நோர்வேயில் நடைபெற்ற சிறுவர் நூல் வெளியீட்டு நிகழ்வு!காணொளி இணைப்பு

இன்று (ஜூன் 18, 2020) மதியம் 11 மணியளவில் பென்குயின் பயணம் சிறுவர்களுக்கான சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு தமிழர் வள ஆலோசனை மையத்தின் இரண்டாம் மாடியில் ஆரம்பமாகியது. வரவேற்புரை, மங்கள விளக்கேற்றல், அகவணக்கத்தினை தொடர்ந்து நூலுக்கான மதிப்பீட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டதை அடுத்து நூல்வெளியீடு இடம்பெற்றது நூலினை நூலின் படைப்பாளராகிய யோகராணி கணேசன் அவர்களின் தந்தையார் யோகராசா சிவகுரு வெளியீட்டு வைக்க முதல்ப் பிரதியை அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகம் சார்பில் செ.நிர்மலன் பெற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பாடசாலை நிர்வாகிகள் ஆசிரியர்கள் பார்வையாளர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டனர் தொடர்ந்து படைப்பாளிகளுக்கு அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தால் மதிப்பளிப்பு நடாத்தப்பட்டதை தொடர்ந்து படைப்பாளி யோகராணி கணேசன் அவர்களின் ஏற்பரையோடு நூல்வெளியீட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

இதேவேளை அருகிவரும் சிறுவர் இலக்கியத்திற்கு உயிர் ஊட்டிய தாய்கும் குறிப்பாக  நோர்வேயில் பிறந்து அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் தமிழ் கற்று படைப்பாளிகளாக மிளிர்ந்துள்ள மகள்களுக்கும் தமிழ்முரசம் வானொலி மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

நிகழ்வுக்கான காணொளி: https://news.tamilmurasam.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/

Ganesan Sellappah <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>