கவிதை: மூழ்கி நீந்துங்கள்!

Wednesday, 25 December 2019 01:53 - பா வானதி (வேதா. இலங்காதிலகம்) டென்மார்க் - கவிதை
Print

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

ஆலகம் (நெல்லி) போன்றது கவிதை.
கீலகம் (ஆணி) போன்ற பூவிதை.
கேலகன் (கழைக்கூத்தாடி) போன்று கோலங்காணும்.
தாலப்புல்லான (பனை)  திறன் உடைத்து.
தூலகம் (பருத்தி), தூலிகை (அன்னத்தின் இறகு) போன்றது.

எழுத்தாளன் எழுத்துகள் பூவனம்.
அழுத்தி அச்சிடுதல் ஆவணம்.
கழுத்திலணியும் ஆபரணமாய் என்
எழுத்துகள் ஐந்து நூல்களாய்
விழுத்தியுள்ளேன் நூலகம்.ஓர்க் இணையத்தில்.

நீலமணியெனப் பிடிஎப்ஃ தொகுப்பில்.
பேலகமாய் (தெப்பம்) அசைகிறது தினமும்.
பீலகமான (எறும்பு) அழகு ஊர்வலம்.
மூலதனமான என் தமிழை
மூழ்கிப் படித்து மகிழ்ந்திடுங்கள்!!....

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 25 December 2019 01:54