உழைப்பாளர் தினக்கவிதை: மே நாள் உயிர்க்கும் நாள்!

Wednesday, 03 May 2017 04:23 - தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் - கவிதை
Print

உழைப்பாளர் தினக்கவிதை

உழைப்பு என்ப துலகின் உயிர்ப்பு
இருப்பும் வாழ்வும் இதற்கே உரித்தாம்
மழைப்பூ இலையேல் மதிக்கும் பூமி
வளங்கள் பயிர்கள் வனப்பே இலையாம்
இழைப்பார் கையில் இருக்கும் பொருட்கள்
எழும்தே சத்து இடாப்பின் வரவே
விளைப்பார் இல்லா விரும்நா டெல்லாம்
வெடுக்காய் மாறுந் தொடரின் துயரே!

வியர்வைப் பூக்கள் இல்லாச் சரிதம்
விழுமி யத்தைத் தொலைக்கும் அறிவாய்
உயர்வுப் பெருமை ஒளிநா ளங்கள்
உழைப்போ ருக்கே உயர்வைத் தருமாம்
அயர்வைப் போக்கி அழிக்கும் தூக்கம்
அணுவில் எரிந்தும் அழியா தெழும்பும்
துயரைக் களைந்து திருநா டென்ற
தினத்தின் முதல்நாள் மேதான் தருமாம்!

போரின் வடிகால் பொய்யா மாந்தர்
பிடிக்கும் கொடியே புதரின் கதிராம்
வேரின் இருப்பே மிதக்கும் விடியல்
விளைப்போ ருக்கே உரிமைக் குரலாம்
பாரின் அழிந்த பலகா டெல்லாம்
பயிராய் முளைக்கும் பணிதான் உழைப்பு
தூரின் அழிப்பும் துயரின் தீயும்
தினமாய் வகுக்கும் துடிப்பின் வரைவே!

அணுவைப் போட்டு அழித்தும் யப்பான்
அகிலத் தெல்லாம் முதல்நா டென்க
கணுவில் இருந்து முளைத்த காளான்
ககனத் தெங்கும் கனத்த தறிவாய்!
துணிவில் உண்டு திரும்பும் தேசம்
துயர்காத் திடுமோர் தெறிப்பின் வரைவாம்
அணியாய்ப் பணியாய் அகழுங் கல்வி
ஆக்கும் முதல்நாள் மேயின் உதிப்பே!


சோர்ந்து போகாத் துடிப்பின் வேதம்
துயர்கா டழிக்கும் விழுமி யங்கள்
நூர்ந்து போகா நொதிப்பின் அழுத்தம்
நுழைத்து வரும்மாப் பலகா ரங்கள்
சார்ந்த உழைப்பும் சங்கின் வார்ப்பும்
சரிதம் உரைக்குஞ் சரமாய் மாறும்!
தூர்ந்த தெல்லாம் துறையாய் மாறுந்
தெரிநாள் ஆகும் மேயின் முதலே!

கருத்து: மே என விழிப்பதெல்லாம் உலக ஆயுலு தினத்தைக் குறிப்பதே ஆகும்
செய்யுளின் மரபு: எட்டு மாச்சீர் கொண்ட ஒரு அடியாக நான்கு அடிகள் கொண்டவை

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Wednesday, 03 May 2017 04:27