கிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி
அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக  இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான  இலங்கை மாணவர் கல்வி நிதியம், அண்மையில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை – மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்கள் சிலருக்கு 2019 – 2020 ஆண்டிற்கான சில மாதங்களுக்குரிய நிதிக்கொடுப்பனவை வழங்கியது. இந்நிகழ்வு,  கல்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தில் ( தமிழ் பிரிவு)  கோட்டக்கல்வி அதிகாரி திரு. எஸ். சரவணமுத்து அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பெரிய நீலாவணை விஷ்ணு மகா  வித்தியாலய அதிபர் திரு. ந. கமலநாதனின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.
கிழக்கில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நீடித்த போரினால்  பாதிக்கப்பட்ட  ஏழைத்தமிழ்  மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம்,  1989 ஆம் ஆண்டு முதல்  உதவி வருகின்றது.

இந்நிதியத்தினால் பயனடைந்த மாணவர்கள் பலர் பல்கலைக்கழகம் வரையில் தங்கு தடையின்றி கற்று பட்டதாரிகளாகியிருப்பதுடன்,  சிறந்த தொழில் வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அண்மையில் கல்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிதிக்கொடுப்பனவு நிகழ்வில்  விஷ்ணு மகா வித்தியாலய துணை அதிபர் திருமதி  த. சந்திரசேகரம் மாணவர்களின் சீர்மீய ஆசிரியை ( Counselling Teacher) திருமதி சுபாஷினி கிருபாகரன் மற்றும் ஆசிரியர்கள், உதவி பெறும்  மாணவர்கள் மற்றும் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.