கவிதை: புதிய வருடத்தில் புதிய விதி செய்க!

Friday, 06 January 2017 00:23 - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா (இலங்கை) - கவிதை
Print

மண்பயனுற மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துகள்! !

வருடம் தொடங்கிடும்
புதிய காலையில் வாழ்க்கையில்
நம்பிக்கை தோன்றும்..
அந்த நொடியில் துளிர்த்திடும்
கனவு உயிர்பெற
இறையிடம் நெஞ்சம் கேட்கும்..

விலக முனைந்திடும்
கரிய நினைவுகள் உடனடி
வீழ்ந்திங்கு மாயும்..
அருவி போலொரு இனிய ஓசையை
ஆவலாய் இதயம் கேட்கும்.. கவலை மறந்திட
இனிமை துளிர்த்திட ஆவல்கள்
எல்லை மீறும்
புதிய வருடத்தில் புதிய விதி செய்ய
புதிய தைரியம் தோன்றும்

இனிய காலையில்
இனிய நினைவினில் அலுவல்கள்
தொடர்ந்திடும் நேரம்
பனியை ஏந்திய மலரைப் போலொரு
புதிய வருடமும் தோன்றும்!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

*கவிஞர்: - தியத்தலாவ  எச்.எப். ரிஸ்னா (இலங்கை) -

Last Updated on Friday, 06 January 2017 00:35