கவிதை: குளம்!

குளம்
எனக்காக
அமைதியாக இருந்தது.
காற்றும் அப்படியே.
வானத்தில் விமானம் பறப்பிலில்லை.
பறவைகள்
எங்கோ
தூரமாய் போயிருக்கவேண்டும்.
புடவைகளின்
மணம் அருகிலுமில்லை.
குளத்தை
அப்படியே மூச்சுக்காற்றால்
உள்ளிழுத உணர்வு
ஏதோ
பல கதைகள்
கன நாளாய்ச் சொல்லியது
எவ்வித ஆர்பாட்டமுமின்றி..

குளம்
என் அன்பிற்குரியது.
என் பிரியத்திற்குரியது.
என் காதலுக்குரியது.
குளத்தை
விட்டுக்கொடுக்க
விருப்பம் எனக்கில்லை.
யாரோ
கல்லெறிந்திருக்கவேண்டும்..
குளம் குழம்பியபடி
கேள்வி கேட்டது என்னிடம்..
சமாதானப்படுத்த,
அதனைச் செயல்படுத்த
என்னிடம்
எதுவும் தரப்பட்டிருக்கவில்லை..
அமைதியைத் தவிர..
குளம்
எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி
மௌனமாக என்னிடமிருந்து நடந்தது..
இப்போது
குளம் எனக்கானதாய் இல்லை
என் கிராமத்தைப் போல...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.