'பதிவுகள்' இணைய இதழ் பற்றி இவர்கள்: நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்), எழுத்தாளர் சத்யானந்தன்!

Sunday, 14 August 2016 18:12 - நுணாவிலூர் கா. விசயரத்தினம் / சத்யானந்தன் - கணித்தமிழ்
Print

'பதிவுகள்' இணைய இதழ் பற்றிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் கருத்துகளை எதிர்பார்க்கின்ஏறோம். உங்கள் கருத்துகளை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it   என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். - பதிவுகள் -


பார் போற்றும் 'பதிவுகள்'     -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு.. கனடாவிலிருந்து வெளிவரும் நாள் இதழான 'பதிவுகள்' ஓர் இணையத் தளமாகும். இதன் ஆசிரியர் புகழ் வாய்ந்த திரு. வ. ந. கிரிதரன் ஆவார். அதில், உலக இலக்கியம், அரசியல், கவிதை, சிறுகதை, அறிவியல், சுற்றுச் சூழல் நிகழ்வுகள், கலை, நேர் காணல், அறிவித்தல்கள், இணையத்தள அறிமுகம், வரலாறு, அகழாய்வு, கட்டடக்கலை, நகர அமைப்பு, வாசகர் கடிதம், பதிவுகளின் நோக்கம், தோற்றம், கணித் தமிழ், நூல் அறிமுகம், பரத நாட்டிய நிகழ்வுகள் ஆகியன நாள் தோறும் பவனி வருகின்றன. இவ்வாறான பல அரிய துறைகளைத் தொட்டுச் செல்லும் பதிவுகள் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதென்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. பதிவுகளில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் மிக்க தரம் வாய்ந்தவை. அதில் வரும் பல ஆய்வுக் கட்டுரைகள் பட்டப்படிப்பு மாணவர்களாலும், பட்டதாரிகளினாலும் எழுதப்படுபவை. எல்லா ஆய்வுக் கட்டுரைகளையும் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிப்பது ஒரு சிறந்த நோக்காகும். இவை என்றும் என் மனதைக் கவர்ந்தவையாகும். தலையங்கம் யாவும் அறிவார்ந்தவை. செய்திகள் செறிவார்ந்தன. இலக்கியக் கட்டுரைகள் யாவும் சிந்தையைத் தொடுவன. மற்றவை மனதில் உறைவன. இவ்வாறானவற்றை மேலோட்டமாகப் படிக்க முடியாது. பதிவுகளுக்கு நாம் மணித்தியாலக் கணக்கில் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பதிவுகளுக்குத் தொடர்ந்து ஆக்கங்களை அனுப்பி வருவோரில் 15 பேருக்குமேல் தெரிவு செய்து அவர்களுக்கான பக்கங்களை ஒதுக்கி, அதில் அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிவாக்கம் செய்து வரும் முறை பாராட்டுக்குரியதாகும். இப் பக்கங்களைத் திறந்தால் அவர்களின் எல்லா ஆக்கங்களையும் பார்த்து மகிழலாம்.

பதிவில் பதிவாகும் ஆக்கங்கள் மூன்று மாதங்களாக உருண்டு பின்ஓடிக்கொண்டிருப்பது வாசகர்களுக்கு இக்காலப் பகுதியில் எந்த நேரத்திலும் அவற்றை வாசித்துப் பார்க்கக் கூடிய  வசதி மிக்க பலனைத் தருகின்றது. இன்னும், 'கூகுளில் தேடுங்கள்' என்ற அமைப்பு வாசகர்களின் தேடலுக்கு மிக்க உதவு கரம் கொடுத்து நிற்கின்றது.
ஒருங்குறி (Unicode) எழுத்து முறையில் ஆக்கங்களை மாற்றி அமைப்பதற்குரிய வழிமுறைகளைத் தந்துள்ளமை போற்றற்குரிய விடயமாகும். ஒருங்குறி எழுத்தில் ஆக்கங்கள் சிறப்புற்றிருப்பதையும் அவதானிக்கலாம். 'அண்மையில் வெளியானமை' என்ற தலைப்பில் உள்ள ஆக்கங்களும் பதிவுக்கு மேலும் மெருகூட்டி வருகின்றன.
பதிவுக்கு அனுப்பப்படும் ஆக்கங்கள் அனைத்தும் அதிற் பதிவேற்றம் செய்யப்படுமென்று நினைப்பது தவறாகும். தரம் அமையவேண்டின் ஆக்கங்கள் சிறந்த முறையில் வடிகட்டல் செய்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்தல் அவசியமாகும். இம்முறையை ஆசிரியர் கடுமையாகக் கடைப்பிடிக்கின்றார் என்பது தெளிந்த விடயமாகும். நான் இதில் பல தடவைகள் அகப்பட்டுள்ளேன். அதில் மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன்.

இவ்வண்ணமுள்ள தரமான பதிவுகளின் அமைப்புக்கு ஆசிரியரே முழுமுதற் பொறுப்பாகின்றார். பதிவுகள் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலம் எனலாம். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரக மந்திரமாக்கிப் பணியாற்றி வரும் ஆசிரியர் திரு. வ. ந. கிரிதரன் அவர்களை மேலும் பல்லாண்டுகள் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டி வாழ்த்துகிறேன். வணக்கம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


'பதிவுகள்' பற்றி  எழுத்தாளர் சத்யானந்தன்:

சத்யானந்தன்

பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு.. 'பதிவுகள்' இதழின் நோக்கம் மற்றும் அதில் வெளியாகும் படைப்புக்கள் பற்றி இதழில் ஆசிரியர் குறிப்பு இது:

கணித்தமிழைப் படைப்பாளிகள், வாசகர்கள் அனைவரும் பயன்படுத்தும் படி செய்தல். அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளல், படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்குமிடையிலொரு பாலமாக விளங்குதல் ஆகிவற்றை  அடிப்படை நோக்கங்களில் சில எனக். குறிப்பிடலாம்.

இதழில் கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், சினிமா, நூல் அறிமுகம், விவாதம், இணையத் தள அறிமுகம், நிகழ்வுகள், அரசியல் என அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கங்களைக் காணலாம்.

பதிவுகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகின்றது. நூல்களை, இணையத் தளங்களை அறிமுகம் செய்து வைக்கின்றது. இலவசமாக வரி விளம்பரங்களைப் பிரசுரித்து உதவுகின்றது.

இலக்கியப் படைப்புகள், இலக்கியவாதிகளின் பத்திகள், இலங்கை நிகழ்வுகள் மற்றும் இலங்கைத் தமிழர் எதிர்காலம் பற்றிய கட்டுரைகள் அரசியல் பகுதியாக, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், நேர்காணல்கள், நூல் மதிப்புரைகள் என இந்திய வாசகர் மற்றும் படைப்பாளிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களில் இலக்கிய ஆர்வலகர்கள் அனைவருக்கும் இடம் அளித்து ஒரு சமனுடன் செயற்படுவது பதிவுகளின் சிறப்பு. தொடர்ந்து இயங்குதல் கடுமையான உழைப்பையும் தீவிரமான தொடர்புப் பணியும் இதழியல் பணியுமானது. அதை சோர்வின்றி நிறைவேற்றி வரும் கிரிதரனின் பணி மிகவும் பாராட்டுக்குரியது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Sunday, 14 August 2016 18:24