பொங்கற் கவிதை: “பொங்கலோ பொங்கல்!’’

Sunday, 13 January 2019 20:37 - ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை மாவட்டம்., வீரவ நல்லூர் ) - கவிதை
Print

கவிதை: பொங்கலோ! பொங்கல்!

வானத்தில்  இருளே  பொங்க,
வரும்மழை  ஆற்றில்  பொங்க,
வரண்டமண்  வாய்க்கால்  பொங்கி,
வயலிலே  பயிர்கள்  பொங்க

உழவர்தம்  உதட்டில்  பொங்கும்,
உன்னதச்  சிரிப்பில்  பொங்கும்,
உலகையே  காக்கப்  பொங்கும்,
உதயத்துக்  கதிர்க்குப்  பொங்கும்

தமிழர்க்குச்  சிறப்பைப்  பொங்கும்,
தங்கமித்  திருநாள்  பொங்கல்,
அமிழ்தத்தைத்  தேனாய்ப்  பொங்கி,
அளிப்போமே  பொங்கலோ  பொங்கல்!

ஶ்ரீராம் விக்னேஷ்

- ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை மாவட்டம்., வீரவ நல்லூர் ) -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 13 January 2019 20:54