விழிப்புணர்வு கவிதை: இது குழந்தைத் தொழில் இல்லையா?

Sunday, 12 February 2017 00:26 - கவிப்புயல் இனியவன் - - கவிதை
Print

கவிதை படிப்போமா?பட்டாசுத் தொழிற்சாலையில்.....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

தீப்பெட்டித் தொழிற்சாலையில்.......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

செங்கற் சூளையில்....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

சல்லில் கல் உடைக்க......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

குழந்தைத்
தொழில் சட்டப்படி குற்றம் .....
தேவையான சட்டம்......
வரவேற்க வேண்டிய சட்டம்.....!!!

சினிமாவிலும் சின்னத் திரையிலும்.....
பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்......
காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்....
குழந்தைத் தொழில் இல்லையா....?

உடலில் காயம் வந்தால் தான்.....
குழந்தைத் தொழில் குற்றமா.....?
உளத்தில் காயம் வந்தால்........
குழந்தைத் தொழில் குற்றமில்லையா....?
அளவுக்கு மீறிய வயதுக்கு மீறிய......
செயல்களும் வார்த்தைகளும்........
குழந்தை மனசை காயப்படுத்தும்.....
ஏன் இன்னும் புரியவில்லை....?

புரியாமல் தெரியாமலில்லை.....
பணம் பணம் பணம்.............
எல்லாமே பணம் செய்யும் மாயை........
வயிற்றுப் பிழைப்புக்குப் போராடும்.....
மக்களுக்கு ஒரு நியாயம்......
வர்த்தகக் கவர்ச்சி மக்களுக்கு.......
இன்னொரு நியாயமா..........?
சிந்திப்போம்! செயல்படுவோம்!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Sunday, 12 February 2017 02:05