இரு-மொழி இரணைக் கவிதைகள் 1: பிள்ளைப் பாச இழுபறிகள்

Tuesday, 03 July 2018 15:08 --பேராசிரியர் கோபன் மகாதேவா— கவிதை
Print

முந்திப் பிறந்த கவிதை: OFFSPRING TENSIONS (1997)

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -Fathers and mothers
Do love their children –
Differently.

Dissimilar still
If the offspring are
Singularly.

While fathers’ love is
Farsighted and kind –
Productively,

Maternal love is
Indulgent and blind –
Invariably;

And hence that causes
Domestic tensions
Eternally!

[From ‘Life in Nutshells’ (First Prize Winner), ISBN: 1-86 188-600-4, p-22, 1997]

பிந்திப் பிறந்த இரணை (2005): பிள்ளைப் பாச இழுபறிகள்

அம்மா மார் கொட்டுவதும் அன்பு தான்
அப்பா மார் சொட்டுவதும் அன்பே தான்
அவ்விரண்டும் ரகம் வேறு. அவ்வளவே.

பெற்ற அவர் மக்கள் தனித்தோர் ஆகிடில்
பெற்றார் அன்பினில் விரிவெனும் பிரமை
முற்றிப் பெருத்து மலை போல் தோன்றும்.

அப்பா மார் அன்பு, அப்பாலே நோக்கி
தப்பாது  திண்மைசேர் செயற்திறன் கூடி
நுட்பமும் சேர்த்து நெஞ்சிருந்து ஏகும்.

அம்மா மார் அன்பு, அந்தகர் அன்பு போல்
சும்மாவே எவற்றையும் அள்ளிக் கொடுத்து
இம்மை நலனையும் இடித்துச் செல்லும்.

இதனால் இல்களில் இழுபறி பிறக்கும் !
தினம் தினம் தோன்றி இழுபறி நெருக்கும் !!

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 26 October 2018 00:52