*  மறைந்த இலக்கிய ஆளுமை கலைமகள் ஹிதயா ரிஸ்விக்கு இரங்கற் பா -


- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கலையும் அழுகிறது இலக்கியமும் அழுகிறது
கலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது
புலரும் பொழுதெல்லாம் புதுக்கவிதை தருவாயே
அழவிட்டுப் போனதெங்கே அழகுக் கலைமகளே   !

முப்பது ஆண்டுகளாய் நீவளர்த்தாய் தடாகத்தை
இப்போது நீர்வற்றி ஏங்கிறதே தடாகமது
எப்போது நீவருவாய் எனவெண்ணித் தடாகமது
இருப்புதனை தொலைத்துவிட்டு எண்ணியெண்ணி அழுகிறதே  !

இசுலாமியப் பெண்ணாக இருந்தாலும் சோதரிநீ
இன்பத்தமிழ் அணைத்து இங்கிதமாய் பணிபுரிந்தாய்
வீறுகொண்ட பெண்ணாக வெற்றிபல குவித்தாயே
மாறுபடா குணமுடையாய் மனமேங்கி அழுகிறதே  !

அரபுமொழி கற்றாலும் அன்னைத்தமிழ் அருந்தினாய்
அரவணைத்து அனைவரையும் அன்பினால் ஆட்கொண்டாய்
நினைவழியா படைப்புக்களை நீயளித்தாய் தமிழுக்கு
நீஇல்லா நிலைகண்டு படைப்பனைத்தும் அழுகிறதே  !

கிழக்கிலங்கை முத்தாக ஒளிவிட்டு நின்றாயே
உளத்துணிவால் தலைநிமிர்ந்து உயர்ந்தாயே தமிழுலகில்
தனித்துநின்று பெண்ணாக சாதித்த நாயகியாய்
தமிழ்போற்றும் கலைமகளே தவிக்கவிட்டுப் போனதேனோ  !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>