பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம்! |
கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை: புலவர்
குழுந்தை!
- பாரதிதேவராஜ் எம். ஏ (கோவை) -
 காவிரிக்கரையில்
அமைந்துள்ளது ஈரோடு மாநகரம். அதற்குத்தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டரில் இருப்பது
”ஓல வலசு“ என்னும் சிற்றூர். இச்சிற்றூரில் பிறந்தவர்தான் இராவண காவியம் படைத்த
”புலவர் குழுந்தை”. முத்துசாமிக்கவுண்டர் என்கிற பெருமகனாருக்கும் சின்னம்மை
என்னும் நற்றாய்க்கும் 1906ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல்நாளன்று தோன்றிய
குழந்தைக்கு குழந்தை என்றே பெயரிட்டுப்போற்றி வளர்த்தனர்
இவருடைய காலத்தில் இப்போதிருப்பது போன்று பள்ளிகள் கிடையாது. திண்ணைப் பள்ளி
என்றுதான் உண்டு. பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப்பயிற்சி
செய்வார்கள். அதுபோன்ற பள்ளியில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார்குழந்தை. ஆனால்
தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திற னைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு
பாடவல்லவர். இவரு டைய பொழுது போக்கே பாட்டெழுதுவதுதான்.
1934ல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற் ற புலவர்குழந்தை ஆசிரியராகத்
தம் வாழ்க்கையைத் தொடங்கி னார். 37 ஆண்டுகள் பணிபுரிந்தார் பவானி நகரில் உயர்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர் பொறுப்பிலும் இருந்துஓய்வுபெற்றார்.
1926 லேயே இவர் எழுதிய ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்க ரைத் தாலாட்டு, வெள்ளகோவில்
வீரகுமாரசாமி ரதஉற்சவச்சிந்து வீரகுமாரசாமி காவடிச்சிந்து வெள்ளகோவில்
வழிநடைச்சிந்து ஆகியவை அச்சாயின.
2
தந்தை பெரியாரின் மீது அளவுகடந்த பக்தியும் மரியாதையும் கொணடவர். 1948ம் ஆண்டு
சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை
அனைவரையும் கவர்ந்தது. பெரியார் அவர்கள் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை
எழுத அறிஞர்குழு ஒன்றி னை அமைத்தார் அதில் முக்கியமானவர் புலவர்குழந்தை.
பெரியார்கட்டளையை சிரமேற்கொண்டு இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும்
உரைஎழுதினார்.இந்த உரை யுடனே திருக்குறள் குழந்தையுரை என்ற நூல் வெளியிடப்பட்டது.
புலவர்குழந்தை முததம்மை என்னும் நங்கை நல்லாளைக் கரம் பிடித்தார். சமத்துவம் சமரசம்
என்னும் இருபெண்மகவுகளை பெற்றார்.
சமத்துவம் என்பவர் கோவையில் பெருமைமிகுவிவசாயக் கல்லூரியில் இள.அறி.(வேளா) பட்டம்
பெற்றார்.அந்தக் கல்லூரி யிலேயே பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.
சமரசம் என்பவர் இரண்டாவது பெண் பி.ஏ.பி.எல். படித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு
பவானியில் உள்ளார்.
குழந்தையவர்கள் எழுதிய இராவண காவியம் அறியாதவர் இருக்க இயலாது. இராவணனுக்கும்
தமிழர்களுக்கும் ஏற்றம் தந்த நூல் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்குநிகரான பாடல்களை இடம்
பெற செய்திருப்பது பெருமைக்குரியது. இந்த அரிய நூல் காங்கிரஸ் ஆட்சியில்
தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின்தடை நிக்கப்பட்டது.
3
பள்ளியாசிரியராய் இருந்த காலத்தில் மாணவர்கள் யாப்பருங்க லக்காரிகை கற்று
கவிபாடுவதில் உள்ள சிரமமறிந்து அதை முற்றிலும் எளிமையாக்கி யாப்பதிகாரம் என்ற நூலை
வெளியிட் டார் இதில் எளிய பயிற்சி மூலம் எவரும் கவிபாடும் ஆற்றலை பெற வழி செய்தார்.
அதைப்போலவே தொல்காப்பியத்தின் பொருள்திகாரம் முழுமைக்கும் எளிய உரை எழுதி
அனைவரையும் கற்கும்படி எளிதாக்கினார்.
பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இன்னூல் என்னும் இலக்கண
நூற்பா நூலை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து தொடையதிகாரம் என்ற நூலும் வெளிவந்தது.
கொங்குநாட்டின் மீது இஙகுவளர்ந்த தமிழ் புரவலர் மீதும் பற்றுகொண்ட குழந்தையவர்கள்
கொங்கு மண்டல சதகம் கூறும் வரலாறுகளைத் தொகுத்து கொங்குநாடும் தமிழும் கொங்
குகுலமணிகள் கொங்குநாடு ஆகிய வரலாற்று நூல்களையும் வெ ளியிட்டார்.
தொல்காப்பியர் காலத்தமிழர் வாழ்க்கைப் பண்புநலன் களை ஆராய்ந்து தொல்காப்பியர்
காலத்தமிழர் என்ற நூலையும் எழுதினார். இவர் எழுதி இதுவரை வெளிவந்த நூல்கள் மொத்தம்
முப்பத்திநான்கு அவற்றில் செய்யுள் வடிவில் 13, உரைநூல் வரி சையில் 3 இலக்கணப்
பாங்கில் 3 உரைநடை நூல் வகையில் 15 வெளிவந்துள்ளன.
செய்யுள் நூல்கள்- 1.இராவணகாவியம், 2 அரசியலரங்கம்,3 காமஞ்சரி 4 நெருஞசிப்பழம் 5
உலகப் பெரியோன் கென்னடி
6 திருநணா சிலேடை வெண்பா 7 புலவர்குழந்தைப் பாடல்கள்
8 கன்னியம்மன் சிந்து 9 ஆடி வேட்டை 10 நல்லதம்பி சர்க்க ரைத் தாலாட்டு, 11
வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரதஉற்ச வச்சிந்து 12வீரகுமாரசாமி காவடிச்சிந்து 13
வெள்ளகோவில் வழிநடைச்சிந்து
உரை நூல்கள்
1. திருக்குறள் குழந்தையுரை 2 தொல்காப்பியபொருள்திகாரம் குழந்தையுரை 3
நீதிக்களஞசியம்.
இலக்கணம்
1. யாப்பதிகாரம் 2 தொடையதிகாரம் 3 இன்னூல்
உரை நடை நூல்கள்
1. தொல்காப்பியர் காலத்தமிழர் 2 திருக்குறளும் பரிமேலழகரும் 3புவாமுல்லை 4
கொங்குநாடு 5 தமிழக வரலாறு 6 தமிழ்வாழ்க 7 தீரன் சின்னமலை 8 கொங்குநாடும் தமிழும் 9
கொங்குகுலம ணிகள் 10 அருந்தமிழ்விருந்து 11 அருந்தமிழ்அமிழ்து 12 சங்கத் தமிழ்ச்
செல்வம் 13 ஒன்றேகுலம் 14 அண்ணல் காந்தி 15 தமிழ் எழுத்து சீர்திருத்தம்
இவ்வளவு நூல்களையும் எழுதிய குழந்தையவர்கள் வேளாண் என்ற மாத இதழை1946 முதல் 1958வரை
நடத்தினார் இத்தகு பெருமை பெற்று புலவர்குழந்தை தமிழுக்காக தம்மை எழுத்தில்
ஈடுபடுத்தியது போலவே பேச்சிலும் வல்லவர்
இத்தகுபெருமை பெற்ற புலவர்குழந்தை 1975 ம் ஆண்டு அவரது உடல் நம்மிடமிருந்து
நீங்கினாலும் அவரது எழுத்துக் களால் இன்றும் நம்மிடையே அவர் உள்ளார்
bharathidvrjn59@gmail.com |
|
|
|
©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|