இரு-மொழி இரணைக் கவிதைகள்- 5: ஆண்மை MANHOOD, MANLINESS, MALENESS

Thursday, 25 October 2018 23:31 - பேராசிரியர் கோபன் மகாதேவா ( Prof. Kopan Mahadeva ) - கவிதை
Print

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -ஆண்மையின் ஆதி ஆண்கள் பெண்களை
வளைக்க நடிக்கும் இயல்பு. (001) 

The origins of manhood lie in men's
Actions to attract, court and love women.

அடக்குமுறை ஆண்மைக்கு அழிவுதரும் வழியும்
இடக்கான போக்கென்றும் காண்க. (002)

It’s a downward, disastrous way for men
To use force on women, or even men.

ஆண்மைக்குப் பெண்மையை அடக்கலிக்கும் அம்பு
மாண்புடை அன்பெனும் பண்;பு. (003)

The arrow that makes women fall for men
Is men's dignified love for their women. 

ஆண்மையும் பெண்ணவள் காட்டலாம் வாழ்வினில்
வேண்டி வந்த இடத்து. (004) 

Manhood could be used by any woman
Where life warrants her to act like a man. 

ஆண்மைக்கு அழகு, வீடொன்றை அமைத்து
பெண்ணுடன் இன்புறும் பண்பு. (005)

The beauty of manhood is to relish
One’s woman in own home as they both wish. 

ஆண்மையுள் பெண்மையும் பெண்மையுள் ஆண்மையும்
அளவுடன் பேண்பது நன்று. (006) 

Optimum blends of manhood in females
And womanhood in men balance life’s scales. 

பெண்மையும் ஆண்மை இடத்த, இல்பேணும்
உண்மை இணக்கம் பெறின். (007) 

Women could take leadership in the homes
If harmony would thus hold in their homes. 

ஆண்மை குலம்காக்கும் பெரும்பண்பு; பாரில்

பெண்மை குடும்பத்தின் பண். (008) 

Manhood excels when it protects their clans
While womanhood, family's well-being spans. 

தைரியம், தோள்ப்பலம், வீரியம் வேகம்,
வைரிவெல்ஆணின் நாற் படை. (009) 

Courage, strength, sharpness and speed are the four
Weapons of manhood that subdue his foe. 

ஆண்மையும் பெண்மையும் ஆதிமுதல் ஒன்றான
ஆண்பாதி பெண்பாதி காண்க. (010)

Manhood and womanhood are age-old halves
Of harmony that life’s humanness carves.


இரு-மொழி இரணைக் கவிதைகள்-4: ஈசனின் உண்மை மைந்தர் (True Offspring of God)

-பேராசிரியர் கோபன் மகாதேவா -
ஈவாரைத் தேடி இன்புகழ்கள் சென்றடையும்;
சேவைகளே செய்வாரைச் சந்தோசம் தேடிவரும்.
அன்பு, இன்பம், அமைதி, இறைவன் அருள், இம்மண்ணில் மோட்சம், எல்லாம் அவருக்கே. 
தீமைகளைப் பொறுப்பர், அவர்; மன்னிப்பர், மறந்திடுவர். ஈசன்போல் உதவுவர். எவரையும் உள் இழுத்திடுவர்.
கதவுகளைத் திறந்து விட்டு, வழி காட்டி ஊக்குவிப்பர்; விதம் விதமாய் சோர்வுகளைச் சீர்படுத்தி நேர்செய்வர்.
அரும்பும் பகை தணிப்பர். அவர் எம்மில் விழிவைத்தால் ஒரு பயமும் மனம் சேரா; பிணி எல்லாம் பறந்துவிடும். 
சுத்தம் மிளிரும் அவர் செஞ்சொண்டின் புன்னகை முன் எத் துன்பமும் தோற்றுத் தூரத்தே வெகுண்டு ஓடும். 
அவர் உதரத்தில் உதிக்கும் ஆழகான வார்த்தைகளில் எவரும் அருந்த வல்ல அமிர்தங்கள் சுரந்து வரும். 
இம் மாதிரி மனிதர், எம் இடையே, இவ்வுலகின் கும்மிருட்டிலே உதித்தும் மேலுலகில் வாழ்ந்திடுவர். 

TRUE OFFSPRING OF GOD

Glory flows to the ones who give;
Joy seeks out the ones who serve.
Pleasure, love, peace, and bliss,
Heaven on Earth, are all, theirs.
They tolerate, they forgive,
They accommodate and assist.
They teach, guide, persist,
Iron out wrinkles, bear
No grudge. They look, and our fears
Just vanish. Settled sorrows flee --
Frightened by the positiveness
Of their sublime, sunshine smiles. Every word that leaves their lips
Is honey and elixir for all to sip.
Such ones spring from the darkness
Around us and soar to the skies.
For, they are, true offspring of God.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 26 October 2018 00:54