கவிதை: என்றும் உன்னுள் உன் இதயமாய்.. -

Saturday, 15 August 2020 20:19 - கவிஸ்டார் - கவிதை
Print

கவிதை: என்றும் உன்னுள் உன் இதயமாய்.. -

அன்பே...
சுடர் தரும் சூரியனும் சுகமாய் துயிலிட
அலைகொண்ட மனம் மட்டும் இடைவிடா ஒலித்திட
நீ நான்  நாம் மட்டும் காதல் சிறையில்  கைதானோம்
ஓர் இரவில்....
உன் முகம் பார்த்து வெட்கிப்போனேன்..
ஆயிரம் ஒளி தீபம் எற்றிய வெளிச்சம் கண்டேன்
கண்கூசீப்  போனேன்...
உன் குற்றமற்ற அன்பில் குறுகிப்போனேன்...
குயிலாகிப் போனேன் -உன் பெயரை மட்டும்
கூவும் குயிலாகி போனேன்....

என் ஸ்வாசமே எனை விட்டு போகாதே... நீங்கினால்
என் ஜனனமே ஜடமாகிப் போகும்....
சிறு புனைகை சிந்திடு
சிதறிப் போனேன் மனமெல்லாம்
சில்லறையாய் என்னுள்...
என் பிம்பமே நீ சிந்திய கண்ணீர் துளியால்
கடலாகிறது என் கண்கள்...
இப்படியே உன்னை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்
என்றுதான் என் இரவுகளிலும்
கனவுகளின் கண்களைத் திறந்து வைத்திருக்கிறேன்..
அடுத்த பிறவியில் என் இதயத்தில் நீ பிறந்திடு
அப்போது நீயறிவாய் என்னுள்
உன் நினைவினை...
உடல் கொண்டு காத்திருப்பேன் உறவாக அல்ல.
உயிராக என்னுள் உயிருற்றே...
என்றும் உன்னுள் உன் இதயமாய்...
நினைக்க மறந்தாலும் துடிக்க மறக்காதே.....

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >

 

Last Updated on Saturday, 15 August 2020 20:28