பங்கிரையான் கவிதைகள்:

Friday, 06 October 2017 16:47 -பங்கிரையான் - கவிதை
Print

1. உருவத்தின் அழகு!

எனக்கும் உனக்கும்
முரண்பாடு இல்லை என்றால்
நாங்கள் தூக்கிய சிவந்த கொடிக்கு
கேலிக்கை குறைத்திருக்கும்
எங்களுக்குப் பல தோழர்களும்
பெண் தோழிகளும் கிடைத்திருப்பார்கள்
வாதிப் பிரதிவாதங்கள் எற்பட்டிருக்காது
நமக்கானவை எமக்கு கிடைத்திருக்கும் !

2. தொலைந்து போன தோழி

சில வருடங்களுக்கு முன்னால
தோழி ஒருவள் எனக்கு இருந்தால்
நான் துவண்ட போது எல்லாம்
என்னை தூண்டி விட ...
தொலைந்த என் கனவுகலை எல்லாம்
தோண்டி கொடுத்தாள் எனக்குள் இருந்தே

'சாந்தமான அவள் எனக்கு
தமக்கை இல்லை ,தங்கை இல்லை ..
காதலியும் இல்லை ...
காற்றின் வேகத்தில் போகும் போது
தொட்டு விட்டு சென்றாள்
சுடர்கிறது என் சிந்தை ...

மணம் ஆனதாலோ என்னை
மறந்து போனளோ தெரியாது
என் மனம் மறக்காது
மரணம் வரும் வரை
உனக்கு எத்தகைய நிர்ப்பந்தமோ
எனக்குத்தெரியவில்லை..
உனது நீண்ட மௌனத்தில்
உன்னை கோபிக்கவோ
உனனை மறந்து விடவோ முடியாது..
என் மீதான
உனது அக்கறைகளில்
அடிக்கடி நெகிழச்செய்வாய்
மறக்கவே சாத்தியமற்ற ஒரே ஒருத்தி
என் வாழ்வில் நீ மட்டும்தான்...!

அந்நிய மண்ணில் இருந்து விட்டால்
நீ எனக்கு அன்னியம் இல்லை தோழி
வாழ்வின் கடைசி நுனி வரைக்கும் ........

நண்பர்களாய் இருப்போம் என்று
நமக்குள் நாமே எடுத்துக்கொண்ட சபதமும்
கேள்விக்குறுதிதான் இல்லையா..???

யாரோ எதிர்பாராமல் வருவதும்
யாரோ எதிர்பாராமல் பிரிவதும்
இயல்பாகிப்போன வாழ்க்கை இது......
எத்தனையோ பிரிவுகள் நிகழ்ந்தாலும்
அத்தனையும் போல உன்னை
அத்தனை சுலபத்தில் மறந்து விட முடியவில்லை.. ..

தோழி நீ தொலைந்த திசை நோக்கி..............

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Sunday, 08 October 2017 15:25