தமிழகம்: திருப்பூர் இலக்கிய விருதுகள் 2018, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.., திருப்பூர் மாவட்டம்

Thursday, 07 June 2018 01:11 - சுப்ரபாரதிமணியன் - சுப்ரபாரதிமணியன் பக்கம்
Print

- சுப்ரபாரதிமணியன் -மலையாள எழுத்தாளர்  வெள்ளியோடன் சிறப்புரையில்  " தமிழ்மொழி தொன்மையும் வனப்பும் மிக்கது. எங்கள் மலையாளம் சம்ஸ்கிருதக்கலப்பில் இருப்பது. தமிழின் தூய்மையும் , செம்மொழித்தன்மையும்  உலகளவில் போற்றப்படுவதாகும்..எங்களின் ஆதிகவிகளாக தமிழ்க்கவிஞர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கலில் , பல தொன்மையான மொழிகளின் அழிவில் நிலையில் உலகளவில் பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் இலக்கியத்தை  காக்கும் நெருக்கடியில்  உள்ளார்கள்.அதை உணர்ந்தும் உள்ளனர்.   என்கதைகள் தமிழில் வருவதும், நான் தமிழ்நாட்டில் இலக்கிய கூட்டங்களில் கல்ந்து கொள்வதும் தாய் வீட்டிற்கு வருவதைப்போன்ற அனுபவத்தை எப்போதும் அளிக்கிறது. தமிழிலிருந்து மலையாளத்திற்கும், மலையாளத்திலிருந்து தமிழுக்கும் ஏராளமான நவீன இலக்கியப்படைப்புகள் ழொழிபெயர்க்கப்படுவது ஆரோக்கியமாக உள்ளது. ” என்று ஞாயிறு அன்று Thiruppuur Literary awards 2018  திருப்பூர் இலக்கிய விருதுகள் 2018 விழாவில் விருது வழங்கலில்  விருதைப் பெற்றுக்கொண்டு பேசுகையில் குறிப் பிட்டார்.( இவர் துபாயில் வசித்து வரும் மலையாள எழுத்தாளர். அய்ந்து சிறுகதைத்தொகுப்புகள், 3 திரைப்படத் தொடர்களை எழுதியிருப்பவர்  )

கீழ்க்கண்ட தமிழ் எழுத்தாளர்களுக்கும் Thiruppuur Literary awards 2018  திருப்பூர் இலக்கிய விருதுகள் 2018  வழங்கப்பட்டன. விருது பெற்ற மதிப்பிற்குரியோர் : குட்டி ரேவதி ( சென்னை ), ரோஸ்லின் ( மதுரை), சாந்தாதத் ( ஹைதராபாத்) ,ராஜாசந்திரசேகர்(சென்னை),  அன்பாதவன் ( விழுப்புரம் ), ஜெயன் மைக்கேல் ( சென்னை),  மு.முருகேஷ் ( வந்தவாசி ), உஷாதீபன் (சென்னை),   ம.காமுத்துரை ( தேனி ), ஷக்தி ( திருத்துறைப்பூண் டி), மு. ஆனந்தன் ( கோவை )  ,முத்துக்குமாரசாமி ( சென்னை),  ஆர்.எம். சண்முகம் ( சென்னை),   சொக்கலிங்கனார் ( ஈரோடு ), யுகபாரதி  (பாண்டிச்சேரி ), பொன்குமார் ( சேலம் ), மீனாட்சிசுந்தரம் ( கோவை ) , மலையாள எழுத்தாளர்கள் வெள்ளியோடன், சாபி செருமாவிலயி.

3/6/18. ஞாயிறு  மாலை 4 மணி  (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் இந்த விழா நடைபெற்றது .,  தோழர் எம்.இரவி தலைமை வகித்தார், மொழிப்போர் தியாகி  பெரியசாமி ஜீவா நூலகத்திற்கு 350 நூல்களை வழங்கினார்.   சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார்,

விருதுபெறும் படைப்பாளிகள் அறிமுகம் செய்தனர் :  சுப்ரபாரதிமணியன், பிஆர் நடராஜன் , கா. ஜோதி, சி.இரவி, துருவன் பாலா

நூல்கள் வெளியீடு :
1.* சுப்ரபாரதிமணியன்- ” கோமணம் “ நாவலின் மலையாளப்பதிப்பை திரைப்பட இயக்குனர் இராஜா சந்திரசேகர் வெளியிட மலையாள எழுத்தாளர் வெள்ளியொடன் பெற்றுக்கொண்டார்
2. மு.சந்திரகுமாரின் நாவல்   ” வெப்பமற்ற வெள்ளொளியில்”பிரதியை  சாகித்ய அகாடமியின்  நிர்வாகக்குழு உறுப்பினர் புதுவை  சுந்தர முருகன் வெளியிட கோவை மீனாட்சி சுந்தரம் பெற்றுக்கொண்டார்
3.   து சோ பிரபாகரின் நாவல் ” மனக்குளம் “ திருமதி  லலிதா  சிவகாமி பெற்றுக்கொண்டார்

நூல்கள் அறிமுகம் : மார்க்ஸ் ஏங்கல்ஸ் தேர்வு நூல்கள் ( 20 தொகுப்புகள் ரூ 5000., என்சிபிஎச் வெளியீடு )  -வி. சிவராமன் நிகழ்த்தினார்

* இதழ் அறிமுகம் :  தாமரை, 2018 சிறப்பு மலர்

பிஆர் நடராசன் நிகழ்த்தினார்.மற்றும்...பாடல்க ள், சாமக்கோடாங்கி இரவி, துருவன் பாலா, ஜோதி கவிதைகள் வாசித்தனர்...கருத்துரைகள்... நிகழ்ந்தன .  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 220248 8

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 28 June 2018 06:09