாக இருக்கிறதேயொழிய இந்தியத் தமிழர்களின் இலக்கியமாக இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமது நாட்டினைப்பிரிந்த ஏக்கத்தினையும் சென்றடைந்த  நாடுகளில் தமக்கு ஏற்பட்ட  துன்ப அனுபவங்களையும் பதிவு செய்த இலக்கியமாக புலம்பெயர் இலக்கியம் இருந்தது. புலம்பெயர் இலக்கியம் என்ற அடையாளப்படுத்தல் உருவான காலப்பகுதியில் இருந்த சூழல் இன்று இல்லை. பலநாடுகளிலும் புகலடைந்தவர்கள் அங்கு காலூன்றி நிலைத்துவிட்டார்கள். இவர்களுக்கு அறிவு விருத்தி, அனுபவ விசாலம், தொழில் நுட்பத்தோர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி, கலாசாரப்புரிந்துணர்வு முதலியன ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கேற்ப படைப்புகளின் உள்ளடக்க அம்சங்கள் மாற்றம் பெறத் தொடங்கிவிட்டன. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பலர் இன்று தமிழ்ப் படைப்புலகில் முன்னணி வகிக்கிறார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களுக்கு தமிழ்மக்களிடையே உலகளாவிய ரீதியில் மதிப்பு இருக்கிறது. தமிழகப் பத்திரிகைகள் இந்தப் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கின்றன.

நடேசன், ஆசி கந்தராஜா, கே. எஸ். சுதாகர், முருகபூபதி, பார்த்திபன், ஷோபாசக்தி, அ. முத்துலிங்கம்,  தேவகாந்தன், இ. தியாகலிங்கம், கருணாகரமூர்த்தி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமல் குழந்தைவேல், வி.ஜீவகுமாரன், மாத்தளை சோமு, அகில், குரு அரவிந்தன், வ.ந.கிரிதரன்,  இரா உதயணன், ஸ்ரீரஞ்சினி ,  இப்படியாக ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம். ஈழத்தவர்களாகிய நாம் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களையிட்டு பெருமை  அடைகிறோம். இவை எம்மவர்களின் எழுத்துக்கள் எனக் கொண்டாடுகிறோம்.

Last Updated on Monday, 08 May 2017 06:36 Read more...
 

படித்தோம் சொல்கின்றோம்: " என்றாவது ஒரு நாள் " --- ஹென்றி லோஸன் தமிழில் கீதா மதிவாணன். அவுஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக்கதைகள்.

E-mail Print PDF

 என்றாவது ஒரு நாள் " ---  ஹென்றி லோஸன் ஹென்றி லோசன் கீதா மதிவாணன்" புத்தாண்டின்  முன்னிரவுப்பொழுது.  வறண்ட  கோடையின் மத்தியில்   வெக்கையானதொரு  இரவு.  திசையெங்கும் திணறடிக்கும்  கும்மிருட்டு..!  காய்ந்த  ஓடைப்பாதையின் புதர்மூடிய  வரப்புகளும்  கண்ணுக்குத்தென்படாத  காரிருள். வானைக்  கருமேகமெதுவும்  சூழ்ந்திருக்கவில்லை.  வறண்ட நிலத்தின்  புழுதிப்படலமும்  தொலைதூரத்தில்  எங்கோ  எரியும் காட்டுத்தீயின்  புகையுமே  அந்த  இரவின் இருளைக்கனக்கச்செய்திருந்தன." இவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி  என்ற சிறுகதை.
யார் இந்த ஹென்றி லோசன்...?  அவுஸ்திரேலியாவின் மகத்தான சிறுகதையாசிரியர் எனக்கொண்டாடப்படும் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றி ஹெட்ஸ்பார்க் லோசன் 1867 ஆம் ஆண்டில் நியூ சவுத்வேல்ஸ்  மாநிலத்தில்  க்ரென்ஃபெல் பிரதேசத்தில் ஒரு தங்கச்சுரங்க வயற்பகுதியில் பிறந்தவர். இந்தத்தேசத்திற்கு நாம் சூட்டியபெயர்கள்: கங்காரு தேசம், கடல் சூழ்ந்த கண்டம், புல்வெளிதேசம். கைதிகள் கண்ட கண்டம்.  இங்கு தங்க வயல்களும் இருந்திருக்கின்றன. மனிதன் மண்ணை அகழ்ந்தான், மரங்களை வெட்டினான். இயற்கையை அழித்தான். ஜீவராசிகளையும் கொன்றான். மண்ணிலிருந்த தங்கத்தையும், வைரத்தையும் உலோகங்களையும் சுரண்டி எடுத்தான்.
இயற்கைக்கும் கோபம் வருமா..? என்பதை அதன் எதிர்பாராத சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்தே பார்க்கின்றோம்.

" கோடையில் ஒருநாள் மழைவரலாம்" என்று கவிஞர்கள் பாடலாம். ஆனால், கவிஞராகவும் வாழ்ந்திருக்கும் ஹென்றி லோசன், ஒரு கோடைகாலத்தை கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாகவே வர்ணித்திருப்பதையே  தொடக்கத்தில் சொன்னேன்.

150 ஆண்டுகளுக்கு  முன்னர் இந்த மண்ணில் பிறந்து, 95 வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்ட ஒரு இலக்கியமேதை எழுதியிருக்கும் சிறுகதைகளை எமக்குத்  தமிழில் தந்திருப்பவர், ஹென்றிலோசன் பிறந்த அதே நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் லிவர்ஃபூல் நகரத்திலிருக்கும் கீதா மதிவாணன். தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா, திருச்சியில் பத்தாம் வகுப்புவரையில் தமிழ் வழிக்கல்வி முறையில் படித்தவர். பின்னர் மின்னணு மற்றும் தொடர்பியல் பட்டயப்படிப்பை முடித்தவர். தாய்மொழி தமிழுடன் ஆங்கிலம் ஹிந்தி  மொழிகளும் கற்றுத்தேர்ந்தவர். இயற்கையின் மீதும் பறவைகள் மீதும் எப்போதும் ஆர்வம்கொண்டவர்.  அத்துடன் சிறந்த ஒளிப்படக்கலைஞர்.   பறவைகளை படம் எடுத்து, அவற்றினைப்பற்றிய நுண்மையான தகவல்களையும் திரட்டி, தொடர்ச்சியாக எழுதிவருபவர்.   அவுஸ்திரேலியாவில் வாழும் தனித்துவ குணங்கள் கொண்ட அதிசய விலங்குகள் மற்றும்  பறவைகள் பற்றிய தொடரை எழுதிக்கொண்டிருப்பவர்.  அதனை கலைக்களஞ்சியமாகவே வெளியிடும் தீராத தாகத்துடன் இயங்கும்  கீதா மதிவாணன்,  கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி மற்றும்  ஆங்கில மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகின்றார். இயற்கையையும் பறவைகள் மற்றும் உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிக்கும் கீதா மதிவாணன், அவரைப்போன்றே இந்த மண்ணையும், இங்கு வாழ்ந்த ஆதிக்குடி மக்களையும், புதர்க்காடுகளில், கோடையில் வாடிய காடுறை மனிதர்களையும் நேசித்த ஹென்றி லோசனின் கதைகளை தெரிவுசெய்து அழகிய மொழிபெயர்ப்பில் தமிழுக்குத்தந்திருப்பது  வியப்பானது.

Last Updated on Sunday, 07 May 2017 00:48 Read more...
 

மரணம் மட்டுமே துயரம் அல்ல. மு.புஷ்பராஜன் எம்மிடமிருந்து விடைபெறும் போது----

E-mail Print PDF

மு.புஷ்பராஜன்அசோகமித்திரன் மறைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஓவியர் கே.கிருஷ்ணராஜா  தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கவிஞர் மு.புஷ்பராஜன் இங்கு பிரித்தானியாவிலிருந்து விட்டு போய்  நிரந்தரமாக கனடாவில் வசிக்கப் போவதான செய்தியை அறிவித்த அவர் அதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள பிரிவுபசார வைபவத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். குடியுரிமை வதிவிடப் பிரச்சினை காரணாமாக, கனடாவில் வதியும் தனது மனைவி, பிள்ளைகளை விட்டுப்  பிரிந்து வாழும் புஷ்பராஜன்  எப்போதாவது ஒரு நாள் அவர்களிடம் போய் சேருவார் என்பதை நாம் எதிர்பார்த்திருந்தாலும் அந்நாள் இவ்வளவு சீக்கிரம் வந்து சேரும் என்பதினை நாம் எவருமே எதிர்பார்க்கவில்லை. இனி அவர் எம்மோடு இல்லை. எமது இலக்கிய சந்திப்புக்கள், அரசியல் கலந்துரையாடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், எமது ரெட்மூன் மாதாந்த திரைப்பட நிகழ்வுகள் எதிலுமே இனி இவரைப் பார்க்க முடியாது. மனதை ஏதோ ஒரு வெறுமை அப்பிக் கொண்டது. அசோகமித்திரன் மறைந்து மூன்றாவது நாள் 25.03.17 அன்று ஒரு சனிக்கிழமை மாலை 5 மணியளவில் ஈஸ்ட்ஹாம் இல் அமைந்துள்ள  சிந்துமஹால் உணவு விடுதியின் கீழ்த்தளத்தில் ஒன்று கூடினோம். அன்றைய தினம் அங்கு மு.புஷ்பராஜன், பேராசிரியர் மு.நித்தியானந்தன், ஓவியர் கே.கிருஷ்ணராஜா, யமுனா ராஜேந்திரன் இவர்களுடன் தோழர்கள் வேலு, சேனன், எம்.பௌசர், கோகுலரூபன், சாந்தன், கஜன் காம்ப்ளர், செபஸ்டியன் என பத்திற்கும் மேற்பட்ட கலை, இலக்கிய ஆர்வலர்களும், அரசியல், சமூக  செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் ஒரேயொரு பெண் பிரதிநிதியாக தோழர் பாரதி மட்டுமே கலந்து கொண்டார் என்பதினையும் இங்கு பதிவு செய்வது அவசியம் என கருதுகின்றேன்.

Last Updated on Saturday, 06 May 2017 23:54 Read more...
 

குளோபல் தமிழ்ச் செய்தி (மீள்பிரசுரம்) : பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்.

E-mail Print PDF

பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்அதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார். இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியியலாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மரத்திலான பயில்கள் கீழ் இறக்காமல் கட்டிட நிர்மானம் செய்யக் கூடாது. அது கட்டடத்தின் ஆயுட்காலத்தை பாதிக்கும்’ என தனக்கு கிடைக்கப் பெற்ற மண் மாதிரியை பரிசோனை செய்த பெண் பொறியியலாளர் கூறினார். ‘அத்தனை பெரிய செலவினை செய்ய முடியாது. எனினும் இந்த கட்டடத்தை நிர்மானிக்க வேண்டும் அல்லவா’ என ராஹூல தேரர் கூறினார். இந்த சம்பாசனை நடைபெற்ற போது ராஹூல தேரரின் உறவினரான சித்தாலபே நிறுவனத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொடவும் பிரசன்னமாகியிருந்தார். ‘எனினும் மற்றுமொரு முறை காணப்படுகின்றது எனினும் இந்த முறை இலங்கையில் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என அந்த இளம் பெண் பொறியியலாளர், நாயக்க தேரரிடம் கூறினார்.

‘அம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்னவென்று’ என விக்டர் ஹெட்டிகொட இந்த சம்பாசனையில் இணைந்து கொண்டு கூறினார்.

‘ ஒட்டு மொத்த கட்டடத்தின் அத்திவாரத்தையும் ஒன்றாக நிர்மானிக்காது பகுதி அளவிலான அத்திவாரங்களின் ஊடாக நிர்மானிக்க முடியும். இவ்வாறு செய்தால் ஓர் இடத்தில் தாழிறங்கினாலும் ஒட்டு மொத்த கட்டடத்தையும் பாதிக்காது, புனர்நிர்மானப் பணிகளும் இலகுவில் செய்ய முடியும் என தனது புதிய தொழில்நுட்பத்தை பெண் பொறியியியலாளர் விபரித்தார்.

அதி வணக்கத்திற்குரிய ராஹூல தேரர் இந்த புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டடத்தை நிர்மானிக்க இணங்கியிருந்தார். சகதி மிக்க மண்ணில் கட்டிட அத்திவாரத்தை போட்டால் பாரியளவில் செலவாகும். எனினும் இளம் பெண் பொறியியலாளரின் யோசனைக்கு அமைய நிர்மானம் செய்ததனால் பாரியளவு செலவு குறைக்கப்பட்டது.

Last Updated on Saturday, 06 May 2017 23:44 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 234 : அறிஞர் அண்ணா மற்றும் கவிஞர் கண்ணதாசன் சர்ச்சை பற்றி...; மார்க்சை நினைவு கூர்வோம்!; சற்சொரூபவதி நாதன் மறைவு!

E-mail Print PDF

கவிஞ்ர கண்ணதாசன்அறிஞர் அண்ணாபேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களை அவமானப்படுத்தும் அவரது எதிரிகள் அவரைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்போது ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார்கள். சட்டசபையில் ஒருமுறை அவருக்கும் ஒரு நடிகைக்குமிடையில் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் குற்றஞ்சாட்டியதாகவும் அப்பொழுது அவர் \அண்ணாவின் பதில்:
'நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை' என்று குறிப்பிட்டதாகவும் குறிப்பிடுவார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் அடுக்கு மொழிகளைக்கொண்டு வசனங்களை உருவாக்கிப் பதிலளிப்பதில் பெயர் போனவர். 'மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்' என்று 'ம'வில் வரும் அடுக்கு மொழிகளைக் கொண்டு ஒரு முறை அவர் கூறியிருக்கின்றார். அதுபோல் யாரோ ஒருவர் சினிமாக்காரர்களைப்பற்றி வரும் கிசுகிசுக்களின் அடிப்படையில் அவ்விதம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு அவர் அண்ணாவும் வேடிக்கையாக 'நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல' என்று கூறியிருக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அவர் 'அவள் ஒன்றும் படி தாண்டாப் பத்தினியும் இல்லை' என்று கூறியிருந்தால் தவறு. ஆனால் அப்படி அவர் கூறியிருப்பாரா அல்லது இதுவும் அவரைப்பற்றி உலாவிய கிசுகிசுக்களிலொன்றா என்பது தெரியவில்லை.

யாராவது அறிஞர் அண்ணாவைப்பற்றிக் குற்றஞ் சாட்டுவதாகவிருந்தால் ஆதாரம் இல்லாமல் கிசுகிசுக்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டாதீர்கள். சட்டசபையில் இவ்விதம் விவாதம் நடந்திருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் முன் வையுங்கள். அறிஞர் அண்ணா உட்படப் பல திமுகவினர் தமிழ் சினிமாவில் இயங்கியவர்கள். சினிமாக்காரர்களைப்பற்றி கிசுகிசுக்கள் எழுதுவதற்கென்றேயொரு கூட்டம் இருக்கிறது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தி அவற்றின் மூலம் ஒருவரைக் களங்கப்படுத்துவதென்பது கீழ்த்தரமானது.

Last Updated on Saturday, 06 May 2017 05:24 Read more...
 

ஆசி கந்தராஜாவின் படைப்புலகம் - ஓர் இரசனைக் குறிப்பு

E-mail Print PDF

-புலோலியூர் ஆ இரத்தினவேலோன்-கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில், இனங்கானப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது, புனை கதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. போராட்ட இலக்கியங்களைப் போலன்றி, புலம் பெயர் இலக்கியங்களில் வாசகர் அனுபவித்த வாழ்க்கையானது அவர்களது இயல்பான வாழ்க்கைக் கோலங்களுக்கு முற்றிலும் அந்நியமாகத் திகழ்ந்ததற்கும் அப்பால், புலம் பெயர் இலக்கியங்களில் தரிசித்த புதிய காட்சிகளும் மொழி நடையும், புதியதோர் உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றதே, அவ்விலக்கியம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமாக அமைந்திருந்தது.

புலம்பெயர் இலக்கியத்தில் காணப்பட்ட இத்தகைய வித்தியாசமான, தனித்துவமான அம்சம்தான் அதற்கோர் சர்வதேசிய அந்தஸ்தைக் கொடுத்ததோடு, புதிய யுகத்தில் அதுவே கிரீடம் சூடிக் கொள்ளும் என்று எஸ்.பொ. போன்றவர்கள் கூறுமளவிற்கு நிறைய நம்பிக்கையையுந் தந்தது. பொ.கருணாகரமூர்த்தி, க.கலாமோகன், ஷோபாசக்தி, தேவகாந்தன், கே.எஸ்.சுதாகர், வி. ஜீவகுமாரன் போன்றவர்களுடன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுத ஆரம்பித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் உணர்திறன் முறைமை மாற்றத்தில் புதிய பரிமாணம் பெற்ற அ.முத்துலிங்கம் முதலானோர் புலம்பெயர் இலக்கியத்தில் ஆழத்தடம் பதித்ததோடன்றி, மேலும் தமது தொடர்ச்சிகளை உருவாக்க முனைந்தனர். அ.முத்துலிங்கத்தின் கூறுபாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே ஆசி கந்தராசாவை நான் காண்கின்றேன். உண்மையில் முத்துலிங்கத்தின் உணர்திறன் முறைமையினை மேலும் அகலப்படுத்தும் ஓர் பண்பினையே ‘ஆசி’ யின் ஆக்கங்களில் என்னால் தரிசிக்க முடிகின்றது.

Last Updated on Saturday, 06 May 2017 05:09 Read more...
 

கவிதை: தென்னைகளில் கள்ளெடுப்பவள்

E-mail Print PDF

பக்கவாதப் புருஷனுக்கென முதலில்
வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்
தோப்பு மரங்கள்
அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு
தொடக்கத்தில் ஊர் முழுவதும்
வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்
பெண்ணேறும் தென்னைகள்
அதிகமாகக் காய்க்கிறதென
விடியலிலும், இரவிலுமென

எக் காலத்திலும் மரமேறுபவள்
எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து
நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்
ஓரோர் மரத்துக்கும்
கயிற்றின் வழியே நடந்து சென்று
மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்
கள்ளெடுக்கும் செம்பருத்தி
தென்னை ஓலைகளினூடே தொலைவில்
கடல் மின்னுவதை
எப்போதும் பார்த்திருப்பாள்

Last Updated on Saturday, 06 May 2017 04:57 Read more...
 

ஆய்வு: நிலம் - மையம் - அதிகாரம்

E-mail Print PDF

1
- முனைவர் ஞா.குருசாமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -இங்கிலாந்தின் நிலவுடைமையிலான உற்பத்தி வரலாறு இடைக்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. கி.பி 1066 முதல் 1300 வரையிலான நார்மன் ஆட்சிக்காலத்திற்கு முன்பே இங்கிலாந்தில் மேனர் முறை வழக்கில் இருந்தது. மேனர் முறை என்றால் வரி செலுத்தும் நிலப்பகுதிகள் என்று பொருள். இந்நடைமுறை இங்கிலாந்தில் மட்டுமின்றி மத்திய ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா நாடுகள் அனைத்திலும் வழக்கத்தில் இருந்தது. இங்கிலாந்தில் இந்நடைமுறை எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதற்கு சரியான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. ரோமானிய சாம்ராஜ்யத்தில் அடிமை ஊழியர்களால் பயிரிடப்பட்ட வில் (Vill) என்பதிலிருந்து இது தோன்றியிருக்க வேண்டும் எனவும், ஜெர்மனி நாட்டில் பயிர் செய்யப்பட்ட பிரதேசமாகிய மார்க்கில் (Mark) இருந்து இது நிலவி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டு வரலாற்று அறிஞர்கள் ரோமானியர், டியுடானியர் ஆகியோர்களின் முறைகளில் இருந்து இது தோன்றி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 1086 - இல் எழுதப்பட்ட டூம்ஸ்டே புத்தகத்தில் (Domesday Book) இருந்து தான் நார்மன் ஆட்சியில் மேனர் முறை இருந்து வந்ததைப் பற்றி அறியமுடிகிறது. மேனர்களில் பெரும்பகுதி திருச்சபைகளின் வசம் இருந்தன. பேராயர்கள், ஆயர்கள், பிற சமயத் தலைவர்களும் (பிரபுக்கள்) மேனர்களை அனுபவித்தார்கள். இதே காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த இராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் நிலம் அதிகாரத்தின் மையமாக, அதே சமயத்தில் சற்று கூடுதல் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. முதன்முதலில் நிலம் அளவிடும் முறையை அறிமுகப்படுத்திய இராஜராஜ சோழனின் இந்த அணுகுமுறை தன்னுடைய அரசின் வரி விதிப்பில் இருந்து ஒரு சிறு நிலப்பகுதியும் தப்பி விடக்கூடாது என்ற நோக்கினதாகவே இருந்திருக்கிறது.

மேனர் நிலங்களைப் பொறுத்தவரை உள்நிலம் (Inland) என்றும், வெளிநிலம் (Out land or villenegium) என்றும் பிரித்தறியப்பட்டது. உள்நிலம் பேராயர்கள், சமயத் தலைவர்கள் முதலியோர்களின் பயன்பாட்டு நிலமாகவும், வெளிநிலம் பண்ணையாளர்களின் பயன்பாட்டு நிலமாகவும் இருந்தது. பண்ணையாளர்கள் பயன் படுத்திய நிலத்தின் மீது அவர்களுக்குச் சட்டப்படியான உரிமைகள் இல்லை. ஆனால் பேராயர்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய நிலம் அவர்களுக்கு உரிமையுடையதாக இருந்தது. மேலும் வெளிநிலத்தை வைத்திருந்த பண்ணையாட்களை மாற்றுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருந்தது. நார்மன் காலத்தின் பின்பகுதியில் பண்ணையாளர்களின் நிலங்கள் உள்நிலங்களாக மாற்றப்பட்டு பேராயர்கள் உள்ளிட்டவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. ஆட்சி அதிகாரம் அரசன் கையில் இருந்தாலும், நிலத்தின் உரிமையிலான அதிகாரம் பிரபுக்களின் கையில் இருந்ததால் அதிகாரம் மிக்கவர்களாக பிரபுக்களே இருந்தனர். இவர்களின் ஆதரவிலும், வழிப்படுத்தலிலுமே அரசன் ஆட்சி செய்திருக்கிறான்.

Last Updated on Saturday, 06 May 2017 04:45 Read more...
 

தமிழ் - சிங்கள மொழிப்பரிவர்த்தனையில் அயராது உழைக்கும் மடுளுகிரியே விஜேரத்ன! சுவாமி விபுலானந்தரை சிங்கள மக்களிடம் அறிமுகப்படுத்தியவர்!

E-mail Print PDF


 <script language='JavaScript' type='text/javascript'>
 <!--
 var prefix = 'mailto:';
 var suffix = '';
 var attribs = '';
 var path = 'hr' + 'ef' + '=';
 var addy80662 = 'Letchumananm' + '@';
 addy80662 = addy80662 + 'gmail' + '.' + 'com';
 document.write( '<a ' + path + '\'' + prefix + addy80662 + suffix + '\'' + attribs + '>' );
 document.write( addy80662 );
 document.write( '<\/a>' );
 //-->
 </script><script language='JavaScript' type='text/javascript'>
 <!--
 document.write( '<span style=\'display: none;\'>' );
 //-->
 </script>This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
 <script language='JavaScript' type='text/javascript'>
 <!--
 document.write( '</' );
 document.write( 'span>' );
 //-->
 </script>வவுனியாவின் எல்லையில்   மடுக்கந்தை என்ற  அந்த  அழகிய  கிராமத்தில்  வசித்த  மக்கள்  துயில்  எழுந்திருக்காத   புலராத பொழுதிலே,  அந்தச்சிறுவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து, கால்நடையாக  சுமார் 6 மைல் தூரம்   ஒற்றையடிப்பாதையிலும்  வயல் வரப்புகளிலும்  நடந்து  சமணங்குளம்  தமிழ்ப்பண்டிதரிடம்  வருவான்.  அவ்வேளையில் அவன் வவுனியா இரட்டைப்பெரிய குளத்தில்  தனது  ஆரம்பக்கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்தான். தாய் மொழியும் வீட்டு மொழியும் சிங்களம். ஆங்கிலம் படிக்க சரியான வசதி  வாய்ப்புகள்  இல்லை.  அயல் கிராமங்களில் வாழ்ந்தவர்கள்  தமிழர்கள். அதனால், அவர்களுடன் பழகி உறவாடும் சந்தர்ப்பங்களும்  அச்சிறுவயதில்  அவனுக்கு  கிடைக்கிறது. தமிழைப்பேசவும்  புரிந்துகொள்ளவும் பழகிவிடுகின்றான். ஆங்கிலம் அந்நிய தேசத்திலிருந்து வந்த மொழி. அருகிலேயே தொன்மையான தமிழ் மொழி வாழ்கிறது. இதனைவிட்டு விட்டு எதற்காக அந்நியமொழிக்காக ஏங்கவேண்டும்  என்ற  சிந்தனை அந்த இளம் உள்ளத்தில்  பிறக்கிறது. அயலில் சமணங்குளத்தில் பண்டிதர் கந்தையா என்றொருவர் ஆசிரியராகவும்  அதேசமயத்தில்  விவசாயியாகவும்  வசிப்பதாக அறிந்துகொள்கின்றான். அவரைத்தேடி  நடந்த  சென்று, தனக்கு தமிழ் சொல்லித்தரும்படி கேட்கின்றான். அவர்  ஒரு  நிபந்தனை  வைக்கிறார். "என்னிடம் தமிழ் படிக்கவருவதாயிருந்தால்,  அதிகாலை 4 மணிக்கு முன்பே வந்துவிடவேண்டும்.  நான் காலை 6 மணிக்கெல்லாம் வயலுக்குப்போய்விடுவேன். அதன் பின்னர் பாடசாலைக்குச்செல்வேன். மாலையில்  வீடு திரும்பினாலும் உனக்கு தமிழ்ப்பாடம் சொல்லித்தருவதற்கு எனக்கு நேரம் இல்லை. மீண்டும் வயல், தோட்டம்  என்று  போய்விடுவேன். அதனால் உனக்கு தமிழ் சொல்லித்தருவதற்கு  அதிகாலை  வேளைதான்  உகந்தது. அதற்கு சம்மதமாயிருந்தால்  நாளை முதல் வந்துவிடு."  அதிகாலைக்குளிரில்  வீட்டில்  போர்த்திப்படுத்திருக்கவேண்டிய அச்சிறுவன்  தமிழ் மீது  கொண்டிருந்த காதலினால், " காலை எழுந்தவுடன்  படிப்பு"  என்று  பாடிக்கொண்டே  காடு, மேடு,  குளம், குட்டை  கடந்து  ஒற்றையடிப்பாதையால்  வந்து  பண்டிதர்  கந்தையா அவர்களிடம்  தமிழ்  எழுதவும்  பேசவும் கற்றுக்கொள்கின்றான்.

Last Updated on Thursday, 04 May 2017 21:56 Read more...
 

சிறுகதை: வேரும் விழுதுகளும்

E-mail Print PDF

சிறுகதை: அகதியும், சில நாய்களும்! - சுதாராஜ் -புது வருடப்பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பது அவருக்குப் பயமாயிருந்தது. இன்னும் மூன்று கிழமைகளே இருக்கும் நிலையில் நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகப் போகப் பயம் அதிகரித்துக்கொண்டிருந்தது. எப்படிச் சமாளிக்கப்போகிறேனோ என்ற முளுசாட்டம். பிள்ளைகளுக்கு புத்தாடை உடுதுணிகள் வாங்கவேண்டும். ஐந்து பேருக்கும் வாங்குவதானால் எவ்வளவு தேவைப்படும்? அதற்கு எங்கே போவது?

போன வருடத்தைப்போல இந்த வருடமும் கடத்திவிடமுடியாது போலிருந்தது. மூத்த மகன் பிரகாஸ் ஏற்கனவே அவருக்குச் சொல்லிவிட்டான்.

'அப்பா…! எனக்கு இந்தமுறை வருடப்பிறப்புக்கு நீல சேர்ட் வாங்கித் தாங்கோ…! ஸ்கூலுக்கும் போடக்கூடியதாய் இருக்கும்!"

வருடப்பிறப்பு என்பது ஒரு சாட்டுத்தான். பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்குப் போடுவதற்கு உடை தேவைப்படுகிறது. மனைவி சரசுகூட அவருக்கு அவ்வப்போது சொல்லுவதுண்டு.

'ஒரு ஆமான உடுப்பில்லாமல் அதுகள் எப்படி ஸ்கூலுக்குப் போறது?"

அவர் அப்போது மனைவியைச் சினந்து பேசுவார்.

'என்ன சரசு?... நிலைமை தெரியாதமாதிரி கதைக்கிறீர்…என்னை என்ன செய்யச் சொல்லுறீர்?"

அவளுக்கு நிலைமை தெரியும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவளும்தான் என்ன செய்வாள்? வேறு யாருக்குப் போய் முறையிடுவாள்? எனினும் அப்படிச் சத்தம் போட்டால் அவள் திரும்பவும் அந்தக் கதையை எடுக்கமாட்டாள்.

Last Updated on Wednesday, 03 May 2017 06:26 Read more...
 

'நட்பென்றால் நாம் என்போம்' (முகநூல் பக்கம்) : எழுத்தாளர் சுஜாதா வாழ்க்கை வரலாறு (எழுத்தாளர் சுஜாதா பிறந்ததினக்கட்டுரை; மீள்பிரசுரம்)

E-mail Print PDF

'நட்பென்றால் நாம் என்போம்' (முகநூல் பக்கம்) : எழுத்தாளர் சுஜாதா வாழ்க்கை வரலாறு (எழுத்தாளர் சுஜாதா பிறந்ததினக்கட்டுரை; மீள்பிரசுரம்)சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.

சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

வாழ்க்கைக் குறிப்பு
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.

அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 03 May 2017 06:09 Read more...
 

ஆய்வு: கலித்தொகையில் மெய்ப்பாடுகள்

E-mail Print PDF

- முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 - சங்க இலக்கியங்கள் காலம் நமக்குத் தந்த அரிய பெட்டகமாகும். சங்க இலக்கியங்கள் கற்பனையாகவும், பொய்யாகவும் அமையாது, அப்போதைய தமிழர்களின் வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாக அமைந்துள்ளது. அன்றைய சமுதாய மக்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை தகவமைத்து, அதற்கேற்ப வாழ்வை நல்வழியில் செலுத்தி வாழ்ந்துள்ளனர்.

மெய்ப்பாடுகள்
மக்கள் தங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்வுகள் வழி வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு மனிதனின் உடலின்கண் தோன்றும் உணர்வுகளின் வெளிப்பாடே மெய்ப்பாடு ஆகும்.  நமது உள்ளத்தில் நிகழும் உணர்வுகளைப் புறத்தார்க்கும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்தல் மெய்ப்பாடாக மிளிர்கிறது. இந்த மெய்ப்பாடுகள் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் எவ்வாறு எடுத்தாளப்படுகிறது என்பதை இக்கட்டுரை வழி காண்போம்.

மெய்ப்பாடுகளும், நிலைக்களன்களும்
மெய்ப்பாடுகள் எட்டுவகை உணர்வுகளைக் காட்டுவதாகத் தொல்காப்பியர்,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெயப்;பா டென்ப”                    (தொல்.மெய்:247)

என்கிறார். இதில் உள்ள ஒவ்வொரு மெய்ப்பாடுகளும் தனக்கென நிலைக்களன்களைக் கொண்டு தோன்றும்.

நகையும், நகைப்பொருளும்
முதற்கண், நகை எனும் மெய்ப்பாட்டைக் காணுமிடத்து எள்ளல், இளமை, பேதைமை, மடன் எனும் நான்கையும் நிலைக்களனாகக் கொண்டு அமைகிறது. இதனை,
“எள்ளல் இளமை பேதைமை மடன்என்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப”                 (தொல்.மெய்:248)

என்னும் நூற்பா எடுத்துக்காட்டுகிறது.

Last Updated on Wednesday, 03 May 2017 05:15 Read more...
 

உலக அரசியல்: பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோன் முன்னணியில் லண்டன் கருத்தமர்வில் சட்ட ஆலோசகர் எஸ்.பி. ஜோகரட்னம்

E-mail Print PDF

‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.‘எதிர்வரும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் இம்மனுவல் மக்ரோன் வெற்றி பெறுவது என்பது ஐரோப்பாவை மட்டுமன்றி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரிவினை பகிரங்மாக ஆதரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மக்ரோனின் வெற்றியை விரும்பவே மாட்டார்.

பிரெஞ்சு மக்கள் முதல் கட்ட வாக்களிப்பில் இதயத்தாலும்ää இரண்டாம் கட்ட வாக்களிப்பில் மூளையாலும் வாக்களிப்பது வழக்கம் என்ற கூற்றுப்படி 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரெஞ்சுச் சரித்திரத்தில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவருமென்பதில் சந்தேகமில்லை. மே மாதம் 3ஆம் திகதி நடைபெறும் வேள்பாளார் நேரடித் தொலைக்காட்சி விவாதம் மக்களின் மனங்களை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை’ என்று லண்டனில் ஹரோச் சந்தி அமைப்பினர் சென்ற வாரம் ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பற்றிய கருத்தமர்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய சட்ட ஆலோசகரும்ää அரசியல் ஆய்வாளாருமான எஸ். பி. யோகரட்னம் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.   திரு. ரகுபதி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டிருப்பது:‘பிரான்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பிரித்தானியாவில் இடம்பெறும் தேர்தலைவிட முற்றிலும் வித்தியாசமானது. பிரித்தானியாவில்; பிறெக்சிற் (டீசநஒவை) ஐ எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்  பிரான்ஸ் தேர்தலின் முடிவுகள் முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது. பிரெஞ்சு ஜனாதிபதியாகப் போட்டி இடுபவர் ஒரு சுற்றில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ளாத நிலையில் இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் நிலைமை  அங்கு ஏற்படுகின்றது. அந்தவகையில் இம்மனுவேல் மக்ரோன் 23.8 வீதமும்ää மரின் லூபென் 21.5 வீதமும் பெற்று மிகுதி வாக்குகளை ஏனைய ஜனாதிபதி போட்டியாளர்களின்  வாக்குகளை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடவேண்டிய விடயம். எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இரண்டாவது சுற்றில் பகிரப்பட்ட ஏனைய வாக்குகளும் மேற்குறிப்பிட்ட இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் நிலையில் கடும் போட்டி நிலவுகின்றது.

Last Updated on Wednesday, 03 May 2017 05:00 Read more...
 

அவுஸ்திரேலியா: மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா! இலங்கையிலிருந்து 'ஞானம்' ஆசிரியர் ஞானசேகரன், எழுத்தாளர் மடுளுகிரியே விஜேரத்தின வருகை!

E-mail Print PDF

' ஞானம்' இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தனஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை மெல்பனில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இவ்விழாவுக்காக இலங்கையிலிருந்து எழுத்தாளரும் ' ஞானம்' இதழின் ஆசிரியருமான மருத்துவர் தி. ஞானசேகரன், மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு. மடுளுகிரியே விஜேரத்தன  ஆகியோர் வருகை  தருகின்றனர்.  எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017)  சனிக்கிழமை மாலை 5 மணிக்கு  மெல்பனில் விழா நடைபெறும் இடம்: Mulgrave  Stirling Theological  College Auditorium   மண்டபம்  ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic - 3170) அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடலாக  எழுத்தாளர் விழா நடைபெற்றுவருகிறது.

கடந்த காலங்களில் மெல்பன், சிட்னி, கன்பரா, கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களில் நடைபெற்றிருக்கும் தமிழ் எழுத்தாளர் விழா இந்த ஆண்ட,  மீண்டும் மெல்பனில் சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில்  நடைபெறவிருக்கிறது. குறிப்பிட்ட (மாநில) நகரங்களிலுமிருந்தும் சிலர் வருகைதரவுள்ளனர்.

சமீபத்தில் அல்லது முன்னர் தாம் படித்ததும்  தமக்குப்பிடித்ததுமான  ஒரு படைப்பிலக்கிய நூல் அல்லது மொழிபெயர்ப்பு, பயண இலக்கியம்  முதலான துறைகளில் எழுதப்பட்ட  ஒரு நூல் பற்றி பேசும் வகையில் வாசிப்பு அரங்கு நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. வாசிப்பு அரங்கிற்கு கலைஞரும் எழுத்தாளருமான திரு. மாவை நித்தியானந்தன்  தலைமைதாங்குவார்.

Last Updated on Wednesday, 03 May 2017 04:49 Read more...
 

உழைப்பாளர் தினக்கவிதை: மே நாள் உயிர்க்கும் நாள்!

E-mail Print PDF

உழைப்பாளர் தினக்கவிதை

உழைப்பு என்ப துலகின் உயிர்ப்பு
இருப்பும் வாழ்வும் இதற்கே உரித்தாம்
மழைப்பூ இலையேல் மதிக்கும் பூமி
வளங்கள் பயிர்கள் வனப்பே இலையாம்
இழைப்பார் கையில் இருக்கும் பொருட்கள்
எழும்தே சத்து இடாப்பின் வரவே
விளைப்பார் இல்லா விரும்நா டெல்லாம்
வெடுக்காய் மாறுந் தொடரின் துயரே!

Last Updated on Wednesday, 03 May 2017 04:27 Read more...
 

உழைப்பாளர் தினக்கவிதை: உரத்தகுரலை எழுப்புவோம் !

E-mail Print PDF

உழைப்பாளர் தினக்கவிதை

உணவுக்குப் பின்னாலே ஒழிந்திருக்கும் உழைப்பு
உறைவிடத்தின் ஆக்கமதில் நிறைந்திருக்கும் உழைப்பு
அனைவருமே உடுத்திநிற்கும் ஆடைகளின் உழைப்பு
அகிலத்தில் நினைக்கும் நாளதுவே நல்சிறப்பு !

உழைப்பில்லா நிலையினிலே உலகமே இயங்கா
உழைப்பவர்கள் உலகமதின் உன்னதமே ஆவார்
களைப்பின்றி உழைக்குமவர் கடின உழைப்பாலே
கலகலப்பாய் யாவருமே வாழுகிறார் நாளும் !

உழைக்கின்ற வர்க்கமே உலகத்தில் பெரிது
உழைக்கின்றார் கஷ்டமதை உணர்ந்துவிடல் வேண்டும்
உழைப்பதற்குத் தகுந்தபடி ஊதியத்தை கொடுக்க
உலக   முதலாளிகள் உளம்விரும்ப வேண்டும் !

Last Updated on Wednesday, 03 May 2017 04:27 Read more...
 

உழைப்பாளர் தினக்கவிதை: உழைப்பின் உயர்வினை உணரும் நாளே உழைப்பாளர் நாள்!

E-mail Print PDF

உழைப்பாளர் தினக்கவிதை

உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....
ஊதியம் வாழப் போதுமானதுமில்லை ....
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!

களைப்பில் உழைப்பின் முதுகு ....
கேள்விக்குறியாய் வளைந்தது ....
சலிப்பும், விரக்தியும் மிகவே.
அடக்கப்பட்டனர், ஒடுக்கபட்டனர் ....
எதிர்த்தெழுந்தார் உழைப்பாளர் இந்நாளில்.

Last Updated on Wednesday, 03 May 2017 04:27 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 233 : வாழ்த்துகின்றோம்: யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் புதிய தணைவேந்தர் கலாநிதி இரத்தினம் விக்கினேஸ்வரன்!

E-mail Print PDF

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் புதிய தணைவேந்தர் கலாநிதி இரத்தினம் விக்கினேஸ்வரன்!இன்று காலை நண்பர் கனகவரதா (கட்டடக்கலைஞர்)  அலைபேசியில் அழைத்திருந்தார். அதனை நான் தவற விட்டு விட்டேன். ஞாயிற்றுக்கிழலைக் காலைப்பொழுதில் யாருடைய அலைபேசி அழைப்பையும் எதிர்பார்த்திராததே அவ்வழைப்பினைத் தவற விட்டதற்குக் காரணம். 'என்ன காரணமாகவிருக்கலாம்? என்றொரு சிந்தனையோட அவரை அலைபேசியில் அழைத்தேன்.

கன்கவரதா (மறுமுனையில்):  "என்ன் விசயமென்றால்... உமக்கு எங்களோடை 'ஹின்டு கொலிஜ்'ஜில் படித்த விக்கியை ஞாபகமிருக்குதா?"

நினைவுக்குருவி காலவெளியில் சிறகடித்துப் பின்னோக்கிச் சிற்கடித்துப் பறந்தது. மெல்ல மெல்ல ஞாபகத்தில் அந்தவுருவம் புலப்பட ஆரம்பித்தது. சராசரி உயரம். எப்பொழுதும் சிரிப்பு பூத்திருக்கும் முகம். நெற்றியில் புரளும் தலை முடி. விக்கினேஸ்வரனின் உருவம் ஞாபகத்தில் அன்றைய கோலத்தில் மலர்ந்து சிரித்தது.

நான் கேட்டேன்: "கனகவரதா, யார் அந்த இணுவில் விக்கியையாச் சொல்லுறீர்?"

கனகவரதா: "பார்த்தீரா நீர் சொன்ன உடனேயே பிடித்து விட்டீர்?"

எப்படி மறகக முடியும்? பாடசாலைக் காலத்து நண்பர்களைப் பல வகைகளில் பிரிக்கலாம். ஆனால் அப்பிரவுகளில் இரு பிரிவுகள் முக்கியமானவை.  ஒரு பிரிவு ந்ண்பர்களின் சகவாசம் பாடசாலையுடன் நின்று விடும். பாடசாலையில் அவர்களுடனான நட்பு கொடிகட்டிப் பறக்கும். பெரும்பாலும் இவ்விதமான நண்பர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வருவதால், பாடசாலைக்கு வெளியில் அதிகம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருக்கும். மேலும் இவர்கள் படிப்பதில் அதிக ஆர்வமாகவிருப்பவர்கள். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்கள் போன்ற சமூகச்செயற்பாடுகளில் வீணாக நேரத்தைச் செலவிட விரும்பாதவர்கள். அடுத்த வகையினருடனான நண்பர்களுடனான நட்பு பாடசாலையிலும், வெளியிலும் தொடரும். வயதுக்குரிய கேளிக்கை, விநோதங்களில் கும்மாளமடிப்பதில் வல்லவர்கள் இவ்விதமான நண்பர்கள். இவர்களில் இணுவில் விக்கினேஸ்வரன் முதற் பிரிவைச்சேர்ந்தவர். யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் நெருங்கிப்பழகிய நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அமைதியானவர். இவர் ஆத்திரமடைந்து நான் பார்த்ததில்லை.

Last Updated on Monday, 01 May 2017 06:47 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 232 : அமரர் வெங்கட் சாமிநாதன் - சில நினைவுகள்...........

E-mail Print PDF

அமரர் வெங்கட் சாமிநாதன் இணையம் மூலம் என்னுடன் தொடர்புகொண்டு நெருங்கிப் பழகிய இலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர். 'பதிவுகள்' இணைய இதழுக்குத் தன் படைப்புகளை மறைவதற்கு ஓஇரு நாள்கள் வரையில் அனுப்பிக்கொண்டிருந்தவர். அவர் 'பதிவுகள்' இணைய இதழ்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர்களிலொருவ்வர் அவர். திரு.வெ.சா அவர்கள் கனடா வந்திருந்தபொழுது நான் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. அது பற்றி அவர் அடிக்கடி மின்னஞ்சல்களில் குறிப்பிட்டு வருந்தியிருப்பார். அவ்விதமானதொரு மின்னஞ்சலில் அவர் "மறுபடியும் தங்கள் அன்புக்கு நன்றி. கனடா வந்தபோது தங்களுடன் சந்திப்பு நிகழவில்லையே என்ற வருத்தம் இப்போது மேலும் அதிகமாகிறது. இனி அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை" என்று எழுதியிருந்தார். இப்பொழுது அதனை நினைத்தால் சிறிது வருத்தமாகவுள்ளது. பொதுவாகக் கனடாவுக்கு வரும் பல இலக்கிய ஆளுமைகளை அழைத்திருக்கும் அமைப்புகளுடன் செலவழிப்பதிற்கே அவர்களது நேரம் சரியாகவிருக்கும். இவ்விதமான சூழ்நிலையில் நானும் அவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பதில்லை. உண்மையில் நான் கனடா வந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் ஒரு சிலரைத்தான் தனிப்பட்டரீதியில் சந்தித்து , நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.பொ, எழுத்தாளர் சோமகாந்தன், எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிக்குமார் ('தேடல்' நண்ப்ர் குமரன் ஏற்பாட்டில்)  , கலை, இலக்கிய விமர்சகர் யமுனா ராஜேந்திரன் (எழுத்தாளர் தேவகாந்தன் ஏற்பாட்டில், அவரது இல்லத்தில்)  மற்றும் 'உயிர்நிழல்' கலைச்செல்வன் (அமரர் கவிஞர் திருமாவளவன் இருப்பிடத்தில், அவரது ஏற்பாட்டில்). வேறு பலரை அவர்களுடனான சந்திப்புகளில் கூட்டத்திலொருவனாகக் கலந்து, அவர்தம் உரைகளைச் செவிமடுத்திருக்கின்றேன். ஆனால் தனிப்படச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் சுந்தர ராமசாமி வந்திருந்தபொழுது அவருடன் நடைபெற்ற கலந்துரையாலின் இடைவேளையொன்றில் அவருடன் சிறிது நேரம் உரையாடியிருக்கின்றேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்தாளர்கள் பலருடன் நான் நேரில் சந்தித்திருக்காவிட்டாலும் இணையத்தினூடு தொடர்புகளைப்பேணி வருகிறேன்.

Last Updated on Sunday, 30 April 2017 07:40 Read more...
 

மார்க்சியம் கற்போம் மார்க்சிடம் கற்போம்

E-mail Print PDF

மார்க்சியம் கற்போம் மார்க்சிடம் கற்போம்

மாமேதை மாக்சின் 200ஆம் ஆண்டு துவக்கத்தை முன்வைத்து பாரதி புத்தகாலயம் மார்க்சி்ஸின் தேர்வு நூல்கள் (மொத்தம் 12) 3000த்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் ரூ.3000. முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.1500க்கு கிடைக்கும். தேவைக்கு 94449 60935 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். மேலும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பலாம்.

​பாரதி புத்தகாலயம்
7இ இளங்கோ சாலை தேனாம்பேட்டை சென்னை 18
044 24332424
​பாரதி புத்தகாலயம்
7 இளங்கோ சாலை தேனாம்பேட்டை

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 30 April 2017 07:10
 

மணிவிழாக் காணும் எழுத்தாளர் மேமன்கவி!

E-mail Print PDF

எழுத்தாளர் மேமன்கவிஎழுத்தாளர் மேமன்கவியையும் இலங்கைத்தமிழ் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. இத்தனைக்கும் இவரது தாய்மொழி தமிழ் அல்ல. தமிழ்மொழி தாய் மொழி இல்லாதபோதும் , தமிழ் மொழிக்குத் தன் எழுத்தால் வளம் சேர்த்தவர், சேர்ப்பவர். எழுத்தாளர் மேமன்கவி. இவரது மணிவிழா எதிர்வரும் மே 6 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது. அதனையொட்டித் தமிழ் விக்கிபீடியாவில் இவரைப்பற்றிய தகவல்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். எழுத்தாளர் மேமன்கவி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாற்றை இவரைத்தவிர்த்துக் கூற முடியாது என்னுமளவுக்கு அச்சங்கச்செயற்பாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டவர்.  எழுத்தாளர் மேமன்க்வி அவர்களின் மணிவிழா சிறப்புய் அமையவும், தொடர்ந்தும் இவரது இலக்கியச்சேவை சிறக்கவும் வாழ்த்துகிறோம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.... (https://ta.wikipedia.org/s/1j9)
மேமன்கவி (Memon Kavi, அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து இலங்கைத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

வட இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து இலங்கையில் குடியேறிய மேமன் சமூகத்தின் மத்தியதரக் குடும்பம் ஒன்றில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அடுத்து மூத்த ஆண் மகனாகப் பிறந்தவர் அப்துல் ரசாக். மேமன்மொழி எழுத்து வடிவம் இல்லாது பேச்சு மொழியாக மட்டுமே இருந்தமையால், இவரது தந்தை இவரை தமிழ் மொழி மூலத்திலான பாடசாலையில் சேர்த்தார். எட்டாம் வகுப்புடன் இவர் தனது பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டார். மேமன் சமூகத்தினர் பொதுவாக வணிகத் துறையிலேயே ஆர்வம் காட்டுவர். ஆனாலும் இவரோ அன்றைய காலத் தொடக்கம் எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வகையான நூல்களைப் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் முறையான கல்வி மீது ஏற்பட்ட சலிப்பில் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கைவிட்டார். பாடசாலை வாழ்வின் இறுதிப்பகுதியில் இவரது தமிழாசிரியர் இலங்கை வானொலி நாடக புகழ் எம். அஸ்ரப்கான் இவரது வாசிப்பு பழக்கத்திற்கு ஊக்கப்படுத்தினார். பிற்காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை பாடநெறியை முடித்தார்

Last Updated on Saturday, 29 April 2017 01:02 Read more...
 

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும்

E-mail Print PDF

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும் 2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.

மேமன்கவியின் கவிதைத் தொகுப்பான ''ஆதிகளின் புதைகுழிகளிலிருந்து'' வெளியீட்டு விழாவும், மணிவிழா நிகழ்வும், எதிர்வரும்  2017 ஆம் மே 6 ந்திகதி மாலை 4.30 மணிக்கு, கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தலைமையில் நடைபெறும்.

Last Updated on Saturday, 29 April 2017 00:23 Read more...
 

1. கணினியிற் தமிழ்வரைந்து ஏடு தொடக்கிய பேராசான் விஜயகுமார் நினைவுப் பகிர்வு

E-mail Print PDF

கலாநிதி எஸ். விஜயகுமார்அண்மையில் 'டொராண்டோ', கனடாவில் காலமான முனைவர் சின்னத்துரை விஜயகுமார் அவர்கள் கணினியில் தமிழ் எழுத்துகளை உருவாக்கிய முன்னோடிகளிலொருவர்.  இவரைபற்றிக் 'கனடா மிரர்' .காம் இணையத்தளம் பின்வருமாறு கூறுகின்றது: "தமிழ் எழுத்தை கம்யூட்டருக்கு அறிமுகம் செய்து வைத்த கல்விமான் கலாநிதி எஸ். விஜயகுமார் 31-03-2017 கனடாவில் காலமானார். இந்தியாவில் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதல் கம்யூட்டரில் பயன்படுத்தப்பட்டது என பெருமை கொள்ள முடியும். அப்போது திரு. விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டது.. கம்யூட்டர் தமிழில் ‘ரெமிங்ரன்’ முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கம்யூட்டருக்கு உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்கள். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பு. கம்யூட்டர் எழுத்துக்களை அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ச் ஹார்ட் மூலம் உலகம் கண்டிருந்தாலும், அவற்றினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் திரு. விஜயகுமார் அவர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்"

இவரைப் பல வருடங்களுக்கு முன்னர் ஓரிரு தடவைகள் தயாளனின் 'மைக்ரோடெக்' கணினி நிறுவனத்தில் சந்தித்திருக்கின்றேன். உரையாடியுமிருக்கின்றேன். அப்பொழுது இவர் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டமென்று நினைக்கின்றேன். மைக்ரோடெக் நிறுவனத்தில் ஒரு பகுதியில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பித்துக்கொண்டிருந்தார். பழகுவதற்கு இனியவர். பண்பு மிக்கவர். கணினியில் தமிழ் எழுத்துகளைப் பாவிப்பதில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

Last Updated on Thursday, 27 April 2017 03:43 Read more...
 

ஆய்வு: ‘தமிழ்த்தென்றல்’ நளினிதேவி:

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரிய மதுரையில் பிறந்த இவர், இளம் வயது முதற்கொண்டே தன்னுடைய தாத்தா, தந்தையார் வழியில் தமிழ்ப்பற்றை வரித்துக் கொண்டார். பாத்திமா கல்லூரியில் சிறப்பு தமிழ்ப்பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில்  அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை போன்றோரிடமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ., மொ.துரையரங்கனார், விஜயவேணுகோபால் முதலான தமிழ் அறிஞரிடம் தமிழ் பயின்றதால் தமிழுணர்வும், தனித் தமிழ்ப்பற்றும் இவருக்குள் ஆழமாக ஏற்பட்டன. அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். ஈழத்தமிழர்கள் பால் அன்பு கொண்ட இவர் 1980இல் ஈழத்தமிழர் ஆதரவுப்போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியான இவரது சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை போன்றவை பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஆசிரியர்ப்பணி:
தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதைப் புரிய வைத்து செயல்படுத்தினார் (த.நே.41.ப.26)

Last Updated on Tuesday, 25 April 2017 01:08 Read more...
 

கவிதைகள்: 1. நான் 1 & நான் 2. கவிதை: 2. சிறு பயணம்

E-mail Print PDF

கவிதை: 1. நான் 1 & நான் 2

1

கவிதை படிப்போமா?நான் 1: போர்கள் எனக்கு பிடிக்காது
நான் 2: ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு போருக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் போர்கள் எனக்கு பிடிக்கும்

2

நான் 1:  கொலைகள் எனக்கு பிடிக்காது
நான் 2:  ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு கொலைக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் கொலைகள் எனக்கு பிடிக்கும்

Last Updated on Tuesday, 25 April 2017 00:39 Read more...
 

கவிதை: பரந்த மனம் எழவேண்டும் !

E-mail Print PDF

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா    -குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்
தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது
அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்
அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது
ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது
அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி
ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்
அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்
ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்
அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !

Last Updated on Tuesday, 25 April 2017 00:09 Read more...
 

குறுநாவல்: சலோ! சலோ! (4)

E-mail Print PDF

குறுநாவல்: சலோ,சலோ! (1)அத்தியாயம் நான்கு!

பொதுவாக,‌ உள்ளேயிருப்பவர்களிற்கு தெரியிற விசயங்கள் வெளியில் இருப்பவர்களிற்கு  தெரிய வருவதில்லை. அதுவும் பொய்யாக தெரிவதென்றால்...?? ஏன், உலகநாடுகள், தணிக்கை செய்ய தமக்கென செய்தி ஊடகங்களை பிறிம்பாக  வைத்திருக்கிறார்கள்  என்பதும் புரிவது போல இருக்கிறது.  புலம்பெயர்ந்தவர்கள், கூட்டு கைகளாகச் சேர்ந்து ‘ஆயிரதெட்டு பத்திரிகைகளை வெளியிடாமல் உறுதியான கனமான ஒரே ஒரு செய்திப்பத்திரிக்கையை’ மட்டும் வெளியிட மாட்டார்களா? வெளியிடப் பழக வேண்டும். இந்திய விடுதலையை வென்றெடுத்த  ‘காங்கிரஸைப் போல ஒரு அமைப்பாக’ பரிணமிக்க வேண்டும். இந்த ஒற்றுமை தான் நம் விடுதலைப் பெடியளுக்கும்  சரிவராத விசயம். அவர்களிற்கு சேர்ந்திருக்கிற அமைப்பையே இரண்டாக உடைக்கத் தான் தெரிகிறது.இதற்கெல்லாம் (அரசியல் அறிவு)தெளிவு இல்லாதது தாம் காரணம். உண்மையிலே, கடந்த போராட்டப் பாதையில் எத்தனையோ உயிர்களை இழந்திருக்க வேண்டியவை இல்லை. மெண்டிஸ் போன்றவர்கள் இருக்க வேண்டியவர்கள். “முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை”நகுலன் நெடுமூச்செறிந்தான். வந்திருந்த பெட்டைகளிற்கு அரசியலில் நாட்டம்... இருக்கவில்லை. வாசுகியோட விக்கி கடைக்கு கிளம்பியவர்கள் வார போது குண்டுப் பெண்ணான சந்திராவை கூட்டி வந்தார்கள். சந்திரா,உடுவிலில் இருந்தவள்.அராலியில் அவளுடைய அக்கா கமலா, பார்திப‌னை முடித்திருந்தார்.பலாலி வீதியால் இந்தியனாமி வரப் போகிறது...என்ற பதட்டத்தில் அக்கா வீட்ட வந்திருந்தாள்.  வாசுகியை அவளுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும், கடையில் இவர்களையும் பார்த்தவுடன் ஒட்டிக் கொண்டு விட்டாள். ஆனால், நீண்ட பொழுதுகள் இருக்கின்றனவே. அதைப் போக்க‌... வேண்டுமே! அதற்கு பக்கத்து வீட்டு ராகவன் அண்ணை யின்  பெடியளான சுஜே, சிறிது கை கொடுத்தான் . கொழும்புவாசிகளான அவர்கள் 83 கலவரத்திற்குப் பிறகு வந்தவர்கள்.இவர்களைப்  போல அராலியே தெரியாத‌ இன்னும் பல குடும்பங்கள் கிராமத்தில் அடைந்திருக்கிறார்கள். சிங்களம்,ஆங்கிலம்,தமிழ் என‌ 3 பாசைகளையும் நல்லாய் பே சுவார்கள். இவர்கள் என்ன, லேசிலேஒருத்தருடன் ஒருத்தர்  பழகி  விடவா போறார்கள்? அதற்கு மீற‌ வேண்டும்.! மெல்ல மெல்ல தானே நடைபெறும்.  அதற்கு முதல்  இந்தியனாமி அராலியாலேயும் போய் விடலாம்.

Last Updated on Friday, 21 April 2017 07:42 Read more...
 

பாராட்டுக்கள் கிரிதரன் --- முருகபூபதி

E-mail Print PDF

'தமிழ்க்கவி பற்றிய சர்ச்சை சம்பந்தமாக நான்  'பதிவுகள்' இணைய இதழில் பதிவு செய்திருந்தேன்.  அதற்கு எழுத்தாளர் ஆற்றிய எதிர்வினை இது. நன்றி முருகபூபதி.

முருகபூபதி -

அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். தமிழ்க்கவி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு நீங்கள் நல்லதொரு விளக்கம் தந்துள்ளீர்கள். அதற்காக உங்களைப்பாராட்டுகின்றேன். தமிழ்க்கவியின் கட்டுரைக்காக எதிர்வினையாற்றியவர்கள் இவ்வளவுதூரம் அமர்க்களம் செய்திருக்கத்தேவையில்லை. மலையகத்தமிழர்களின் அவலம் முடிவுறாதது. செ. கதிர்காமநாதனின்" வெறும் சோற்றுக்கே வந்தது " (அஞ்சலியில் வெளியான கதை) டானியலின் சில படைப்புகள். இவ்வாறு நீங்கள் சொல்வதுபோன்று பல தகவல்கள் ஆதாரம். எனினும் நீங்கள் உரியநேரத்தில் முன்வந்து சரியான விளக்கம் தந்துள்ளீர்கள். வாழ்த்துகின்றேன். நன்றி.

அன்புடன்

முருகபூபதி

Last Updated on Friday, 21 April 2017 07:09
 

'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்பும் படைபாளிகளே!

E-mail Print PDF

'பதிவுகள்.காம்' : மீண்டும் இயங்கத்தொடங்கி விட்டது.


"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அதிக அளவில் வருவதால் உடனுக்குடன் பிரசுரிப்பதில் சிறிது சிரமமிருப்பதைப் புரிந்து கொள்வீர்களென்று கருதுகின்றோம். கிடைக்கப்பெறும் படைப்புகள் அனைத்தும் தரம் கண்டு படிப்படியாகப் 'பதிவுகள்' இதழில் பிரசுரமாகும் என்பதை அறியத்தருகின்றோம். உங்கள் பொறுமைக்கும் ஆக்கப்பங்களிப்புக்கும் எம் நன்றி.

Last Updated on Friday, 21 April 2017 07:03
 

ஆய்வு: சிறுபஞ்சமூலம் உணர்த்தும் சமுதாய நெறிகள்

E-mail Print PDF

முன்னுரை
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி -24 -தமிழில் தோன்றிய முதல் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும்.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண் மேற்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.காலத்தின் கோலத்தால் அறநூல்கள் தோன்ற வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டதால் சங்க காலத்தை அடுத்து உள்ள காலமான சங்க மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்நூல்கள் அறம்,  அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு ,புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் காரியாசன்.இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.இக்கருத்தைப் பாயிரப் பாடல் கடவுள் வாழ்த்து உறுதிப்படுத்துகின்றது.இவர் சமண சமயத்தவத்தவரானாலும்இசமய சார்பற்றக் கருத்துக்களை மிகுதியாகக் கூறியுள்ளார்.சிறுபஞ்சமூலம் என்னும் சொல்லுக்கு

ஐந்துவேர்கள்என்றுபொருள்படும்அவையாவனசிறுவழுதுணைவேர்,நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர் ,பெருமல்லிவேர்,கண்டங்கத்திரிவேர் ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாக உடல் நோயைப் போக்குவது போல் இந்நூலுள் வரும் ஒவ்வொரு பாடலும் ஐந்து நீதிகளைத் தொகுத்துக் கூறுகின்றன இவை மக்களின் நோய் நீக்கும் என்பதால் இதற்குச் சிறுபஞ்சமூலம் என்று பெயர் வழங்கப்பட்டது.இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன.ஆயினும் 85 ஆம் பாடலில் தொடங்கி 89 ஆம் பாடல் வரை ஐந்து பாடல்கள் காணப்பெறவில்லை ஆனால் சென்னைப் பல்கலைக்கழகப் புறத்திரட்டில் 85,86,87-ஆம் எண்களுக்கு உரிய பாடல்கள் உள்ளன.இதற்கு உரியசான்று முடியாதததானால் நூலின் இறுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.இந்நூல் நான்கு வரிகளில் ஐந்து பொருள்கள் சிறந்த முறையில் அமைந்துள்ளன.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Last Updated on Friday, 21 April 2017 06:58 Read more...
 

தருமு சிவராம் (பிரமிள்) நினைவாக..: "ஓடு புத்தரே ! தத்தரே ! பித்தரே ! " நாட்டுப்புறப்பாடலை கவிதையாக்கிய தருமு சிவராம். ஏப்ரில் 20 ஆம் திகதி அவரது பிறந்த தினம்

E-mail Print PDF

பிரமிள்: கவிஞர் பிரமிள் .கவியரசு கண்ணதாசனைத்தேடி தொலைதூரத்திலிருந்து  அவரது அபிமான ரசிகர் வந்துள்ளார். " எதற்காக இவ்வளவு தூரத்திலிருந்து என்னைத் தேடிவந்தீர்கள்...?" என்று கண்ணதாசன் அவரைக்கேட்டதும், " உங்கள் பாடல்களும் அதிலிருக்கும் கருத்துக்களும் என்னை பெரிதும் கவர்ந்தன. எனது வாழ்நாளுக்குள்  உங்களை நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்."  எனச்சொன்னார் அந்த  ரசிகர்.

" தம்பி... மரத்தைப்பார். அதில்  பூக்கும்  மலர்களையும், காய்க்கும் கனிகளையும் பார். அவற்றை ரசி, புசி. ஆனால்,  அந்த மரத்தின் வேரைப்பார்க்க  முயற்சிக்காதே... மரம் பட்டுவிடும். அதுபோன்று, ஒரு ஹோட்டலுக்கு  சாப்பிடச்சென்றால், சாப்பிட்டுவிட்டு  அதற்குரிய பணத்தை  கொடுத்துவிட்டு  போய்விடவேண்டும்.  நீ சாப்பிட்ட  உணவு தயாரிக்கும்  ஹோட்டலின் சமையலறைப்பக்கம்  சென்றுவிடாதே. பிறகு  நீ  எந்த ஹோட்டலிலும்  சாப்பிடமாட்டாய்"  என்றார் வாழ்க்கைத்தத்துவப்பாடல்களும்   எழுதியிருக்கும்  கவியரசர்.

இந்தத்தகவலை  எழுதும் எனக்கும்  எழுத்தாளர்களை தேடிச்சென்று பார்க்கவேண்டும்,  அவர்களுடன்  உறவாடவேண்டும்  என்ற ஆசை எழுத்துலகில்   பிரவேசித்த காலம்  முதலே  தொடருகின்றது. நான் எனது வாழ்நாளில் பல எழுத்தாளர்களை அவர்களின்   இருப்பிடம்தேடிச்சென்று நட்புறவை  ஏற்படுத்திகொண்டவன். தமிழ்நாடு  இடைசெவல் கரிசல் காட்டில்  கி. ராஜநாராயணன், குரும்பசிட்டியில்  இரசிகமணி கனகசெந்திநாதன்,  அளவெட்டியில் அ.செ. முருகானந்தன்,   தலாத்து ஓயாவில்  கே. கணேஷ், மினுவாங்கொடையில்  தமிழ் அபிமானி ரத்னவன்ச  தேரோ, திருகோணமலையில்   நா. பாலேஸ்வரி,  தொண்டமனாறில்  குந்தவை,  மாஸ்கோவில்  விதாலி ஃபுர்னிக்கா,   சென்னையில்  ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரில் கோவை ஞானி ..... இவ்வாறு பலரைத் தேடிச்சென்றிருக்கின்றேன். ஆனால், என்றைக்கும் என்னால்  சந்திக்கமுடியாமல்  மறைந்துவிட்ட,  அடிக்கடி  நான் நினைத்துப்பார்க்கும் ஒருவர்தான் பல பெயர் மன்னன் தருமுசிவராம். அவர் இன்றிருந்தால் அவருக்கு 78 வயது ( பிறந்த திகதி 20 ஏப்ரில் 1939).

Last Updated on Thursday, 20 April 2017 22:15 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 231: தமிழ்க்கவியின் கட்டுரையும் அது தொடர்பான சர்ச்சையும் பற்றி...

E-mail Print PDF

தமிழ்க்கவிதமிழ்க்கவியின் கிளிநொச்சியும், மலையகத்தமிழரும் -தமிழ்க்கவி' என்ற கட்டுரை வாசித்தேன். நல்லதோர், ,அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. நல்லதோர் ஆய்வுக்கட்டுரையாக வந்திருக்க வேண்டிய கட்டுரை மேலும் பல தகவல்களை உள்ளடக்காமல் போனதால் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளிலொன்றாக வரமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக வட, கிழக்கில் பெருமளவு மலையகத்தமிழர்களை எழுபதுகளில் குடியேற்றிய காந்திய அமைப்பு பற்றி எந்தவிதத்தகவல்களுமில்லை.
அது தவிர கட்டுரை சிறப்பானதொரு கட்டுரை.

கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழுள்ள விடயங்களுக்காக இணையத்தில் பலர் தமிழ்க்கவியைத் தாக்கி வருகின்றார்கள்.

1. "மலையகத்தில் இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறோம். என்ன அங்கை குளிர் இங்கை வெயில். அவ்வளவுதான் என்றார் ஒரு முதியவர். இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங் கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும் பத்தில் பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத் தாட்சி இல்லை என்றபோது அப்பிள்ளை களின் தாய், தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.

Last Updated on Thursday, 20 April 2017 07:19 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 230: போராட்ட அனுபவங்களை ஆவணப்படுத்தல் பற்றி..

E-mail Print PDF

வாசிப்பும், யோசிப்பும்எழுத்தாளர் கடல்புத்திரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் 1984 -1987 வரையிலான காலப்பகுதியில் வடக்கு அராலிப்பொறுப்பாளராக இயங்கியவர். இவரைப்போல் பல இளைஞர்கள், சிறுவர்கள் அக்காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் போராளிகளாக யாழ்ப்பாணத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இயங்கியவர்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் படிப்படியாக போராட்டம் சென்று கொண்டிருந்த வேளை அது. இருந்தாலும் வடகிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் இவர்களைப்போன்றவர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சின்னமெண்டிஸின் மறைவு வரை மட்டும் இயங்கிப் பின் முற்றாக இயக்க நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் மனத்தளர்ச்சியுடன் போராட்டத்திலிருந்து அமைதியாக ஒதுங்கிப்போனவர்களில் இவருமொருவர்.

அண்மையில் இவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன் " நீங்கள் ஏன் உங்கள் காலகட்ட இயக்கச் செயற்பாடுகளை எழுதி ஆவணப்படுத்தக் கூடாது " என்று. இவரைப்போல் பின் தளத்தில் இறுதிவரை இயங்கிய போராளிகள் யாரும் தம் அனுபவங்களைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. இதுவரை பதிவு செய்தவர்கள் அனைவரும் பல்வேறு இயக்கங்களிலும் முன்னணியில் இருந்த ஆரம்பக்காலத்தைச் சேர்ந்தவர்களே (எல்லாளன் ராஜசிங்கத்தின் போராட்ட அனுபவக்குறிப்புகள் தவிர) என்று நினைக்கின்றேன்.

இவரைப்போன்றவர்கள் பதிவு செய்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்வருமாறு பட்டியலிடலாம்:

Last Updated on Thursday, 20 April 2017 22:04 Read more...
 

மலாலா போற்றுங்; கனேடியம்...!

E-mail Print PDF

அருவியில் நீராடியபோது அருவியெனக் கொட்டியது கண்ணீர்! முடிவில் ஆனந்தக்கண்ணீர். 'அருவி' குறும்படம் பற்றிய குறிப்புகள்.

E-mail Print PDF

அருவியில் நீராடியபோது அருவியெனக் கொட்டியது கண்ணீர்! முடிவில் ஆனந்தக்கண்ணீர். 'அருவி' குறும்படம் பற்றிய குறிப்புகள்.அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை நண்பர் ரதன் அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒரு நீள்படத்தை விட இக்குறும்படம் விளங்கியது. அம்புலி மீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறும்படமான 'அருவி' இன்றைய சூழலில் புகலிடச்சூழலில் வாழும் தமிழ்ப்பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

இக்குறும்படம் டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளதையும், நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் உத்தியோகபூர்வத் தேர்வு விருதினையும் மற்றும் டொரோண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினையும் பெற்றுள்ளதையும் குறும்படத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

பணம், பணம் என்று ஓடி அலையும் பலர் குழந்தைகளை, அவர்களது விருப்பு வெறுப்புகளைக் கவனிக்கத்தவறுகின்றார்கள். குழந்தைகளின் திறமைகளைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொண்டும் அவை பற்றிக்கவனத்திலெடுக்காமல், தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப குழந்தைகளை வளர்க்க முற்படுகின்றார்கள். தம் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மேல் திணிக்கின்றார்கள்.

Last Updated on Sunday, 16 April 2017 08:01 Read more...
 

சிறுகதை: சுற்றுலா போய் வருகின்றோம் நண்பர்களே!

E-mail Print PDF

-கே.எஸ்.சுதாகர்	ரவிராஜ் வீடு ஒன்றை வாங்கினான். மனைவி பவித்திராவிற்கு வீடு நன்றாகப் பிடித்துக் கொண்டது. உரிமையாளர் வீட்டைச் சுற்றிக் காட்டினார். வீட்டைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார். ஒரு குடும்பத்தைத் தவிர, அயலவர்களைப் பற்றி பெருமையாகச் சொன்னார். இவர்களுக்கு எதிர்ப்புறமாக இருந்த வீட்டுக்காரர்களில் அவருக்கு திருப்தி இருக்கவில்லை. அவர்களைப் பற்றி மேலெழுந்தவாரியாக சில குறைபாடுகளைச் சொன்னார்கள். மனைவி விவாகரத்துப் பெற்றவள். மூன்று பெண்பிள்ளைகள். குப்பைக்குடும்பம். கூத்துக்குடும்பம். இவை போதாதா அந்தக் குடும்பத்துடன் பழகுவதா இல்லையா என மூடிவு செய்ய? ரவிராஜ் குடும்பத்தினர் அவர்களுடன் பழகுவதில்லை என முடிவு செய்தனர்.

வீட்டிற்குப் போன முதல்நாள் மாலை நேரம் – பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளை---ஏழோ எட்டோ படிக்கக்கூடும்--- தனது நண்பி ஒருத்தியுடன் வந்து வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் தன் மார்புடன் இரண்டு பந்துகளை அணைத்திருந்தாள். மகனை தங்களுடன் விளையாட அனுப்பும்படி கேட்டாள். மகன் படிக்கப் போய்விட்டதாக பொய் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் பவித்திரா.

அந்த வீட்டில் இரவு முழுவதும் திருவிழா போல விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். எந்நேரமும் கார்கள்---கார் என்று சொல்லமுடியாது வாகனங்கள்---வருவதும் போவதுமாக நிறைந்திருக்கும். அதே போல எல்லாவிதமான மனிதர்களும் வந்து போவார்கள். அந்த வீட்டிற்கு புல்லு வெட்டுபவனின் கார் பெட்டியுடன் சிலவேளைகளில் இரவும் தரித்து நிற்கும். வந்து போகும் பெண்களில் அனேகமானவர்கள் இளமையாக இருக்கின்றார்கள்..

Last Updated on Sunday, 16 April 2017 07:21 Read more...
 

சித்திரைப் பெண்ணிவள் பதிக்கும் இன்ப, முத்திரையில் இவ்வுலகம் இலங்கட்டும்.

E-mail Print PDF

எம் இனிய 'பதிவுகள்' வாசகர்கள், படைப்பாளிகள். அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துச்சொரிவதாக.

சின்னஞ்சிறு இலங்கைத்தீவில் இச்சித்திரைப்புத்தாண்டிலாவது இனங்களுக்கிடையில் கூடிய புரிந்துணர்வு பிறக்கட்டும். மக்களுக்கிடையில் இருக்கும் பல்வகை வேறுபாடுகளும் இல்லாதொழியட்டும். இருப்பில் அமைதியும், இன்பமும் கொழிக்கட்டும். பகை முரண்பாடுகள் நட்புரீதியில் அணுகக்கூடிய நட்பு முரண்பாடுகளாக மாறட்டும். முரண்பாடுகளுடன் இணைந்து ஆரோக்கிய வாழ்வினை , இருப்பினை அனைவரும் எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்க்க இச்சித்திரைப்புத்தாண்டு வழி வகுக்கட்டும்.

சித்திரைப் பெண்ணிவள் பதிக்கும் இன்ப
முத்திரையில் இவ்வுலகம் இலங்கட்டும்
.

 

 

Last Updated on Sunday, 16 April 2017 06:31
 

தம்பா (நோர்வே) கவிதைகள்: மறந்த கதை! ஐ போனில்´சுட்ட வடை!

E-mail Print PDF

1. மறந்த கதை

தம்பாதலை பெருத்து விழிபிதுங்க
காற்றுப்போன பலூன் போல
உடல் ஒடுங்கி
முதுகெலும்போடு ஒட்டிக்கொள்கிறது,
அரித்துக் கொட்டிய
சுவாசப்பையின் நாளங்கள்
ஆக்சிஜன் காற்றை உள்ளிழுத்து
வைத்துக் கொள்ள முடியாதளவுக்கு
ஆயிரம் ஓட்டைகள்
கணத்தில் விழுந்து விடுகிறது.

ஈக்களும், கொசுக்களும்
புகையடித்து சுருண்டு வீழ்ந்து
துடிக்கும் போது
ரசித்து நகைத்தது போல்
பிஞ்சுகளின் மரண வலியையும்
மூச்சு திணறலையும்
நாசிகளின் பேரன்கள்
தொலைக்காட்சியில் லயித்துக் கொள்கின்றனர்.

மனித குலம் மேம்பட
மறவராய் புறப்பட்ட செம்பட்டை
மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவை கூட
மலர விடாது தடுத்துவிடுகிறது.

Last Updated on Sunday, 16 April 2017 06:16 Read more...
 

சிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 1 - கறுப்புப் பூனையும் காவல் வீரனும்..!

E-mail Print PDF

பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
வீட்டுக் கரசன் நான்தானே
வீட்டைக் காக்கும் காவல்காரன்
வெளியே இருந்து காக்கின்றேன்
வீரன் யாரு தெரியாதோ... ..

காவல் காரப் பெரியவரே
கனக்க வீரம் காட்டுகிறீர்
நானும் வித்தையில் வல்லவனே
நீரும் என்னை அறிவீரோ... ..

Last Updated on Sunday, 16 April 2017 06:00 Read more...
 

கனடா தமிழர் வரலாறு - நூல் வெளியீடு

E-mail Print PDF

எழுத்தாளர் குரு அரவிந்தன்ஏப்ரில் 2, 2017  ஞாயிற்றுக் கிழமை இகுருவி வருடாந்த விழாவில் இகுருவி இதழின் எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய ‘கனடா தமிழர் வரலாறு’ ( Canadian Tamils' History) என்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பு,  நூல் வடிவமாக வெளியிடப்பட்டது. இந்த இகுருவி விழாவில் இந்தியாவில் இருந்து பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், இலங்கையில் இருந்து சின்னத்தம்பி குணசீலன் ஆசிரியர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

குரு அரவிந்தனின் ‘கனடா தமிழர் வரலாறு’ நூல் வெளியிடப்பட்ட போது சிறப்புப் பிரதிகளைப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, ரொறன்ரோ நகராட்சி மன்ற உறுப்பினர் நீதன் சண் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் வெளிவந்த இந்த நூலில் குரு அரவிந்தனனின் ‘பிறீடம் இஸ் பிறி இன் கனடா’  என்ற கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. கனடாவின் 150 வது பிறந்த தினத்தை 2017 இல் கொண்டாடும் கனடிய அரசு பல்கலாச்சார சமூகங்களிடையே இருந்து தெரிவு செய்யப்பட்ட கதைகளில் தமிழ் சமூகத்தைப் பிரதிபலிக்கும் குரு அரவிந்தனின் கதையும் 150 கதைகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 150 வது பிறந்த தினத்தைக் கனடிய அரசுகொண்டாடும் இந்த வேளையில் தமிழர்களின் புலம் பெயர்ந்த வரலாற்றை, அவர்களின் கடந்த 40 வருடகால பங்களிப்பைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் முடிந்த அளவு இடம் பெறற்றிருக்கின்றன. கனடா தமிழர் வரலாறு என்ற நூல் வெளியீட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.

Last Updated on Sunday, 16 April 2017 05:37
 

வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் க.சிவப்பிரகாசம் அமெரிக்காவில் மறைந்தார்

E-mail Print PDF

வீரகேசரி முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம் வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம் கடந்த வெள்ளியன்று 14 ஆம் திகதி அமெரிக்காவில் வேர்ஜினியா மாநில மருத்துவமனையில்  காலமானார். கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவருக்கு வயது 83. 1966 ஆம் ஆண்டு முதல்,  ஆரம்பத்தில் வீரகேசரியின் இணை ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும்  1983 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றினார்.  1983 இல் கொழும்பில் நடந்த இனக்கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.  அதன்பின்னர் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். அங்கு நீண்டகாலம் பொஸ்டன் மாநிலத்தில் வசித்தார். அவருடைய அன்புத்துணைவியாரும் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். பிரதீபா, சஞ்சீவன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் அவர்களுக்கு இரண்டு பேரக்குழந்தைகள். இலங்கையின் வடபுலத்தில் மாதகலில் பிறந்திருக்கும் சிவப்பிரகாசம்   1958  இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அருணாசலம் விடுதியிலிருந்து கற்று பொருளாதார  பட்டதாரியானவர்.  அங்கே பல மாணவர் இயக்க செயற்பாடுகளிலும்  ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த இந்து மாணவர் சங்கம்  மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியனவற்றில் இணைந்து இச்சங்கங்களின்  நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய  சில நாடகங்களில் நடித்திருக்கிறார். பேராசிரியர் சு. வித்தியானந்தன்  குறிப்பிட்ட நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தியிருக்கிறார். பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய சிவப்பிரகாசம் , லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்தார். இங்குதான் இவரது இதழியல் பணி ஆரம்பமாகியது.

Last Updated on Saturday, 15 April 2017 17:24 Read more...
 

நினைவலைகள்: வீரகேசரி முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம் இலங்கையில் நெருக்கடியான காலப்பகுதியில் தமிழ் இதழியல் பாதையில் நிதானமாக நடந்தவர்

E-mail Print PDF

வீரகேசரி முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம் எண்பத்தி ஏழு ஆண்டுகால விருட்சம்  வீரகேசரி,   எத்தனையோ காலமாற்றங்களை   சந்தித்தவாறு  தனது ஆயுளை நகர்த்திக்கொண்டிருக்கிறது.  வீரகேசரி  துளிர்விட்ட  வருடம் 1930.  விருட்சமாக  வளரும்போது எத்தனைபேர் அதன் நிழலில் இளைப்பறுவார்கள்,  எத்தனைபேர்  அதற்கு  நீர்பாய்ச்சுவார்கள், எத்தனைபேர்  அந்த  நிழலின்  குளிர்மையை  நினைத்துகொண்டு கடல் கடந்து செல்வார்கள்  என்பதெல்லாம் அதற்குத்தெரியாது. வீரகேசரி ஒரு வழிகாட்டி மரமாக அந்த இடத்திலேயே  நிற்கிறது. பின்னாளில்  அதன்வழிகாட்டுதலில்   வந்தவர்களில்  ஒருவர் அது துளிர்த்து சுமார் ஐந்துவருடங்களில் பிறந்தார். அவருக்கு  தற்பொழுது 82 வயதும்  கடந்துவிட்டது. அவர்தான் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம். அவருக்கு கடும் சுகவீனம் என்று அவருடைய நீண்ட கால நண்பரும் பல வருடங்கள்  வீரகேசரியில் அவருடன்  இணைந்து பணியாற்றியவருமான  வீரகேசரியின்  முன்னாள் விநியோக - விளம்பர முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம்  நேற்று 12 ஆம் திகதி, தொலைபேசியில்  சொன்னார்.  அவருடன் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு  வந்து  எனது  கணினியை பார்த்தேன் நண்பர் செல்லத்துரை  மூர்த்தி கனடாவிலிருந்து அதே செய்தியை மிகுந்த கவலையுடன்  மின்னஞ்சலில்  அனுப்பியிருந்தார்.

அமெரிக்காவில்   ஒரு மாநிலத்தில்  மூத்தபிரஜைகளை  பராமரிக்கும் இல்லமொன்றில்  எங்கள்  முன்னாள் ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் தங்கியிருப்பதாகவும்   தற்பொழுது  கவலைக்கிடமாக இருப்பதாகவும்  அடுத்தடுத்து  தகவல்  வந்தததையடுத்து,  அவரைப்பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன. ஆசிரியர்  சிவப்பிரகாசம்,  இவரது இனிய நண்பர்களினால் செல்லமாக  ‘சிவப்பி ’ என்றே அழைக்கப்படுபவர். அந்நாட்களில் வீரகேசரியில்  இரண்டு ‘சிவப்பிகள்’ இருந்தனர்.  ஒருவர் க.சிவப்பிரகாசம் என்ற எமது  முன்னாள் ஆசிரியர். மற்றவர்  து.சிவப்பிரகாசம் என்ற வீரகேசரியின்  முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர். இவர்கள்  இருவரையும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்,  2007  ஆம் ஆண்டு  இறுதியில்,  கனடாவில் தமிழர் செந்தாமரை இதழின் ஆண்டுவிழா  இராப்போசன விருந்தில் எதிர்பாராதவிதமாக  சந்திக்கநேர்ந்தது.  அந்தப்பயணத்தில்  இணைந்திருந்த அவுஸ்திரேலியா  நண்பர் நடேசனும் நானும்  அந்த விருந்தில்  அவர்களுடன்  ஒன்றாக  அமர்ந்திருந்தோம்.

Last Updated on Friday, 14 April 2017 00:49 Read more...
 

ஆய்வு: 'பதிவுகள்' இதழ் கவிதைகளில் மார்க்சியம்

E-mail Print PDF

கட்டுரையாளர்: - ப.குமுதா, ஆய்வியல் நிறைஞர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம்முன்னுரை
இணையத்தமிழ் இதழ்களில் இலக்கியம் சார்ந்த படைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இதழ் பதிவுகள் இதழ். இந்த இதழில் பெண்ணியமஇ; மார்க்சியம்இ தலித்தியம்இ புலம்பெயர்வு போன்ற நவீன இலக்கிய வகைமைகளில் கவிதைகள் படைக்கப்பட்டு வருகின்றது. அக்கவிதைகளில் மார்க்சிய கவிதைகளை ஆராய்வதாக இக்கட்;டுரை அமைகின்றது.

மார்க்சியம்
சமுதாயத்தில் நிலவும் நிகழ்ச்சிகளுக்கு காரணகாரிய விளக்கம் காட்டி உண்மையைப் புரிந்து கொள்ளத் தத்துவார்த்தப் போராட்டம் நடத்துவதையே மார்க்சியப் படைப்பாளர்கள் தங்களின் இலக்கியப் பணியாக கொண்டனர். மார்க்சிய வாதிகள் இலக்கியத்தைச் சமுதாய மாற்றத்திற்கான ஒரு கருவியாகக் கையாண்டனர். சமுதாயக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதோடும் விமர்சனம் செய்வதோடும் நின்றுவிடாமல் குறைகளுக்குத் தீர்வுகாண்பதே மார்க்சியத்தின் நோக்கமாகும். உலகத்தில் உள்ள வர்க்க முரண்பாடுகளை நீக்குவதற்கு வர்க்கப்போர் ஒன்றையே தீர்வாக மார்க்சிய இயக்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

வாழ்விற்கு அடிப்படைத் தேவையாக அமைவது அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப்பொருள்கள் தான். அப்பொருள்கள் கிடைக்கப்பெறாத மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்;துக்கொள்ள மக்கள் எல்லா வகையிலும் சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். என்பதை,

Last Updated on Friday, 14 April 2017 00:18 Read more...
 

முனைவர் நா.சுப்ரமணியத்தின் கடிதமொன்று..:

E-mail Print PDF

கலாநிதி நா. சுப்பிரமணியன்

ஈழத்தமிழ் இலக்கியத்தை (புகலிட / புலம்பெயர் இலக்கியத்தையும் உள்ளடக்கி) ஆவணப்படுத்திவருபவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள். இவரது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய ஆய்வு நூல் அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்த நூல். 'பதிவுகள்' இணைய இதழிலும் அவ்வப்போது எழுதி வருவதுடன், 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் படைப்புகள் பற்றியும் அவ்வப்போது தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்பவர். அண்மையில் முகநூலிலும் , 'பதிவுகள்' இணைய இதழிலும் 'தாயகம்' இதழ் பற்றி எழுதிய எனது குறிப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் அவர் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவற்றை உங்களுடன் நானிங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.


அன்ப!

பதிவுகள் தளத்தை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் குறிப்பாக வாசிப்பும் யோசிப்பும்   என்ற தலைப்பிலமையும்  பகுதியிலே இடம்பெறும்   தங்களுடைய  வாசிப்பநுபவப் பதிவுகளில் தனிக்கவனம் செலுத்திவருகிறேன். அவற்றில் குறிப்பாகக் கனடாவின் தமிழிலக்கிய வரலாறு சார்ந்த  பதிவுகளில் முக்கியமானவை என நான்  கருதுபவற்றைச் சேமித்துக்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வகையில்  ஏப்ரல் 7 திகதியிட்ட  தங்களுடைய     வாசிப்பும் யோசிப்பும் -229  என்ற பதிவிலே எழுத்தாளர் ஜோர்ஜ் இ. குருஷேவ் அவர்களின் தாயகம்   இதழ்பற்றிய  தகவல்களைக் கண்டபோது பெரிதும் மகிழ்ந்தேன்.-சேமித்துங்கொண்டேன்.

Last Updated on Monday, 10 April 2017 23:57 Read more...
 

ஆய்வு: இளையராஜவின் இலக்கியப் படைப்புகளில் அணிகள்

E-mail Print PDF

இளையராஜாஒரு படைப்பு வாசகரை எளிதில் சென்றடைவதற்கும் கவரக் கூடியதாய் அமைவதற்கும் அப்படைப்பின் கரு அடிப்படை என்றாலும் அக்கருவை வளர்த்தெடுத்து இலக்கியமாக்குவதற்குப் படைப்பாளனின் படைப்பு உத்திகள் துணை செய்கின்றன. எனவே, ஒரு செய்தி அல்லது தகவலைப் படைப்பாளன் தன் படைப்பு உத்தகளால் சிறந்த இலக்கியப் படைப்பாக வெளிக்காட்ட முடியும். இந்த அடிப்படையில் “உத்திகள்’ அடிப்படை என்பதை அறியலாம்.

இலக்கியப் படைப்பாளிகள் செலச் சொல்லும் பொருட்டுப் பல்வேறு நெறிமுறைகளைக் கையாள்வர். இந்நுவல் நெறிமுறைகளே “இலக்கிய உத்திகள்’ என்னும் குறியால் – கலைச் சொல்லால் குறிக்கப்படுவன எனலாம். (அறிவுநம்பி.அ, 2001, ப: 6)

பொதுவாக நாவல், சிறுகதை போன்ற படைப்புகளில் உவமை, வருணனை, கற்பனை, பாத்திரப் படைப்பு உத்திகள், எழுத்து உத்திகள் போன்றவை நிறைந்து காணப்படும். இளையராஜாவின் படைப்புகளில் இறையனுபவங்கள் புதுக்கவிதையாயும், வெண்பா எனும் மரபுவழி பாக்களால் பாடப்பட்டதாயும் அமைந்துள்ளன. ஆயினும் பாமரரும் புரிந்துக்‌கொள்ளும் வகையில் எளிமையாக வெண்பாக்களைப் படைத்துள்ளார் இளையராஜா. இப்புரிதலின் அடிப்படையில் உவமை, உருவகம், தொடைகள், கற்பனை போன்ற பல உத்திகளைக் கையாண்டுள்ளார். அவற்றுள் குறிப்பாக “அணிகள்” இவர் படைப்பில் பயின்று வந்துள்‌ளமை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

அணிகள்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். இலக்கியத்திற்கு அழகூட்டுவதன் வாயிலாக இலக்கியத்தைச் சுவையுடையாக்குவது அணி. தொல்காப்பியத்தில் அணி குறித்து இடம்பெறவில்லையெனினும் “தண்டியலங்காரம்” அணிகள் குறித்த இலக்கணத்தை விரிவாகச் சுட்டியுள்ளது.இளைராஜாவின் வெண்பா படைப்புகளில் பல்வேறு அணிகள் இடம்பெற்றுள் ளன. அவை வருமாறு

Last Updated on Sunday, 09 April 2017 01:29 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 229 : எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவின் தாயகம் (கனடா) புகலிடத்தமிழர்களின் முக்கியமான பத்திரிகை / சஞ்சிகைகளிலொன்று.

E-mail Print PDF

எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.'தாயகம்' சஞ்சிகை அட்டை...புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இந்தப்பத்திரிகை /சஞ்சிகையினை நடத்தியவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.

ஜோர்ஜ் இ.குருஷேவ் விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளை விமர்சித்து எழுதியவர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் ஆயுதபோராட்டம் முடிந்து, மெளனித்ததன் பின்பு ஆக்ரோஷமாக விமர்சித்து வருவதைப்போல் அல்லாமல் , விடுதலைப்புலிகளின் காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதியவர். அதேசமயம் தான் ஆசிரியராக, பதிப்பாளராகவிருந்து வெளியிட்ட தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் அனைத்து அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் இடம் கொடுத்தார். அவர்கள்தம் படைப்புகளைப் பிரசுரித்தார். தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது.

தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா!' தொகுப்பினை அச்சிட்ட அச்சியந்திரமும் அதுவே. அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) )சுமார் ஐந்து வருடங்கள் வரையில் 'தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

தாயகம் (கனடா) பத்திரிகை /சஞ்சிகையின் 50 இதழ்களைப் 'படிப்பகம்' (http://padippakam.com ) இணையத்தளத்தில் வாசிக்கலாம். தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையிலேயே கவிஞர் கந்தவனம் அவர்களின் மணிக்கவிதைகள்' முதலில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Friday, 07 April 2017 22:07 Read more...
 

ஆய்வு: அகநானூற்றுப் பாடல்களில் இருவாழ் உயிரினங்கள்

E-mail Print PDF

சி.யுவராஜ்முன்னுரை
பண்டைய தமிழ் நாகரிகம் மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதாரமாகவும்  செய்தி ஊற்றாகவும் அமைவது சங்க இலக்கியம். சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூலில் ஒன்று அகநானூற்றுப்பாடல்களில் மூலம் பார்த்தால் சிறந்த சிந்தனைகள் மலர்வதையும் ஓங்கி வளர்ந்த நாகரிகத்தைப் பிரதிபலிப்பதையும் காணலாம். காதல். களவு, இயற்கை, விலங்கு, பண்பாடு, திருவிழா, சடங்குமுறை முதலியன செய்திகள் இருப்பினும், பல்வேறு உயிரினங்கள் பற்றி செய்திகளை புலவர்கள் பாடல்கள மூலம் அறியமுடிகின்றன. இக்கட்டுரை வாயிலாக அகநானூற்றுப்பாடல்களில் இருவாழ் உயிரினங்கள் ( நிலம், நீர்) பற்றி ஆய்ந்து நோக்கில் கொடுக்க முற்படுகின்றன.

தேரை
தேரை என்ற உயிரியைப்பற்றி உயிரியலார் கூறுவது, தகவல்கள், தவளையினத்தில் ஒன்றாகிய தேரைப்பார்ப்பதற்கு தவளை போன்று இருக்கும். இவை இரண்டுமே அருநிலை வாழ்வியல் வகுப்பைச் சேர்ந்தவை. இரவு இரைதேடும் தேரைகள் நிலத்தில் வாசிப்பவை. எனினும் இவை இருப்பிடம் சதுப்புநிலப்பகுதி அல்லது நீர் நிலைகளுக்கு அருகாமையில் தான் அமைந்திருக்கும். தேரை ஊர்ந்தும்  நகர்ந்தும் செல்லும். பொதுவாக  இவை பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருக்கும் அத்துடன் கறுப்பான வட்டங்கள் புள்ளிகள் காணப்படும். சங்க இலக்கிய நூல் அகநானூற்றில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. தேரையின் ஒலிப்பு முறைகள் ‘நீர்மிசைத்தெவுட்டும் தேரை ஒலியின்’ (அகம்.301:18) எனவும், ‘அவல்தோறு ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க’ (அகம்.364:3) எனவும் அகநானூற்றில் பாடல்கள் மூலம் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றன.

முல்லை நிலத்தில் மிகுதியாக மழைப்பொழிந்து ஆழமாகிய நீரினையுடைய பள்ளங்கள் இருக்கும் அதில் வாழும் திறந்த வாயினையுடைய தேரைகள் மகிழ்ந்து சிறிய பலவாகிய இசைக்கருவிகளைப்போல் ஒலிக்கும்.

Last Updated on Thursday, 06 April 2017 00:02 Read more...
 

படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் செல்வராஜாவின் ஆவணப்பதிவு -- ஈழநாடு - ஒரு ஆலமரத்தின் கதை " யோகர்சுவாமியின் காலத்தை முந்திய ஞானமும் பிரதமர் ரணிலின் காலத்தைப் பிந்திய ஞானமும் "

E-mail Print PDF

நூலகர் செல்வராஜா" ஈழநாட்டிலே  பல சமூகத்தவர்கள் இருக்கின்றார்களெனினும் தமிழரின்  சொந்தப்  பண்பாட்டினையும்  உரிமைகளையும் எடுத்துரைக்கும்போது,  பிறசமூகத்தினரும் இந்நாட்டில் வாழ்ந்துவருகின்றனர்  என்பதையுணர்ந்து வேற்றுமையில்  ஒற்றுமை காண  முயலவேண்டும். ஒற்றையாட்சி( யுள்ள) இந்நாட்டில் மனித உரிமைகளைப்பெறுவது  சாத்தியமானதா...? அடிப்படை மனித உரிமைகள்  அனைத்தும் நன்கு பாதுகாக்கப்படுமா...? அன்றேல் சமஷ்டிதான்  இலங்கைக்கு  உகந்ததா...? மாகாண சுயாட்சி முறை எமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றத்தக்கதா...? இவைபோன்ற கேள்விகளுக்கு  விளக்கம்  தரும் கருத்தரங்கமாக 'ஈழநாடு' விளங்கும்." - என்று 58 ஆண்டுகளுக்கு முன்னர் (அமரர்) கே.சி. தங்கராஜா யாழ்ப்பாணத்திலிருந்து 11-02-1959 ஆம் திகதி வெளியான முதலாவது ஈழநாடு வார  இதழில் பதிவுசெய்துள்ளார். ஈழநாடு  வெளிவருவதன் நோக்கத்தை அவர் அன்று எழுதியிருந்தாலும், அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு இற்றைவரையில் சரியான பதில் கிடைக்கவும் இல்லை.  தீர்வுகளும் தூரத்தூர  விலகிச்சென்றுகொண்டே  இருக்கின்றன.

இலங்கையில்  இதுவரையில் எத்தனை தடவை அரசியலமைப்பு மாற்றப்பட்டுவிட்டது...?  தொடர்ந்தும்  வரைபுகள் முன்வைக்கப்படுகின்றன. பெரியார்  தங்கராசாவின் அரிய கருத்துக்களுடன் 1959 இல் ஒரு பிராந்திய பத்திரிகையாக இலங்கையில் வெளியான ஈழநாடு பற்றிய ஒரு  ஆவணப்பதிவாக வெளியாகியிருக்கிறது ' ஈழநாடு ஒரு ஆலமரத்தின் கதை'

ஏற்கனவே  இலங்கையின்  இலக்கிய - அறிவியல் படைப்புகள் பற்றிய செய்திகளையும்  ஆளுமைகள் மற்றும் நூலகவியல் பற்றிய கட்டுரைகளையும்,  நூல் பதிப்புத்துறை தொடர்பான ஆக்கங்களையும் - எரிக்கபட்ட யாழ். பொது நூல்நிலையம் பற்றியும்  வெறும் குறிப்புகளாக அல்லாமல்,  நீடித்து நிலைத்துநின்று பேசத்தக்க ஆவணமாகவே தமிழ் உலகிற்கு   வழங்கியிருக்கும் நூலகர் என். செல்வராஜா அவர்களின் மற்றும் ஒரு தேடல் பயணத்தின்  பயன்தான் இந்த அரிய நூல். ஆவணப்படுத்துபவர்களுக்கு  தேடல் மனப்பான்மையும், பதிவுகளைத்தொகுக்கும்  அனுபவமும் இருக்கும் பட்சத்தில்  எம்மைப்போன்ற வாசகர்கள்  பயனுள்ள  தரவுகளையும் தகவல்களையும்  பெற்றுக்கொள்வார்கள். வாசகருக்காகவும்  அதேவேளை சமூக, அரசியல் ஆய்வாளர்களுக்காவும்   தொடர்ச்சியாக அயற்சியின்றி இயங்கிவரும் நூலகர் செல்வராஜா எம்மத்தியில் சிறந்த ஆவணக்காப்பாளராகவே விளங்கிவருகிறார். அவரது அயோத்தி நூலகசேவை இந்நூலை  வெளியிட்டுள்ளது. 35 கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியிருக்கும் இந்நூலுக்கு வீரகத்தி தனபாலசிங்கம் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

Last Updated on Saturday, 15 April 2017 17:25 Read more...
 

பூமராங் இணைய இதழ்

E-mail Print PDF

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: அனைத்துலக பெண்கள் தின விழா 2017

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் இணைய இதழ்   பூமராங்  உங்கள் பார்வைக்கு வருகிறது. www.atlasonline.org சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடாக இதனை உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கின்றோம். எமது சங்கத்தின் வளர்ச்சியின் ஊடாக மற்றும் ஒரு பரிமாணத்தில் பூமராங் இணைய இதழில் சங்கமிக்கின்றோம்.

சங்கத்தின் செய்திகள், சங்க உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் அவுஸ்திரேலியத் தமிழ் கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய  கட்டுரைகள், அகில உலகரீதியான தமிழ் கலை, இலக்கிய ஆக்கங்கள், படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள் , நூல் மதிப்பீடுகள், வாசகர் பக்கம், உட்பட பல பதிவுகளை அவ்வப்போது பூமராங்கில் பார்க்கமுடியும்.

இதனை படிப்பவர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். தங்கள் எண்ணங்களை  பின்வரும் மின்னஞ்சல்கள்  ஊடாக தெரிவிக்கலாம்.

ஜே.கே.
பூமராங் இணையத்தள நிர்வாகி
தொடர்புகளுக்கு: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 05 April 2017 22:49
 

அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2017

E-mail Print PDF

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: அனைத்துலக பெண்கள் தின விழா 2017

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா, இம்முறை மெல்பனில் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி (06-05-2017 ) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு   Mulgrave  Stirling Theological  College Auditorium   மண்டபத்தில்  ( 44-60, Jacksons Road, Mulgrave, Vic - 3170) நடைபெறும்.

மெல்பன், சிட்னி, கன்பரா, பிறிஸ்பேர்ண், கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களிலிருந்து வருகைதரும்  எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்குபற்றும் இவ்விழாவில்  கருத்தரங்கு, மொழிபெயர்ப்பரங்கு, வாசிப்பு அனுபவப்பகிர்வரங்கு, குறும்பட - ஆவணப்படக்காட்சி என்பனவும் இடம்பெறும்.

இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு சங்கத்தின் உறுப்பினர்களையும், கலை , இலக்கிய, சமூக ஆர்வலர்களையும்  ஊடகவியலாளர்களையும் தமிழ் ஆசிரியர்களையும்  சங்கம்   அழைக்கின்றது.

நிகழ்ச்சி இலவசம். நிகழ்ச்சிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் தமது பெயர்களை இம்மாதம் 25 ஆம் திகதிக்கு (25-04-2017) முன்னர் பதிவுசெய்துகொள்ளவும். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் செயற்குழு

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 05 April 2017 22:42
 

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ இயக்குனர் கிளாட் சாப்ரோலின் ஐந்து படங்கள் திரையிடல்

E-mail Print PDF

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!03-04-2017 முதல் 07-04-2017 வரை மாலை 6:30 மணிக்கு…
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

சினிமா ரசனையின் மிக முக்கிய அங்கமான ரெட்ரோஸ்பெக்டிவ் என்ற தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பு ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. சென்ற வாரம் முழுக்க வூடி ஆலனின் படங்கள் திரையிடப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட இயக்குனரின் படங்கள் #Retrospective வரிசையில் திரையிடப்படும். ஒரு இயக்குனரின் படங்களை தொடர்ந்து பார்ப்பதன் வாயிலாக அந்த இயக்குனர், கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இயக்குனரின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக திரையிடப்படும். சினிமா சார்ந்து இயங்குபவர்கள், உதவி இயக்குனர்கள், மாணவர்கள், திரைப்பட பொது பார்வையாளர்கள், தவறாமல் பங்கேற்க வேண்டிய நிகழ்வு இது.
அனைவரும் வருக….அனுமதி இலவசம்…

Last Updated on Monday, 03 April 2017 06:51 Read more...
 

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: சித்திரை மாத இலக்கியக் கலந்துரையாடல்

E-mail Print PDF

ஈழத்தமிழர் பற்றிய வரலாற்றுப் பதிவுகள்  - ஓர் அறிமுகம்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
"சிங்கள பௌத்தரின் பதிவுகள்"  -  திரு.என்.கே.மகாலிங்கம்
"தென்னிந்தியப் பதிவுகள்"  - கலாநிதி நா.சுப்பிரமணியன்
"பிறநாட்டவரின் பதிவுகள்" -  திரு.மணி வேலுப்பிள்ளை
"ஈழத்தமிழரின் பதிவுகள்" -  கலாநிதி பால. சிவகடாட்சம்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்:     29-04-2017
நேரம்:  மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்:   ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 1, 5633, Finch avenue East, Scarborough,  M1B 5k9
தொடர்புகளுக்கு:  அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 02 April 2017 23:50
 

கிரேக்க நாடகாசிரியர் ஹோமர் அவர்கள் எழுதிய ஒடிசி பற்றிய சுருக்க வரைவு.

E-mail Print PDF

கிரேக்க நாடகாசிரியர் ஹோமர் அவர்கள் எழுதிய ஒடிசி பற்றிய சுருக்க வரைவு. - முனைவர் தாரணி அகில் -

- Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –

மிக நீண்ட பயணத்தின் பல்வேறு பரிணாமங்கள் என்பதே  ஒடிசி என்ற வார்த்தையின் பொருள். காலத்தால் அழியா    கிரேக்க காவியமான ஹோமரின் ஒடிசி, காப்பிய நாயகனான யூலிஸிஸ் என்ற மாபெரும் கிரேக்க வீரனின் ஒரு நெடுந்தூர பயணத்தை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. கி. மு எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற ஒடிசி ஹோமரின் முந்தய காப்பியமான இலியட் என்ற புத்தகத்தின் தொடராக அமைகிறது. இலியட் காப்பியத்தில் கிரேக்கர்களும், டிராய் மக்களுக்கும் நடந்த  ட்ரோஜன் போர் மற்றும்  அதன் முடிவு பற்றி விவரிப்பதாக உள்ளது. எனினும், அதன் தொடர்ச்சிக்காப்பியமான ஒடிஸியில் கதாநாயகன் யூலிஸிஸ் ( இன்னொரு பெயர் ஒடிஸிஸ்) மேற்கொள்ளும் தீரம் நிறைந்த பயணங்களை எடுத்துரைப்பதாக உள்ளது. ட்ரோஜன் போரில் மிகுந்த துணிவுடன் பங்கு பெற்று தன் கிரேக்க நாட்டுக்கு மாபெரும் வெற்றிக்கனியை ஈட்டித்தரும் யூலிஸிஸ், தன் தாயகமான இதாகாவுக்கு செல்லும் வழியில் பத்து வருடங்களாக  மேற்கொள்ளும் பயண சாகசங்கள் நிறைந்த காப்பியம் என்ற வகையில் ஒடிசி புதுமைக்காப்பியமாக படைக்கப்பட்டு உள்ளது.

தன் சகாக்களுடன் தாயகம் நோக்கி புறப்படும் யூலிஸிஸ் பல்வேறு விதமான விசித்திர அனுபவங்கள் நிறைந்த நெடும்பயணம் மேற்கொள்ளுகிறான். டிராய் நகரத்தில் இருந்து பன்னிரண்டு கப்பல்களில் தன் குழுவினருடன் புறப்படும் யூலிஸிஸ் சிறு தூரம் அலைக்கடலில்  கடந்த பின் ஒரு சிறிய நிலப்பரப்பை காண்கிறான். சிகானீஸ் எனப்படும் அந்நிலப்பரப்புவாசிகள் இந்த குழுவினரை பார்த்து பக்கத்தில் உள்ள மலைகளை நோக்கி ஓடி தப்பிவிட, யூலிஸிஸ் தன் குழுவினருடன் அந்த  நிலப்பரப்பில் இறங்கி அங்குள்ள பொருட்களை சூறையாடி தன் கப்பல்களை நிரப்புவதுடன், நல்ல உணவு மற்றும் வைன் முதலியவற்றை ருசி பார்த்து அனுபவிக்கின்றான்,

Last Updated on Sunday, 02 April 2017 17:59 Read more...
 

கவிதை: யசோதரையின் போதிமரம்

E-mail Print PDF

கவிதை: யசோதரையின் போதிமரம் - முனைவர் தாரணி அகில்

- Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –

புயல் தாக்கும் பூகம்ப வேளையில், போதிமரம் என்ன செய்யும்?
புத்தன்தான் என்ன செய்வான்?
பொதி சுமக்கும் மனத்தின் குமுறல்கள் யாருக்கு எட்டும்?
சூறாவளி சுழன்று சுழன்று  அடிக்கும் மனப்பிரதேசத்தில் வசிப்பது யார்?
விடையில்லா வினாக்கள் ஆண் வர்க்கத்திற்கே உரித்தாகுமா?
மாயாதேவியின் மாயமகன் நீயாகின் என் வாழ்வே மாயம் ஆனது என்பதா?
யாமத்திலே, மெய் மறந்த தருணத்தில் நீ நீங்கியது கடவுளர்களின் ஆணையோ?
பேரொளி பிழம்பு என்னை நீ துறந்தது உன் ஞானத்தின் முதல் அடியோ?
ஆறாத்துயர் அளித்து ஆறுவது சினம் என்று போதித்தாயோ?
பெண் மனம் பேதை என்ற நிலைக்கு ஆட்படுத்தும் வன்செயல் நிகழ்த்தினையோ?
உன் மனம் முற்றும் துறந்த வேளை என் சித்தம் அழிக்க துணிந்தனையோ ?
காலம் உன்னை வேள்விகளில் நிலை நிறுத்தும் எனில் என் நிலை குலைத்த செயல் நிம்மதியோ?
நிஜமாய் நீ நீடித்திருக்க  நிழலாய் நான் பரிதவித்தேன்
ஈர் ஐந்து வருடங்கள் நீயே என் போதி மரம்
கருவின் வளர்ச்சி என் மணிவயிற்றில்! மன சுழற்சி உன்னிடத்தில்!
நான் தாயாகிறேன். நீ தாயுமானவன் ஆகிறாய்
உன் நிழல் எனக்கு போதித்த பாடங்கள் என் மன வேதனைகள்
புலன் அடக்கிய நீ என் புலன் இச்சை அறியாதது ஏனோ?
பெண்ணுக்கு மெய் பாரம் ஆகுமோ? ஆனது உன்னால் அன்றோ?

Last Updated on Sunday, 02 April 2017 09:04 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 228: கவிஞர் பிரமிள் சுட்ட 'தவளைக்கவிதை'யும், அதற்கான மூலமும் பற்றி.....

E-mail Print PDF

பிரமிள்: கவிஞர் பிரமிள் சுட்ட 'தவளைக்கவிதை'யும், அதற்கான மூலமும் பற்றி.....' பிரமிளின் தவளைக்கவிதை பற்றியதொரு புரிதல்.' என்னுமொரு கட்டுரையினை ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன்.முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அதில் மேற்படி கவிதை பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அதற்கான இணைய இணைப்பு: http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1539:-17-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54


அந்தக் கட்டுரையில் நான் பிரமிள் அவர்களின் 'தவளைக்கவிதை' பற்றிக்குறிப்பிட்டிருந்ததுடன் இப்பதிவினை வாசிப்பது நல்லதென்பதால் அக்கட்டுரையில் அக்கவிதை பற்றிய எனது புரிதலின் சாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு மேலே செல்வோம். ஏனெனில் இப்பதிவானது அவரது அக்கவிதையின் தோற்றத்துக்கான மூலம் பற்றியது என்பதால் அக்கட்டுரை பற்றி மீண்டுமொருமுறை பார்ப்பதும் அவசியமானதே. அக்கட்டுரையின் அக்கவிதை பற்றிய கருத்துகளின் சாரம் வருமாறு:

"நூறு புத்தி உள்ள மீனை எடுத்துக் கோத்திட முடிந்தது ஈர்க்கில். மீன் பெருமைப்பட்ட புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. இது போல் தன் புத்தி அதனிலும் அதிகமென்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி விட்டால், அதன் மேல் கல்லை ஏற்றி வைத்து விட்டால், அதன் கதை அவ்வளவுதான். அதனால் மீண்டும் நிமிர்ந்திட முடிகிறதா? ஆமை பெருமைப்பட்ட அதன் புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியுமா? ஆனால் இவற்றுடன் ஒப்பிடும்பொழுது குறைந்தளவே புத்தி உடையதாகக் கூறிக்கொள்ளும் தவளையை மட்டும் பிடிக்க முடிந்ததா? இங்கு கவிஞர் தவளையைக் கவிதையாக உருவகிக்கின்றார். அந்தத் தவளையோ கைகளுக்கு அகப்படாமல் தத்தித் தத்திச் செல்கிறது. இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையைத் தவளையாக உருவகித்திருப்பதால் (தவளை கவிதை என்று கூறாமல் , தவளைக்கவிதை என்று கூறியிருப்பதால்; தவளை கவிதை என்று கூறியிருந்தால், தவளையும் கவிதையும் என்று பொருளாகியிருக்கும்), நூறு புத்தியுள்ள மீனையும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையையும் ஏனைய பிரிவுகளாகக் கருதலாம். ஒரு விதத்தில் நூறு புத்தியுள்ள மீனை சிறுகதைக்கும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையை (ஆடி அசைந்து நிதானமாகச் செல்வதால்) நாவலுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிறுகதை எழுதுவதற்குரிய அறிவுத் தேடலை விட நாவல் எழுதுவதற்குரிய தேடல் மிக அதிகம். அதனால்தான் சிறுகதைக்குரிய அறிவுத் தேடலை நூறு புத்தியாகவும், நாவலுக்குரிய தேடலை ஆயிரம் புத்தியாகவும் எழுத்தாளர் கருதுகின்றார். ஆனால் கவிதைக்குரிய அறிவுத் தேடல் அதிகமாக இல்லாவிட்டாலும் (அதனால்தான் தவளைக் கவிதை தனக்கு ஒரு புத்தி என்கின்றது), மேலும் ஏனைய பிரிவுகளை விட , கவிதையானது உணர்ச்சியின் விளைவாக உருவாவது. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளுக்குத் தேவையான அறிவுத்தேடலும், ஆக்குவதற்குரிய நேரமும் இதற்குத் தேவையில்லை. ஆனால் , நல்லதொரு கவிதையினை உருவாக்குவது சிறுகதையினை எழுதுவதை விட, நாவலொன்றினை எழுதுவதை விடச் சிரமமானது. அதனால் தான், கவிதையானது எழுத்தாளரின் பிடிக்குள் அகப்படாமல் தத்தி, நழுவிச் செல்கிறது. அதனால்தான் எழுத்தாளர் கவிதையினைத் தவளையாக உருவகிக்கின்றார்...... கவிதையைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளைவிட எழுதுவது மிகவும் இலகுவானதென்று பலர் எண்ணி விடுகின்றார்கள். அதனால்தான் புற்றீசல்கள்போல் தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் முளைத்து விடுகின்றார்கள். உண்மையில் பிரமிள் புற்றீசல்கள்போல் படையெடுத்த புதுக்கவிஞர்களால் நிறைந்துவிட்ட அன்றைய தமிழ் இலக்கியப் பரப்பின் மீதான விமர்சனமாகத்தான் மேற்படி 'தவளைக்கவிதை' என்னும் கவிதையினை எழுதியிருக்கின்றாரென்று படுகிறது. கவிதை எழுதுவதை மிகவும் இலகுவாக எண்ணி ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் பொழிந்து தள்ளும் கவிஞர்களை நோக்கி, 'நீங்கள் மிகவும் இலகுவாகக் கருதிப் படைக்கின்றீர்களே கவிதைகள். அவை கவிதைகளே அல்ல. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளை விடக் கவிதை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது.' என்று சாடுகின்றார் பிரமிள். ........ ஆயிரக்கணக்கில் புற்றீசல்களைப் போல் பெருகியிருக்கும் தமிழ்க் கவிஞர்கள். கவிதையோ இவர்களின் கைகளில் அகப்படாமல் தத்தித் தத்தி ஓடுகிறது. இவர்களும் அதன் பின்னால் தத்தித் தத்தி ஓடுகின்றார்கள். ஆனால் கவிதைதான் இவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. இவர்கள் கவிஞர்களா? பித்தர்கள் இவர்கள் என்று சாடுகின்றார். மேற்படிக் கவிதைக்குத் 'தவளைக் கவிதை' என்று தலைப்பிட்டுள்ளதால் கவிதையின் முதன்மைப் பொருள் சமகாலத் தமிழ்க் கவிதையும் அதனைப் படைக்கும் கவிஞர்களும். மேலும் மேற்படி கவிதையினை இன்னுமொரு கோணத்திலும் அணுகலாம். எதற்காகக் கவிதையினைத் தவளைக் கவிதை என்றார்? குறைந்த அளவு அறிவுத் தேடலும் ஆயிரக்கணக்கில் பிரசவிக்கப்படும் இன்றைய தவளைக் கவிதையானது தத்தித் தத்தித் தப்பிப் போகுது. எதனிடமிருந்து உண்மைக் கவிதையிடமிருந்து. தவளைக்கு இன்னுமொரு பெயர் மண்டூகம். மண்டூகம் என்பதற்கு இன்னுமொரு பொருள்: மண்டுகளின் ஊகம். அதாவது முட்டாள்களின் ஊகம். ஆக, இன்றைய தமிழ்க் கவிதையானது மண்டுகளின் ஊகம் என்று சாடுகிறாரோ பிரமிள்?"

இவ்விதம் அப்பதிவினில் எழுதியிருந்தேன். இனி இப்பதிவுக்கு வருவோம்.

Last Updated on Sunday, 02 April 2017 02:22 Read more...
 

சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல்

E-mail Print PDF

சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல் பெண்கள்  என்ற குழந்தை உழைப்பாளிகள் :
சுப்ரபாரதிமணியனின் நாவல்களில் பெண்ணிய அம்சங்களை நுணுக்கமாக்க் காணலாம் . இதிலும் முத்துலட்சுமி என்ற பெண் தொழிலாளி மூலம் அந்த அம்சங்கள் வெளிப்படுகின்றன. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம் போன்றவற்றில்  சலுகைகள் என்ற பெயரில் திட்டமிட்ட சுரண்டல் எப்படி நிகழ்கின்றன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. நிலவுக்கு ஓரமாய் ஒற்றைப்பனையொன்று சூட்டுகோலாய் நின்று கொண்டிருந்தது என்ற உவமை போல் அந்தப் பெண் நாவலில் விளங்கிகிறாள். வறுத்த விதைகள் முளைக்குமா .நாம் வறுத்த விதைகள் என்று அவர்களே நொந்து கொள்கிறார்கள்.

சுமங்கலித்திட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல இளம் பெண்கள் பற்றி மேரியின் டைரிக்குறிப்பு என்ற வகையில்  இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதே சமயம் முத்துலட்சுமி  என்ற இளம் பெண்ணின் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்து வாழும் வாழ்க்கை விரிவாகப்பதிவாக்கியுள்ளது.அவர் அதிகப்படியான வேலை, சோர்வு,மனஅழுத்தத்தால் கை ஒன்று இயந்திரத்தில் சிக்கி  வெட்டுப்பட்ட பின் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். அதன் பின் அவளின் அலைக்கழிப்பும் இறுதியில் நம்பிக்கையாய் இருப்பது பற்றியும் நாவல் சொல்கிறது. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மணித்திட்டம், தாலிக்குத்தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை ., திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்து சென்று தஙக வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலைவாங்குகிறார்கள். தாலிக்குத் தங்கம் தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கிறது.அப்படி அந்தக் குறிப்பிட்ட  காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர். இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.அதில் ஒரு பெண்தான்

Last Updated on Thursday, 30 March 2017 23:06 Read more...
 

பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூக நிலைகள்

E-mail Print PDF

பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூக நிலைகள்இசுலாமியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். இந்நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய எழுத்துக்கள் எளிமையானவை கருத்துக்கள் புதுமையானவை. இவருடைய எழுத்துக்களில் சமூகத்தில் நிலவும் அவலங்கள், முரண்பாடுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமூகவியல் என்பது சமூகத்தை அதாவது மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியல் ஆகும். இது சமூகத்தின் தோற்றம் வளர்ச்சி, அமைப்பு, செயல்கள் ஆகியவற்றிற்குத் தக்க விளக்கம் காண முற்படுகிறது.

பொருத்தமற்ற திருமணத்தைத் தடுக்கும் சமுதாயம்
பாத்திமுத்து சித்தீக் அவர்கள் இசுலாமியச் சமுதாயக் கோணல்களை நோகாது சாடியுள்ளார். பலதாரமுறை இசுலாத்தில் இருந்தாலும் கூட மனைவியை இழந்த ஒருவனுக்கு சிறுவயது பெண்ணைக் கட்டிக் கொடுப்பது அதுவும் தகப்பன் போன்றிருக்கும் ஒருவருக்கு கட்டிக் கொடுப்பது தவறானது என்பதை இடி மின்னல் மழை சிறுகதை வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் மனைவி மும்தாஜை இழந்த நிலையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சபூரின் தாயார் வற்புறுத்தியும் திருமணமே வேண்டாம் என்றிருந்த சபூர் பலரின் வற்புறுத்தலுக்காகச் சம்மதம் சொன்னான். பக்கத்து வீட்டிலிருக்கும் அப்துல் கரீம் அவர்களுடைய மகள் ஆயிஷாவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலையில் அப்துல் கரீம் விட்டுக்குச் சென்றான்.

Last Updated on Thursday, 30 March 2017 21:13 Read more...
 

சர்வதேச அளவிலான சிறுகதைப்போட்டி!

E-mail Print PDF

Last Updated on Wednesday, 29 March 2017 23:57
 

வாசிப்பும், யோசிப்பும் 227 : அழியாத கோலங்கள் - வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்!

E-mail Print PDF

ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'

* 'அழியாத கோலங்கள்: வெகுசன இதழ்களின் பொற்காலப்படைப்புகள்' இப்பகுதியில் அக்காலகட்டத்தில் நான் வாசித்த தொடர்கள் பற்றிய விபரங்கள், ஓவியங்கள், அட்டைப்படங்கள் என்பவை நன்றியுடன் பிரசுரமாகும். *


ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்''கல்கி' சஞ்சிகை தனது வெள்ளிவிழாவினையொட்டி நடாத்திய நாவல் போட்டியில் முதற்பரிசினை உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' நாவலும், இரண்டாம் , மூன்றாம் பரிசுகளை ர.சு,நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', மற்றும் 'பி.வி.ஆர் எழுதிய 'மணக்கோலம்' ஆகிய நாவல்கள் பெற்றன.

'முள்ளும் மலரும்' நாவலுக்கு ஓவியர் கல்பனாவும், 'கல்லுக்குள் ஈரம்' நாவலுக்கு ஓவியர் வினுவும், 'மணக்கோலம்' நாவலுக்கு ஓவியர் விஜயாவும் ஓவியங்கள் வரைந்திருப்பார்கள்.

என் அப்பாவின் கருத்துப்படி முதற் பரிசு பெற்றிருக்க வேண்டிய நாவல் ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'. என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்தும் அதுவே. உண்மையில் 'முள்ளும் மலரும்' நாவல் 'பாசம்' திரைப்படத்தில் வரும் உப கதையான அசோகன்/கல்யாண்குமார்/ஷீலா கதையின் தூண்டுதலால் உருவானதோ என்று கூட எனக்குச் சந்தேகம் வருவதுண்டு. அது பற்றி இன்னுமொரு சமயம் என் கருத்தினை விரிவாகவே பகிர்வேன்.

உமாசந்திரனின் 'முள்ளும் மலரும்' சமூக நாவல். ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட சமூக, அரசியல் வரலாற்று நாவலென்று கூறலாம். நாவல் இறுதியில் மகாத்மாவின் மரணத்தை மையமாக வைத்து நடைபோடும். நாவலின் பிரதான பாத்திரங்களான ரங்கமணி, திரிவேணி ஆகிய பாத்திரங்கள் மறக்க முடியாத பாத்திரங்கள்.

Last Updated on Tuesday, 28 March 2017 07:05 Read more...
 

முல்லை அமுதன் கவிதைகள்!

E-mail Print PDF

முல்லை அமுதன்

1.
வானத்தை மழைக்காக
நிமிர்ந்து பார்த்த ஒரு காலத்தில்
உணவு போட்டது ஒரு விமானம்.
பிறிதொரு நாளில்
சுற்றிவளைப்பு நடந்த மாலைப்பொழுதில்
குண்டு போட்டது.
நண்பனும் மடிந்தான்.
விமானம்
அமைச்சரை,
நாட்டின் தலைவரை
அழைத்துவந்த
விமானம் என
அவன்
அடையாளம் காட்டினான்.
விமானத்தில்
வந்தவர்கள்
நின்றவர்களுடன்
ஊருசனம்
மடியும் வரை
நின்றே இருந்தனர்.
இன்றுவரை
இனம்
அழியவிட்ட விமானம்
மீண்டும் வரலாம்.
கைகள்-
துருதுருத்தபடி
கற்களுடன் காத்தே நிற்கிறது.

Last Updated on Monday, 27 March 2017 22:25 Read more...
 

பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்!

E-mail Print PDF

- பிச்சினிக்காடு இளங்கோ -

1. கவியெழுதி வடியும்

இலையிருளில் இருந்தவண்ணம்
எனையழைத்து ஒருபறவை பேசும்
இதயத்தின் கனத்தையெல்லாம்
இதமாகச் செவியறையில் பூசும்
குரலொலியில் மனவெளியைத்
தூண்டிலென ஆவலுடன் தூவும்
குரலினிமை குழலினிமை
கொஞ்சும்மொழித் தேனாக மேவும்

Last Updated on Monday, 27 March 2017 22:09 Read more...
 

கவிதை: சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஒரு தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது

E-mail Print PDF

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சனிக்கிழமை சந்தைக்கு
வந்திருந்தாய் நீ

கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி
நுனிவெடித்த செம்பட்டைக் கூந்தலுக்கு
தேங்காயெண்ணெய் தடவிப் பின்னலிட்டு
அவரை, வெண்டி, நெத்தலி,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய்
பை நிறைய வாங்கிக் கொண்டு
நீ செல்கையில்
கூட்டத்தினிடையே நுழைந்து நுழைந்து
உன் பின்னாலேயே வந்தேன் நானும்
நீ காணவில்லை

Last Updated on Monday, 27 March 2017 06:49 Read more...
 

மெல்பன், ஆஸ்திரேலியா: "அசோகமித்திரனோடு ஒரு மாலைலைப்பொழுது"

E-mail Print PDF

அசோகமித்திரன்1) அசோகமித்திரன் நினைவலைகள் உரை - முருகபூபதி
2) சிறுகதை வாசிப்பு - "பிரயாணம்"
3) அசோகமித்திரனும் நாமும் - ஜேகே
4) அசோகமித்திரனும் நாமும் - கேதா

5) கலந்துரையாடல்.

26/03/2017  ஞாயிறு மாலை நான்கு மணி.

நிகழ்ச்சி நடைபெறும் முகவரி
20 Frewin Street
Epping  VIC 3076
TP : 0403406013

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


Last Updated on Saturday, 25 March 2017 00:53
 

அசோகமித்திரன் நினைவுகள்: தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.

E-mail Print PDF

அசோகமித்திரன்சென்னையில் வாழும் ஒரு நடுத்தரக்குடும்பம். மனைவி கடைத்தெருவுக்குப் போய்விட்டாள். கணவன்  குழந்தையுடன் வீட்டில். தெருவில் சென்ற ஒரு ரிக்‌ஷாவை காணும் குழந்தை,  " அப்பா ரிஷ்க்கா " என்று சொல்கிறது. உடனே  தகப்பன், " அது ரிஷ்க்கா இல்லையம்மா.... ரிக்‌ஷா" என்று திருத்திச்சொல்கிறார். குழந்தை மீண்டும் ரிஷ்க்கா எனச்சொல்கிறது. தகப்பன் மீண்டும் திருத்துகிறார். ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொடுக்கிறார். " ரி... க்...ஷா..."  குழந்தையும் அவ்வாறே, " ரி...க்...ஷா..." எனச்சொல்லிவிட்டு, மீண்டும் ரிஷ்க்கா" என்கிறது.  தகப்பன் பொறுமையாக, மீண்டும் மீண்டும் சொல்லி குழந்தையின் உச்சரிப்பை திருத்தப்பார்க்கிறார். ஒவ்வொரு எழுத்தையும் அழகாக உச்சரிக்கும் குழந்தை, முடிவில் "ரிஷ்க்கா" என்றே சொல்கிறது. தகப்பன் எப்படியும் குழந்தை வாயிலிருந்து சரியான உச்சரிப்பு வந்துவிடவேண்டும் என்று நிதானமாக சகிப்புத்தன்மையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால், குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்க்கா என்றே தவறாக உச்சரிக்கிறது. அப்பொழுது கடைத்தெருவுக்குச் சென்ற மனைவி திரும்பிவருகிறாள். சென்ற இடத்தில் நினைவு மறதியாக குடையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொல்கிறாள். " பரவாயில்லை, ஒரு  ரிஷ்க்காவில்  போய் எடுத்துவா..." என்கிறார் கணவன். மனைவி திடுக்கிட்டு, " என்ன சொன்னீங்க...?" எனக்கேட்கிறாள். " ரிக்‌ஷாவில் போய் எடுத்துவா" எனச்சொன்னேன். " இல்லை... இல்லை... நீங்கள் வேறு என்னவோ சொன்னீர்கள்...!!!" இத்துடன் இச்சிறுகதை முடிகிறது. இதனை சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வாழ்விலே ஒரு முறை என்ற சிறுகதைத்தொகுப்பில் படித்திருக்கின்றேன்.  ஒரு குழந்தைக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் உரையாடலில் ஆழ்ந்திருக்கும் படிமத்தை அதில் கண்டு வியந்தோம்.

சிறுகதை அரங்குகளில் அசோகமித்திரனின் கதைகளை வாசிப்பதும் நல்ல அனுபவம். அதனை எழுதிய அசோகமித்திரன் கடந்த வியாழக்கிழமை 22 ஆம் திகதி சென்னையில் மறைந்துவிட்டார். ரிக்‌ஷா என்ற அச்சிறுகதையிலிருந்த  உருவ - உள்ளடக்க அமைதியைத்தான் நாம் அசோகமித்திரன் என்ற படைப்பாளியிடமும் அவதானித்தோம். தமிழகப்படைப்பாளிகளின் வரிசையில் அசோகமித்திரன் பற்றியும் எழுதவேண்டும் என்று பல மாதங்களாக நினைத்திருந்தும், அவரது மறைவுக்குப்பின்னரே அது சாத்தியமாகியிருப்பதையிட்டு ஆழ்ந்த துயரடைகின்றேன்.

Last Updated on Friday, 24 March 2017 07:07 Read more...
 

நூல் அறிமுகம்: சங்ககாலத் தமிழர் வாழ்வியல் (Living Codes of Sangam Era Tamils.)

E-mail Print PDF

நூல் அறிமுகம்: சங்ககாலத் தமிழர் வாழ்வியல் (Living Codes of Sangam Era Tamils.)

இலக்கிய ஆய்வு நூலுக்கான 'எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்' வழங்கிய 'தமிழியல் விருது - 2011', தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கான ' தமிழியல் விருது - 2014', இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து வழங்கும் ' இரா. உதயணன் இலக்கிய விருது - 2016' என்ற மூன்று விருதுகளையும் பெற்றவர் ஆவார்.

தமிழன் தாயகமாம் ஈழத் திருநாட்டின் வடமாகாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் புகழ் பூத்த நகரான சாவகச்சேரி மண்ணில் நுணாவிலூர் என்னும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட 'சங்ககாலத் தமிழர் வாழ்வியல்' என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது.

Last Updated on Tuesday, 21 March 2017 07:36 Read more...
 

Le Verite’ in the new Sinhala film

E-mail Print PDF

K.S.SivakumaranRecently in an invitational screening of a large gathering I sat at  Regal Theatre to see the new creation by Prasanna Vithanage. Internationally known Lankan film director Vithanage has brought in a new genre of film making in Sinhala. My thoughts went back to the 1960s when the New Wave in France exciting us all the enthusiasts of continental cinema.

'Verite ’- The Truth was in fashion then and led to neo-realism and other developments in cinematic history.

Usavia Nihangdai (Silence in the Courts) produced by H D Premasiri &  Prasanna Vithanage is a true story enacted in cinematic terms. It sounds like a documentary feature film but in fact the creativity is visible in the deft cinematography and the dialogues and further the story enacted is a humanistic and implicitly suggests an indictment of some of those in our very recent judicial personnel. The artistry in handling violence though only words and a fleeting moment of seminude scene is to be applauded.

With English subtitles provided I could understand the dialogue well and fully appreciate the boldness of the producer and director and the players in the film.

I do not want to retell the story as the visuals speak full well the pathetic state of lawlessness and sexual exploitation of naïve village women.

Actualities of real evidences and the newspaper reference and the natural narration and utterance of Victor Ivan and others amply prove the law violators of the crime and how the Courts ignored the culprits. Graphics, Voice production and intimate faces all account for the pin drop silence observed in the theatre for full 60 minutes of showing, It was a silent approval of the film. One more feather in Prasanna Vithanage’s  cap. Congratulations.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 20 March 2017 22:38
 

மெல்பனில் மூத்த - இளம் தலைமுறையினர் சங்கமித்த அனைத்துலக பெண்கள் தின விழா! பொன்மணி குலசிங்கம் - அருண். விஜயராணி நினைவுகூரப்பட்ட ஒன்றுகூடல்!

E-mail Print PDF

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மெல்பனில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் இளம் தலைமுறையினரும் மூத்த தலைமுறையினரும் சங்கமிக்கும் நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன. சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மெல்பனில் வதியும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் ஈடுபட்ட மூத்த பெண்மணிகள் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர். திருமதிகள் இந்துமதி கதிர்காமநாதன், கனகமணி அம்பலவாண பிள்ளை, மெல்பன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஞானசக்தி நவரட்ணம், செல்வி கமலா வேலுப்பிள்ளை ஆகியோருடன், இவ்விழாவுக்கென சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான திருமதி கௌரி அனந்தனும் விளக்கேற்றி வைத்தனர்.

திருமதி ஞானசக்தி நவரட்ணம் இலங்கையில் உரும்பராயைச்சேர்ந்தவர். தமது தாயாரிடமும் பாட்டியாரிடமும் தையல் நுண்கலையை இளமைக்காலத்தில் பயின்றவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த அவர், தாம் பெற்ற அந்தப்பயிற்சியிலிருந்து, இயற்கை, சுற்றுச்சூழல், வீதிப்போக்குவரத்து, மற்றும் குழந்தைகள்,  தெய்வங்களின்  படிமங்களையும் தையல் பின்னல் வேலைப்பாடுகளில் வடிவமைத்துவருபவர். அவரது கைவண்ணத்தில் உருவான படங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சங்கத்தலைவரின் தொடக்கவுரையையடுத்து திருமதி மங்களம் வாசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வாழ்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் மறைந்த எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியின்  "சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்" என்ற தலைப்பில் செல்வி மோஷிகா பிரேமதாசவும்-  " பாரதியும் பெண்விடுதலையும்"  என்ற  தலைப்பில் செல்வி மதுபாஷினி பாலசண்முகனும்  உரையாற்றினர்.  இந்த இரண்டு மாணவிகளும் கடந்த ஆண்டு இறுதியில் விக்ரோரியா மாநிலத்தில் நடந்த V.C.E பரீட்சை,  தமிழ்ப்பாடத்தில் கூடுதல் புள்ளிகள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Monday, 20 March 2017 22:26 Read more...
 

பாரதியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள்

E-mail Print PDF

 மதுபாஷினி பாலசண்முகன்- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் செல்வி மதுபாஷினி பாலசண்முகன் நிகழ்த்திய உரை. இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்றவர். மொனாஷ் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பயிலும் இவர், மெல்பனில் நடைபெற்ற இளம் எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற போட்டியில் சிறந்த இளம் எழுத்தாளருக்கான விருதையும் பெற்றவர். ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடும் ஆர்வமும் மிக்க மதுபாஷினி பாலசண்முகன், தமிழ் இலக்கியத்திலும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்திவருபவர். -முருகபூபதி -


"நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்"


பாரதியார் எழுதிய புதுமைப்பெண் பாடலில் இருந்து சில வரிகள் இவை. சுப்ரமணிய பாரதி 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் புரட்சிக் கவிதை  எழுதிய கவிஞர் மற்றும் சுதந்திர வீரர் ஆவார். பண்டைத் தமிழ் வரலாற்றையும் பாரதப் பண்பாட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதி, நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையைக் கண்டு மனம் வெதும்பினார், வேதனைப் பட்டார். பெண் விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களை பாடினார்.

பாரதியார் தமது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளை அவருக்கே உரித்தான கவியழகோடும், அழுத்தத்தோடும், வீராவேசத்தோடும், படிப்போரின் மற்றும் கேட்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கனல் தெறிக்க எழுதினார்.

நான்  உங்களுடன் உரையாடவிருப்பது பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துகளைப் பற்றி. உப தலைப்புகளாக, பாரதியார் சமூக சீர்திருத்த வாதத்தை, முக்கியமாக பெண் விடுதலையை ஆதரித்த காரணம், அவரது பெண் விடுதலை வாதம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் அவற்றுக்கு உதாரணமான பாடல்கள் என்பன பற்றிக் கலந்துரையாட உள்ளேன்.

Last Updated on Monday, 20 March 2017 22:27 Read more...
 

The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan

E-mail Print PDF

Abstract

- Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –

Any journey in life is blissfully ever sought by human travelers across the globe. However, there are certain migrations by specific ethnic groups who are left with not much choice except for a disagreeable movement, sometimes hazardous ones too. Life and journey go hand in hand in a pleasant manner for any human being with comfortable existence. Crisis occurs only when life becomes uncertain in the homeland and to enter an alien land. Srilankan Tamil people is one such ethnic group who have been going through the crisis of existence for having born in a land that coerces cruelty upon them. The writer V.N. Giritharan was born as a blessed being like others in a Tamil family in Sri Lanka. He grew up as a writer as well as an Architecture graduate with great sensitivity towards the land and people around him. However, his state of affairs did not remain the same, as there were the chaos and brutalities of the ethnic conflict between the majority Sinhalese and the minority Tamil. The only way to survive was to leave the homeland with a heavy heart and to move towards an asylum. This journey is the most pathetic one in any man’s life. His sufferings have been portrayed vividly in the novel An immigrant in which the protagonist named Ilango lives as the replica of the writer V.N. Giritharan himself.

The paper attempts to explore the existential predicament of the protagonist of the novel An Immigrant whose personal experiences demonstrate the physical, psychological multicultural, ethnic, political and socio-economic issues of such immigrants across the globe.

Key words :  Canadian-Tamil Writer, V.N. Giritharan, forced migration, Diaspora, Tamil ethnic race, refugees, unwilling immigrant, identity crisis, political asylum.

“I remained, lost in oblivion;
My face I reclined on the Beloved.
All ceased and I abandoned myself,
Leaving my cares forgotten among the lilies.”
(St. John of the Cross)

Last Updated on Monday, 20 March 2017 00:19 Read more...
 

நவஜோதி ஜோகரட்னத்தின் மகரந்தச் சிதறல்கள்

E-mail Print PDF

- கலாநிதி பார்வதி கந்தாமி., கனடா. -அழகான தலைப்புக்கொண்ட நூல். மகரந்தம் பறந்து சிதறிப் பூக்களிலிருந்து பூக்களுக்குத் தாவிச் சூல் கொள்ள வைக்கின்றது. நவஜோதி ஜோகரட்னம் ஈழத்தில் தோன்றிய மகரந்தம். இன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இலண்டனில் தன் மகரந்தத்தைப் பலவாயிரம் புலம்பெயர் பெண்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தவும் தமிழ் பணியை உறுதியுடன் செய்யவும் பயன்படுத்துவது யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் பெண்கள் உயர்வுக்காகக் குரல் கொடுக்கும் நவஜோதி ‘மகரந்தச் சிதறல்’ ஊடாக வானொலியால் பெண்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்திப் பின்னர் நூல்வடிவில் நூல்வடிவில் பதிவுகளாக  வெளிக்கொணர்ந்து பேசாப் பொருளைப் பேசத் துணிந்து தூண்டியுள்ளார்.

பௌவியமாகத் தெரிவு செய்து எழுதப்பட்ட இந்நூலில் உள்ளடக்கப்பட்டவர்கள் பற்றிய விமர்சனங்கள் மூன்று விடயங்களை விவாதத்திற்கு உள்ளாக்கலாம். முதலாவதாக இலைமறைகாய்களாக இருந்த சில பெருமாட்டிகள் பற்றி எழுதப்படவில்லை எனவும், வாழ்ந்துகொண்டிருப்போரில் முக்கியமான சிலர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனவும் அடுத்ததாக, அடுத்தவர் அறியாது பிரித்தியானியாவில் வந்து அவலப்பட்ட அகதிகளுக்கான உதவிகளைச் செய்தவர்களையும், பெண்கள் மீதான வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருந்தும், தாய் மண்ணின் அநாதைகளின் வாழ்வு உயரவும், கல்வி பெறவும் பணி செய்து வாழ்ந்த, வாழும் உத்தமிகளது பதிவுகள் இடம்பெறவில்லை என்ற ஆதங்கங்களும் எழலாம். ஒரே நூலில் எல்லாமுமே இடம்பெறமுடியாது. அவை இடம்பெறவேண்டும் என்ற தேவையை இந்நூல் வற்புறுத்துகிறது எனலாம்.

Last Updated on Friday, 17 March 2017 01:05 Read more...
 

சிறுகதை: மறு அவ‘தாரம்’

E-mail Print PDF

 நவஜோதி ஜோகரட்னம்., லண்டன். 'நாங்கள் லண்டனுக்கு கப்பலால்தான் பயணம் செய்து வந்தோம். கறிக்குப் போடுகிற மிளகாய்த்தூள், சமைக்கிறதுக்கு கருவாடு, கோப்பி போன்ற  சாமான்களை யாழ்ப்பாணத்திலிருந்துதான் கொண்டு வருவோம். அப்படிக் கொண்டு வந்தால்தான் எங்கட சாப்பாட்டை கொஞ்சம் சுவைபடச் சாப்பிடலாம். இலங்கையிலிருந்து மேற்படிப்புக்கென்று வருகிறவர்கள் எல்லோரும்; கட்டிக் காவிக் கொண்டுதான் வருவோம். யாழ்ப்பாணத்தை இறக்குமதி செய்தது போலல்லவோ இப்போது லண்டனில் எல்லாப் பொருட்களும் இருக்குது.  

என்னுடைய பிள்ளைகள் லண்டனில் படித்துப் பட்டம் பெற்றார்கள். ஆனால் திருமணம் என்பதில் நாட்டம் கொள்ளாது இருந்துவிட்டார்கள். இப்ப துயர உணர்வில் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். திருமணத்தை விரும்பாது சுதந்திரமாக வாழவேண்டும்  என்று தனிமையில் வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களில் மோகங்கொண்டு கல்யாணம் செய்தவர்களும் உண்டு. சிலர் சிறப்பாக இருக்கிறார்கள். சிலரின் வாழ்க்கை இடையில் முறிந்தும், சீர்கெட்டுப்போயும்; இருக்குது. நவீன உலகில் திருமண வாழ்வும் புதுப்புது உருவம் பெற்றுக்கொண்டுதான் வருகின்றது. என்ன இருந்தாலும் என்ர பிள்ளைகள் தனித்து வாழ்வது என் சிந்தனையை எந்த நேரமும் அரித்துக்கொண்டுதான்; இருக்குது’ என்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்ரி எப்போதும் தான் படிக்க வந்த பெருமையையும்;, தனது பிள்ளைகளின் கவலையையும் கூறிக்;கொண்டே இருப்பார்.

ஷாலினியுடன் அன்ரியின்; ஆதங்கத்தைக் கதைத்துக் கொண்டிருந்தேன். திருமணங்கள் பற்றித் திரும்பியது பேச்சு.

இலங்கையில் பெற்றோர் விருப்பத்தின்படி திருமணம் முடித்து வந்தவள் ஷாலினி. லண்டனில் பிறந்து வளர்ந்தவர்தான் மாப்பிள்ளை. தற்போது ஷாலினி லண்டனில் தனியார் வைத்தியசாலையில் தாதியாக வேலை பார்க்கிறாள். பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டும் இருக்கின்றாள் ஷாலினி.

Last Updated on Friday, 17 March 2017 00:10 Read more...
 

குறுநாவல்: சலோ,சலோ! 3

E-mail Print PDF

குறுநாவல்: சலோ,சலோ! (1)"சும்மா,நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதியது.நீளத் தொடர்".    - கடல்புத்திரன்)

அத்தியாயம் 3

வடக்கராலியில், இதைப் போல நாலு ஐந்து குறிச்சிகள் இருக்கின்றன. செட்டியார்மடம், மையிலியப்புலம், பள்ளிக்கூடத்தடி, சந்தையடி. இங்கே மட்டும்  தான் 'பைப்புகள் இருக்கின்றன‌.மற்றையவற்றில் இல்லை. சிலவேளை, சந்திரா இருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற‌...வயல்ப் பக்கமிருந்த குடவைக் கிணற்றுக்கு நகுலன் சைக்கிளிலே போய் குடத்திலே நீர் பிடித்து வாரவன்.அது தூரம்.இரண்டொரு வீட்டிலே இடைப்பட்ட தர நிலையில் கிணற்று நீர் பரவாய்யில்லையாகவும் இருந்தன.அங்கே இருந்தும் எடுத்துக் கொண்டார்கள்.நகுலன் வீட்டிற்குப் பின் வீட்டிலும் பரவாய்யில்லையான நீர்.அங்கே இருந்தும் சிலவேளை எடுத்தார்கள்.

நகுலன் வீட்டு கிணற்று நீரை பாத்திரங்கள்,கழுவ..மற்றைய தேவைகளிற்கு.. மாத்திரமே .பாவித்தார்கள்.சமைக்க குடிக்கவெல்லாம் மற்றைய நீர் தான்.

"எங்க வீட்டுத்  தண்ணீர் பாசி மணம்..!"என்றான்.

"பரவாய்யில்லை"என அவன் வீட்டிலேயே தண்ணீர் எடுக்க வந்தார்கள். ஆபத்திற்கு தோசமில்லை என்றாலும் பாசி மணம் போய் விடாது. 'சரி அப்ப வாருங்கள்"என கூட்டிச் சென்று துலாகிணறி லிருந்து  நீர் அள்ளி விட்டான்.இரண்டு குடத்தில் பிடித்துச் சென்றார்கள்.

விடியிறப் பொழுதிலே, பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் வந்து விட்டார்கள் யாழ்ப்பாணத்தில் எல்லாப் பகுதிகளிலும் இத்தகையக் குழுக்கள் கட்டப்பட்டி ருக்கின்ற‌ன."என்ன வேண்டும்"என கேட்டவர்கள், சமைக்கிறதுக்கு  விறகு, தேயிலை, சீனி, அரிசி, மற்றும்  காய்கறிகள்...   சரக்குச் சாமான்கள் எல்லாவற்றையும் கொஞ்ச நேரத்திலேயே சூழவுள்ள வீடுகளிலிருந்து சேகரித்து வந்து "சமைத்துச் சாப்பிடுங்கள் "என கொடுத்தும் விட்டார்கள்.

Last Updated on Wednesday, 15 March 2017 23:56 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 226 : கலாப்ரியாவின் 'உருள் பெருந்தேர்' ஓடிய என் மனப்பாதையில் அது பதித்த தடங்கள்....

E-mail Print PDF

எழுத்தாளர் கலாப்ரியாஎழுத்தாளர்களின் பால்ய காலத்து அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களை, மொத்தத்தில் அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வமுண்டு. முக்கிய காரணம் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வெறும் அபுனவுகளாக  மட்டும் இருந்து விடாமல் இலக்கியச்சிறப்பு மிக்கதாக, கலைத்துவம் மிக்கதாகவும் இருக்கும். ஒளிவு, மறைவு இல்லாமல் அவர்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மை நெஞ்சினைத்தொடும்.

எழுத்தாளர்களின் அபுனைவுகளில் மட்டுமல்ல அவர்கள்தம் புனைவுகள் கூட சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக அப்புனைவுகள் இருந்து விடுவதுதான். புகழ் பெற்ற உலகப்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகள் அவர்கள் சிந்தனைகளின், வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருப்பதை அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அறிய முடிகின்றது.

மேலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் தெரிவிக்கும் புதுத்தகவல்கள் ஒரு காலகட்ட வரலாற்றுச்சின்னங்களாக விளங்கும். காலமாற்றத்தில் காணாமல் போனவற்றையெல்லாம் அவர்கள்தம் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிப்பின்பத்துடன் எம்மையும் எம் கடந்த காலத்துக்கே அழைத்துச்சென்று விடுகின்றன.

அண்மையில் என் நெஞ்சினைத்தொட்டதொரு எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவங்களினை வெளிப்படுத்தும் புத்தகமொன்றாக எழுத்தாளர் கலாப்ரியாவின் வாழ்வு அனுபவங்களின் தொகுப்பான '  ' என்னும் நூலினைக் குறிப்பிடலாம். இன்றுதான் டொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் அதனை இரவல் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை வாசித்த நூலில் வரும் அவர் வாழ்வில் வந்து போன மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் நெஞ்சினைத்தொட்டன என்று மட்டும் கூறிவிடமுடியாது. வாசித்த பின்னரும் நெஞ்சினை வாட்டும் வகையில் கலாப்ரியாவின் அனுபவங்கள் நெஞ்சினை உலுக்கு விட்டன என்றே கூற வேண்டும்.

Last Updated on Wednesday, 15 March 2017 23:43 Read more...
 

நூல் வெளியீடு: வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழா

E-mail Print PDF
நூல் வெளியீடு: வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழாவெலிகம ரிம்ஸா முஹம்மத்வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய 'எரிந்த சிறகுகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2017 மார்ச் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தமிழ்த் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறவிருக்கிறது. இலக்கியப் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை வகிக்கும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அஸ்ஸெய்யத் ஹனீப் மௌலானா அவர்களும், சிறப்பதிதிகளாக கொழும்புப் பல்கலைக்கழக உளவளத்துறை விரிவுரையாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். நௌபர், இப்ராஹீமிய்யா கல்லூரியின் பணிப்பாளர் அல்ஹாஜ் வை.எம். இப்ராஹிம், அல்ஹாஜ் எம். முஸ்லிம் ஸலாஹுதீன், அமேசன் கல்லூரி பணிப்பாளர் ஜனாப் இல்ஹாம் மரிக்கார், கொடகே புத்தக நிறுவனர் திரு, திருமதி சிரிசுமண கொடகே ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். அரூஸ் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வார்.
Last Updated on Wednesday, 15 March 2017 12:21 Read more...
 

பெண்ணியக் கதையாடல்கள்!

E-mail Print PDF

Last Updated on Wednesday, 15 March 2017 05:07
 

தீவகம் வே. இராசலிங்கம் கவிதைகள் இரண்டு!

E-mail Print PDF

1. கவிதை: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - - அழுது அழுது அழுதபின் அன்னை
விழுதெனக் கண்டனள் வேர்!

அன்றும் பிறந்தனன் அன்னை மடியிலே
இன்றும் பிறந்தேன் இயம்பு!

பொழுது புலரும் பொழுதினில் இன்றென்
எழுபதில் நுழைந்தேன் இனிது!

தேவரம் சொல்லித் திரவியம் சேர்த்தனள்
பாவரம் தந்தவென் தாய்!

மரபுங் கணமும் மழலைத் தமிழாள்
உரமுங் குளித்தேன் உலகு!

Last Updated on Tuesday, 07 March 2017 23:44 Read more...
 

INVITATION: International Women's Day concert - 9th March 2017 @ NGMA

E-mail Print PDF

INVITATION: International Women's Day concert - 9th March 2017 @ NGMA

Dear Friends, Delighted to invite you for my special concert “SHREE" to celebrate International Women’s Day at the NGMA on 9th March 2017 at 6:30 pm. Look forward to your presence at this event.

Regards
Dr. Vasumathi Badrinathan
m:   +91-9821074222 | e: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 07 March 2017 23:25
 

சர்வதேச மகளிர் தினக்கவிதை: நீர்ப்பூக்குழி

E-mail Print PDF

- நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக.. -

தொலைவிலெங்கோ
புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை
ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும்
மலைமுகடுகளிடையே அமைந்திருந்தது
அந்த ஆதி மனிதர்களின்
நதிப்புறத்துக் குச்சு வீடு

ஊற்று
ஓடையாகிப் பின்
நீர்த்தாரையாய் வீழ்ந்து
பெருகிப் பாய்ந்து
பரந்து விரிந்த பள்ளங்களில்
தரித்திராது ஓடும் ஆறு
கற்பாறைகளைத் தேய்த்துத் தேய்த்து
உண்டாக்கும் பூக்குழிகள்
நதியின் புராண தடங்களை
நினைவுறுத்தி வரலாறாக்கும்

Last Updated on Tuesday, 07 March 2017 23:03 Read more...
 

சிறுகதை: உருளைக்கிழங்குகளும் வெங்காயங்களும் வெட்டப்படாமலே கிடந்தன

E-mail Print PDF

சிறுகதை: அகதியும், சில நாய்களும்! - சுதாராஜ் -காலையில் விழித்தெழுந்ததும் கபினை விட்டு வெளியே வந்து சூரியன் எந்தப் பக்கத்தில் உதித்திருக்கிறான் என்று பார்த்தான். அவனுக்கு சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். ஊரிலென்றால் கிழக்குமுகம் பார்த்த வீடு. காலையில் முன் விறாந்தையில் நின்று பார்த்தால்.. காற்றிலசையும் தென்னோலைகளுக்கு ஊடாக பளிச் பளிச் என சூரியன் தோன்றிக்கொண்டு வருவான். அப்போதெல்லாம் அப்பா தலைக்கு மேலாக கையை உயர்த்தி சூரிய நமஸ்காரம் செய்யும்போது பார்க்க அவனுக்கு வேடிக்கையாயிருக்கும். இப்போது மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்கும் தனிமையில் அவனுக்கும் கடவுள் வணக்கமும் பிரார்த்தனையும் தேவைப்படுகிறது.

கப்பலுக்கு வேலைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. சிறீலங்காவில் யுத்த காலத்தில் வேலைகளேதுமின்றி கஷ்டமும் கடனும் பட்டு வாழ்ந்த வாழ்க்கை வேணாமென்று போயிருந்தது. அதையெல்லாம் நிவர்த்திக்கமுடியாதா என்ற நைப்பாசையிற்தான் கப்பலில் வேலைக்கு வந்து சேர்ந்தான். ஒரு வருடம் வேலை செய்துவிட்டு ஊரோடு போய்ச் சேர்ந்துவிடலாம் என்றுதான் ஓர் உத்தேசம் இருந்தது. வருடங்கள் கடந்துகொண்டிருக்கின்றன... அவனது கடன் பிரச்சினைகள் தீர்ந்தபாடுமில்லை... வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபாடுமில்லை.

கப்பற்தளத்தின் பின் பக்கமாக வந்து நின்று வானத்தைப் பார்த்தான். கப்பலில் பயணிக்கும்போது திசைகள் மாறிவிடுகிறது. முதல் நாள் பயணித்த திசை, காலையில் விழிக்கும்போது மாறியிருக்கும்.. கப்பல் வேறு ஒரு திசையில் போய்க்கொண்டிருக்கும். ஒரே திசையில் பயணித்தாலும் பாகைக் கணக்கிலேனும் பக்கங்கள் மாறிவிடும். கடலலைகளில் கப்பல் அசையும்போது சூரியனும் வானத்தில் ஏய்த்து விளையாடுவதுபோலிருக்கும்.  கருமேகங்களுக்குள்ளிருந்து சூரியன் வெளிப்படும்போது தோன்றும் ஒளிர்வு மனதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தும். கைகளை உயர்த்தி வணங்கும்போது அவனுக்குக் கண்கள் கலங்கியது. அது, அந்த சூரிய ஜோதியின் தாக்கத்தினாலும் மனைவி பிள்ளைகளை நினைத்த பிரிவாற்றாமையாலும் கிளர்ந்த ஓர் உணர்ச்சி வசமாயிருக்கலாம். அவன் மௌனமாகிப்போனான்.  அப்படியே கண்களை மூடி மனசு தியானித்தது. இது வழக்கமான சங்கதிதான். கப்பல் வாழ்வில் ஒவ்வொரு காலையும் கண் கலங்கலுடன்தான் புலர்கிறது.

Last Updated on Tuesday, 07 March 2017 22:51 Read more...
 

'மல்லிகை' சஞ்சிகையின் பொன்விழா தொடர்பாக....

E-mail Print PDF

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!எழுத்தாளர் டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'மல்லிகை' இதழுக்கு 2016ஆம் ஆண்டு ஐம்பதாவதாண்டு பூர்த்தியாகிவிட்டது. அது தொடர்பாக .மல்லிகை' சஞ்சிகையில் பங்களித்த எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பட்டியலொன்றினை தயாரிக்கும்பொருட்டு அப்படைப்பு பற்றிய விபரங்களை (படைப்பின் தலைப்பு, ஆசிரியர் பெயர், வெளியாகிய இதழ் போன்ற) 'மல்லிகை' சஞ்சிகை நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இது பற்றிய அறிவித்தலொன்றினையும் 'மல்லிகை' சஞ்சிகையினர் வெளியிட்டுள்ளார்கள். அவ்வறிவித்தலை நண்பர் எழுத்தாளர் மேமன்கவி அனுப்பி வைத்திருந்தார். அதனை இங்கு 'பதிவுகள்'வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.

நண்பர்களே! உங்களது படைப்புகள் 'மல்லிகை' சஞ்சிகையில் வெளியாகியிருந்தா;ல் அது பற்றிய விபரங்களை அனுப்பி வையுங்கள்.

Last Updated on Tuesday, 07 March 2017 00:02 Read more...
 

ஆய்வு: சித்தர் பாடல்களில் பழமொழிகள்

E-mail Print PDF

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்!அனுபவம் வாய்ந்தவர்களின் அனுபவ மொழிகளாக வெளிவருபவை பழமொழிகள் ஆகும். முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையின்வழி கிடைத்த அனுபவத்தின் வெளிப்பாடே பழமொழிகள் என்னும் அறிவுச்சுரங்கம் ஆகும். பழமொழிக்கு சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் உண்டு. இவை மக்கள் மனதிலே ஆழமாகப் பதிந்து நற்செயலைத் தூண்டச் செய்கின்றன. பழமொழிகள் அனைத்தும் பழமையான நம்பிக்கைகளையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் மனித உணர்வுகளையும் வெளிக்காட்டும் கருவியாகும். இத்தகு பழமொழிகள் சித்தர்களின் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. சித்தர்கள் தமிழ்சமூகத்தின் அறிவாளிகளாகக் கருதப்பட்டனர். இத்தகு அறிவாளிகளின் பாடல்களில் வெளிப்பட்டுள்ள பழமொழிகளை எடுத்துரைப்பதாகவே இக்கட்டுரை அமைகிறது.

பழமொழி
தினந்தோறும் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களின் திரட்டே பழமொழியாகும். இவை அனுபவத்தின் அடிப்படையில் வெளிவருவனவாகும். தமிழ்மொழியில் பழமொழியை முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், சொலவடை, சொலவாந்திரம், ஒவகதை போன்ற பல சொற்களில் குறிக்கப்படுகின்றன. பழமொழிகுறித்து,

“ நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றும்
குறித்த பொருளை முடித்தற்கு வருஉம்
ஏது நுதலிய முதுமொழி   ”
( தொல்.பொரு.செய். 166)

Last Updated on Monday, 06 March 2017 22:58 Read more...
 

'காலம்' வாழும் தமிழ் 2017!

E-mail Print PDF

Last Updated on Monday, 06 March 2017 00:39
 

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் பங்குனி மாத இலக்கியக் கலந்துரையாடல்: 'தமிழ் இதழியல்சார் முக்கிய முன்னெடுப்புகள்' - கனடியச் சூழலைமையப்படுத்திய அநுபவப்பதிவுகள்

E-mail Print PDF

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!'தமிழ் இதழியல்சார்  முக்கிய முன்னெடுப்புகள்' - கனடியச் சூழலைமையப்படுத்திய அநுபவப்பதிவுகள்

ஒருங்கிணைப்பு: பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

சிறப்புபேச்சாளர்கள் உரை:
''கலை இலக்கியத் தளங்களில் உலகுதழுவிய இயங்குநிலை'' -திரு.செல்வம் அருளானந்தம் (காலம்)
''சமூக - பண்பாட்டுச்  சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் எதிர்கொண்ட அநுபவங்கள்'' - திரு. பி.ஜெ.டிலிப்குமார்  (தாய்வீடு)

Last Updated on Saturday, 04 March 2017 07:37 Read more...
 

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் : மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா. கண்காட்சி - கருத்தரங்கு - பட்டிமன்றம் - மெல்லிசை, நடன அரங்கு - ஆவணப்படக்காட்சி.

E-mail Print PDF

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: அனைத்துலக பெண்கள் தின விழா 2017

அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெறவுள்ள  அனைத்துலகப் பெண்கள் தினவிழாவில்,  ( அண்மையில் மெல்பனில் மறைந்த ) இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவை முன்னாள் பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களைப்பற்றிய நினைவுரை இடம்பெறும். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வருடாந்தம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தினவிழா இம்முறை மெல்பனில் - பிரஸ்டன் நகர மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி ( 11-03-2017) சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரையில் நடைபெறும்.

இவ்விழாவை மெல்பனில் வதியும்  கலை, இலக்கியம், கல்வி சார்ந்த சமூகப்பணியாளர்கள் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பார்கள்.  திருமதி ஞானசக்தி நவரட்ணம் அவர்களின் தையல் நுண்கலை கைவினைக் கண்காட்சியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். இவ்விழாவில் இடம்பெறும் கருத்தரங்கில் மெல்பனில் வதியும் மூத்த இளம் தலைமுறையினர் பங்குபற்றும். திருமதி மங்களம் வாசன்  அவர்களின் தலைமையில் இடம்பெறும் கருத்தரங்கில், செல்வி மதுபாஷினி பாலசண்முகன் " பாரதியும் பெண்விடுதலையும் " என்ற தலைப்பிலும் செல்வி மோஷிகா பிரேமதாச  " மறைந்த எழுத்தாளர் அருண். விஜயராணியின் சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்" என்னும் தலைப்பிலும் உரையாற்றுவர்.

அண்மையில் மெல்பனில் மறைந்த இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச்சேவைப்பணிப்பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றிய நினைவுரையை வானொலி ஊடகவியலாளர் திரு. பொன். குமாரலிங்கம் நிகழ்த்துவார்.

Last Updated on Saturday, 04 March 2017 07:35 Read more...
 

என் கற்பனைப் பேரன் தமிழ்-காளையனுக்கு மடல்: (சனத்தொகைப் பிரச்சினைகள் போன்றவை பற்றி)

E-mail Print PDF

-பேராசிரியர் கோபன் மகாதேவா -என் அன்புக்குரிய பேரன் தமிழ்-காளையனே, வணக்கம்!  உன் அழகுத் தேவதைத் தங்கை  தேன்மொழியாள் சுகமா? உன் வீட்டில் பெரிசு சிறிசாகப் பதின் மூன்று நபர்கள் வாழ்வதாகவும், எனவே உனக்கு நிம்மதியாய் இருந்து படிக்கவும் நித்திரை கொள்ளவும்   முடியாது இருப்பதாகவும், ஆதலால் பெற்றோர், பன்றிகள் போல் கண்-மண் தெரியாமல் பிள்ளைகள் பெறுவதை அரசினர் தடைசெய்ய வேண்டும்!  என்றும் கோபித்து எழுதியிருந்தாய்.  எமது சமுதாய, வறுமை, அரசியல் பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலமான காரணி சனத்தொகைப் பிரச்சினையே என சரியாகவே உணர்ந்துள்ளாய்.  எனவே இக்கட்டுரை உனக்கே வரைந்தது.   நான் சொல்வதைக் கவனமாகக் கேள்.

பேரா!  எம் இவ்வுலகம் சூரியனிலிருந்து 457-கோடி வருடங்களின் முன் வெடித்துப் பிறந்தது என்றும், அதில் 77-கோடி ஆண்டுகளின் பின் சிற்றுயிர்கள் தோன்றி இருக்கலாம் என்றும், 200,000-150,000 ஆண்டுகளின் முன்னரே எம் மூதாதையர் ஆகிய, நிமிர்ந்து நடக்கும் மனிதரின் இனம் ஆபிரிக்காவின் குரங்குகளிலிருந்து இயற்கையால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்றும், தமது அணு-மரபு-வழி விஞ்ஞானப் பரிசோதனைகளால், இன்றைய சிம்பன்சிக் குரங்குக்கும் எம்மின மனிதருக்கும் இடையில் 98.4 வீதம் ஒப்புமை இருப்பதாகத் தாம் கண்டு பிடித்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆபிரிக்காவில் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்து தம்பாட்டில் விருத்தியடைய, மிச்சப் பகுதியினர் ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா முதலிய கண்டங்களுக்குக் கூட்டாக 125000 தொடக்கம் 60000 ஆண்டுகளின் முன் சென்று தாமும் தம் போக்கில் விருத்தி அடைந்தே இன்றைய மனிதஇனம் உருவாகியது என்றும், சமூகவரலாற்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Last Updated on Friday, 03 March 2017 00:28 Read more...
 

வாசிப்பும், யோசிப்பும் 225 : சாத்திரியின் 'ஆயுத எழுத்து'

E-mail Print PDF

சாத்திரியின் 'ஆயுத எழுத்துசாத்திரிஅண்மையில் சாத்திரியின் 'ஆயுத எழுத்து' வாசித்தேன் அவ்வாசிப்பு பற்றிய என் கருத்துகளே இப்பதிவு. சாத்திரியின் 'ஆயுத எழுத்து' நூலின் முக்கியம் அது கூறும் தகவல்களில்தானுள்ளது.தமிழினியின் அபுனைவான 'கூர்வாளின் நிழலில்' நூலின் ஞாபகம் சாத்திரியின் புனைவான 'ஆயுத எழுத்து' நாவலை வாசிக்கும்போது எழுந்தது. தமிழினியின் அபுனைவு சுயசரிதையாக, தான் சார்ந்திருந்த அமைப்பின் மீதான சுய விமர்சனமென்றால், 'ஆயுத்த எழுத்து' தான் அமைப்பிலிருந்த அனுபவங்களின் அடிப்படையில் தன்அனுபவங்களை, தான் அறிந்த விபரங்களைக்கூறும் புனைவாகும். புனைவென்பதால் இந்நாவல் கூறும் விடயங்கள் சம்பந்தமாக யாரும் கேள்வி எழுப்பினால், 'இது அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட நாவல்' என்று கேள்வி கேட்டு தப்பிப்பதற்கு நிறையவே சாத்தியமுண்டு. தமிழினியின் 'கூர்வாளின் நிழலில்' ஆவணச்சிறப்பு மிக்கதாக, கவித்துவ மொழியில் ஆங்காங்கே மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக, மானுட நேயம் மிக்கதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கும் அபுனைவுஎன்றால், சாத்திரியின் 'ஆயுத எழுத்து'ம் தவிர்க்கப்படக்கூடியதல்ல. ஆவணச்சிறப்பு மிக்க புனைவான 'ஆயுத எழுத்து' நாவலில் ஆங்காங்கே அங்கதச்சுவை மிக்கதாக, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அங்கதச்சுவையுடன் ஆரம்பத்தில் 'டெலி' ஜெகன் பற்றிய பகுதி அமைந்திருக்கின்றது. அவ்விதமான அங்கதச்சுவை மிக்கதாகவே முழு நாவலும் அமைந்திருந்தால் 'ஆயுத எழுத்து' அற்புதமான, இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் அமைந்திருக்குமென்பது என் தனிப்பட்ட கருத்து. உண்மையில் அங்கதச்சுவை மிக்கதாக 'டெலி' ஜெகன் பற்றிய பகுது இருப்பதால், நூலினை படித்து முடிந்தும் கூட, நூலில் கூறப்பட்ட முக்கியமான பல தகவல்களையும் விட 'டெலி' ஜெகனின் இயக்க நடவடிக்கைகள் பற்றிய விபரிப்புகளும், அவரது துயரகரமான முடிவும் நெஞ்சில் நிற்கவே செய்கின்றன. அவரது இயக்க நடவடிக்கைகளை ஆசிரியர் அங்கதச்சுவை மிக்கதாக விபரித்திருந்தாலும்,வாசிக்கும் ஒருவருக்கு ஜெகனின் தாய் மண் மீதான பற்றும், அதற்கான விடாப்பிடியான போராட்ட முன்னெடுப்புகளும் நெஞ்சில் படமென விரிகின்றன. அதுவே ஆசிரியரின் எழுத்துச்சிறப்பு. அதனால்தான் கூறுகின்றேன் சாத்திரி அந்த நடையிலேயே முழு நாவலையும் படைத்திருக்கலாமே என்று.
Last Updated on Thursday, 02 March 2017 23:15 Read more...
 

சிறுகதை: கட்டன்ஹாவும் மனைவியும் (அங்கோலா நாட்டுச் சிறுகதை)

E-mail Print PDF

- ராஉல் டேவிட் அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா - டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான டுங்காவில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.

அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.

1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937 இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.

இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.

Last Updated on Tuesday, 21 February 2017 00:02 Read more...
 

ஆய்வு: சங்ககால இலக்கியங்களில் அறிவியல் சார்ந்த பதிவுகள்

E-mail Print PDF

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க இலக்கியங்களில் மிகுந்த அறிவியல் சார்ந்த பதிவுகள் செறிந்துள்ளன. அவற்றை நாம் அறிவியற் கண்ணோடு பார்ப்பதில்லை. நம்மவர்கள்; இலக்கியப் பார்வையோடு நின்று விடுகின்றனர். இலக்கியங்களில் உள்ள அறிவியல்தான் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கும் உறுதுணையாகின்றன. இன்றைய மக்கள், தம் வாழ்வியல் மேம்படவும், வளம் பெறவும், நலமுறவும், வசதிகள் எய்தவும், உதவக் கூடியது அறிவியலாகும். விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், புவியியல், இயற்பியல், வேதியியல், வானியல், உயிரியல், பயிரியல், மண்ணியல் முதலான பலதுறைகளை உள்ளடக்கியதுதான் அறிவியல். இவ்வாறான அறிவியல் உருவாக, வளர, மலர உலகின் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இனி, தமிழர்களின் தொன்மை வாய்ந்த வானியல் அறிவு பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியத்திற் காண்போம்.

(1)      தொல்காப்பியம்

இடைச்சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற தமிழின் முதல் இலக்கண, இலக்கிய நூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) என்ற முதுபெரும் புலவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியர் உலகிலுள்ள உயிர்களின் வளர்ச்சி பற்றி ஆராய்ந்து, உயிர்களின் பாகுபாட்டை ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை வகைப்படுத்தி ஒரு சிறந்த விஞ்ஞானியை விஞ்சும் முறையில் நிரல்படுத்தி மரபியலில் கூறியுள்ள பாங்கினையும் காண்கின்றோம். மரபியல் என்பது பண்டுதொட்டு வழிவழியாக வரும் முறைமை, பழக்கவழக்கங்கள் பற்றிக் கூறுவதாகும். இன்னும், உலகிலுள்ள எல்லா உயிரினங்களையும் ஆறு வகைகளில் அடக்கிய சீர் பெருமைக்குரியது.
'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.' -  (பொருள். 571)

Last Updated on Monday, 20 February 2017 06:14 Read more...
 

இணையவெளியில் படித்தவை: கவிதை திறனாய்வு - ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

E-mail Print PDF

சத்யானந்தன்

உங்கள் இதழில் ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்தின் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:

கறுத்த கழுகின் இறகென இருள்
சிறகை அகல விரித்திருக்குமிரவில்
ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்
ரட்சகனின் மந்திரங்கள் விசிறி
கிராமத்தை உசுப்பும்

சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்
குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
முன் தள்ளிய வேட்டைப் பற்கள்
விடைத்து அகன்ற நாசியென
நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு
கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்
சனம் விழித்திருக்கும் அவ்விரவில்
பேரோலமெனப் பாயும்

Last Updated on Thursday, 02 February 2017 22:50 Read more...
 

குட்டிக் கதை: நடைமுறையும் , தத்துவமும்!

E-mail Print PDF

முல்லை அமுதன்'அப்பா!'

கூப்பிட்ட தொனி கோபமா அல்லது அப்பாவின் இயலாமை மீதான கழிவிரக்கமா?

மௌனமாக திரும்பினேன்.

விழிகளை அகலத்திறந்து அவளைப் பார்க்கையில்.. என் கேள்வியின் அர்த்தம் பார்வையில் தெரிந்திருக்கவேண்டும்.

சொன்னாள்.

'ஏனப்பா..உங்களைப் போல நானும் எழுத வேண்டும்..என்னை என் பாட்டில் விட்டுவிடுங்களேன்'

அதற்கு..?

அருகில் வந்து அமர்ந்தேன்.அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். சொல்லட்டுமே.

அவளின் குரல் வரட்டுமே.

எத்தனை நாள் பூட்டிவைத்திருக்கும் கேள்வியும் அது எனில் கேட்டுவிட்டுப்போகட்டுமே.

Last Updated on Wednesday, 25 January 2017 20:32 Read more...
 

சிறுகதை: மரத்துடன் மனங்கள்

E-mail Print PDF

-கே.எஸ்.சுதாகர்	இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது.

”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!”

“பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி”

இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது.

“பல்லவி மாத்திரம் இதிலை நிக்கலாம். மற்ற மூண்டு பேரும் எங்களோடை வாருங்கள்” சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்த பூதங்களில் நான்கு போயின.

கருணா மாத்திரம் பல்லவியுடன் நின்றான். சந்தித்த முதல்நாளே கருணாவின் கண் அவள்மீது பட்டுவிட்டது.

ஹந்தான மலைச்சாரலில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக்கற்றைகள் பல்லவியின் மீது படர முகம் ஜோராக ஜொலித்தது. சினிமாப்படங்களில் வருவது போல தென்றல் அவள் கேசங்களைச் சிலிர்க்க வைத்தது. பல்லவி குள்ள உருவம் என்றாலும் அழகுராணிதான். இரட்டைப்பின்னலை முன்னாலே தூக்கி வாகாக வீசியிருப்பாள். அதில் கருணாவின் மனம் ஏறி இருந்து ஊஞ்சல் ஆடும்.

“என்னைத் திருமணம் செய்வாயா?” நிஜத்தைப் பகிடியாகத் திரித்து கேள்வியாக்கித் தூது விட்டான் கருணா.

Last Updated on Tuesday, 01 November 2016 18:45 Read more...
 

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் கவனத்துக்கு...

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் கவனத்துக்கு...'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து  வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it - பதிவுகள் -

Last Updated on Friday, 14 October 2016 19:50
 

பார்வைக் குறைபாடுகளும், தீர்வுகளும்!

E-mail Print PDF

பார்வைக் குறைபாடுகளும் பரந்திடும் தீர்வுகளும்!சுரேஷ் அகணிவெளியே உள்ள ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பாகக் கண் உள்ளது. மனிதர்களின் கண்கள் முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. ஐம்புலன்களில் ஒன்றான பார்த்தலுக்கு உதவுவது கண். நமது உடலில் உள்ள கண்ணின் தொழிற்பாடு எவ்வாறுள்ளது என்பதையும், அதன் தொழிற்பாடு எவ்வாறாக ஒரு நிழற்படக் கருவியோடு ஒப்பீடு செய்யப்படுகின்றது என்பதையும் பற்றி எமது கல்வியில் விஞ்ஞானப் பாடங்கள் ஊடாகவும், இயற்பியல் போன்ற உயர்தரப் பாடங்கள் ஊடாகவும் படித்திருக்கின்றோம். ஒளியின் உதவியுடன் படம் பிடிக்கப்படும் பொருட்களின் உருவம் மனதில் பதிவுசெய்யப்பட்டு மூளையால் உணரப்படுகின்றது. கண்ணில் உள்ள பல பாகங்கள் இணைந்து இதனைச் சாத்தியமாக்குகின்றன. விம்பத்தை அல்லது பிம்பத்தை தேக்கி வைத்திருப்பது விழிப்படலம் (Comea) ஆகும். கண்ணில் உள்ள கண்மணிக்குள் ஒளிக்கதிர்கள் திசைமாற்றி கண்மணிக்குப்  பின்னால் உள்ள குவி ஆடியைச்  சென்றடைகின்றன. விழித்திரை அல்லது ஒளிமின்மாற்றி (Retina) எனப்படும் பாகம் தலைகீழ் உருவத்தைப் பதிக்கின்றது. பதிக்கப்படும் இந்த உருவம் மூளைக்குள் மின் விசைகளாகச் செலுத்தப்பட்டு விருத்தி செய்யப்படுகின்றது. கண் இமைகள் கண்களின் மேற்பரப்பில் வீசப்படும் காற்றின் திசையைத் திருப்பிப் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலன் உணர்வு தொடர்பான விடயங்களைத் தொழிற்படுத்தும் நரம்புத் தொகுதியின் பகுதிகளை இணைத்து உணர்வுத் தொகுதி (Sensory System) என்று அழைக்கப்படுகின்றது. பார்த்தல், கேட்டல், தொட்டுணர்தல், சுவைத்தல், முகர்தல் ஆகிய ஐம்புலன்களும் உணர்வுத்தொகுதியால் உணரப்படுகின்றன. கண்ணால் பார்க்கக் கூடியவற்றை உணரப்படக்கூடிய பகுதி ஏற்புப் புலம் (Receptive field) எனப்படும். கண்ணும் பார்வைக்குரிய புலன் உணர்வுத் தொகுதியின் முக்கியமான உறுப்பாகவே கருதப்படுகின்றது.

குருட்டுத்தன்மை (Blindness) என்பது உடல் அல்லது நரம்புப் பாதிப்பினால் ஏற்படும் பார்வை உணர்வுக் குறைவு ஆகும். வடிவங்களை, எழுத்துக்களை, பார்க்கக் கூடிய ஒளியை முற்றாக உணரமுடியாத நிலையாகக் குருட்டுத்தன்மை உள்ளது. மருத்துவரீதியாக ஒளியுணர்வுத்தன்மை (No light Perception) என்றும் சட்டரீதியாக சட்டக் குருட்டுத் தன்மை(Legal Blindness) என்றும் குருட்டுத்தன்மை விபரிக்கப்படுகின்றது. பார்வைக் கூர்மையின் அளவு 20/200 அல்லது 6/60 இனைவிடக் குறைவாக இருத்தலை குருட்டுத் தன்மையாகக் கொள்ளப்படுகின்றது. சாதாரண பார்வை கொண்ட ஒருவர் 200 அடி (60 மீற்றர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடியதை சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவர் 20 அடி (6 மீற்றர்) தூரத்தில் இருந்தே தெளிவாகப் பார்க்க முடியும் என்பதே இதன் விளக்கம் ஆகும். பார்வைப் புலம் (Visual Field) 180 பாகைக்குப் பதிலாக 20 பாகைக்குள் கொண்டிருக்கும் ஒருவரும் குருட்டுத் தன்மை உள்ள ஒரு மாற்றுத்திறனாளர் ஆகக் கருதப்படுகின்றார்.

Last Updated on Sunday, 09 October 2016 06:20 Read more...
 

பயணம்: 'சூரியனை நோக்கி ஒரு பயணம் 2

E-mail Print PDF

8ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்    July 25, 2016

- மீராபாரதி - தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது பெரும் குறையாக இருந்தது.

நமது பொதிகளை வைத்துவிட்டு வெளியில் கிளம்பினோம். முதல் வேளை தொலைபேசிக்கு சிம் காட் ஒன்று வாங்குவது. இரண்டாவது இரவு உணவிற்கு மரக்கறி சாப்பாடு சாப்பிடக் கூடிய கடை ஒன்றைத் தேடுவது. வெளியில் வந்தவுடனையே வாசிலில் நின்ற விற்பனையாளர்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள். தாம் மதீனா பார்க்க கூட்டிச் செல்வதாகவும் எங்கே போகவேண்டும் எனக் கேட்டு நமது பயணத்தை தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடமிருந்து மெதுவாக நழுவி நமக்கு கிடைத்த மதீனா வரைபடத்தின் உதவியுடன் நடந்தோம்.

போகும் வழியில் சிறிய உணவுவிடுதி. அதன் உணவு விபரங்களைப் பார்த்தோம். தான்ஜின் என்ற உணவில் பல வகைகளும் மற்றும் முட்டைப் பொறியலில் பல வகைகளும் இதைவிட மாமிச உணவு வகைகளுக்கான விபரங்களும் இருந்தன. Tripadvisorஆல் சிபார்சு செய்யப்பட்ட விளம்பரமும் ஒட்டப்பட்டிருந்தது. சரி வேறு உணவு விடுதிகளை கண்டு பிடிக்க முடியாவிட்டால் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவோம் என நினைத்துக் கொண்டு சென்றோம். ஒரு வீதியில் நிறைய சனம். கடைகள் திறந்து வீதி முழுக்க பலவிதமான வியாபாரிகள் தமது பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவிதமான சாப்பாடுகளும் திறந்து விற்பனைக்கு இருந்தன. எந்தவிதமான  உணவு பாதுகாப்பு விதிகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஈக்களும் மனிதர்களைப் போல உணவுப்பண்டங்களை சுற்றி குமிந்து இருந்தன. புதிதாக  வரும் ஐரோப்பியர்களுக்கு அதுவும் தற்சமயம்  ஸ்பெயினின் அழகிய நகரங்களான மலக்கா சிவிலி என்பவற்றிலிருந்து  வருபவர்களுக்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் எம்மைப் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படி இருக்காது என நினைக்கின்றோம். நாம் கனடாவில் வாழ்ந்தபோதும் இந்த இடம் நமது ஊருக்கு வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

Last Updated on Thursday, 18 August 2016 18:50 Read more...
 

உலகின் முதல் அணுஉலை இயக்கிய என்ரிகோ பெர்மி

E-mail Print PDF

அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்* பதிவுகள் இணைய இதழில் (ஜூன் 2002 இதழ் 30) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். -


அணுவைப் பிளந்தார்கள்!

1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ பெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான் கணைகளை ஏவி, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற, அந்த அணுப் பிளவுச் சம்பவம் அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதிய கதிர்வீச்சு உலோகமும் மற்றும் சிறிய துணுக்குகளும் தோன்றின! தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி விட்டதாகப் பெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக உருமாற்றம் [Transmutation] கொண்டது! ஆனால் சிறிய துகள்களை இரசாயன முறையில் பிரித்துக் கண்டு பிடிக்கத் தவறிவிட்டார்! அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப் பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது புரியவில்லை.

ஜெர்மன் வெளியீடு "பயன்படும் இரசாயனம்" [Applied Chemistry] இதழில் ஐடா & வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், பெர்மியின் பிழையான கருத்தை எடுத்துக் கூறி, "கன உலோகம் யுரேனியத்தை நியூட்ரான் தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது" என்று எழுதி யிருந்தார்கள். மெய்யான இவ்வரிய விளக்கத்தை, பெர்மி உள்படப் பலர் அன்று ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள்! சாதாரண ஆய்வகச் சாதனங்களால் எளிதாக அணுவைப் பிளக்க முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான் அணுவை உடைக்க முடியும், என்பது பெர்மியின் அசைக்க முடியாத கருத்து.  பெரும்பான்மையான பௌதிகவாதிகள் [Physicists] பெர்மியைப் பின்பற்றி, யுரேனியம் நியூட்ரானை விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞான மேதைகள் அணுவைப் பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தையே கொண்டிருந்தனர்.

Last Updated on Monday, 01 August 2016 01:32 Read more...
 

அணுப் பிணைவு சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி

E-mail Print PDF

அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்- * பதிவுகள் இணைய இதழில் (ஆகஸ்ட் 2002 இதழ் 32) வெளியான கட்டுரை. அன்று திஸ்கி எழுத்தில் வெளியான கட்டுரை, இன்று ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் எழுதி அன்று திஸ்கி எழுத்துருவில் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய அறிவியல் கட்டுரைகளும் ஒருங்குறி எழுத்துருவில் படிப்படியாக மீள்பிரசுரமாகும். -


சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத்தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth's Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்கு கிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்துதரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா?

1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது!

மின்சக்திப் பற்றாக் குறை உலக நாடுகளில் மெதுவாகத் தலை தூக்கி யிருக்கிறது! செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன! சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலி·போர்னியாவில் தலை விரித்தாடி வர்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர்! சென்ற நூற்றாண்டில் திரீமைல் தீவு, செர்நோபிள் அணுசக்தி நிலையங்களில் பெரும் விபத்து நேர்ந்து, கதிரியக்கத்தால் தீங்குகள் விளைந்து, புது அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவில் கட்டப் படாமல் நிறுத்தப்பட்டன.

Last Updated on Monday, 01 August 2016 01:09 Read more...
 

பயணம்: 'சூரியனை நோக்கி ஒரு பயணம் 1

E-mail Print PDF

18 நாட்கள்: மொரோக்கோ – மதினாக்களின் நாடு.  June 20, 2016

தொலைந்துபோக…

- மீராபாரதி - நமது பயணத்தில் சென்ற மூன்றாவது நாடு மொரோக்கோ. இந்த நாடு இரண்டு வகையில் எங்களுக்கு முக்கியமானது. முதலாவது ஆபிரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டிற்கு முதன் முதலாக செல்கின்றோம். இரண்டாவது இதுவே  நாம் செல்கின்ற முதல் முஸ்லிம் நாடுமாகும். இந்த நாட்டின் பழங்குடி மக்கள் பாபர் (Berber) என்ற மனிதர்கள். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இயற்கையுடன் வாழ்ந்த இந்த மக்களையும்  நாட்டையும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முதல் ரோமர்கள் ஆக்கிரமித்து ஆண்டார்கள். வரலாறு எழுதும் மேற்குலகினர் ரோமர்கள் பிற்காலங்களில் இந்த நாட்டை விட்டு விட்டுச் சென்றதாகவும் முஸ்லிம்கள் பின் ஆக்கிரமித்ததாகவும் எழுதுகின்றார்கள். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களோ பாபர்கள் கடவுளின் தூதர்களை எதிர்பார்த்திருந்தாகவும் முஸ்லிம்கள் வந்தபின் இஸ்லாமே தமது மதம் என உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறுதான் வரலாறு என்பது ஆதிக்கத்திலிருப்பவர்களின் வரலாறாகவே உள்ளது. ஆனால் வரலாறுகளை எழுதும் பெரும்பாலானவர்கள் இன்னுமொரு நாட்டை தமது நாட்டினிர் மதத்தினர் ஆக்கிரமித்து ஆண்டார்கள் என்ற உண்மையைக் கூறுவதுமில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. ஆரம்பகால பாபர்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்களின் வருகையை எப்படிப் பார்த்தார்கள் என ஒருவரும் கூறுவதில்லை. இதுவே வரலாறுகளின் தூரதிர்ஸ்டம். இப்பொழுதும் இவர்களில் பெரும்பாலானவர்கள் காடுகளிலும் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தே வாழ்கின்றனர்.

இந்த நாட்டை அரேபியர்கள் 9ம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தபின் முதல் மதீனா 10ம் நூற்றாண்டில் வெஸ்சில் (Fes/Fez) கட்ட ஆரம்பிக்கப்பட்டு 15ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது கட்டி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொரோக்கோவின் பல நகரங்களில் மதீனாக்கள் கட்டப்பட்டன. இன்று மொரோக்கோ பல மதீனாக்களைக் கொண்ட ஒரு நாடு. தான்ஜீர் (Tangier). செவ்செவ்வோன்(Chefchaouen). வெஸ் (Fez). மரகாஸ் (Marrakesh) மற்றும் பல நகரங்களிலும் பெரிய சிறிய மதீனாக்கள் உள்ளன. தொலைந்து போக விருப்பமானவர்களுக்கும்  தொலையாமல் இருப்பதற்கான சவாலை எதிர்கொள்பவர்களும் பயணிக்க வேண்டிய நகரங்கள் இவை. ஏனெனில் இந்த மதினாக்கள் திட்டமிட்டு கட்டப்பட்டவையல்ல. மதினாக்களின்  மத்தியில் கஸ்பா அல்லது ரியாட் ஒன்று முதன் முதலாக கட்டப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து தமது தேவைக்கும் விருப்பத்திற்கும் புதிதாக குடியேறியவர்கள் சிறிய கஸ்பாக்களையும் சிறிய பெரிய ரியாட்களையும் கட்டியுள்ளார்கள். வெளியிலிருந்து பார்க்கும் பொழுது சிறிய வீடுகளாக இருக்கும். ஆனால் உள்ளே சென்றால் அழகிய வேலைப்பாடுகளுடன் பெரிய நாற்சதுர வீடுகளாக இருக்கும். கஸ்பா என்பது ஒரு குடும்பத்திற்குரியது. நான்கு கோபுரங்களைக் கொண்ட நாற் சதுர வீட்டின் ஒவ்வொரு கோபுரத்திலும் ஒரு மனைவியார் என மொத்தமாக நான்கு மனைவிமார் வசிக்கலாம். ரீயாட் என்பது கொஞ்சம் பெரியதும் வசதியானதுமாகும். சிலவற்றில் நடுவில் நீந்திக் குளிப்பதற்கான வசதிகளும் பூந்தோட்டங்களும் உள்ளன.

Last Updated on Thursday, 18 August 2016 18:49 Read more...
 

மீள்பிரசுரம்: நாய் கற்பித்த பாடம்!

E-mail Print PDF

[ எமக்கு பிலோ இருதயநாத் அவர்களது பயணக்கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். கானுயிர் பயணங்கள் மற்றும் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடியாகக் கருதப்படுபவர். அவர் ஞாபகமாக 'எங்கள் புளக்' (engalblog.blogspot.com) வலைப்பதிவில் 1965இல் வெளியான மஞ்சரி இதழில் வெளியான 'நாய் கற்பித்த பாடம்' மீள்பிரசுரமாகியிருந்தது மகிழ்ச்சியினைத்தருகின்றது. அந்தக் கட்டுரையினை இங்கு மீள்பதிவு செய்கின்றோம் பதிவுகள் -.]


நாய் கற்பித்த பாடம் - பிலோ இருதயநாத்.பிலோ இருதயநாத்ஆபத்தில் உதவாத நண்பர்களிடம் நாயானாலும் ஆத்திரம் வராதா?

அன்று மைசூரிலிருந்து சென்று கூடலூரில் ஒரு நண்பரின் இல்லத்தில் தங்கினேன்.  மறுநாள் காலையில் சுல்தான்பத்திரி, தேவர்சோலை ஆகிய இடங்களுக்குச் சென்றேன்.  தேவர் சோலையில் என்னை நீண்ட நாட்களாக அழைத்துக் கொண்டிருந்த நண்பரான ரூப் சிங் என்பவருடைய இல்லத்தில் தங்கினேன்.  அவர் சிறந்த வேட்டைக்கார்.  அவரிடம் கன்றுக்குட்டியைப்போல ஒரு வேட்டை நாய் உண்டு.  வேட்டைக்கு ரூப் சிங் செல்லும்போதெல்லாம் அந்த நாயும் அவருடன் செல்லும்.

"இந்த நாயை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன்.ரூப் சிங் சொல்லலானார். "அது ஒரு பெரிய கதை.  இந்த நாயின் குடும்பத்தைச் சேர்ந்த முன்னூறு நாய்கள் என் நண்பருள் ஒருவரிடம் இருக்கின்றன.  அவர் ஒரு செல்வர்.  இந்த நாயை அவர்தான் எனக்குக் கொடுத்தார்.  அவர் நல்ல வேட்டைக் காரர்.  அது மட்டுமல்ல; நாய் வளர்ப்பிலும் அவருக்கு அளவு கடந்த ஆசை.  நாய்களைக் கவனிப்பதற்கு மட்டும் சுமார் இருபது ஆட்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.  இரவில் அந்தச் செல்வர் தமது பங்களாவில் எந்தக் கதவையும் மூடுவதே இல்லை. எந்த எந்தக் கதவுகளின் மூலம் அந்தச் செல்வரின் இல்லத்துக்குள்ளும், காம்பௌன்டுக்குள்ளும் அந்நியர் வர இயலுமோ, அந்தக் கதவு வாயிற்படிகளை எல்லாம் நாலு நாலு நாய்கள் காவல் புரியும்.   இரவு 7 மணிக்குத் தம் காவல் நாய்களைச் செல்வர் தடவிக் கொடுப்பார்.  பிறகே உறங்கச் செல்வார்.  செல்வர் தடவிக் கொடுத்த பிறகு, நாய் வளர்ப்பு வேலைக்காரனுங்கூட எந்த வழியாகவும் உள்ளே புக முடியாது.

Last Updated on Wednesday, 29 June 2016 20:01 Read more...
 

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு'

E-mail Print PDF

மந்திரிமனையின் உட்தோற்றமொன்று..நல்லூர் ராஜதானி நகர அமைப்புஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

Last Updated on Friday, 08 July 2016 18:47 Read more...
 

நினைவுகளின் தடத்தில் (6 & 7)!

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -- அண்மையில் மறைந்த கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நினைவுகளின் தடத்தில் (6)!'

சந்தோஷம் யாருக்கு என்ன காரணங்களால் கிடைக்கிறது என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விடமுடிகிறதில்லை. நேற்று ஒரு ·ப்ரென்சு படம் பார்த்தேன். தான் செய்யாத, ஆனால் தான் இருக்க நடந்து விட்ட ஒரு குற்றத்திற்காக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு தாய் என்னேரமும் வெறிச்சிட்ட முகமாகவே காணப்பட்டாலும் ஒரு சில கணங்களில் அவள் முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடிகிறது. அவள் வசமாக கை ரேகை சாட்சியத்தோடு சிறையில் அகப்பட்டுக் கிடக்கிறாள். அவள் குற்றமற்றவள் என்று தன்னைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டாலும், அவளுக்கு விடுதலை என்பதே சாத்தியமில்லை. இருப்பினும் அவள் முகம் மலரும் கணங்களும் அவளுக்குக் கிடைத்துவிடுகின்றன. நாம் எல்லோரும் அறிந்த ஒரு அரசியல் தலைவருக்கு எத்தனையோ ஆயிரம் கோடிகள் சொத்து குவிந்து கொண்டே இருக்கிறது. இன்னமும் பணம் எல்லா வழிகளிலும் சொத்து சேர்த்துக்கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும், அவரைக் கவலைகள் அரித்துக்கொண்டே இருக்கின்றன. அங்கங்கள் ஒவ்வொன்றாக செயல் இழந்து வருகின்றன. திட்டமிடும் மூளையைத் தவிர. காலையில் இரண்டோ மூன்றோ இட்டிலிக்கு மேல் அவரால் சாப்பிட முடிவதில்லை. மான் கறியும் முயல்கறியும் ஆரவாரத்தோடு சாப்பிட்டவர் தான். இருப்பினும், அலுப்பில்லாமல், வெறும் சொத்து சேர்த்துக் கொண்டே போவதில் அவருக்கு சந்தோஷம் கிடைத்து விடுகிறது.

என்னைக் குழந்தைப் பருவத்திலிருந்து 14 வயது வரை வளர்த்துப் படிக்க வைத்த மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். அந்த வறுமை இப்போது நினைக்கக் கூட பயங்கரமானது. அவருடைய சம்பாத்தியமான 25 ரூபாய் 4 அணா வில் வீட்டு வாடகை ஆறு ரூபாய் போக மீத பணத்தில், நாங்கள் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை எப்படி சமாளித்தார் என்பதல்ல விஷயம், சமாளிக்க முடிந்ததில்லை. ஆனாலும் அவர் என் அப்பாவுக்கு, "என்னால் முடியவில்லை, பையனை அனுப்புகிறேன்" என்று ஒரு கார்டு போட்டவரில்லை. என்னைப் பார்த்து அலுத்துக் கொண்டவரில்லை. யாரும் எந்த சமயத்திலும் அந்த வீட்டில், நான் ஒரு உபரி ஜீவன் என்று நினைத்ததில்லை; உணர்ந்ததில்லை முதலில்.

Last Updated on Saturday, 14 May 2016 19:43 Read more...
 

நகைச்சுவையும் உளவியல் சிக்கல்களும்

E-mail Print PDF

அகஸ்ரி ஜோகரட்னம் (சிம்பா), - எழுத்தாளர் நவஜோதி ஜோகரட்னம் அவர்களின் மகன் அகஸ்ரி ஜோகரட்னத்தின் ஆங்கிலக்கட்டுரையின் தமிழ் வடிவம். அகஸ்ரி ஜோகரட்னம் இலண்டன் வோறிக் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மேற்கொண்டு வருகின்றார். அவரது இக்கட்டுரை பல்கலைக்கழகப் பத்திரிகையில் பிரசுரமானதும் குறிப்பிடத்தக்கது. - பதிவுகள் -.


நவீன உலகில் உளவியல் கோளாறுகள் என்பன கண்ணுக்குத் தெரியாத நோய்க்கூறுகள் ஆகும். இந்த உளவியல் கோளாறுகளின் முக்கியமே இவற்றை நாம் தொட்டு, பார்த்து அறிந்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பதாகும். அது மட்டுமல்ல அவை எமது நாளாந்த அசைவியக்கத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், நாங்கள் எவ்வாறு பேசுகிறோம், எவ்வாறு நடக்கின்றோம், எவ்வாறு செயலாற்றுகின்றோம், எவ்வாறு அன்பு செலுத்துகின்றோம் என்பனவற்றிலெல்லாம் பாதிப்பு செலுத்தக்கூடியனவாக உள்ளன. அத்தோடு நகைச்சுவையை நாம் எவ்வாறு ரசிக்கின்றோம், ஹாஷ்யமான நிகழ்ச்சிகள் குறித்து நாம் எவ்வாறு சிந்திக்கின்றோம், நகைச்சுவையை நாம் எவ்வாறு எதிர்கொள்கின்றோம் என்பனவற்றையும்கூட இவை பாதிக்கின்றன.

என்னைச் சிரிப்பிலாழ்த்தும் பிரபல்யமான நகைச்சுவை ஆளுமைகள் ஏன் தொடர்ச்சியான உளவியல் கோளாறுகளுக்கு உட்படுகிறார்கள் என்பதுபற்றி நான் நீண்டகாலமாக வியப்புற்று வந்திருக்கிறேன். நகைச்சுவைக்கும், உளவியல் சிக்கல்களுக்குமிடையில் உள்ள தொடர்புகள் குறித்து நிறையவே பேசப்பட்டுள்ளது.

உண்மையில் உளவியல் கோளாறுகளுக்கு உட்பட்டவர்கள் தங்களின் உள்மனதில் வியாபித்துக்கிடக்கின்ற இந்த ராட்சகர்களிடமிருந்தே தங்கள் நகைச்சுவைக்கான பெருந்தூண்டுதலைப் பெற்றிருக்கிறார்கள்.

உளவியல் சிக்கல்கல்களும்;, மன அழுத்தங்களை சீராக்கும் செயற்பாடுகளும் அடிப்படையில் நகைச்சுவையுடன் சேர்ந்தே செயற்படுவதைக் காணலாம். சிறந்த ஹாசிய நிகழ்ச்சியானது உணர்ச்சிகள் மற்றும் மன எழுச்சிகளுக்கு சாதமாகத் திகழ்கின்றன. நிலைமைகள் மோசமாகிப்போகின்ற கட்டங்களில் இவை உளவியல் ரீதியான அடிதாங்கியாக அமைகின்றன. பகிடிகள் விடுவதன் மூலம் நவீன உலகம் தங்களுடைய உணர்ச்சிகளை உற்சாகத்தோடு வைத்திருக்க உதவுகின்றது என்று மேக்றோ (McGraw) என்ற அறிஞர் கூறுகின்றார்.

Last Updated on Thursday, 05 May 2016 22:23 Read more...
 

வாழ்த்துச்செய்தி: எழுத்தாளர் ‘தமிழ்வேள்’ கமலாதேவி அரவிந்தன்

E-mail Print PDF

எழுத்தாளர் குரு அரவிந்தன்எழுத்தாளர் கமலாதேவியின் நேர்காணலைப் பதிவுகள் இணையத் தளத்தில் வாசிக்க முடிந்தது. சிறந்ததொரு எழுத்தாளரின் திறமைகளை புலம்பெயர்ந்த இலக்கிய உலகத்திற்கு அறியத் தந்ததையிட்டு எழுத்தாளரும் நண்பருமான அகில் அவர்களையும், இதைப் பலரும் அறியத்தந்த பதிவுகள் ஆசிரியர் நண்பர் வ.ந. கிரிதரன் அவர்களையும் இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். இதற்கெல்லாம் காரணமான சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் ‘தமிழவேள் விருது’ கிடைக்கப் பெற்ற எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தனுக்கு எனதும், எனது குடும்பத்தினரதும் இனிய பாராட்டுக்கள்.

பதிவுகள் இணையத்ததளத்தின் மூலம்தான் எனக்குச் சகோதரி கமலாதேவியின்  அறிமுகம் முதலில் கிடைத்தது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் எனது கனடிய 25 வருட இலக்கிய சேவையைப் பாராட்டிச் சென்ற வருடம் விழா எடுத்த போது சிறப்பான வாழ்த்துச் செய்தி ஒன்றைச் சகோதரி கமலாதேவி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். ‘கனடாத் தமிழர் இலக்கியம் - குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற ஆவண நூலில் சமகால எழுத்தாளர்களின் வாழ்த்துச் செய்தியுடன் இவரது வாழ்த்துச் செய்தியும் இடம் பெற்றிருக்கின்றது.

சிறுகதைகள், நாவல்கள், வானொலி தொலைக்காட்சி மேடை நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட திருமதி. கமலாதேவி அரவிந்தன் அவர்கள் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் எழுதும் ஆற்றல் கொண்டவர். தமிழ், மலையாளம், ஆங்கிலம், மலாய், எனப் பல மொழிகள் சரளமாகப் பேச, எழுதத் தெரிந்தவர். சங்க இலக்கியத்திலும் இவருக்கு ஈடபாடு அதிகம். இவரைப் பாராட்டி  எழுதுவதானால் நிறையவே எழுத முடியம். இச்சந்தர்ப்பத்தில் 'தமிழ்வேள் விருது' பெற்ற பண்பான எழுத்தாளரான கமலாதேவி அரவிந்தன் அவர்களைப் பாராட்டி, வாழ்த்துகின்றேன்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 27 April 2016 19:02
 

எதிர்வினை: 'வாசிப்பும், யோசிப்பும் 161 - நவகாலத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இணைய இதழ்கள்!' பற்றி..

E-mail Print PDF

கலாநிதி நா. சுப்பிரமணியன்அன்ப! தங்களது 12-03-2016 திகதியிட்ட வாசிப்பும்யோசிப்பும் பகுதியிலே, ‘அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது’ எனக்குறிப்பிட்டதோடு அவ்வாறான செயற்பாடுகளுக்குச்சான்றுகளாக  என்னுடையதும் மற்றும் நண்பர் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்களுடையதுமான ஆய்வுச்செயற்பாடுகளைச்சுட்டி, எம்மிருவருக்கும் கௌரவமளித்திருந்தீர்கள். அதற்காக முதற்கண் எனது மனநிறைவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

அத்தொடர்பிலே மேலும் ஒரு நன்றிக்கடப்பாட்டை உங்களுக்கும் நீங்கள் சுட்டியுள்ள   ஏனைய இணைய இதழ்ச்செயற்பாடாளர்களுக்கும்  தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் என்போன்ற ஆய்வளர்களுக்கும் உளது என்பதையும் இங்கு குறிப்பிட  விழைகிறேன். இது   இணைய இதழ்களின் ஆய்வுநிலைப் பயன்பாடு தொடர்பானதாகும். இத்தொடர்பிலான  சிறு விளக்கமொன்றை இங்கு முன்வைக்கவேண்டியது எனது கடமையாகிறது.. 

ஆய்வு அல்லது ஆராய்ச்சி எனப்படும் செயன்முறையானது  பல படிநிலைகளைக் கொண்டதுஎன்பதை அறிவீர்கள். அவ்வாறான படிநிலைகளைக் கல்வியாளர்கள்முக்கியமான மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

முதலாவது கட்டம் :ஆய்வுகளுக்கான தரவுகளைத் தேடித்திரட்டல்.
இரண்டாவது கட்டம்:திரட்டப்பட்டவற்றைத்தொகை வகைசெய்து விளக்கியுரைத்தல் மற்றும் விமர்சித்தல் .
மூன்றாவதுகட்டம்:குறித்த ஆய்வுப்பொருண்மை சார்ந்த புதிய எண்ணக்கருக்கள்,
புதிய கருதுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கி அவ்வாய்வுப்பரப்பைப் புதிய கட்டத்துக்கு வளர்த்துச்செல்லுதல் .

Last Updated on Saturday, 19 March 2016 18:29 Read more...
 

எதிர்வினை: ’கனடாவில் தமிழ் இலக்கியம் ...’ தொடர்பாக,,! 'இது ஒருவருடைய தனி முயற்சியில் நடைபெறக்கூடியதன்று; பலர் கூடி இழுக்கவேண்டிய தேர்!

E-mail Print PDF

கலாநிதி நா. சுப்பிரமணியன்அன்ப! அண்மையில் வெளிவந்த தமிழர் தகவல்  மலரில் நான் எழுதிய. 'கனடாவில் தமிழ் இலக்கியம்! வரலாறு மற்றும் வளர்ச்சிநிலைகள் தொடர்பான சில அவதானிப்புகள்' என்ற தலைப்பிலான  கட்டுரை  தொடர்பான தங்களது 22 மற்றும் 26 திகதியிட்ட  பதிவுகளை வாசித்தேன்.

எனது அக்கட்டுரை . ஆய்வுச்சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது எனவும் எதிர்காலத்தில் இத்துறை பற்றிய ஆய்வுகளுக்கு உசாத்துணையாக விளங்கக்கூடிய முக்கியத்துவமுடையது எனவும் மதிப்பிட்டிருந்தீர்கள்.  தங்களது அம்மதிப்பீடு எனக்கு  மன நிறைவைத்தருவதாக அமைந்தது என்பதை முதலில் நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அக்கட்டுரையிலுள்ள முக்கிய குறைபாடுகள் எனதாங்கள் கருதுவனவற்றையும்  நீங்கள்  எடுத்துக்காட்டியிருந்தீர்கள்.  விடுபட்டமுக்கிய தகவல்களையும்   பொறுப்புணர்வுடன் சுட்டியிருந்தீர்கள்.  அவ்வாறாக நீங்கள் கருதக்கூடிய குறைபாடுகள் மற்றும் விடுபாடுகள் என்பவற்றுக்கு  வேறு யாரும் பொறுப்பல்ல என்பதையும்  நான் மட்டுமே பொறுப்பாவேன் என்பதையும்  உங்களுக்கும் இவ்விணையதள வாசகர்களுக்கும் தெரிவிக்கவேண்டியது எனது உடனடியான கடமையாகிறது.

’ கனடாவில் எழும் தழிலக்கியமானது புலம்பெயர்  இலக்கியம் என்பதான பொது அடையாளத்திலிருந்து கனடியத்தமிழிலக்கியம் என்பதான தனி அடையாளத்தை நோக்கி மாற்றமெய்தத் தொடங்கியுள்ளது’  என்பதை உணர்த்தும் வகையில்  ஒரு கட்டுரை எழுதுவதே எனது பிரதான நோக்கம்.  அவ்வாறான வரலாற்றுப்போக்கினை   அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கான முக்கிய  அம்சங்களை  மையப்படுத்தியே  அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

Last Updated on Monday, 29 February 2016 00:14 Read more...
 

பதிவுகள் இணைய இதழுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு...

E-mail Print PDF

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் கவனத்துக்கு...'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் , அனுப்பிய ஓரிரு தினங்களிலேயே தம் படைப்புகள் ஏன் வெளிவரவில்லை என்று மின்னஞ்சல் அனுப்புகின்றார்கள்.

எமக்குப் படைப்புகளைப் பலர் அனுப்புகின்றார்கள் என்பதைக்கவனிக்கவும். சிலர் பாமினி எழுத்துருவில் அனுப்புகின்றார்கள். சிலர் ஒருங்குறி எழுத்துருவில் அனுப்பினாலும், அவற்றில் பல எழுத்துப்பிழைகளுடன் அனுப்புகின்றார்கள். அவர்கள் பாமினியில் எழுதி விட்டு, எழுத்துரு மாற்றி மூலம் ஒருங்குறிக்கு மாற்றி விட்டு, அவ்விதம்  மாற்றுகையில் ஏற்படும் எழுத்துப்பிழைகளைத்திருத்தாமலே அனுப்புகின்றார்கள் என்று நினைக்கின்றோம்.  இவ்விதமான தவறுகள் திருத்தப்பட வேண்டும்.

மேலும் கிடைக்கும் படைப்புகள் வாசிக்கப்பட்டு, பதிவுகள் இதழில் பிரசுரிப்பதற்கு உரியனவா என்பது முடிவு செய்யப்பட்ட பின்னரே அவை வெளியாகும் என்பதை அவர்கள் கவனத்துக்கெடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எமக்கும் கிடைக்கும் படைப்புகள் , பிரசுரத்துக்கு உரியனவாகத்தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பிரசுரமாகும். படைப்புகள் எப்பொழுது வெளியாகும் என்று விசாரித்து மீண்டும் மீண்டும் கடிதங்களை அனுப்பாதீர்கள் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

Last Updated on Friday, 26 February 2016 00:00
 

வாசகர் கடிதம்

E-mail Print PDF

வாசகர் கடிதங்கள் சில.Dear Mr. Giritharan,  Good day, We read your Pathivugal when ever we get time. You are publishing really valuable information and we spare time to read,even we are so busy in our regular job. Recently i read research articles of  Dr. C. Ravisankar., M.A. Phd, Professor of Madurai Kamarajar University, Madurai, India.  Really awesome researches. I felt along with my friends who are here in Kingdom of Bahrain that really you are doing great job for our great, ancient Tamil language. I wish you all the best your team and all the writers.  Keep rocking...

Your sincerely, Engineer.C.KARUPPIAH,
Al - Manama, Kingdom of Bahrain

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 26 October 2015 06:18 Read more...
 

'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் கவனத்துக்கு..

E-mail Print PDF

'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள் அனுப்புவோர் கவனத்துக்கு: 'பதிவுகள்' இணைய இதழுக்குப் படைப்புகள், கடிதங்கள் அனுப்புவோர் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it      அல்லது   This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

Last Updated on Monday, 02 November 2015 20:04
 

பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு..

E-mail Print PDF

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்! ("Sharing Knowledge With Every One")" - பதிவுகள்

பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு.. பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பினால் லதா (யூனிகோடு)  எழுத்தினை அல்லது ஏதாவதொரு tsc எழுத்தினைப் பாவித்து தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்ப முன்னர் எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரி பார்த்து அனுப்பி வையுங்கள். மேற்படி பிழைகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்களே பொறுப்பு. தற்போதைய சூழலில் 'பிரதியைச் சரிபாத்தல்' எமக்கு மிகவும் சிரமமானது. இருந்தாலும் முடிந்தவரை திருத்த முயல்வோம். முக்கியமான இலக்கணப் பிழையாக பன்மை எழுவாயும், ஒருமைப் பயனிலையும் கொண்டமைத்த வாக்கியங்களைக் கூறலாம். 'பாமினி' எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைப்பதைத் தவிர்க்க முனையுங்கள். 'பாமினி' எழுத்தில் வரும் படைப்புகள் பதிவுகளில் உடனடியாகப் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். அவற்றை tscற்கு மாற்றும் பொழுது பல எழுத்துகள் , 'இ', 'அ','ஆ', மற்றும் 'ஞ' போன்றன காணாமல் போய் விடுவதால் மீண்டும் அவ்வெழுத்துகளைத் தட்டச்சு செய்ய வேண்டிய மேலதிக வேலை எமக்கு ஏற்பட்டு விடுகிறது.  ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துக்கு மாற்றுகையில் தேவையற்ற எழுத்துகளை இடையிடையே தூவி விடுகின்றது. அவற்றை நீக்குவதென்பது மேலதிக வேலை. குறிப்பாகப் படைப்பானது மிகவும் நீண்டதாகவிருந்தால் தேவையற்ற சிரமத்தைத் தருகிறது.'பாமினி'யில் எழுத விரும்புவர்கள் அவற்றை ஏதாவதொரு  'உருமாற்றி' (Converter) மூலம் tscற்கு மாற்றி, அவற்றை மின்னஞ்சல் செய்தியாக அனுப்பி வையுங்கள். 'உருமாற்றிக'ளை பின்வரும் இணையத் தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்:
http://www.tamil.net/tscii/toolsold.html

Last Updated on Sunday, 08 September 2013 05:14 Read more...
 

பதிவுகளுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் கவனத்துக்கு....

E-mail Print PDF

பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும். பாமினி போன்ற எழுத்துருக்களைப் பாவித்து அனுப்பும் படைப்புகள் இனிமேல் .pdf கோப்பாகவே வெளியாகும். பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும்பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும்.   பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம் செலவாவதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம். பாமினி போன்ற எழுத்துகளைப் பாவித்து ஆக்கங்களை அனுப்புவோர், ஒருங்குறிக்கு அவற்றை மாற்றிவிட்டு அனுப்பினால் அவை ஒருங்குறியில் பிரசுரமாகும். பின்வரும் இணையத்தளத்தில் (கண்டுபிடி எழுத்துருமாற்றி)  இதற்கான வசதிகளுண்டு: http://kandupidi.com/converter/ இதுபோல் பல இணையத்தளங்களுள்ளன. அல்லது இலவசமாக எழுத்துருமாற்றி (Converters) மென்பொருள்கள் இணையத்தில்  பல இருக்கின்றன. அவற்றை உங்கள் கணினியில் பதிவிறக்கி, நிறுவிப் பாவிக்கலாம்.

Last Updated on Saturday, 29 March 2014 23:06
 

Novel: AN IMMIGRANT By V.N.Giritharan

E-mail Print PDF

Canadian Tamil Literature!

Novel: AN IMMIGRANT By V.N.Giritharan [Translation By Latha Ramakrishnan; Proofread & Edited By Thamayanthi Giritharan ]: - I have already written a novella ,  AMERICA, in Tamil, based on a Tamil refugee's life at the detention camp.  The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then,  adding some more short-stories, a short-story collection of mine was published under the  title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes   life at the detention camp, this novel ,AN IMMIGRANT  , describes the struggles  and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN  To read more

Last Updated on Monday, 11 February 2013 02:34
 

வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள் (பகுதி 1)!

E-mail Print PDF

- வ.ந.கிரிதரன் சிறுகதைகள் -[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது  சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான 'வைகறை' மற்றும் வெளிவரும் 'சுதந்திரன்', ஈழநாடு' ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. - ஆசிரியர், பதிவுகள்]

Last Updated on Sunday, 16 October 2011 23:15 Read more...
 

பதிவுகள் வாசகர்களுக்கு ...

E-mail Print PDF

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

பதிவுகள் வாசகர்களே! பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு இவ்விதழில் மாறியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதே சமயம் பதிவுகளின் வழமையான அம்சங்கள் பல இவ்விதழில் விடுபட்டுள்ளதையும் அவதானித்திருப்பீர்கள். பதிவுகளின் வழமையான அனைத்து அம்சங்களும், இதுவரை வெளியான ஆக்கங்கள் அனைத்தும் படிப்படியாக இப்புதிய வடிவமைப்பினுள் இணைத்துக்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றோம். அதுவரை சிறிது பொறுமை காக்க. வழமைபோல் உங்கள் ஆக்கங்களை நீங்கள் பதிவுகளுக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

ஆரம்ப காலத்து ''பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011)  இணைய இதழில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில், எழுத்துருவில் (திஸ்கி எழுத்துரு,  அஞ்சல் எழுத்துரு)  நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே: இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) : கடந்தவை

Last Updated on Monday, 02 November 2015 20:08
 


பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள் / அறிவித்தல்கள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் கடந்தவை (மார்ச் 2000 - மார்ச் 2011)
வெங்கட் சாமிநாதன் பக்கம்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
கட்டடக்கலை / நகர அமைப்பு / வரலாறு/ அகழாய்வு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றமும், நோக்கமும் பற்றி ..
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன் பக்கம்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
சுப்ரபாரதிமணியன் பக்கம்
சு.குணேஸ்வரன் பக்கம்
யமுனா ராஜேந்திரன் பக்கம்
நுணாவிலூர் கா. விசயரத்தினம் பக்கம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ஆர். தாரணி பக்கம்
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா பக்கம்
எழுத்தாளர் பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன் பக்கம்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
குரு அரவிந்தன் பக்கம்
சத்யானந்தன் பக்கம்

counter for tumblr

அண்மையில் வெளியானவை

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.
இலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.

'ஓவியா' பதிப்பக விபரங்கள்:
Oviya Pathippagam

17-16-5A, K.K.Nagar,
Batlagundua - 642 202
Tamil Nadu, India

Phone: 04543 - 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com

பதிவுகள் இதுவரையில் (2000 - 2011)

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

அ.ந.கந்தசாமி படைப்புகள்

புதிய பனுவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Wikileaks


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

ISSN  1481 - 2991
ஆசிரியர்: வ.ந.கிரிதரன் Editor-in - Chief: V.N.Giritharan

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"
'பதிவுகள்' இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.  'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளில் தேடுக!

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர்...

'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து  வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

கூகுளில் தேடுங்கள்

Custom Search

உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

Satyamev Jayate

Join Aamir Khan and STAR India on Satyamev Jayate – an emotional, challenging quest for hope – Sundays, at 11 AM

Center For Asia Studies

Fyodor Dostoevsky

Fyodor Dostoevsky (1821-1881) was a Russian novelist, journalist, short-story writer whose psychological penetration into the human soul had a profound influence on the 20th century novel. Read More

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

We develop CMS (Content Management Systems) websites for small businesses.

What is a CMS (Content Management Systems) web site? It is a type of web site which allows you to control and manage the content of your site without programming or HTML knowledge. Using CMS you can easily add or delete the content (images & text) in your website on the fly. We develop a higly professional CMS web site at a reasonable price. With your basic computer skills, you will be able to manage the content of your web site easily. Editing can be done with any normal web browser from anywhere in the world.  For your CMS website needs, Contact Nav Giri , an independent Web Infrastructure Consultant, at ngiri2704@rogers.com


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -