மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) கவிதைகள்!

1.
லேசான பட்டாம்பூச்சியைப் போல சிறகடித்தும் மகிழ்வினூடே
சிரித்துத் திரிந்த
அந்த நொடிகள்
நெருப்பினூடே இரும்பை இலக்குவது போல உருகிச் சிதைந்தது.
பதிலியை ஏற்காத
வினை தவிக்கிறது.
வலி தாங்க இயலாமல்
வெள்ளம் பெருக்கெடுக்க
கண்கள் குளமாக...
ரணத்தின் உச்சத்தில்
மனம் தற்கொலை செய்ய...
பிரிவின் இறுதியில்...
உயிர் மீட்டுகிறது ஆதிக்காதலின் நினைவுகளை!!"
நிறைவுற்றது காதற்கிளவி!!!

2.
வார்த்தைகளால் விவரிக்க இயலாதவொன்றை விவரிக்க வார்த்தைகளை
வனாந்தரத்தில்
தேடித் திரிகிறேன்
வாலில்லா குரங்கைப் போல.
வானதேவனிடம் இரங்கினேன்
மறைந்துவிட்டன.
நிலமகளிடம் கையேந்தினேன்
புதைந்துவிட்டன
நீர்க்கடவுளிடம் கெஞ்சினேன்
கரைந்துவிட்டன.
காற்றதிபதியிடம் வினவினேன்
பறந்துவிட்டன.
அனலூரனிடம் அழுதேன்
அளித்தார் விபரங்களை
சோதியானேன்...
காதல்சோதியானேன்...
விவரிக்க இயலாமல்.!!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.