சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை!

Thursday, 14 November 2019 09:40 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் மானுடவியல் துறையில் முதுகலையில் படித்துக்கொண்டிருந்த கேரளாவைச்சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் அங்கு பணி புரியும் பேராசிரியர்கள் சிலரின் பாரபட்சம் மற்று துன்புறுத்தல்கள் காரணமாகத் தற்கொலை செய்துள்ள விபரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பாத்திமா தன் அலைபேசியில் தனது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர்கள் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார், பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன், மற்றும் இன்னுமொருவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.  இப்பேராசிரியர்களை நிச்சயம் சட்டம் தண்டிக்க வேண்டும். இதில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மாணவி பாத்திமாவின் பாடமொன்றுக்கு முதலில் குறைந்த புள்ளிகளை இட்டிருக்கின்றார். பின்னர் மாணவி மீளாய்வு செய்யக்கூறியதும் அதிகரித்துள்ளார்.  இம்மாணவியின் தற்கொலை பற்றிய இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்கட்டுரையில் இவ்விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சகல பாடங்களிலும் உயர் பெறுபேறுகளைப்பெற்று வந்துள்ள மாணவி பாத்திமா இவ்விதமானதொரு முடிவினைத் தேர்ந்தெடுக்கத் தூண்டிய சென்னை ஐஐடி கல்வி நிறுவனப்பேராசிரியர்களால் அந்நிறுவனத்திற்கே அவமானம்.

பாத்திமாவைப் போன்று வேறு மாணவர்கள் பலரும் சென்னை ஐஐடியில் கடந்தகாலங்களில் இவ்விதம் தற்கொலை செய்துள்ளார்கள் என்னும் விபரத்தையும் செய்தி ஊடகமொன்று வெளியிட்டிருந்தது. இது சென்னை ஐஐடி தன்னை மீளச்சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. ,சென்னை ஐஐடியில் நடவடிக்கைகளால் மன அழுத்தத்துக்குள்ளாகும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டியது அந்நிறுவனத்தின் கடமை. அதனை அவர்கள் உரிய முறையில் செய்யவில்லையென்பதையே மாணவி பாத்திமாவின் மரணம் வெளிப்படுத்தி நிற்கிறது.
சென்னை ஐஐடி நிறுவனம்
மாணவர்களும் இவ்விதம் வாழ்வை முடித்துக்கொள்வதைத் தவிர்த்து வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

- மாணவி பாத்திமா லத்தீப்பின் அலைபேசியிலிருந்து..-


இவரது மரணம் பற்றிய இந்தியா டைம்ஸ் கட்டுரை: https://www.indiatimes.com/news/india/iit-madras-student-s-family-demands-fair-probe-into-her-death-500385.html

Last Updated on Monday, 16 December 2019 01:06