இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2010  இதழ் 126  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
திக்குவல்லை கமால் மணிவிழா

- எம்.கே.முருகானந்தன் -


திக்குவல்லை கமால்திக்குவல்லை கமாலின் மணிவிழா ஆண்டு இதுவாகும். அவரது மணிவிழா எதிர் வரும் சனிக்கிழமை 12.03.2010 சனிக்கிழமை ஞாயிறு அன்று உருத்திரா மாவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடை பெற இருக்கிறது. முற்போக்குக் கொள்கைகளுடன் தன்னை ஆரம்ப காலம் முதல் இணைத்துக் கொண்ட கமாலுக்கு மல்லிகையுடன் எப்பொழும் தனி உறவு உண்டு. கலை இலக்கிய நண்பர்கள் சார்பில் எடுக்கப்படும் இவ் விழாவிற்கு மல்லிகை ஆசிரியரும் முது பெரும் எழுத்தாளருமான டொமினிக் ஜீவா தலமை தாங்குவது மிகவும் பொருத்தமானது.  மல்லிகையில் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த திக்குவல்லை கமால் சிரித்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல், தினபதி, ராதா, ஞானம் எனத் தனது படைப்புவெளியை அகலித்துக் கொண்டார். இன்று இலங்கையில் அவரது படைப்பு வராத பத்திரிகையோ சஞ்சிகையோ இருக்காது என எண்ணத் தோன்றுகிறது. நிறைய எழுதினாலும் தனது படைப்பின் தரத்தில் சோர்வுக்கு இடம் தராதவர் கமால்.

நண்பர்களான கோகிலா மகேந்திரன், ச.முருகானந்தன் ஆகியோரின் மணிவிழா, தெளிவத்தை ஜோசப்பின் பொன் விழா, நீர்வை பொன்னையனின் 80வது ஆண்டு நிறைவு என இந்த ஆண்டு அமர்க்களப்படுகிறது. திக்குவல்லை கமாலின் எழுத்தை ஆரம்ப காலம் முதல் ரசித்துப் படிப்பவன் நான். முக்கியமாக அவரது படைப்புகளில் எப்பொழுதும் தவழும் தென்னிலங்கைத் தமிழின் அழகு எனக்கு எப்பொழுதுமே உவப்பானது. தமிழகத்தில் கரிசல் மண்ணின் தமிழுக்கு ராஜநாராயணன் எவ்வாறு இலக்கிய அந்தஸ்த்து கொடுத்தாரோ அவ்வாறே திக்குவல்லை பகுதி இஸ்லாமிய மக்களின் தமிழுக்கும், வாழ்வுக்கும் இலக்கிய அந்தஸ்த்து கொடுத்ததன் முன்னோடி கமால் எனலாம்.

எனக்கு அந்நியமான அல்லது மிகவும் வித்தியாசமாகப் பட்ட அந்த தென்னிலங்கை இஸ்லாமிய மக்களின் மொழியையும் வாழ்க்கை முறையையும் அவரின் படைப்புகள் மூலமே முதலில் அறியவும், புரிந்து ரசிக்கவும் முடிந்தது. அவரது இயற் பெயர் முஹம்மத் ஜெமால்தீன் முஹம்மத் கமால் ஆகும். மாத்தறைப் பகுதியைத் சேர்ந்த திக்குவல்லை என்ற கிராமத்தில் 1950ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி பிறந்தார். தனது கிராமத்தின் பெயரைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட புலோலியூர் சதாசிவம், தெளிவத்தை ஜோசப், நீர்வை பொன்னையன் போலவே இவரது எழுத்துலகப் பெயரும் இணைந்துள்ளது.

நான் மருத்துவ மாணவனாக இருந்த காலத்தில் என நினைக்கிறேன், அவர் எலிக் கூடு என்ற கவிதை நூலை வெளியிட்டிருந்தார். அதை தேடிப் பிடித்து வாங்கி 16 பக்களையே கொண்ட அந்த நூலை வரிவரியாக வாசித்து ரசித்தது நேற்றுப் போல இருக்கிறது. அதனை எனது நூலகத்திலும் கவனமானப் பேணியிருந்தேன். இன்றும் அது எனது பருத்தித்துறை வீட்டில் இருக்கும் என நம்புகிறேன்.

இன்றும் கமாலின்படைப்புகள் மீதான எனது ஈர்ப்புக் குறையவில்லை. சஞ்சிகைகளில் அவரது சிறுகதை அல்லது கட்டுரை வந்திருந்தால் நான் முதலில் படிப்பது அதுவாகத்தான் இருக்கும். இப்பொழுது மல்லிகையில் வெளிவரும் 'வாழும் நினைவுகள்' தொடரையும் ஆவலோடு படித்து வருகிறேன். இம் முறை அதில் இலக்கியப் போட்டிகள் பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் பெரும்பாலும் எனக்கும் உடன்பாடானவைதான்.

அதில் அவர் கருணையோகன் என்ற கவிஞர் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அது கிழக்கு பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் செ.யோகராசா என நம்புகிறேன்.

இவை யாவற்றிற்கும் மேலாக கமால் என்ற மனிதன் எனக்கு மிகவும் உவப்பானவர். சாந்தமான முகம், விரிந்தும் விரியாத மலர் போன்ற மென்முறுவல், மென்மையாக உயராத உரையாடல் என அவரது குணாதிசயங்கள் மனத்தை மகிழ்விக்கின்றன. முரண்பாடுகளைத் தவிர்த்து எப்பொழுதும் புரிந்துணர்வுடன் நட்பைப் பேணும் அவரது பண்பு என்னை எப்பொழுதும் கவர்ந்து வந்திருக்கிறது.

அவர் எழுதிய சிறுகதைகள் எத்தனை நுரல்கள் என்பதை நான் அறியேன். சிறுகதைகள் தவிர இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் வானொலி நாடகங்கள் மற்றும் சிறுவர் இலக்கியம் எனப் பல் துறையிலும் தனது படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதன் மூலம் அயல் மக்களின் வாழ்வை எங்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியையும் செய்து வருகிறார்

அவர் எழுதிய மற்றும் மொழிபெயர்த்த நூல்களின் எண்ணிக்கை 23 த் தாண்டிவிட்டதாக அறிகிறேன். இவற்றில் குறைந்தது நான்கு சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவையாகும். 8 சிறுகதைகள், கவிதை 1, சிறுவர் இலக்கியம் 3, நாவல்கள் 5, நாடகம் கட்டுரை நூல்கள் எனவும் மேலும் பல நூல்கள் உள்ளடங்கும். 'ஒளி பரவுகிறது' நாவலுக்காகவும், 'உதயபுரம்' சிறுவர் இலக்கியத்திற்காகவும் தேசிய சாஹித்திய விருதுகளை முறையே 1995லும் 2005 லும் பெற்றுள்ளார். இன்னும் பல கௌரவப் பரிசுகளையும் போட்டிப் பரிசுகளையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது நூல்களின் பட்டியலைக் காண னுiஉமறநடடநமயஅயட இணைய தளத்திற்கு செல்லுங்கள். அவர் பல்லாண்டு வாழ்ந்து இலக்கியப் பணிசெய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய நண்பர்கள் அவ் விழாவில் கலந்து சிறப்பித்து அவரை வாழ்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

திக்குவல்லை கமால் மணிவிழா:

திக்குவல்லை கமாலின் மணிவிழா ஆண்டு இதுவாகும். அவரது மணிவிழா எதிர் வரும் சனிக்கிழமை 12.03.2010 சனிக்கிழமை ஞாயிறு அன்று உருத்திரா மாவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் நடை பெற இருக்கிறது. முற்போக்குக் கொள்கைகளுடன் தன்னை ஆரம்ப காலம் முதல் இணைத்துக் கொண்ட கமாலுக்கு மல்லிகையுடன் எப்பொழும் தனி உறவு உண்டு. கலை இலக்கிய நண்பர்கள் சார்பில் எடுக்கப்படும் இவ் விழாவிற்கு மல்லிகை ஆசிரியரும் முது பெரும் எழுத்தாளருமான டொமினிக் ஜீவா தலமை தாங்குவது மிகவும் பொருத்தமானது

visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot.com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html


kathirmuruga@hotmail.com

திக்குவ்ல்லை கமாலின் சிறுகதை 'ஆயுள் தண்டனை' (நன்றி: ஆபிதீன் பக்கங்கள் வலைப்பதிவு): ....வாசிக்க


 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்