தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்: 8/5/18 அன்று இரு கவிதை நூல்கள் வெளியீடு :

Thursday, 23 August 2018 07:05 - வசுப்ரபாரதிமணியன் - சுப்ரபாரதிமணியன் பக்கம்
Print

- சுப்ரபாரதிமணியன் -தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்:  8/5/18 அன்று இரு கவிதை நூல்கள் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின்  மொழிபெயர்ப்பில் ஒடியக்கவிதைகள்  ” அகதி முகாமில்  ஓர் இரவு  ”,  ஜே. மஞ்சுளா தேவியின் “ நிலாத் தெரியாத அடர் வானம்”

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * ஆகஸ்ட் மாதக்கூட்டம் 5/8/18.ஞாயிறு மாலை.5 மணி.. , பி.எஸ் சுந்தரம் வீதி, (மில் தொழிலாளர் சங்கம்.),  , திருப்பூரில் நடைபெற்றது. .* சுப்ரபாரதிமணியனின்  மொழிபெயர்ப்பில் ஒடியக்கவிதைகள்  ” அகதி முகாமில்  ஓர் இரவு  ” என்ற நூலை டாக்டர் .( முனைவர்) மஞ்சுளாதேவி வெளியிட்டார்.. கருணாநிதி, ஓவியர் கிருஷ்ணசாமி, செம்பருத்தி விஸ்வாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் .  *  ஜே. மஞ்சுளா தேவியின் “ நிலாத் தெரியாத அடர் வானம்” நூலை மனோகரன்( வங்கி ஊழியர் சங்கத்தலைவர் ) வெளியிட சசிகலா பெற்றுக்கொண்டார்.

கவிஞர் மஞ்சுளாதேவி உரை.பெண் கவிதை உலகமும் ஆண்மையமும் என்றத் தலைப்பில் பேசினார். டாக்டர் .( முனைவர்) மஞ்சுளாதேவி  உரையில்..... பெண் கவிதை உலகம் இன்று சமையலறையைத் தாண்டிச் சென்று விட்டது.  மிக சாதாரனமாக‌ வசீகரிக்கும் ஒன்றைகூட ஆண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பெண்களின் ரசனை அமைதியானது என்றால் ஆண்களின் ரசனையோ ஆழமானதாக இருக்கிறது…. பெண்ணும் ஆணின் ரசனையாலேதான் அழகாக்கப்படுவதாக கருதுகிறேன். நம்மைவிட நமக்கு எது பொருத்தமாக இருக்கிற‌து என்பதில் இவர்களின் தேர்வு மிக அழகானதாக உணர்கிறேன். ஆனால் இன்றைய சமூக வாழ்வில் பெண்களின் பிரசினைகள் மையமாகக் கொண்டு பெண்கள் நிறைய எழுதுகிற பொற்காலமாக இருக்கிறது

* தோழர் ஜீவாவும் கலை இலக்கியப் பெருமன்றமும்”  என்றத் தலைப்பில் எம். இரவி ( மாவட்டச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ) சொற்பொழிவாற்றினார். .

* நூல்கள் அறிமுகம் .: ஜோதி -ஹைதராபாத் எழுத்தாளர்கள் சாந்தாதத், இளையவன், முஸ்தபா, சாரதா, ராமதிலகம், ராஜி ரகுநாதன், கிருஷ்ணமூர்த்தி, ராஜு ஆகியோரின் நூல்கள்

* குறும்படம் அறிமுகம் :  வழக்கறிஞர் ரவி  - வம்சியின் “  வலி  “

கனல், அருணாச்சலம், துருவன் பாலா, சாமக்கோடாங்கி ரவி , கிருஷ்ணசாமி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர் . பிஆர் நடராஜன் தொகுத்து வழங்கினார். சண்முகம் தலைமை வகித்தார். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்

செய்தி : . பிஆர் நடராஜன் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 23 August 2018 07:09